Aug 2, 2013

‘ஷிப் ஆப் தீசியஸ்’ போல படமெடுப்போம்...வாருங்கள்.



நண்பர்களே...
கோவை உலகசினிமா பக்தர்கள் தவத்தை மெச்சி,
‘ஷிப் ஆப் தீசியஸ்’ கோவைக்கு விஜயம் செய்துள்ளது.
 ‘உலகசினிமா பக்தர்கள்’ அனைவரையும்...
கோவை ப்ரூக்ஃபீல்டு மாலில் உள்ள ‘சத்யம் சினிமாஸ் கோவிலுக்கு’
வந்து  ‘ஷிப் ஆப் தீசியஸ்ஸை’தரிசிக்க வேண்டுகிறேன்.
தரிசன நேரம் தினமும் சரியாக மாலை 6 மணி 45 நிமிடத்திற்கு தொடங்கும்.

 ‘சிங்கத்தால்’ சீரழிந்தவர்கள்...
 ‘மரியானால்’ மரித்தவர்கள்...
 ‘பட்டத்து யானையிடம்’ பட்டவர்கள்...
 ‘வழக்கு எண்ணால்’ வசியமானவர்கள்...
 ‘பரதேசியை’ பரிந்துரைத்தவர்கள்...
 ‘விஸ்வரூபத்தை’  வியந்தவர்கள்...
அனைவரும் வாருங்கள்...பாருங்கள்.
இது உங்களுக்கான சினிமா.

இந்தப்படம்...
என்னைப்போன்ற ‘கத்துக்குட்டிகளுக்கு’...
போதி மரம்.


‘பதினைந்து லட்சத்தில் படமெடுக்கலாம்’
என்ற சிந்தனைக்கு உரமேற்றி இருக்கிறது இப்படம்.

இப்படத்திற்கு விரிவான விமர்சனத்தொடர்..
‘ஆமென்’ தொடரை முடித்து விட்டு தொடர்கிறேன்.

இப்படத்தை பார்க்க சென்னை போன போது,
பதிவர்களான
நண்பர் மெட்ராஸ்பவன் சிவா,
நண்பர் கே.ஆர்.பி.செந்தில் ஆகியோர் என் மீது காட்டிய அன்பும் அக்கறையும் நெகிழ வைத்தது.
அவர்களோடு கலந்துரையாடியதில் நிறைய கற்றுக்கொண்டேன்.
அப்போது மெட்ராஸ் பவன் சிவா கீழ்க்கண்ட கருத்தை வெளியிட்டார்.
 ‘ஷிப் ஆப் தீசியஸ்’ போன்ற படங்களுக்கு...
அமீர்கான் போன்ற ஹிந்தி திரைப்பட  ‘செலிபிரிட்டிகள்’ குரல் கொடுக்கிறார்கள்.
கூவி அழைக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் செய்வார்களா?

முதலில் நாம் இப்படி ஒரு படமெடுப்போம்.
எடுத்து விட்டு அவர்களை அழைப்போம்.
நிச்சயம் வருவார்கள்  ‘நம்மவர்’கள்.

பதினைந்து லட்சத்தில் படமெடுக்க தகுதியான திரைக்கதையுடன் காத்திருக்கும் படைப்பாளிகள் என்னை தொடர்பு கொள்க.
திரைக்கதையும்...உங்கள் படைப்பாக்க திறனும் என்னை கவர்ந்தால்,
நானே தயாரிக்கிறேன்.
இரு கரம் நீட்டி அழைக்கிறேன்.
[ எனது அலைபேசி எண் : 90039 17667.]

பதினைந்து லட்சத்தில், 
சில்ட்ரன் ஆப் ஹெவன், வே ஹோம், நாட் ஒன் லஸ், 
ஷிப் ஆப் தீசியஸ் போன்ற படங்களின் தரத்தில் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
 [ ‘பதேர் பஞ்சலி பாட்டி போல்’ ஒருவரை ஹீரோயினாக்கி பின்னப்பட்ட திரைக்கதையாக இருந்தால் உடனே  டபுள் ஓ.கே சொல்லி விடுவேன்.] 


பதினைந்து லட்சத்தில் படமெடுக்க என்னிடம் இப்போது திரைக்கதை தயாராக இல்லை.
எனவே, நான் ஒரு தயாரிப்பாளராக இருந்து  ‘திரைப்படக்கலையை’
‘மேலும் மேலும்’ கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

 ‘ஷிப் ஆப் தீசியஸ்’ திரைப்படம் காண நான் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாளும் தொடர்ந்து வருவேன்.
கோவை உலகசினிமா ரசிகர்களை நேரில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

20 comments:

  1. சாரி..என் பட்ஜெட் வேற....எதுக்கும் ட்ரை பண்றேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்க ரேஞ்சுக்கு ‘தலைவா’ எடுக்கலாம்.

      இது எங்க ஏரியா...உங்களுக்கெல்லாம் இங்கே அனுமதி கிடையாது.

      Delete
  2. உங்களது பார்வையில் SHIP OF THESEUS படம் எப்படி இருக்கிறது, என்னென்ன விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அற்புதமாக எழுதி உள்ளீர்கள்...நண்பரே.

      இன்று இரண்டாம் முறை பார்த்த பிறகு இன்னும் இந்தப்படம் வியப்பிலாழ்த்தி விட்டது.

      Delete
  3. 15 லட்சத்தில் எப்படி எடுக்க முடியும் என்பதைப் பற்றியும் அதன் அடிப்படை விசயங்களைப் பற்றி ஒரு பதிவாக எழுத கோரிக்கை வைக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...மஜித் மஜிதி,மக்மல்பப் போன்ற ஈரானிய இயக்குனர்கள் படம் 10லிருந்து 15 லட்சத்துக்குள் எடுக்கப்படுபவையே.

      நம்மூரில் எடுக்கலாம்.
      ஆனால்,கோடம்பாக்கத்துக்குள் எந்தக்காரணம் கொண்டு நுழையக்கூடாது.

      Delete
    2. சென்னையில் மட்டும் எடுத்தல் தான் படமா? நம்ம கோயம்புத்தூர் எடுத்தல் என்ன? இங்கேயும் தேவையான டெக்னாலஜி உண்டு.

      Delete
  4. நீங்களே கத்துக்குட்டி என்றால்...?

    என்னவொரு ஆர்வம்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் சாகும் வரை சினிமாவை கற்றுக்கொண்டே இருப்பேன்.
      அப்போதும் கற்று முடியாது.
      எனவே என்றுமே நான் ‘கத்துக்குட்டிதான்’.

      Delete
  5. தங்களை சந்திக்க இயலவில்லை, வருந்துகிறேன்... பதிவர் திருவிழாவில் சந்திக்கலாம்.. அது சரி, இந்த திரைப்படத்தின் விமர்சனம் காணவில்லையே....

    ReplyDelete
    Replies
    1. இந்தப்படம் என்னை இது போன்ற ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற பித்து பிடித்த நிலையை உருவாக்கி இருக்கிறது.

      இந்த ஒரு வரி விமர்சனம் போதுமே!

      Delete
  6. இன்று மாலை இப்படத்தை உறுதியாக பார்த்துவிடுவது என்று இருக்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் வா வினோத்.
      நானும் ‘பி’ ரோவில் அமர்ந்திருப்பேன்.

      Delete
  7. UCR-

    I saw this movie here in Chennai a few days before. A superb film. This is something a 20 - 30 steps ahead of current cinema in India. If Ananda Vikatan would have reviewed this film, they would have given 90/100.

    Great thanks to the producers, distributors, theaters.

    I heard from my friend in Mumbai that this film is creating waves among the movie-goers. Also, here in Chennai its 2nd week in 3 theaters which is a good sign.

    Good to see CBE also picked this film.

    ReplyDelete
    Replies
    1. ஷிப் ஆப் தீசியஸ் பற்றிய நடப்புத்தகவல்களை வழங்கியதற்கு நன்றி.

      கோவையில் இப்படம் 90% அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
      இளையஞர்கள் நிறைய பேர் இப்படத்தை காண வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete
  8. முதலில் தலைப்பை படித்தவுடன், உங்களது வழக்கமான நக்கலுடன் படத்தை கிழித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன் ! கண்டிப்பாக பார்க்க செல்கிறேன்.....

    ReplyDelete
  9. கண்டிப்பா பாருங்கள் நண்பரே...உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
    சாத்தூர் காரச்சேவு மாதிரி குவாலிடி கேரண்டி.

    ReplyDelete
  10. As a person who spend some presious moments with you. Sir i am sure that you can make a movie much better than "ship of theseus". Looking Forward to hear it from you.

    ReplyDelete
  11. தோழர், நான் கொடுக்கும் பட்ஜெட் இதற்கும் குறைவு..
    இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும்
    என யாரும் நம்பத் தயாராக இல்லை...
    எனவே நாங்களே தயாரிக்க முடிவு செய்துள்ளோம்..
    நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் சந்திப்போம்
    9843269995

    ReplyDelete
    Replies
    1. சந்திக்க ஆவலாயிருக்கிறேன்.அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.