ஹேராம் தொடரில் குறியீடு...குறியீடுன்னு... சொல்லிகிட்டே இருக்கானே...
அது என்ன?
சிலருக்கு... மட்டும் அந்த கேள்வி வரலாம்.
மன்னிக்கவும்...அவர்களுக்காக இந்த எளிய விளக்கம்.
சினிமா... குறியீடுகளால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது.
குறியீடுகள்...
காட்சி
எழுத்து
பேச்சு
இசை
சப்தம்
இவை போன்றவைகளால் ஆனது.
குறியீடு என்றால்... ஆங்கிலத்தில்... செமியாட்டிக்ஸ்[Semiotics].
செமியாட்டிக்ஸ்.. வகைகளில் இரண்டை மட்டும் இப்போது பார்ப்போம்.
1..டினோட்டஷன் [Denotation]
கண்ணை மூடிக்கொண்டு ஒலிச்சித்திரம் கேட்டால்...மனக்கண்ணில் திரைப்படம் மட்டும் தெரிந்தால் டினோட்டேஷன்.
உதாரணம்...பராசக்தி,மனோகரா,வீரபாண்டிய கட்ட பொம்மன்.
2.கனோட்டேஷன் [Connotation ]
சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் பாடல் காட்சி...
டினோட்டேஷன்காட்சியானது...ஸ்ரேயாவால்.....நமக்குள் கனோட்டேஷன் வகையில் இயங்குகிறது.
கனோட்டேஷன்... இங்கே, செக்சுவல் கனோட்டேஷனாக.... நமது மூளையில் கொந்தளிக்கிறது.
ஸ்ரேயா எவ்வளவு காட்டப்படுகிறார்?...
மறைக்கப்பட்ட ஸ்மால் ஏரியாவில் இருப்பது என்ன?...
ஆடும் போது...கஞ்சத்தனமாக தைக்கப்பட்ட மார்பு கச்சை விலகி...
இன்னும் தெரியாதா?
என நம்ம மூளை ஜிவ்வென்று வேலை செய்யும்...
இப்படி... உங்கள் ஆழ் மனது அபிலாசைகளுக்கு செம தீனி போடுவார் இயக்குனர் சங்கர் .
இந்த தில்லாலங்கடியில் அவர் ஜித்தன்.
கமல் போன்ற மேதைகள் கனோட்டஷன் பிராசசை
இண்டலக்சுவலாக... கையாள்வார்கள்.
நம்முள் சினர்ஜி [Synergy... 1+1=10] இயங்க வைத்து விடுவார்கள்.
திரையில் கண்ணால் பார்க்கும் ஒன்று...உங்கள் மூளையில் ஒன்றுக்கு பத்தாக நீங்கள் ஏற்க்கெனவே படித்த...பார்த்த...கேள்விப்பட்ட...என எல்லா ஏரியாவிலும் கனெக்ட் பண்ணும்.
உதாரணமாக... ஹேராமில்...
“ராமரானாலும்...பாபரானாலும்”....
பாடல் தொடக்கத்துக்கு போவோம்.
அம்ஜத்...பாடல் தொடங்கும் முன் இசைக்கலைஞர்களுக்கு...
என்ன மியூசிக் நோட்ஸ்?... என்பதை சைகையால் விளக்குகிறான்.
இந்த காட்சி அம்ஜத்... இசையிலும் வித்தகன் என ரிஜிஸ்டர் ஆகிறது.
ஏற்க்கெனவே சாகேத்ராம்... வீலர் பியோனோ வாசிக்கும் போது லால்வானி தோளில் பிங்கரிங் செய்த காட்சி கனெக்டாகி... இருவருமே இசை கற்றவர்கள் என கனெக்ட் ஆகிறது.
சென்னை கிரிஸ்டியன் காலேஜில் படித்தவர்கள்... என்ற டயலாக்கை... கனெக்ட் செய்கிறது.
கிறிஸ்டியன் காலேஜ்....வெள்ளைக்காரனால் நடத்தப்பட்டது கனெக்ட் ஆகிறது.
வெள்ளைக்காரன் தனக்கு அடிமை வேலை செய்ய இந்த இருவரையுமே மெக்காலே கல்வி திட்டத்தின் மூலமாக தயார் செய்திருப்பது கனெக்ட் ஆகிறது.
மெக்காலே திட்டத்தினால்... இந்தியர்களின் கலாச்சாரத்தையும்..
கல்வி முறையையும் உடைத்து...தனது கல்வித்திட்டத்தினால் மூளைச்சலவை செய்து..அடிமைகளாக்கி..1858லிருந்து 1947 வரை சுரண்டப்பட்டது... கனெக்ட் ஆகிறது.
நான் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கொஞ்சம் படித்திருப்பதால்... இது கனெக்ட் ஆகிறது.
படித்திராவிட்டால்...
அம்ஜத் ஏதோ மியுசிக் நோட்ஸ் வாசிக்க சொல்லி சைகை காண்பிக்கிறான் என்பது ரிஜிஸ்டர் ஆகும்.
சர்வர் சுந்தரத்தில்...
அவளுக்கென்ன...அழகிய முகம்.... அவளுக்கென்ன.... பாடலில்...
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சைகை செய்வது கனெக்ட் ஆகும்.
மிகவும் படித்த மேதைகளுக்கு... இன்னும் கனெக்ட் பண்ணும்.
என் குருவி மூளைக்கு இவ்வளவுதான் எட்டியது.
பாடலுக்கு முன்னால் போட்ட... ஒரே ஒரு ஷாட் இவ்வளவு கனெக்ட் பண்ணுதே!
பாடல் எவ்வளவு கனெக்ட் பண்ணும்?
பாடலை திரும்ப ...திரும்ப பாருங்கள்...
அடுத்தப்பதிவில் ஷேர் பண்ணிக்கலாம்.
செமியாட்டிக்ஸ் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவுக்கு செல்லுங்கள்.http://en.wikipedia.org/wiki/Semiotics
இதுல இவ்ளோ விஷயம் இருக்கா...ரொம்ப ஆர்வத்தை தூண்டுகிறது,,,,
ReplyDeleteநண்பரே...உங்களை போன்றவர்களின் ஆர்வம்தான்...மேலும்...மேலும் விஷயங்களை தேடித்தர வைக்கிறது.
ReplyDeleteஎங்கேயோ போயிடேங்க....அருமையான் விளக்கங்கள்..
ReplyDeleteநன்றி...ராஜ்.
ReplyDeleteஉங்கள் கை தட்டல் காற்றில் மிதந்து... என் காதுகளை மட்டும் நிரப்பவில்லை...மனதிலும்.
ஆஹா.. நான் இவ்வளவு யோசிக்காம போயிட்டேனே..
ReplyDeleteசெமியாட்டிக்ஸ் விளக்கமெல்லாம்... கலக்குறீங்க!!
மிக்க நன்றி!
முடிந்த அளவு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லலாமா!
ReplyDeleteபாடம் எடுத்தா... நம்ம பய புள்ளக பயந்துராது?
சிம்ப்ளி சூப்பர் சார் .
ReplyDeleteநன்றி.
Deleteசெமியாட்டிக்ஸ்..உண்மையை சொல்லின்..இதை இப்பதான் அறிகிறேன்..இப்படியே தெரியாத நிறைய விஷயங்களை உங்கள் பதிவுகளின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது..அசத்துங்க..நன்றி.
ReplyDeleteஹேராம் தொடரில் நான் தெரிந்து கொண்டது ஏராளம்.
ReplyDeleteஹேராம் படம் பார்த்திருந்தாலும் இப்போது ஞாபகம் இல்லை என்பதால் மீண்டும் ஒருமுறை படம் பார்த்துவிட்டு தொடரை வாசிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் இவ்வளவு மேட்டர் இதற்குள் இருப்பது தெரியாமல் போய்விட்டதே. இனி வாசித்துவிட்டு படம் பார்க்க வேண்டியது தான். கலக்குங்க.
ReplyDeleteநண்பா...இப்போதே படம் பாருங்கள்.
ReplyDeleteநாம் ஒவ்வொரு பதிவிலும் நம் எண்ணங்களை பகிர வசதியாக இருக்கும்.
ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.
டி-னொடேசன், கோ-னொடேசன் நம் மூளையில் எப்படி வேலை செய்கிறது நமது என்சைமை எப்படி தூண்டுகிறது அற்புத விளக்கம்... நன்றி சார்.
ReplyDeleteநன்றி கலாகுமரன்.
ReplyDeleteஇந்த பாட்டில் அந்த குண்டு நண்பரை கமழும் சாருக்கும் தூக்கி மேஜை மீது உட்கார வைப்பார்கள்
ReplyDeleteஅதற்கு ஏதேனும் குறியீடு உண்டா என்ன