என்னை பதிவுலகில் தொடர்ந்து அவமானப்படுத்தி புளகாங்கிதம் அடைந்து வரும் நல்லவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
என் வாழ்க்கையில் அவமானங்களே...என்னை உயரத்திற்கு தூக்கி சென்றிருக்கின்றன.
பாராட்டுக்கள்தான் படு குழியில் தள்ளியிருக்கின்றன.
ஒருவனை வீழ்த்த மிக எளிய வழி...அவனை பாராட்டுவதுதான்.
முதன் முதலாக எனக்கு விளம்பரப்படம் தயாரிக்க வாய்ப்பு வந்தது.
தமிழ் நாட்டிலேயே மிகப்பிரபலமான மாடல் கோஆர்டினேட்டர்
‘தாரா உமேஷை’ சந்திக்கச்சென்றேன்.
புராடெக்ட் என்ன?
‘லாட்டரி’ மேடம்.
லாட்டரியா ! நோ...நோ...நோ....என் மாடல் லாட்டரி விளம்பரத்தில நடிக்க மாட்டாங்க.
ஏன் மேடம்?
லாட்டரி விளம்பரம் எல்லாம் ‘சீப் டெக்னீசியனை’ வைச்சு பண்ணுவாங்க...
‘எல்லாமே’ இந்த ‘கோபால் பல் பொடி’ விளம்பர ஸ்டேண்டர்டுல இருக்கும்.
நீங்க...தப்பான இடத்துக்கு வந்தீட்டீங்க.
நான் ராஜீவ் மேனன்,பி.சி.ஸ்ரீராம் போன்றவர்களுக்கு மட்டும்தான் கோஆர்டினேட் பண்ணுவேன்.
மேடம்...நான் ‘ராஜீவ் மேனன்’ படத்தில இருக்கிற அத்தனை டெக்னீசீயனையும் எனது படத்தில் இடம் பெறச்செய்கிறேன்.
நீங்களே அவர்களையும் கோஆர்டினேட் செய்து தாருங்கள்.
ஆனால் எனது போஸ்ட் புரடக்ஷன் மட்டும்...நான் ‘எடிட் பாய்ண்ட்ல’ பண்ணிக்கிறேன்.
எனது ‘இந்த வாக்கியம்’... அவரை வீழ்த்தி விட்டது.
‘எடிட் பாய்ண்ட்ல பண்றேன்னு’ கெஞ்சுறதும்... ‘ரஜினியை ஹீரோவா போட்டுக்கிறேன்னு’ கெஞ்சுறதும் ஒண்ணு.
[ இன்று என்னைப்போலவே... எடிட் பாய்ண்ட் ஸ்டூடியோவும் மண்ணோடு மண்ணாகிப்போய் விட்டது ]
அவரிடம் பேசியது போலவே...
ஒளிப்பதிவுவுக்கு... ‘ஆர்.டி. ராஜசேகர்’
ஆர்ட் டைரக்ஷனுக்கு ‘ ராம் சந்திரசிங்’...
என முதல் படத்திலேயே ஜாம்பவான்களை நியமித்தேன்.
மாடலாக ‘மிஸ் இந்தியா’ போட்டியில் வெற்றி பெற்ற பெண் நடித்தார்.
அந்த விளம்பரம்தான்...விளம்பர உலகில் ‘டிரெண்ட் செட்டராக’ மாறியது.
பதிவெழுத என்னை ஊக்குவித்து அதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் எனது நண்பர் செந்தில் ராஜ் அவர்களே.
அவ்ர்தான் பதிவுலகில் ‘ தமிழ்க்குறிஞ்சி ’ என்ற இணைய பத்திரிக்கை நடத்தி வருகிறார்.
நான் பதிவெழுத வந்த போது...
கனவுகளின் காதலன்,
கீதப்பிரியன்,
கருந்தேள்,
கொழந்தை...
இவர்களைத்தான் கோலாக வைத்தேன்...இப்போதும் வைத்திருக்கிறேன்.
இவர்களது உயரத்தை தாண்ட உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
அதற்கான முயற்சிதான் ‘ஹேராம் பதிவுகள்’.
[ கொழந்தை வீடியோ பதிவு போட்டுகிட்டு இருக்கார்.
இவரது இரண்டாவது பதிவு பார்க்கவில்லை.
இனியும் பார்க்கப்போவது இல்லை.
ஆனால் கொழந்தையின் எழுத்துக்கு என்றும் ரசிகனாக தொடர்வேன்.
சமீபத்திய இவரது கமெண்ட்... ‘முகமூடியா..மூக்குல முடியா ’...
இந்த குசும்பு எனது ஆசான் சுஜாதாவிடம் மட்டுமே பார்க்க முடியும். ]
விளம்பரப்பட உலகில் இன்றும் எனது சில சாதனைகள் முறியடிக்கப்படவில்லை.
இருந்தும்... விளம்பரப்பட உலகில் நான் விழுந்ததற்கு காரணம் என்னை சுற்றி இருந்த ஜால்ராக்கள்.
அந்த சத்தத்தில் மதி மயங்கி விழுந்தவன் இன்று வரை எழுந்திருக்க முடியவில்லை.
இன்று பதிவுலகில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்.
அவர்களை நான் ‘தாரா உமேஷாக’ எடுத்துக்கொண்டு வளரப்போகிறேன்.
அவமானங்கள்தான் ‘அடி உரம்’ .
நடிகர் திலகத்தையே ‘பராசக்தி’ படத்திலிருந்து தூக்கி விட சிலர் சதி செய்தார்கள்.
அவர்கள் சொன்ன காரணம்... “ அவனுக்கு நடிக்கத்தெரியவில்லை...
சும்மா மீன் மாதிரி ‘வாயை...வாயை’...பொளக்கிறான் ”.
அதே சதிக்கூட்டத்தின் வாரிசுகள்...பதிவுலகிலும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் எனது சொந்தக்காரன் நூறு கோடி வைத்திருக்கிற திமிறில்... ‘அட்வைஸ்’ என்ற பெயரில் அவமானப்படுத்தினான்.
“ உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு ஹிந்து பேப்பர்ல முழு பக்கத்துக்கு விளம்பரம் வரவழைக்க முடியும்.
உன்னைப்பாராட்டி ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுத வைக்க முடியுமா?
எனக்கு எழுதி இருக்காங்க...”
வுட்டேன்... ‘ஒரு குத்து ’...
நாக் அவுட்தான்.
பணம் இருந்தா... ‘முகமூடி’ன்னு படம் எடுக்கலாம்.
மூளை இருந்தா... ‘வழக்கு எண்’ணுன்னு படம் எடுக்கலாம்.

செம...கடைசியா சொன்ன பஞ்ச்..
ReplyDelete//போட்டேன்... ‘ஒரு பவுண்ஸர் ’...
ReplyDeleteகீளீன் போல்டு.//
சின்னத்திருத்தம்.. எனக்கு தெரிஞ்சு பவுண்சர் பந்துக்கு க்ளீன் போல்டாக முடியாது.
கிரிக்கெட்டை கிலோ என்ன விலை என்று கேட்கும் ஜாதி நான்.
Deleteமாத்திருவோம்...பாக்ஸிங்குக்கு.
பதிவை விட பஞ்ச் சுவாரசியம்!
ReplyDeleteஅட.. என்ன நடந்தது சார்.! :)
ReplyDeleteஉங்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன அனைத்து பதிவுகளும்.. நன்றி..
ReplyDeleteகோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது. விமர்சனங்களை புறந்தள்ளி கண்டு கொள்ளாமல் போவதுதான் உங்களது எழுத்துத் திறனுக்கு நல்லது..! கண்டு கொள்ளப்படாமல் போக வேண்டியவைகளுக்காக உங்களது பொன்னான நேரத்தை வீண்டிக்காதீர்கள்..!