Jul 18, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை குற்றவாளியாக்கிய காவியம்-Part 3


நண்பர்களே...ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட... பதினோரு திரைப்படங்களையும் எழுதி விட்டு, ஹேராமை தொடர எண்ணியுள்ளேன்.
அனைவரும் பொறுத்தருள்க.

கமீனோ படத்தில் காட்டப்படுவது போல்...நம்மூரிலும் கார்ப்பரேட் சாமியார்கள் ஆசிரமங்களில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.
முதல் நாள்  ‘நானே கடவுள்’ என்கிறான்.
அடுத்த நாளே கைதானதும்... ஜாமீனுக்கு விண்ணப்பிக்கிறான்.
கடவுளுக்கு எதற்கு ஜாமீன்? என யோசிக்க வேண்டாமா...செம்மறியாடுகள்.?
 ‘மூளைச்சலவை’ யோசிக்க விடாது.

கமீனோவை பார்க்க வரும் தோழியோடு, நாமும் இணைந்து கொள்வோம்.
நோயாளிகளுக்கு நண்பர்கள் வருகை, என்றுமே உவகைதான்.
கமீனோ,நாட்டிய நாடகம் பற்றி விசாரிக்கிறாள்.
பாய் பிரண்ட் ஜீசஸ்... அதில்தானே இருக்கிறான்!.
நாடகக்குழுவினர் அனைவரும், அதே காஸ்ட்யூமோடு கமீனோவை பார்க்க வருவதற்கு... ஜீசஸ் திட்டமிட்டுள்ளான் என்ற செய்தியை தோழி சொல்கிறாள். அந்தக்கணமே...கமீனோ  கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.
அந்த பரவச உலகை காண...நமது கற்பனை குதிரையை தட்டச்சொல்லி,சாதுர்யமாக  ஒதுங்கி விடுகிறார் இயக்குனர்.

நோயின் தீவிர பரவலை தடுக்க, கீமோதெரபி சிகிச்சை நடக்கவிருப்பதாக தந்தை கனிவோடு தெரிவிக்கிறார்.
நண்பர்கள் வருகைக்கு பிறகு அச்சிகிச்சையை  ஆரம்பிக்க ஆசைப்படுகிறாள்.
காரணம்...தலை முடியை இழக்க வேண்டியது வரும் என்ற அச்சத்தால்.
 “உன் விருப்பப்படியே செய்வோம்” என ஆதுரவாக தலையை தடவுகிறார்.
முடி கொத்தாக... கையோடு வருகிறது.

கிளாஸ்மேட்களை...பள்ளி அறையிலேயே சந்திக்க வருகிறாள்...முடி இழந்த கோலத்தோடு.
தோழியை பார்த்து... கண்ணடிக்கிறாள்.
இங்கே, கண்ணடித்தல்...கமீனோவின் உற்சாக மனநிலைக்கு குறீயீடாகிறது.
இக்குறியீட்டின் கனோட்டேஷன்...
பார்வையாளர்களை, துன்ப நிலைக்கு தள்ளுகிறது.
நண்பர்களை கடிதம் எழுதச்சொல்லி...வேண்டி விடை பெறுகிறாள்.

அதே நேரத்தில் தந்தை, வீட்டில் கமீனோ ரகசியமாக வைத்திருந்த பொருட்களை கண்டெடுக்கிறார்.
தான் பிறந்த நாள் பரிசாக வாங்கி கொடுத்த  ‘குட்டி மியுசிக் பாகஸ்’...
‘கமீனோவின் கனவுக்காட்சியில் காட்டப்பட்ட நூரியின் காதலன்’ புகைப்படம்...
அவன் நூரிக்கு எழுதிய காதல் கடிதங்கள்...

மருத்துவமனைக்கு முதன் முதலாக அக்கா நூரி வருகிறாள்.
வந்திருப்பவள்  ‘அக்கா ’ அல்ல...
மூளைச்சலவை செய்யப்பட்ட  ‘கன்னியாஸ்திரி’...
எனப்புரிந்து கொள்கிறாள் கமீனோ.

தந்தை வருகிறார்.
பாசத்தோடு நூரியை விசாரிக்கிறார்.
 “உன்னிடம் சேர வேண்டிய பொருள்கள்...
காரில் இருக்கிறது.
எடுத்துக்கொள்”என்கிறார்.
 “அப்புறம் பார்க்கலாம் ”
 கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்...உடனே ஹாஸ்டல் போகவேண்டுமென இயந்திரமாக செயல்படுகிறாள் நூரி.
கமீனோ பகலிலிருந்தே தூங்கிகொண்டே இருக்கிறாள்...என தாயார் கூறி...நூரியோடு டின்னர் சாப்பிட கிளம்புகிறார்.

மகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெதுவாக மியூசிக் பாக்சை ஷெல்பில் வைக்கிறார்.
“கண்டு பிடிச்சிட்டீங்களா ” என்கிறாள் கமீனோ.
தாய்&சகோதரி... ' இரண்டு தீவிரவாதிகளிடமிருந்து ' தப்பிக்க தூங்குவது போல் கமீனா நடித்திருக்கிறாள் என்பது குறியீடாகிறது.
அக்கா,  காதலனை மறந்து ' பாதை ' மாறியது...தன் விஷயத்தில் நடக்காது என தெளிவாக உரைக்கிறாள் கமீனோ.

' Human Sensuousness ' என்ற இயல்பான அடிப்படையில் கமீனோவும். தந்தையும்...
முரணாக...
‘ Faith ’ என்ற அடிப்படையில் தாயும்,நூரியும் இயங்குகிறார்கள்.

முக்கியமான கடிதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறாள் கமீனோ.

 “ போஸ்டல் டிபார்ட்மெண்டை நம்ப முடியாது.
நானே அந்த லெட்டரை வாங்கி வருகிறேன் ”

 “ தாங்க் யூ...மிஸ்டர் போஸ்ட் மேன் ”
என கமினோ தந்தையின் கன்னத்தை தடவுவது,   என் கண்களி

எழுத முடியவில்லை.ஸாரி.

12 comments:

  1. வாசிக்கும் போதே மனசுக்குள் ஏதோ சஞ்சலம்.. கண்டிப்பா பார்த்துடுறேன், நண்பா.. கண்டிப்பாக. இந்த முறை சப்-டைட்டில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!

    ReplyDelete
    Replies
    1. படத்தில் என்னை மிகவும் கலங்கடிக்கும் காட்சி இது...நண்பரே!

      Delete
  2. என்ன சொல்வது என்றே தெரியலை கண்டிப்பா பார்த்துவிடுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு...எழுதும் போது ஏற்பட்டது இதுவே முதல் முறை.

      Delete
  3. என்னால் படம் பார்க்க வர முடியவில்லை வேலை பளு. உணர்வுகள் நிறைந்த படம் என்பது உங்களின் எழுத்துகளை படிப்பவருக்கும் கொண்டு செல்கிறீர்கள்.

    ReplyDelete
  4. இணையத்தில் இப்படம் சப்-டைட்டிலோடு கிடைக்கிறது...நண்பரே!
    பார்த்து விடுங்கள்.

    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  5. பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் கோவி...
      அப்படியே... கமீனோவுக்காக கவிதை ஒன்றை படையுங்கள்.

      Delete
  6. இணையத்தில் நல்ல க்வாலிட்டி ப்ரிண்ட் டொரண்ட் இருந்தால் தரமுடியுமா நண்பா?

    ReplyDelete
    Replies
    1. எனது நண்பர்தான் தரவிறக்கம் செய்து தந்தார்.
      அவரிடம் தரவிறக்க முகவரி வாங்கித்தருகிறேன்...நண்பா.

      Delete
  7. உங்கள் விமர்சனம் உண்மையாக என்னை பொறுத்த வரை எழுத்தாக தெரியவில்லை..
    ஒரு அழகான கவிதையோடு உறவாடுவது போல இருந்தது.. சூப்பர் அண்ணா.. சூப்பர்.. சூப்பர்..
    ஆனால் இன்றும் நான் தலைப்போடு ஒத்து போக மாட்டேன்..
    பின் பற்றுகிறவர்கள் அப்படி இருந்தாலும்.. கடவுள் அப்படி அல்லர்..

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் எதிர்பாராத மரணம் சம்பவித்தால்...நமது கிராமங்களில்... “ ஏ..கடவுளே...கண்ணவிஞ்சு போயிட்டியா.
      மண்ணோடு மண்ணா மக்கி போயிட்டியா ”என ஒப்பாரி வைப்பார்கள்.

      இயக்குனர் கமீனோ விஷயத்தில்...கடவுள் கருணையற்று இருந்தார் என்பதை மட்டும் காட்சி படுத்தி உள்ளார்.
      கடவுள் இல்லையென்று நாத்திக வாதம் புரியவில்லை.
      கொஞ்சம் பொறுத்திருங்கள்...
      இயக்குனர் வாதம்...சரியென,நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.