Oct 28, 2012

சின்மயிக்கு நன்றி.

நண்பர்களே...

வலையுலகில் சமீபத்திய புயல்...சின்மயி உருவாக்கியதுதான்.
நானும்,அவரது விவகாரத்தில் நேற்று வரை மாற்றுக்கருத்து கொண்டிருந்தேன்.


நண்பர் ராஜ் இது பற்றி விளக்கமாக பதிவிட்டு உண்மையை எடுத்து உரைத்து உள்ளார்.
அதை நான் முழுமையாக நம்புகிறேன்.
அவரது பதிவை படிக்க கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

சின்மயி விவகாரத்தில் உண்மை நிலவரம் அறிய ‘கிளிக்’கவும்.

நண்பர் ராஜ்...கண்ண பரமாத்மாவை விட ஒரு படி மேல்.
அழைக்காமலே ஒடி வந்து உதவுவார்.
எனது விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து உதவியது போலவே...
சின்மயி விவகாரத்திலும் உதவியிருக்கிறார்.

இனி போலி ஐ.டி.கிரியேட் பண்ணி டான்ஸ் ஆடுபவர்கள் டப்பா நசுக்கப்படும்.
இப்போதே ஆட்டம் கண்டு விட்டார்கள்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்டம் காட்டலாம் என மனப்பால் குடிப்பவர்களுக்கும் இனி சங்குதான்.

அக்கிரமக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி...போலி ஐ.டி போக்கிரிகள் வயிற்றில் புளியை கரைத்த புண்ணியவதி சின்மயிக்கு கோடானு கோடி

நன்றி. 
நன்றி.
நன்றி.  

7 comments:

  1. வணக்கம் அண்ணா..நலமா ?
    நண்பர் ராஜ் எழுதிய பதிவை முன்னாடியே பார்த்தேன்..இப்போதுதான் படிக்க போறேன்.பதிவுக்கு நன்றி.இனி அடிக்கடி வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...இன்று காலையில் கூட உன்னை நினைத்தேன்.
      ஆளையே காணோம் என்று.

      உன் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை, எந்தப்பக்கமும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்பது என் பணிவான கருத்து.

    ReplyDelete
  3. நண்பரே...நான் கூட நேற்று வரை சின்மயிக்கு எதிராக கருத்து கொண்டிருந்தேன்.
    ராஜ் பதிவை படித்த பிறகு, பதிவுலக சீனியர்களிடமும் கேட்டு தெரிந்து கொண்டு... இப்பதிவை எழுதி உள்ளேன்.

    போலி ஐ.டி. ரவுடியிஸத்தை ஒழிக்க முடியாது...ஒடுக்கலாம்.

    இந்த திருப்பணியை தொடங்கி வைத்துள்ளார் சின்மயி.
    இந்த விஷயத்துக்காகவே அவருக்கு நன்றி செலுத்தி உள்ளேன்.

    ReplyDelete
  4. @saysatheesh என்பவரது ட்விட்டர் அக்கவுன்ட் போய் பார்த்தால் நேற்று ஒரு விளக்கம் அளித்துள்ளார்.இவர் 900க்கு மேல் ஃபாலோயர் வைத்திருக்கிறார்.இவர் அளித்துள்ள நீண்ட விளக்கமே போதுமானது இதில் நடந்தது என்ன என்று.chinmayi என்று search போட்டு தேடினால் ஒரு ட்வீட் அகப்படும்.அதில் attachment இருக்கிறது.அதைப் படியுங்கள்.

    அவரிடம் அனுமதி வாங்கி பிரசுரிக்கலாமே....

    ReplyDelete
  5. இந்த விவகாரம் பத்தி எனக்கு இதுவரையும எதுவும் முழுசாக தெரியாது.. சும்மா இன்னொரு சர்ச்சைன்னு விட்டுட்டேன்.. சின்மயிங்கற பெயரோட வந்த பதிவுகளையும் ஸ்கிப் பண்ணிட்டேன். அப்படியே ராஜோட பதிவும் விட்டுப் போச்சு!

    இப்பதான் கண்ணுல தண்ணி தெளிச்ச மாதிரி இருக்கு..
    சின்மயிக்கு நம்ம சார்பிலயும் ஒரு நன்றி!

    ReplyDelete
  6. அண்ணே, இதுல காமெடி என்னன்னா, கொஞ்ச நாளுக்கு முன்ன சாட் ல ஒரு சின்ன பொண்ணுகிட்ட ஆபாசமா பேசி, அது Screen Shot ஆவே பதிவு செய்யப்பட்டு, நாறிப்போய், வலையுலகம் மொத்தமும் துப்பு வாங்கிகினதுங்க எல்லாம், இப்போ இந்த விவகாரத்துல, ஏதோ சீரிய சிகாமணிங்க மாதிரி வேதம் ஒதுதுங்க.

    ச்சே, அப்போ யாரும் புகார் கொடுக்காம விட்டுடாங்களே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.