Dec 22, 2013

சத்துணவு திட்டம் = திரைப்பட விழா.


நண்பர்களே...
 ‘நொள்ளை...நொட்டை’ சொல்லி  ‘சென்னை திரைப்பட விழாவை’  ‘மங்களம்’ பாட நினைக்கவில்லை.
 ‘சென்னை திரைப்பட விழாவை’...மேலும் முன்னெடுத்துச்செல்ல எனக்குத்தோன்றிய சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.


நாம் இந்த விஷயத்தில்... ‘கேரள திரைப்பட விழாவை’  ‘காப்பியடிக்கலாம்’.
நல்ல விஷயத்தை காப்பியடிக்கலாம்...தப்பில்லை.
 ‘கேரள திரைப்பட விழாவை’ நடத்துவது...
கேரள அரசுக்கு சொந்தமான ‘கேரளா ஸ்டேட் சலச்சித்திர அகடமி’.
அதைப்போன்று,
‘தமிழ்நாடு அரசு திரைப்பட கழகம்’ என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
‘தமிழ் நாடு அரசு திரைப்பட கழகம்’ ‘திரைப்பட விழாவை’ நடத்த வேண்டும்.
‘அரசு’ நினைத்தால் சாதிக்க முடியும்.
உதாரணம்...கலைஞர் கோவையில் கூட்டிய ‘உலகத்தமிழ் மாநாடு’.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை திரட்ட முடிந்ததற்கு காரணம்...
அந்த விழா...தமிழக அரசு நடத்திய விழா.

உலகத்தமிழ் மாநாடு...
அண்ணா நடத்தினார்.
எம்ஜியார் நடத்தினார்.
ஜெயலலிதா நடத்தினார்.
கலைஞர் நடத்தினார்.
ஒவ்வொரு விழாவிலும் குறைகள் சொல்லப்பட்டது.
இருந்தாலும்  ‘உலகத்தமிழ் மாநாடு’...
அவரவர்கள் காலத்தில் சிறப்பாகவே நடத்தப்பட்டது.
இனி வரும் ஆட்சியாளர்களும்,
ஏற்கெனவே நடந்த விழாக்களை முன் மாதிரியாக கொண்டு தன் காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்த முன் வருவார்கள்.
இதைப்போலவே ‘சென்னை திரைப்பட விழா’ வருடா வருடம் தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு  ‘தலையெழுத்து’ உண்டு.
ஜெயலலிதா கொண்டு வருவதை,  ‘அம்போ’ என கலைஞர் விட்டு விடுவார்.
கலைஞர் கொண்டு வந்ததை ஜெயலலிதா விட்டு விடுவார்.
ஆனால் யாருமே கை விட முடியாத திட்டம்...சத்துணவு திட்டம்.
சத்துணவு திட்டம் போலவே ...
‘திரைப்பட விழாவை’ கொண்டாடும் திட்டமும் அமைய வேண்டும்.

காமராஜர்  ஏழை பள்ளி மாணவர்களுக்காக ‘மதிய உணவு திட்டத்தை’ கொண்டு வந்தார்.
எம்ஜியார் அதை மேலும் விரிவு படுத்தி,
‘சத்துணவு திட்டமாக’ வடிவமைத்து மேம்படுத்தினார்.
கலைஞரும்... ‘சத்துணவு திட்டத்தை’  ‘முட்டை’ வழங்கி முன்னெடுத்துச்சென்றார்.
ஜெயலலிதா இன்னும் அதை விரிவு படுத்தி உள்ளார்.
 ‘சத்துணவு திட்டத்தின்’ நீட்சியாகத்தான்,‘கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.
ஆக இன்று வரை, ‘சத்துணவு திட்டம்’  ‘மேலும் மேலும்’ முன்னெடுக்கப்பட்டு முன்னேறி வருகிறது.
பயன் தருகிறது.

அரசு நினைத்தால், சாதிக்க முடியும்.
மக்களை ‘படிக்க வைக்கலாம்’.
நல்ல சினிமாவை ‘பார்க்க வைக்கலாம்’.

தமிழக அரசு,‘ சென்னை திரைப்பட விழாவை’ எடுத்து நடத்த ஆன்றோர்களும்...சான்றோர்களும் முயற்சிக்க வேண்டும்.
‘முயற்சி’ திருவினையாகட்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

4 comments:

  1. நிச்சயம் நல்ல யோசனை அரசு எடுத்து செய்யும் பொது தரம் முழுக்க இருக்குமா என்ற சந்தேகம் இருக்கும்..ஆனால் அனைத்து தரப்பு மக்களையும் பொய் சேரும்....

    ReplyDelete
  2. கேரளாவில் இது சாத்தியமாகி இருக்கிறதே!
    கம்யூனிஸ்ட் அரசும், காங்கிரஸ் அரசும் மாறி மாறி பதவிக்கு வந்தாலும் இந்த திரைப்பட விழா...
    யார் ஆட்சிக்கு வந்தாலும்... வந்தவர்களால் வளர்க்கப்பட்டே வளர்ந்திருக்கிறது.
    அந்த நிலைமை இங்கும் வர வேண்டும் என்பதே என் அவா.

    ReplyDelete
  3. Replies
    1. தேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் சொல்கிறீர்களா!

      Delete

Note: Only a member of this blog may post a comment.