நண்பர்களே...
தினத்தந்திதான் எனக்கு காலைச்சூரியன்.
நினைவு தெரிந்த நாள் முதல் தினத்தந்திதான் எனக்கு செய்தியை முந்தித்தரும்.
இன்றும் கன்னித்தீவை எப்போதாவது படித்து சிறு வயதுக்குள் சென்று வருவேன்.
தினத்தந்தியின் வளர்ச்சியை எனது வளர்ச்சியாக கொண்டாடுவேன்.
ஆரம்ப தினத்தந்திக்கும்... இன்றைய தினத்தந்திக்கும் ஆறு வித்தியாசம் அல்ல...ஆயிரம் வித்தியாசம்.
அய்யா ஆதித்தனார் பாமரன் படிப்பதெற்கென்ற தினத்தந்தியை தொடங்கினார்.
மேட்டுக்குடி மக்களுக்கு பல பத்திரிக்கைகள் இருந்தன.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் அன்றிலிருந்து இன்று வரை தினத்தந்திதான்.
அவர்களை கவரவே தனி மொழி நடையை உருவாக்கியது தினத்தந்தி.
தமிழுக்கு பல சொல்லாடல்களை அள்ளி வழங்கிய அட்சய பாத்திரம் தினத்தந்தி .
‘மாறி மாறி கற்பழித்தனர்’
‘ முதல்வருக்கும் அமைச்சருக்கும் லடாய்’
‘சதக் சதக் என குத்தினான்’
தினத்தந்தியை, ‘ஆளும் கட்சியின் ஜால்ரா’ என்போர் விபரம் அறியாதோர்.
தினத்தந்தி ‘புரோட்டாக்கால்’ முறைப்படி ஆளும் கட்சிக்கு முன்னுரிமை தந்து செய்தி வெளியிடும்.
இன்றைய ஆட்சி மாறினால் ‘கலைஞர்’ முதல் பக்கத்துக்கு வந்து விடுவார்.
தற்போதைய ‘அம்மா’ அரசு, தினத்தந்திக்கு ‘எள்ளளவும்’ சாதகமாக இல்லை.
ஆனால் தினத்தந்தி செய்திகளில் அதை நம்மால் உணர முடியாது.
தினத்தந்தி ஒன்றுதான் தலையங்கம் எழுதாத பத்திரிக்கை.
அய்யா ஆதித்தனார் அவர்கள், தலையங்கம் எழுதாத பத்திரிக்கையாக தினத்தந்தியை நடத்தி வந்தார்கள்.
அந்த சீரிய வழக்கம் இப்போது கைவிடப்பட்டது.
இதைப்போல தினத்தந்தியின் கொள்கைகள் ஒவ்வொன்றாக காற்றில் கரைந்து வருகின்றன.
தினத்தந்தியின் அங்கமான ‘தந்தி டிவியில்’...
‘காதல் காம கோடி பீடாதிபதி’ நித்தியானந்தாவின் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது அக்கிரமம்.
அராஜகம்.
சகிக்க முடியாத குற்றம்.
அய்யா அதித்தனார் கட்டிய கல்லூரியில் வருடத்துக்கு ரூ.1500/- ‘மானேஜ்மெண்ட் ஸ்காலர்ஷிப்’ வாங்கிப்படித்த நன்றியோடு சொல்கிறேன்.
வேண்டாம் இந்த வரலாற்றுப்பிழை.
காசுக்காக கண்டவனிடம் சோரம் போனது தினத்தந்தி என்ற அவப்பெயரை
சுமக்க வேண்டாம்.
என்னைப்போல லடசக்கணக்கான ஆதித்தனார் கல்லூரியின் மாணவர்களை தலை குனிய வைக்கும் போக்கை தயவு செய்து நிறுத்துங்கள்.
நாங்கள் ஏழை மாணவர்கள்தான்.
கோழை மாணவர்கள் அல்ல.
‘அய்யா சிவந்தி ஆதித்தனார்’ அவர்கள் எங்களை அப்படி வளர்க்கவில்லை.
எச்சரிக்கிறேன்.
இனியும் இந்த நீசச்செயல் தொடர்ந்தால் ஆதித்தனார் ஆன்மாவே ‘அறம்’ பாடி
உங்களை அழித்து விடும்.
தினத்தந்தியின் கருவைக்கூட எருவாக்கி...
பூத்து குலுங்க காத்திருக்கும் ‘தின மலர்களுக்கு’
இனி கொண்டாட்டமாகி விடும்.
என்னைப்போன்ற தினத்தந்தி பக்தர்களுக்கு திண்டாட்டமாகி விடும்.
பணம் , விளம்பரம் கொடுத்தா எதையும் ஊடகங்கள் வெளியிடும் நண்பரே. நான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் அனுபவத்தோடு சொல்கிறேன்
ReplyDeleteகாசு கொடுத்தால் ராஜேபக்ஷேவை புகழ்ந்து பாடலாமா?
Deleteகாசு கொடுத்தால் ‘பிட்டு படங்களின் பிட்டுகளை’ தொகுத்து போடலாமா?
ஊடக தர்மத்தை,
முன்னொரு காலத்தில் தினத்தந்தியில் கண்ணென போற்றினார்கள்.
ReplyDeleteதந்தி என்றைக்குமே ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கைதானே... அதன் பழைய தரம் இப்போது இல்லை. நித்திக்கும் சீமானுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அதன் தரத்தையே கேள்விக்குறியாக்குகிறது,
ஆதித்தனார் கல்லூரி பழைய,புதிய மாணவர்களை ஒன்றிணைத்து,
Deleteநான் இந்த விஷயத்தை இன்னும் மேலெடுத்து செல்லவிருக்கிறேன்.
படா பேஜாரா கீதுபா...
ReplyDeleteநித்தி என்றால் கிளுகிளுப்புதானே வரவேண்டும்!
Deleteஉண்மை தான் சார்..தந்தி டிவி மீதிருந்த மரியாதையே போய்விட்டது.
ReplyDeleteதினத்தந்தியை... நியூஸ் சேனல் ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்தியவன் நான்.
Deleteநான் சொல்லும் போது சன் டிவி நிறுவனம், நியூஸ் சேனல் ஆரம்பித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.