நண்பர்களே...
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னரே ‘விவரமாக’ களமிறங்கி ஆக்கிரமித்த ‘ஆரம்பம்’ அமர்க்களமாகத்தான் இருந்தது.
ஆனால் தீபாவளிக்கு நிறுவப்பட்ட ‘பாண்டிய நாடு’,
தொடர்ந்து தன் எல்லைகளை விஸ்தரித்து ‘மிகப்பெரிய சாம்ராஜ்யமாக’ மாறும் வல்லமையோடு இருக்கிறது.
வணிக சினிமா எல்லைக்குள்ளிருந்து கொண்டு ‘உலக சினிமாவுக்கு’ ஊரை தயார்படுத்தும் உத்தமர்கள் வரிசையில் நின்று விட்டார் இயக்குனர் சுசீந்திரன்.
அந்த வரிசையிலேயே நிலை கொண்டு நிற்க வாழ்த்தி வரவேற்போம் சுசீந்திரனை.
வணிக சினிமாவுக்குறிய நகைச்சுவை காட்சியும் இருக்கிறது இப்படத்தில்.
ஆனால், தமிழ் நாட்டிலுள்ள மின்வெட்டு அவலத்தை அதற்கு பின்புலம் ஆக்கியதுதான் சுசீந்திரனின் சூட்சமம்.
மதுரையில் உள்ள வாரிசுத்தலைவர் +கிரானைட் குவாரி + மணல் தாதாக்கள் செய்து வரும் அராஜகங்களை,
‘வில்லனுக்குறிய’ வீரப்பிரதாபங்களை விளக்கும் காட்சிகளாக அமைத்து கச்சிதமாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்...கங்கிராட்ஸ்.
கதாநாயக அந்தஸ்துக்கு, கன கச்சிதமாக தனது திரைக்கதையின் மூலம் நடுத்தர வர்க்கத்து வயோதிகனை கொண்டு வந்து வசீகரப்படுத்திய சுசீந்திரனுக்கு ‘ஸ்பெஷல் வாழ்த்துக்கள்’.
இறுதிக்காட்சியில் எழுந்து நின்று கைதட்டிய கோவை மக்களின் கைதட்டல்கள் காற்றில் கரைந்து விடாமல் சுசீந்திரன் கரங்களுக்கு நிச்சயம் போய்ச்சேர்ந்திருக்கும்.
பத்திரப்படுத்துங்கள் சுசீந்திரன்.
இன்னும் வீர்யமான ஒரு படைப்பிற்கு அவைகள் உரமளிக்கும்.
நிச்சயம் இந்த படம் ஜெயிக்கும் என்று என் மனம் சொன்னது. விஷால் நல்ல நடிகர். ஆனால் பயன்படுத்துபவர்களின் கையில் உள்ளது.
ReplyDeleteஉங்கள் வார்த்தைகள் அப்படியே இருக்கின்றது.
நடிகர்கள் என்றுமே களிமண்கள்தான்.
Deleteபிடிப்பவர் கையில்தான் அவைகள் பிள்ளையாராய் உருவெடுக்கிறது.
முந்தைய இயக்குனர்கள் அவரை தொடர்ந்து குரங்காக்கி வித்தை காட்டினார்கள்.
Naanum padam paarthuten. But only ok movie for me. Normala ilama konjam vithyasama irunthuchu. Naan romba ethirpaarthu poirunthen.
ReplyDeleteபடம் உண்மைச்சம்பவங்களுக்கு மிக அருகாமையில் இருந்தது என்னை கவர்ந்தது.
Deleteஎன்னை மிகவும் ஆகர்ஷித்தது ‘பராதிராஜாவின் பாத்திரம்தான்’.
மிக அற்புதமான கதாபாத்திரத்துக்கு...மிகச்சரியான தேர்வு.
எப்படி முதல்மரியாதைக்கு சிவாஜி சரியான தேர்வோ...இப்படத்தில் பாரதிராஜாவின் தேர்வு இருக்கிறது.
இப்படி ஒரு கதாபாத்திரம்...அதற்கு பாரதிராஜா..என சுசீந்திரன் விளம்பரப்படுத்தாதது இன்னும் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பிரம்ம ரிஷி வாயால் ராஜரிஷி பட்டம்...:) வாழ்த்துக்கள் சுசீந்திரன் சார்...
ReplyDeleteதீபாவளி கழித்து கார்த்திகைக்கு படத்த இறக்கி இருக்கலாம்..[என் கருத்தே] களம் பல கண்ட சுசீந்திரனை நாம் தான் கைதூக்கி விட வேண்டும்...வெண்ணிலா கபடி குழு / நான் மகான் அல்ல / ராஜபாட்டை/ அழகர்சாமியின் குதிரை/ஆதலால் காதல் செய்வீர்/ பாண்டியநாடு கிரியேட்டரா இவர பிடிக்கும்....
கிசுகிசு ....
உசிரே அண்ணே ஆதலால் காதல் செய்வீர் ஹீரோயின் மனிஷா இவர் மீது கொடுத்த பாலியல் புகார் பைசல் ஆகி விட்டதா??? ஜாகுவார் தங்கம் கூட இவருக்கு ஆதரவாய் ஸ்டேட்மெண்ட் விட்டார்.... :) :) :)
/// பிரம்ம ரிஷி வாயால் ராஜரிஷி பட்டம்../// என்ன கொடுமை இது கணேஷ் குமார்.
Deleteஎன்னை இப்படி உயரே தூக்கி வைத்து பிரிக்காதீர்கள்.
நானும் உங்களைப்போன்று சக பதிவர்தான்.
மனீஷா கிசுகிசு நான் கேள்விப்பட்டதேயில்லை!
அது அநாவசியமும் கூட...
நாம் படத்தையும்...அந்த படத்துக்கு அந்த படைப்பாளி செய்த நேர்மையான உழைப்பு...அதை மட்டுமே பார்த்தால் போதுமானது.
பாண்டிய நாடு செளுமையோடுன்னு சொல்றீங்க?
ReplyDeleteநான் சொல்றது இருக்கட்டும்.
Deleteநீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு... ‘திக்திக்’ இருக்கு.
ஐ யாம் வெயிட்டிங்...தங்கள் பதிவிற்காக.
Kovai aavi... aarambathin padhipil irukirar... avaraku pandiya nadu puriyadhu
ReplyDelete