Jan 18, 2013

திருட்டு வீடியோவை ஒழிக்க முடியாது. [ பாகம் 1 ]


நண்பர்களே...
பழைய தொழிலை விட்டு விட்டேன்.
புதிய தொழில் தொடங்க பல வழிகளில் முயற்சித்து வருகிறேன்.
உட்கார்ந்து தின்றால் மா மலையும் கரைந்து போகும்.
பேங்க பேலன்ஸ் சிறுவாணி நீர் போல் வெகுவாக குறைந்து விட்டது.
நம்பிக்கை மட்டும் குறையவில்லை.
சிறுவாணி டேம், இரண்டு நாள் மழையிலேயே...
கோவையின் ஒரு வருட தேவையை சப்ளை செய்யத்தயாராகி விடும்.
இது வரலாறு.

புதிய தொழில் தொடங்கி பலமாக கால் ஊன்றும் வரை உலக சினிமாவை
அதிகமாக எழுத முடியாது.
மிக எளிய உழைப்பில் உருவாக்க முடியும் பதிவுகளே இனி எழுத முடியும்.
மன்னிக்கவும்.

திருட்டு வீடியோ பற்றி பலரும் எழுதி இருப்பார்கள்.
எனக்கு 1980லிருந்து அதன் வரலாறு ஒரளவு தெரியும்.
அப்போது வீடியோ கேசட் என்ற பார்முலாவில்தான் திரைப்படம் பார்க்க முடியும்.
எழுபதுகளில் உருவான வீடீயோ கேசட் எண்பதுகளில் தமிழ்நாட்டை ஆட்சி
செய்தது.

எழுபதுகளில் தமிழ் திரைப்படங்களை ஒரிஜினல் வீடியோ கேசட்டுகளாக
வெளியிடுவதில் முன்னணி நிறுவனங்கள் வி.ஜி.பி., ஏ.வி.எம். மட்டுமே.
சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸ்காரர்கள் அவர்கள் தயாரித்த கொஞ்சும் சலங்கை, அழியாத கோலங்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களை அட்டகாசமான தரத்தில் வெளியிட்டார்கள்.
இவர்கள் கேசட்டுகளில் இருக்கும் திரைப்படங்கள் சும்மா தக தகன்னு மின்னும்.

உலகத்தமிழ் வீடியோ உலகில் முதன் முறையாக,
புதிய தமிழ் திரைப்படங்களை திருட்டு வீடியோவில் தயாரித்து மார்க்கெட்டில் புழங்க காரண கர்த்தர்கள்...
இன்றும் படங்கள் தயாரிக்கும் பராம்பரிய நிறுவனம்தான்.
இவர்களது ஸ்டூடியோவில் உள்ள பிரிவ்யூ தியேட்டரில்,
வீடியோ கேமராவை செட் பண்ணி திருட்டு வீடியோ தயாரித்து வந்தார்கள்.

தயாரித்த கேசட்டை லண்டனை சேர்ந்த பஞ்சா என்பவர் வாங்கிக்கொண்டு போய் வெளிநாட்டில் காப்பியெடுத்து உலகம் முழுக்க பரப்பி விடுவார்.
சிங்கப்பூர், மலேசியாவிற்கு அப்பு என்பவர் பரப்புவார்.
கொஞ்சம் ஏமாந்தால் ஒருவர் ஏரியாவிற்குள் இன்னொருவர் புகுந்து விற்று விடுவார்கள்.
இலங்கைக்கு, மதுரையில் இன்றும் இருக்கும் முன்னணி ஜவுளி நிறுவனத்தார் வாங்கி அனுப்பி வந்தனர்.
[இவர்கள் கடை விளம்பரம் இது வரை டிவியில் வந்தது கிடையாது.]

பஞ்சா சென்னை வந்தால் தாஜ் கோரமண்டல் என்ற பைவ் ஸ்டாரில் தங்குவார்.
அப்பு மாரிஸ் ஹோட்டலில் தங்குவார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்தால் கட்டித்தழுவுவார்கள்.
எனக்கு காட்பாதர் படம் பார்க்கும்போதெல்லாம் இவர்கள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.

முன்னணி நிறுவனத்தின் திருட்டு வீடியோ வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் யாரு ?
நம்ம... டி.ஆரு.

விபரம் அடுத்தப்பதிவில். 

17 comments:

  1. திருட்டு வீடியோவின் வரலாறு.. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. பெரிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், வேறு வழியில்லாமல் கிசுகிசு பாணியில் எழுதுகிறேன்.
      சுவையாயிருக்கிறது எனப்பாராட்டியது என்னை உற்சாகப்படுத்தி உள்ளது.

      Delete
  2. பல அரிய தகவல்களை தெரிந்துகொண்டேன் நன்றி

    ReplyDelete
  3. Many information in the article is news to me. Why dont you be more specific?
    But unfortunately, those indulging in piracy thrive well and and are well protected by the higher ups.

    Looking forward to subsequent releases.

    ReplyDelete
    Replies
    1. தொடரை தொடருங்கள்.
      நன்றி.

      Delete
  4. அறிய தகவல்கள்.. மிக நன்று !

    ReplyDelete
  5. தொடர்ந்து எழுதுங்க அப்புறம ஒரு புத்தகமா பொடலாம்

    ReplyDelete
    Replies
    1. இத்தொழிலில் ஜாம்பவன்களாக இருந்தவர்கள் நண்பர்களாக இருந்தார்கள்.
      அவர்கள் கூறிய தகவல்கள்தான் இத்தொடரில் வரும்.

      Delete
  6. அட...வெளிச்சத்திற்கு வருகிறது....

    ReplyDelete
    Replies
    1. இத்தொழில் செழித்து வளர உறு துணையாயிருப்பவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ற உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல ஆசைப்பட்டேன்.
      அவ்வளவுதான்.

      Delete
  7. "எழுபதுகளில் தமிழ் திரைப்படங்களை ஒரிஜினல் வீடியோ கேசட்டுகளாக
    வெளியிடுவதில் முன்னணி நிறுவனங்கள் வி.ஜி.பி., ஏ.வி.எம். மட்டுமே."

    ஏக்நாத் மற்றும் ராஜ் வீடியோ விஷனை விட்டு விட்டீர்களே..

    ReplyDelete
  8. "எழுபதுகளில் தமிழ் திரைப்படங்களை ஒரிஜினல் வீடியோ கேசட்டுகளாக
    வெளியிடுவதில் முன்னணி நிறுவனங்கள் வி.ஜி.பி., ஏ.வி.எம். மட்டுமே."

    ஏக்நாத் மற்றும் ராஜ் வீடியோ விஷனை விட்டு விட்டீர்களே..

    ReplyDelete
    Replies
    1. ஏக்நாத்,ராஜ் வீடியோ விஷன் இவர்கள் இருவரும் 80களில் வந்தவர்கள்.

      Delete
  9. அப்படியா??

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.