நண்பர்களே...
இணையத்தில் எழுதுபவர்களெல்லாம் குப்பைகள் என
எழுத்தாளர் ஜெயமோகன் புகழ்ந்து சொல்லிவிட்டார்.
அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
சத்தியசந்தன்.
ஞானப்பால் குடித்தவர்.
இணைய எழுத்தாளர்களை ஜெயமோகன் புகழ்ந்த கட்டுரையை படிக்க ‘இங்கே சுட்டவும்’.
லூயி புனுவல் என்ற திரை மேதை உருவாக்கிய ‘நஸரின்’ என்ற திரைப்படத்தை,
‘கடல்’ என்ற திரைப்படத்தின் கதையாக்கி காவியமாக்கிய மாயவித்தைக்கு சொந்தக்காரர்.
அவரது உள்ளொளியைக்காண என்னைப்போன்ற சாமானியர்களுக்கெல்லாம் ஞானக்கண் கிடையாது.
Nazarin \ 1959 \ Spanish \ Luis Bunuel
நஸரின் திரைப்படத்துக்கு நான் எழுதிய பதிவைக்காண ‘இங்கே சுட்டவும்’.
எழுத்தாளர் பைரவன் அவர்களை இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாகத்தெரியாது.
எழுத்தாளர் பைரவன்தான்...ஜெயமோகனுக்கு குரு.
ஆனால் தனுது குருவை ஜெயமோகன் என்றுமே காட்டிக்கொடுக்க மாட்டார்.
அவ்வளவு தன்னடக்கம் மிக்கவர்.
இந்த ராணுவ ரகசியத்தை தோண்டி எடுத்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமை கொள்ளும் எருமை நான்.
எழுத்தாளர் ஜெயமோகனது குருவின் சாகசங்களை...தடாலடிகளை...காணொளியில் கண்டு மகிழுங்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் இணைய எழுத்தாளர்களை பாராட்டி புகழ்ந்ததுக்கு
ஒரு நண்பர் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவு எழுதி உள்ளார்.
பதிவர் பன்னிக்குட்டி ராமசாமியின் பதிவைக்காண ‘இங்கே சுட்டவும்’
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
எதுவும் கடந்து போகும்...!
ReplyDeleteஇந்த காணொளியை வேறு விதமாக ஒரு பதிவில் பயன்படுத்தி உள்ளேன்... இன்னும் எழுதி முடிக்கவில்லை... வரும்...
நானும் எனது நண்பரும் இரண்டு நாள் முன்னால் இப்படத்தின் காமெடியை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தோம்.
Deleteஇதை இப்படிப்பயன்படும் விதத்தில் நடந்து கொண்ட ஜெயமோகனுக்குத்தான் முதல் நன்றி உரித்தாகும்.
:-)
ReplyDeleteஇந்த கல்யாணப் பரிசு காமெடியைத்தான் விவேக் பார்த்திபன் கனவில் சுட்டிருப்பார்....
ReplyDeleteஎதையாவது சுட்டுத்தான் உனக்கே பிழைப்பை ஓட்டியாகணும் போல..
நஸரின் படத்தை சுட்டு...கடல் படத்துக்கு வாங்கிய சம்பளம்...
Deleteகல்யாணப்பரிசு காமெடியை சுட்டு பதிவெழுதியதால்
எனக்கு கிடைத்தது.
பங்கு போட வரியா ?
வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅடிக்கடி எழுதுங்க.