நண்பர்களே...
போற்றுவோர் போற்றி...தூற்றுவோர் தூற்றி...
ஏற்றம் கண்டு வருகிறது ‘ஓநாய்’.
நேற்று ‘இரண்டாம் முறை’ இளையராஜாவுக்காக சென்றேன்.
இந்த முறையும், இளையராஜாவோடு மிஷ்கின்...
‘இரண்டறக்கலந்து’ என்னை தாக்கியதை பரிபூர்ணமாக அனுபவித்தேன்.
பரிபூர்ணமே பேரானந்தம்.
தர்க்க ரீதியாக இப்படத்தை அணுகக்கூடாது.
புரியாதவர்களுக்காக ‘தமிழில்’.
அதாவது, இப்படத்தை ‘லாஜிக்’ அப்ளை செய்து பார்க்கக்கூடாது.
அப்போதுதான் ‘மிஷ்கின்’ சிருஷ்டித்த ‘மாய உலகத்தை’
பரிபூர்ணமாக உள் வாங்க முடியும்.
உதாரணமாக இறுதிக்காட்சியை எடுத்துக்கொள்வோம்.
இரவு நேரத்தில் ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் ஏரியாவில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள்தான் நிறைந்திருக்கும்.
மாறாக ‘மிஷ்கின்’ சிருஷ்டித்த மாய உலகில்,
அந்த பார்க்கிங் ஏரியா 'தகத்தகாயமாக' ஜொலிக்கிறது.
ஏனென்றால் இது வரை இருண்ட காட்டிலேயே சஞ்சரித்த ‘ஓநாய்’ முழுமையாக ‘வெளிச்சத்துக்கு’ வரும் அபூர்வ தருணம் இது.
‘ஓநாய்’ இறுதியாக ‘தெய்வத்திடம்’ மண்டி இட்டு,
கை கூப்பித்தொழுது தன் பாவத்தை போக்க துதிக்கிறது.
குழந்தை = தெய்வம்.
அந்த அற்புத நொடியில், அனைத்து பாவங்களும் பஸ்பமாகி விடுகிறது.
‘பவித்ரமான ஓநாய்’ ‘பேரியக்க மண்டலத்தில்’ நட்சத்திரமாக ஜொலிக்க போய் விடுகிறது.
இறுதிக்காட்சியின் ‘பைனல் ஷாட்’...
‘ஆட்டுக்குட்டி’ ‘தெய்வத்தை’ கைகளில் ஏந்தி நடந்து செல்கிறது.
எதிரில் ‘வெளிச்சம்’ மட்டுமே நிறைந்து இருக்கிறது.
வெளிச்சம்...வெளிச்சம்...வெளிச்சம்.
இந்த ‘வெளிச்சம்’ தமிழ் சினிமாவுக்கும்தான்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
அடேங்கப்பா...! என்னவொரு ஆனந்தம்... தலைப்பு தான் ஏதோ திட்டுகிற மாதிரி இருக்கு... ஹிஹி...
ReplyDelete‘ஓநாய்’ ஜெயிக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்பினோம்.
ReplyDeleteவிகடனும் விரும்பி ‘51’ மார்க்கை அள்ளி வழங்கியது.
அந்த மதிப்பெண்ணுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
‘51’ மார்க் வாங்கிய மாணவனை பார்க்க மக்கள் மெல்ல...மெல்ல திரண்டு வருகின்றனர்.
கோவை ப்ரூக்பீல்டு மாலில் உள்ள ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டரில் இப்போது ‘ஓநாய்’ நான்கு காட்சிகளாக...
அதுவும் 80% அரங்கு நிறைந்த காட்சிகளாக காட்சியளிக்கிறதாம்.
பட வெளியீட்டின் போது முதல் வாரம் இரண்டு காட்சிகள் மட்டுமே...அதுவும் பெரும்பாலும் காலி இருக்கைகளுக்கு மட்டுமே திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓநாய் ஜெயிக்க வேண்டும்
ReplyDeleteகோவையில் ஜெயித்து விட்டது என்றே சொல்லலாம்.
Deleteதமிழ்நாடெங்கிலும் ஜெயிக்க வேண்டும் என்ற நம் ஆசை பேராசையல்ல...நியாயமான ஆசை.
மறுபடியும் கூட்டத்தோடு பார்க்கணும் சார்....
ReplyDeleteவாங்க...பார்த்துருவோம்.
Deleteநேற்றுதான் அந்த படத்தை பார்த்தேன், இளையராஜாவும் மிஸ்கின் அவர்களும் அருமையாக படத்தை எடுத்து இருக்கின்றனர்......... நீங்கள் சொல்வது போல இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தால் நிறைய காட்சிகள் புலப்படும்.
ReplyDeleteகட்டாயம் மீண்டும் பாருங்கள்.
Deleteபெங்களூரில் இன்னும் ப்ராப்பர் ரிலீஸ் இல்லை... வெளியான 4 டப்பா தியேட்டர்களிலிருந்தும் இப்பொழுது தூக்கி விட்டார்கள் :-(
ReplyDeleteபெங்களூர் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஏன் இப்படத்தை திரையிடவில்லை!
Delete‘ஊதா கலர் ரிப்பன் இருந்தாதான்’ திரையிடுவான்களா?
Boss 6 candles pathi ezhuthunga pls
ReplyDeleteஅதன் திரைக்கதை சரியாக வடிவமைக்கப்படவில்லை.
Deleteஅப்படத்தில் நிறைய குறைகள் இருப்பதாக எனக்குப்பட்டது.
எனவே அப்படத்தை பற்றி ‘பதிவெழுதாமல்’ தவிற்தேன்.
மரியான் போன்ற படத்திற்கு விமர்சனம் செய்த நீங்கள் 6 மெழுகுவர்த்தியை தவிர்த்திருக்க வேண்டாம்!find time na post 6 candles review sir!waiting fr dat
ReplyDeleteஎன் நண்பரைப்போலவே உங்களுக்கும் இந்தப்படம் மிகவும் பிடித்து விட்டது போலும்.
Deleteஒரிஜினல் டிவிடி வந்ததும் ஒரு பதிவு கட்டாயம் எனக்கு பிடித்த பகுதிகளையும்...பிடிக்காத பகுதிகளையும் அதற்குறிய விளக்கத்தோடு பதிவிடுகிறேன்.
கேட்கவே சந்தோசமா இருக்கு சார்..நல்ல செய்திக்கு நன்றி.
ReplyDeleteஇந்தப்படம் வசூலானாதானே மிஷ்கின் இன்னும்...
Deleteஇதை விட நல்ல படங்கள் கொடுப்பார்.
cinema=life
ReplyDeleteபடத்தின் டைட்டில்கார்டில் ஒரே ஒரு பெயர்தான் காண்பிக்கப்படுகிறது. அது இளையராஜா!. ஒரு நல்ல கலைஞனை இதைவிட யாரும் கௌரவித்துவிட முடியாது. படத்தின் பல இடங்களில் சிலிர்க்கவைத்திருக்கிறார் இளையராஜா.
ReplyDelete‘சரக்கு காலி’...
‘அவர்கிட்ட இனிமே விஷயம் இல்ல’...
என்ற குரல்கள் ஓங்கி முன்னணியில் ஒலித்து கொண்டிருந்தது.
அனைத்திற்கும் இப்படத்தின் பின்னணி இசை மூலம் பதில் சொல்லி இருக்கிறார் ராஜா.
பின்னணி இசையில், அன்றும்...இன்றும்....என்றுமே ராஜா என்பதை
இன்றைய தலைமுறைக்கு நிரூபித்து இருக்கிறார்.
#இளையராஜாவைப்பற்றிபேசாமல்_இப்படத்தைப்ற்றிபேசமுடியாது...!