திருப்பூர் புத்தகக்கண்காட்சி மிகப்பிரம்மாண்ட வெற்றி பெற்று விட்டது.
9 வருடங்களின் விடா முயற்சி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது.
வரும் வருடங்களிலும் இந்த வெற்றியை விரிவாக்க மேலும் உழைப்பார்கள் இதை நடத்துகின்ற நல்லவர்கள்.
அனைத்து கட்சியினரும் இணைந்து நடத்திய இந்த வேள்வியில்
எனக்கும் இடம் ஒதுக்கி மிகப்பெரிய கவுரவம் வழங்கி மகிழ வைத்தார்கள்.
திருப்பூர் மக்கள் என்னை கொண்டாடி விட்டார்கள்.
நன்றி திருப்பூர்.
இம்மாபெரும் வெற்றிக்கு திருப்பூர் வலைத்தள நண்பர்கள் மிகப்பெரிய சேவையை செய்துள்ளார்கள்.
எனது ஸ்டாலில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகையில் நண்பர் இயக்குனர் ரவிக்குமாரும்,பதிவுலக நண்பர் மோகன் குமாரும் அவர்களாகவே உள்ளே புகுந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த அதிரடி உதவியை நான் மிக ரசித்தேன்.
கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு பெற்ற ரவி.... திரைப்பட உலகில் மகேந்திரனாக ஜொலிக்க வாழ்த்துகிறேன்.
மோகன் எழுத்தாளராக....அதே நேரத்தில் பொருளாதாரத்தில் அம்பானியாக பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.
தினமும் மாலையில் எனக்கு மிகவும் பிடித்த உலகசினிமாக்களை திரையிட்டு மேலும் உலகசினிமாவுக்கு உரமூட்டினார் நண்பர் தாண்டவக்கோன்.
முதல் நாள் நிகழ்ச்சியாக...Turtles can Fly எனப்பறந்தவர்கள் கடைசி வரை லாண்ட் ஆகவேயில்லை.
தாண்டவக்கோன் குறும் படங்கள் இனி கேன்ஸ் நோக்கி பறக்க வாழ்த்துக்கள்.
இவ்விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்... புத்தக விழாவை திரைப்பட விழாவாக உருமாற்றம் செய்து விட்டது.
இதே போன்று ஈரோடு புத்தகத்திருவிழாவிலும் உலகசினிமாக்கள் திரையிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ற ஏக்கம் என்னுள் மட்டுமல்ல...பல ஆர்வலர்கள் மத்தியிலும் உள்ளது.
திரையிடப்பட்ட படங்களின் விபரம் இதோ...
Turtles Can Fly
The Kid
Bal
Children Are Watching Us
The Kid with a Bike
Winged Migration
The Stoning of Soraya M
Quest For Fire
Come and See
Adaminte Makan Abu
தினமணி இத்திருவிழாவை வர்ணித்து அரைப்பக்க அளவில் செய்தியாக வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்துடன் செயல் பட்டது.
தினத்தந்தி,தினமலர் இத்திருவிழாவை பற்றிய செய்தியை புறக்கணித்து அதர்மத்துடன் செயல் பட்டது கண்டிக்க தக்கது.
விளம்பரம் தந்தால்தான் செய்தி வெளியிடுவோம் என்ற அராஜகப்போக்கு அநாகரீகமானது.
செக்ஸ் டாக்டர் விஜயத்தை விளம்பரத்தோடு செய்தி வெளியிடும் நீங்கள் அதே பாணியை புத்தகக்கண்காட்சி நடத்துபவர்களிடமும் எதிர்பார்த்தால் எப்படி? கைபேசியில் செய்திகள் விரைந்து வரும் உலகில் படிக்கும் பழக்கத்தை மறந்து விடாதே...படி..படி..எனத்தூண்டுவதே இது போன்ற புத்தக்கதிருவிழாக்களே!
காலையில் காப்பியுடன் பத்திரிக்கை படிக்கும் தொட்டில் பழக்கம்....
என் தலை முறை... சுடுகாடு போனதும் மறைந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு இப்பழக்கத்தை கடத்த உங்களுக்குத்தான் அதிக கடமை உண்டு.
பத்தாண்டுகளுக்கு மேல் விடாமல் நடத்தப்படும் புத்தகத்திருவிழாக்களுக்கு தினமும் கால் பக்கம் ஒதுக்குங்கள்.
வரவேற்பு அறையில் தமிழக மக்கள் தினமும் உங்களுக்கு இடம் ஒதுக்குவார்கள்.
வாழ்த்துக்கள் சார்....
ReplyDelete----------
சென்னை மாதிரி வதவதன்னு கடைகள் போடாம, குறைவா அதேசமயம் தேவையானத மட்டும் அனுமதிச்சிருந்திருப்பாங்க போல...நல்லது...பதிவர்கள் நிறைய பேரின் பங்கும் இதில் இருந்தது என்று முகநூல் - பதிவுகள் வாயிலாக தெரிஞ்சுக்க முடிஞ்சது....அவர்களுக்கும் வாழ்த்துக்கள் & க்ரேட் வொர்க்..
படிக்கவே ஆர்வமாக இருக்கின்றது..ஆசையாகவும் இருக்கிறது.நானும் அதில் ஒருவராக இருக்க கூடாத என்று..தங்கள் அனுபவங்களை பகிந்துக்கொண்டமைக்கு என் நன்றிகள்.
ReplyDeleteசைக்கோ திரை விமர்சனம்..
உங்கள் சக்சஸுக்கு வாழ்த்துக்கள் சார்..
ReplyDelete- கடைசி அட்வைஸை கண்டிப்புடன் கடைப்பிடிப்போர் சங்கம்
@கொழந்த
ReplyDeleteஇத்திருவிழாவை முன்னின்று நடத்துபவர்கள் சிவப்பு சிந்தனையாளர்கள்.
எனவே லாப நோக்கு என்பது அறவே தவிற்த்து விடுவார்கள்.
அரங்க வாடகை ஆயிரம் ரூபாய் ஏற்றுவதற்க்கே பல ஆண்டுகள் ஆனது.
இவர்களது சிறப்பை சொல்ல கம்பர் வேண்டும்.
@குமரன்
ReplyDelete//படிக்கவே ஆர்வமாக இருக்கின்றது..ஆசையாகவும் இருக்கிறது.நானும் அதில் ஒருவராக இருக்க கூடாத என்று.//
குமரன்...திருப்பூர் குமரனாகத்துடிக்கும் நியாயமான ஆசை புரிகிறது.
@JZ
ReplyDeleteவருகைக்கும்....வாழ்த்துக்கும் நன்றி.
It is heartening to see such an interest on reading books as well as watching world class movies. Kudos to you all..
ReplyDeleteபாஸ் எம்பேரு முரளிகுமார் :-)
ReplyDelete