ரஜினி குறுகிய காலங்களில் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து விட்டார்.
பட்டை சாராயம் சாப்பிட்ட மனிதனுக்கு.... ஸ்காட்ச், பாட்டில் பாட்டிலாக கிடைத்தது.
போதை, எதில் கிடைத்தாலும்... அதை தேடித்தேடி சுவைக்க ஆரம்பித்தார்.
கஞ்சா,ஜர்தா பீடா,ஜாதிக்காய்...என ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை மனிதன்.
ஒரு நாளைக்கு... மூன்று கால்ஷீட்டும் கொடுத்து விட்டு....
[எட்டு மணி நேரம்... ஒரு கால்ஷீட்] 24 மணி நேரமும் ஒய்வறியா உழைப்பை வாரி வழங்கினார்.
ரசிகர்களும்...தயாரிப்பாளர்களும்...மீடியாவும் விடாமல் ரஜினியை துரத்தினார்கள்.
அவர் ஏறிய உயரத்தை தாங்க முடியாமல்... தள்ளாடினார்.
மன நிலை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்...
நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக சிங்கப்பூர் சென்ற போது... பாலச்சந்தரையே அடிக்க கை ஒங்கி விட்டார்.
அடிக்க வந்தது ரஜினி அல்ல...மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை.... எனக்கண்டு கொண்ட இயக்குனர் பாலச்சந்தரும்...சிவாஜியும் சேர்ந்து...
தங்களுக்கு வேண்டிய டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளித்து நார்மலாக்கினார்கள்.
ஆனால் மீடீயாதொடர்ந்து பைத்தியக்கார பட்டம் கட்டி கொண்டே இருந்தது.
தயாரிப்பாளர்கள் ரஜினியை வைத்து படமெடுக்க தயங்கிய காலத்தில்...
சிவாஜி, தன்னுடைய படங்களில் ரஜினியை நடிக்க வைத்து வாழ்வளித்தார்.
எம்ஜியார் முதல்வரானதால்... சிவாஜி, தமிழ் சினிமாவில்....
ஏக போக சக்ரவர்த்தியாக கொடி கட்டி பறந்த காலம்.
ரஜினியை... நான் வாழ வைப்பேன் ...என கை கொடுத்த சிவாஜி...
அதே பெயரில் ஒரு படமும் கொடுத்தார்.
அந்தப்படம் ரஜினிக்கு மறு வாழ்வு கொடுத்தது.
அதற்க்கு பிறகு வந்த நல்லவனுக்கு நல்லவன்... சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்தது.
அதற்க்கு முன்னால் பில்லா,ரங்கா,பொல்லாதவன் என கொடியவர்கள் பெயரிலேயே ரஜினி நடித்தார்
ந.ந படத்துக்குப்பிறகு ரஜினியின் படப்பெயர்கள் மாறின .
தர்மதுரை,மனிதன்,கை கொடுக்கும் கை.... என பாசிட்டிவ் பெயர்களுக்கு மாறினார்.
படங்களின் பெயருக்கேற்றார் போல் தானும் மாறினார்.
சிவாஜியின் படங்களை... சிவாஜி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரித்த போது அந்தப்பணிகளை சிறப்பாக செய்தவர் அவரது தம்பி.சண்முகம்.
அவரது மறைவுக்குப்பிறகு அந்தப்பதவிக்கு வந்தவர் சிவாஜியின் மகன்
ராம் குமார்.
இவரது நிர்வாகத்தில் சிவாஜி பிலிம்ஸ் அதல பாதளத்துக்கு வந்தது.
சிவாஜி என்ற சிங்கமும்,பிரபு என்ற சிங்கக்குட்டியும் வீட்டில் இருக்க...
சின்னி ஜெயந்த் என்ற பூனைக்குட்டியை வைத்து எந்த மடையனாவது படம் எடுப்பானா?
ஆனால் ராம் குமார் எடுப்பார்.
சிவாஜியின் மறைவுக்குப்பிறகு இன்னும் மோசமாக செயல் பட்டதன் விளைவு சிவாஜியின் கனவு இல்லமான அன்னை இல்லம் விற்பனைக்கு வந்தது.
விஷயம் கேள்விப்பட்டு ஒடி வந்த ரஜினி கை கொடுத்தார்.
பிரபுவின் தயாரிப்பில் சந்தரமுகி வந்தது...
மற்றதை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.
ராம் குமார் நல்லவர்...மிகவும் நல்லவர்.
அந்த ஒரு தகுதி போதாதா...வியாபாரத்தில் தோற்க...!
யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
அவசரத்தேவைக்காக சிவாஜியின் தோட்டத்தை விற்றார்.
வாங்கிய ரியல் எஸ்டேட் வியாபாரி.... பல மடங்கு மேற்க்கொண்டு விற்று பல கோடிகளை பார்த்து விட்டார்.
அதில் சில கோடிகளை ராம் குமாரிடம் கொடுத்தார்.
“எங்களுக்கு உரிய தொகையை நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.
இது உங்கள் வியாபார த்திறக்கு கிடைத்த லாபம்.
இதில் எங்களுக்கு பங்கு தரத்தேவையில்லை” என திருப்பி கொடுத்த நல்லவர் ராம் குமார்.
குருவிற்க்கும் வாழ்வளித்த ரஜினியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இவ்வளவு நடந்திருக்கா
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ரஜினி மகாசமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நான் அறிவேன்.
Deleteஅறிந்ததை சொல்லுகிறேன்.
அடுத்த பாகத்தை எப்பொழுது போடுவீங்க அண்ணா, தொடர் செம்ம சுவாரஸ்யமாக உள்ளது..எங்கும் படிக்காத பல புது தகவல்கள் கிடைக்கிறது..மிக்க நன்றி.
ReplyDeleteபத்திரிக்கைகளில் வராத தகவல்களை மட்டுமே பெரும்பாலும் கூறி உள்ளேன்.
Deleteதிருப்பவும் அருமையான பதிவு சார்.. ரஜினி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததெல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லை..
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.. (தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கும் போல..)
போதையின் உச்சத்தில்,தன்னை பற்றி எப்போதும் தப்பாக (அந்த காலகட்டத்தில் மிகவும் சரியாக) எழுதிய பத்திரிக்கையாளர் ஒருவரை மவுண்ட் ரோட்டில் காரில் விரட்டி, செருப்பால் அடித்து அதற்காக நீதிமன்றத்தில் பைன் கட்டிய கதையும் இருக்கிறது. ரஜினி இன்றளுவும் தேர்தலில் நின்றால் இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. இதை பற்றியும் விசாரித்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteரஜினியின் கருப்பு பக்கங்களை பதிவிடும்போது இவற்றை சொல்லுகிறேன்.
Deleteகோர்ட்டில் அபராதம் கட்டிய குற்றத்திற்க்காக தேர்தலில் நிற்க முடியாதா?
லகுட பாண்டி அவர்களே...
இந்தியாவில்தானே இருக்கிறீர்கள்!
கொலைக்குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டு...
ஜெயிலில் இருந்து கொண்டே... ஜெயித்த பப்பு யாதவ் என்ற பீகார் எம்.பி தெரியுமா?
அவனை அமைச்சராக்கிய லல்லுவை தெரியுமா!
ஏதாவது ஒரு குற்றத்தில்.... ஆறு ஆண்டுகள் தண்டனை பெற்று.... ஜெயிலிலிருந்து விடுதலையாகி, ஆறு ஆண்டுகள் கழித்து தேர்தலில் நிற்க்கலாம்.
[தகவல் உபயம்:எனது நண்பர் வழக்கறிஞர் கே.ராஜன்]
நிச்சயமாக நான் தற்பொழுது இந்தியாவில் இல்லை. மேலும் தேர்தலில் நின்றால் இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுக்கும் என்றே சொல்லி இருக்கிறேன். தேர்தலில் நிற்க முடியாது என்று சொல்லவே இல்லையே......... எனக்கு தகவல் உபயம் யாரும் இல்லை
ReplyDeleteவிஸ்வரூபம் எந்த வடிவில் வரும்?
Deleteதண்ணியை போட்டார்...வேட்பாளரை அடித்தார் என்ற குற்றச்சாட்டுகளை மக்கள் ஒதுக்கி தூரப்போட்டு விஜயகாந்துக்கு ஆதரவு அளித்தனர்.
ஒரு வேளை... லகுட பாண்டி இந்தியாவுக்கு வந்து பிரச்சாரம் செய்தால்...
ரஜினிக்கு டெப்பாஸிட் போகும் வாய்ப்பு இருக்கிறது.
தன் சொந்த கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரை அடிப்பதில் ஒரு வசதி இருக்கிறது. அவர் புகார் ஏதும் கொடுக்க மாட்டார்.
ReplyDeleteஆனால் ரஜினியின் கதை அப்படி இல்லை. ஒரு பத்திரிக்கையாளரை அடித்தால் அதன் விளைவுகள் அவ்வளவு சாதரணமாக இருப்பதில்லை. பத்திரிக்கையாளர் கோர்ட்டுக்கு சென்றார், ரஜினியின் குற்றம் நிரூபிக்கபட்டது. "குற்றம் நிரூபிக்கபட்டது" என்பதை கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்து கொள்ளவும். அதை ஒப்புக்கொண்டு அபராதத்தை கட்டினார்.
பிரசாரம் செய்துவிடுவேனோ என்று தான் அவர் கட்சியே ஆரம்பிக்கவில்லை போல.
வாதத்திற்க்கு மருந்துண்டு...பிடிவாதத்திற்க்கு இல்லை.
Deleteலகுட பாண்டிக்கு... பயந்துதான் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை.
ரஜினியை பற்றி பல சுவாரசியமான தகவல், தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதலைவருக்கு, சிவாஜி உதவி செய்தார் என்பது கொஞ்சம் புது தகவல்.
எந்த காலத்திலும் சிவாஜி கணேசன் யாரையும் வாழ வைத்ததில்லை. 'நான் வாழ வைப்பேன்' படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.விஜயா, படத்தில் இடம் பெறும் குணசித்திர கதாபாத்திரத்திற்கு ரஜினி சரியாக இருப்பார் என்று தான் தலைவரை புக் செய்தார்கள். அதேபோல படம் வெளியான முதல் வாரம் 'சிவாஜியுடன் ரஜினி நடிக்கும்' என்று தான் ஆரம்பத்தில் விளம்பரம் செய்தார்கள். ஆனால் படத்தில் ரஜினி வெறும் கையால் பைனாகுலர் பார்ப்பது போல ஒரு 'ஸ்டைல்' செய்வார், அதே போல் தீக்குச்சியை உரசி சிகரெட் பற்ற வைப்பார். குறிப்பாக ரஜினி திரையில் வரும் வரைக்கும் படம் மந்தமாகவே போகும். ரஜினி திரையில் வந்த பிறகு தான் படம் டாப் கியரில் நகரும். அதனால் தியேட்டருக்கு வந்த மக்கள் ரஜினியை முன்னிலைபடுத்தியே வர, தயாரிப்பு தரப்பும் ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்தது. படத்தின் மூன்றாவது வாரத்தில் 'ரஜினியுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடிக்கும்' என்று விளம்பரம் செய்தது தயாரிப்பு தரப்பு. இதனால் கே.ஆர். விஜயாவுக்கு 'நீ ஏன் தேவையில்லாமல் கணேசனை விட்டுட்டு ரஜினியை வளர்த்து விடுற?' என்று ராமாவரம் தோட்டத்திலிருந்து திட்டு விழுந்தது வேற கதை.
ReplyDeleteபிரசாத் அவர்களே,
Deleteசிவாஜி யாரையும் வாழவைக்க வில்லை என்று சொல்வது உங்கள் அறியாமையை காட்டுகிறது,
SV சுப்பையா "காவல் தெய்வம்" படம் எடுத்தபோது ஒரு பைசா கூட வாங்காமல் நடித்து கொடுத்தார், அதே போல் முதல் வெளியீட்டில் கர்ணன் சரியாக போகவில்லை என்று தயாரிப்பாளர் பந்துலுவுக்காக "முரடன் முத்து" படத்தை இலவசமாக நடித்து கொடுத்தார், அப்படியும் பந்துலு நன்றி கேட்டு போய் எதிர் முகாம் (MGR) போனவர் தான். பின் தலை தூக்கவே இல்லை. v c குகநாதன் இன்றும் மேடைகளில் சொல்வது என்ன தெரியுமா? பெரும் சிரமத்துக்கிடையில் "ராஜபார்ட் ரங்கதுரை" படத்துக்காக சிவாஜிக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த போது சண்முகம் (சிவாஜி சகோதரர்) இந்த பணத்தை வைத்து படம் எடு, படத்தை நானே உனக்கு நல்ல விலைக்கு விற்று தருகிறேன், அதன் பின் எனக்கு பணம் தந்தால் போதும் என்று கூறி எனக்கு வாழ்வு அளித்தார் என் கூறுவார். எனவே ஒருவரை பற்றி சொல்வதற்கு முன் நன்றாக விசாரித்து பின்பே சொல்லவும்.
This comment has been removed by the author.
Delete