ஒமர் முக்தார் சென்னை அலங்கார் தியேட்டரில் 1983 ல் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய படம்.
அப்போது நான் பார்த்த போது இப்படம்...நம்மூர் வீரபண்டிய கட்ட பொம்மனை ஞாபகப்படுத்தியது.
சமீபத்தில் இப்படத்தை டிவிடியில் பார்க்கும் போது....
ஒமர் முக்தாரை... பிரபாகரனின் வடிவமாக பார்த்தேன்.
ஒமர் முக்தாராக இப்படத்தில் வாழ்ந்தவர் என்னுடைய பேவரைட்...
அண்டனி க்வீன்.
பிரம்மாண்டமாக இப்படத்தை தயார்த்து இயக்கியவர்
முஸ்தபா அக்காட்.
இத்தாலிய ராஜ பக்ஷே முசோலினிக்கு...
பெருத்த கவலை ..அவமானம்...
காரணம்... ஒமர் முக்தார்.
அவனது தளபதி கிராஸியானியை அழைத்து...
“இன்று முதல் உனது பணி....ஒமர் முக்தாரை அழிப்பது” என்றான்..
அழித்தொழிப்பதில் டாக்டர் பட்டம் பெற்ற கிராஸியானி
‘நான் வந்து விட்டேன்’ என செய்தி சொல்ல ‘இளைய தளபதி’ தலைமையில் கொலைப்படையை ஏவுகிறான்.
அவன் அப்பாவி கிராம மக்களை அழித்து...
மொத்த கிராமத்தையே ‘தீ’க்கு தின்ன கொடுக்கிறான்.
அந்த கொலைகாரக்கூட்டம் மொத்தத்தையும் அழித்து...
பதிலடி கொடுக்கிறார் ஒமர் முக்தார்.
“ஆஹா...இந்த ஒமர் முக்தார் முறுக்கல்ல...நொறுக்குவதற்க்கு” என புரிந்து கொண்டு ந்ரி வேலை செய்கிறான்.
சாமாதான பேச்சு வார்த்தை என்ற சிங்கள வலையை விரிக்கிறான்.
மூச்சு விட கிடைத்த நேரத்தில் மொத்த லிபியாவின் மூச்சை நிறுத்த படை பலத்தை பெருக்கி விடுகிறான்.
விமானங்கள் மூலமாக....
மக்கள் வசிக்கும் இடங்கள்...
பள்ளிக்கூடங்கள்...
மருத்துவமனைகள் மீது குறி வைத்து குண்டுகள் வீசி அழிக்கிறான்.
இக்காட்சிகள் ராஜ பக்ஷேவின் குரு.... கிராஸியானி என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்கும்.
எல்லா ஊர்களிலும் எட்டப்பன்,கிட்டு வகையறாக்கள் உண்டு.
அவர்கள் மூலமாகவும் ஒமர் முக்தாருக்கு நெருக்கடி கொடுக்கிறான்.
ஆக்கிரமிப்பு எல்கைகளை விரிவுபடுத்தியதன் மூலமாக...
ஒமர் முக்தாருக்கு கிடைத்து வந்த...
எகிப்து நாட்டின் உதவியை... கிடைக்க விடாமல் தடுக்கிறான்.
இறுதிப்போரில் ஒமர் முக்தார் கைது செய்யப்படுகிறார்.
விசாரணை நாடகம் முடிந்ததும் தூக்கிலிடப்படுகிறார்.
இக்காட்சியில் உள்ள குறியீடுகள் அனைத்தும்....
இப்போராட்டம் தொடர்ந்து முன்னேறும்...
ஒராயிரம் ஒமர் முக்தார்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள்.... என்பதை வெகு அழகாக ஒங்கி உரத்து சொல்கிறது.
ஒரிஜினல் ஒமர் முக்தார் படம்...
இத்தாலியர்களால் வதை செய்யப்பட்ட ....
லிபியர்களின் போராட்டத்தை சொன்ன
இப்படம்...
இத்தாலிக்காரியால் வதை செய்யப்பட்ட...
ஈழப்போராட்டத்தையும்....பிரபாகரன் வீரத்தையும்...
உலகிற்க்கு எடுத்து சொல்ல...
இதே தரத்தில் எடுக்கப்பட வேண்டும் என்ற உண்மையை சொல்கிறது.
இது வரை வந்த அத்தனை படங்களும் அபத்தமானது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக....கோபத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இது வரை படமெடுத்த அத்தனை இயக்குனர்களும் மீடீயாக்கர்கள்[MEDIOCRE].
இவர்கள் ராஜ பக்ஷேவை விட ஆபத்தானவர்கள்.
காந்தி படம் எடுத்த ரிச்சர்டு அட்டன்பரோ....
‘சே’ படம் எடுத்த ஸ்டீவன் சோடர்பர்க்...
லாஸ்ட் எம்பரர் எடுத்த பெட்ரோ லூசி...
இவர்கள் தரத்தில்.... பிரபாகரன் வரலாறு... படமானால்....
உலகமே...தமிழ் ஈழம் உருவாக்க திரண்டு வரும்.
வணக்கம் அண்ணே,
ReplyDeleteஅந்தக் காலப் படத்தை இந்தக் கால அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல அருமையாக ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறீங்க.
உலக அரங்கில் எம் போராட்டம் பற்றிய பார்வைகள் இன்னும் அதிகளவில் படமாக்கப்பட வேண்டும்! அப்போது தான் நீங்கள் சொல்வது போல...கருத்துக்கள் மூலம் புரட்சி நிகழும் என்பது உண்மையே!
வணக்கம் நிரூ...
Deleteதங்கள் கருத்தை...நிரூபிக்க புதிய படைப்பாளிகள் வர வேண்டும்.
அழகான விமர்சனம். இலங்கை போராட்டத்தையும், படத்தையும் ஒப்பிட்ட விதம் மிக அழகு. நன்றி.
ReplyDeleteசமீபத்தில்...மீண்டும் இப்படத்தை பார்த்த போது...படத்தின் காட்சிகள் ஈழ விடுதலை போராட்டத்தையே என் மனது தொடர்பு படுத்தி பார்த்தது.
Deleteபாராட்டுக்கு நன்றி...நண்பரே!
ஒமர் முக்தார் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை சார்.. எனக்கு இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது! நன்றி
ReplyDelete1983ல் கல்லூரி முடித்து சென்னை வந்த போது பார்த்த படம்.
Deleteதியேட்டரிலேயே அப்போது பத்து தடவைக்கு மேல் பார்த்த படம்.
நாஸ்டால்ஜிக்காகவே இப்படத்தை மீண்டும் பார்த்தேன்.
உங்களுக்கு இப்படத்தை அறிமுகம் செய்ததற்க்காக பெருமைப்படுகிறேன்.
அண்ணா வணக்கம்.நலமா ?
ReplyDeleteதங்களது சினிமா ஆர்வத்தை பார்க்கும் போது சிலிர்க்கிறது.எங்கிருந்த இந்த படமெல்லாம் நீங்கள் எடுத்து பார்க்கிறீர்கள்.
டவுன்லோடு லிங்க் கிடைப்பின் கண்டிப்பாக இப்பவே எடுத்துக்கொள்கிறேன்.அக்மார்க் நல்ல விமர்சனம்.ஒப்பிடுதல் எல்லாம் அருமை.மிக்க நன்றி.
தம்பி குமரா...நலம்.
Deleteமகிழ்ச்சியோடு உன் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன்.நன்றி.
hello sir..v good post..the unforgettable film..I cannot 4get this film..i watched this in maruthi theatre wen I was a kid,from this film only i started my intrest towards movies..and from this film..i closely watched anthony quinn..btw..congrats and my hearty wishes for your new busines:)
ReplyDeleteபாலு...ஒமர் முக்தார்தான் உங்களுக்கு பிள்ளையார் சுழியா!
ReplyDeleteபாராட்டுக்கும்...வாழ்த்துக்கும் நன்றி.
இந்த படம் பல வகைகளில் எனக்கு ஸ்பெஷல்.......
ReplyDeleteஎங்கப்பா Enter the dragonக்கு பிறகு அதிக தடவ பாத்த படம் இதுதான். மெட்ராஸ்ல தான் பாத்ததார். திருவள்ளூர்ல வேல. எந்த இங்க்லீஷ் படம் ரிலீஸ் ஆனாலும் வந்து பாத்திட்டு போவார். Sapphire theatre அவருக்கு மிக விருப்பமான ஒன்று.
good keep it up
ReplyDeleteஓமர்முக்தார் தரத்தில் தனி ஈழம் அமைய வேண்டிய அவசியத்தையும்,செல்வா,அமிர்தலிங்கம் போன்ற அறவழி தியாகிகளின் ஏமாற்றமும்,மாவீரர் பிரபாகரன் கையில் ஆயுதம் எடுத்து போராடியதன் பிண்ணணியையும்,அவர் சந்தித்த சவால்களையும்,சிங்கள இந்திய குள்ளநரிகளின் சூழ்ச்சியையும் தெளிவாக மக்களுக்கு புரியவைத்தாலன்றி தனி ஈழத்தின் அவசியமும்,போராளிகளின் தியாகமும் சாமானியனுக்கு புரியவே புரியாது.அதுவரை பல மீடியோக்கர்கள் என்னும் அரைகுறைகளின் தொல்லைகள் விடவே விடாது. அயர்லாந்து விடுதலை போராட்ட வீரர்கள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டதை செல்லுலாய்டில் ஹங்கர் என்னும் படமாக 2008 ஆம் ஆண்டு வெளியிட்டனர்,அதில் அயர்லாந்து,இங்கிலாந்து இரு சாரார் மனநிலையும் மிக அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதை பார்த்தாலாவது ஒரு வரலாற்று படம் எப்படி எடுக்கப்படவேண்டும் என தத்தி இயக்குனர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ReplyDeleteஅருமை நண்பரே...
ReplyDeleteஎனது கருத்துக்கு மேலும் வலு சேர்த்தமைக்கு நன்றி.
பதிவானாலும்...பின்னூட்டமிட்டாலும் கீதப்பிரியனின் ஸ்டைல்
தனித்து நிற்க்கும்.
நன்றி கீதப்பிரியன்.