Mar 30, 2012

வெங்காயம்-தமிழ் சினிமாவின் சிகரம்...


சென்னை தேவிகலாவில் வெங்காயம் திரைப்படம் பார்த்தேன்.
தமிழ் சினிமாவின் வாந்தி,பேதி,அஜீரணம்...
ஏன்... சொறி ,சிரங்கு,படை ...
அதைக்கூட குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக இப்படம் வந்திருக்கிறது.
பிரம்மாண்டமான விளம்பரம் கொடுத்து இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விலை மதிப்பற்ற முயற்ச்சி எடுத்துள்ள இயக்குனர் சேரனின் கலைப்பாதங்களில் சாஷ்டங்கமாக விழுந்து....
எனது நன்றியையும்,வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

சேலம் மாவட்டத்தின் சங்ககிரி அருகில் உள்ள செட்டிப்பட்டி கிராமத்திலிருந்து புறப்பட்டு உலகமெல்லாம் தமிழ் சினிமா ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்க்கு தனது குடும்பத்தார்...
நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் துணையோடு....
படையெடுத்த சக்ரவர்த்தி...
சங்ககிரி ராச்குமார்...
உன்னை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்க்கிறேன்.

முதல் படத்திலேயே இந்த இயக்குனரை நான் மகேந்திரன்,பாரதிராஜாவுக்கு மேலாக மதிக்கிறேன்.
ஏனென்றால் அவர்கள் கூட நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்களைத்தான் நடிக்க வைத்து தங்கள் படைப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப்பையன் சர்வசாதரணமாக தங்களது குடும்பத்தார் அனைவரையும் நடிக்க வைத்து ....
தப்பு...தப்பு....
கதாபாத்திரங்களாக வாழ வைத்திருக்கிறான்.

தமிழ் சினிமா முதன் முதலாக அச்சு அசலான கிராமத்து முகங்களை பிரதிபலித்திருக்கிறது.
போலித்தனமில்லாத...பாசாங்கில்லாத....கிராமம் வெள்ளித்திரையில் வெளிப்பட்டிருக்கிறது.
மக்களுக்கான சினிமா.... முதன் முதலாக அம்மக்களை கொண்டே படைக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தான் சத்யஜித்ரே,ரித்விக் கதக் போன்ற ஜாம்பவன்கள் செய்தார்கள்.

கிராமத்து மக்களிடம் மூட நம்பிக்கைகளை விதைத்து...
 அதன் மூலம் கொழுத்து வாழும் போலிச்சாமியார்களை சாடி இருக்கிறது படம்.
தமிழக அரசு இப்படத்தை விலைக்கு வாங்கி கிராமம்..கிராமமாக காட்ட வேண்டிய படம்.
நூறு பெரியார் செய்ய வேண்டிய வேலையை இப்படம் ஒன்றே செய்து காட்டும்.

இப்படத்தில் குறைகள் இல்லையா! என்று நினைப்பீர்கள்.
இருக்கிறது.
இப்படி ஒரு படம் வராதா ஏன ஏங்கி தவிச்ச வாய்க்கு....
 தண்ணீர் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதனால் குறையை என் வாயால சொல்ல மாட்டேன்.
குறையே இல்லாத படம் உலகிலேயே இல்லை.

அமெரிக்காவில் ஜான் கேஸவட்ஸ் என்ற உலக சினிமா இயக்குனர் ஒருவர்தான் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வைத்து தரமான கலைப்படைப்புகளை தந்தவர்.
எனக்குத்தெரிந்து இந்திய சினிமாவில் நீ ஒருவன் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தி உள்ளாய்.

தமிழ் சினிமா ஹீரோக்கள் எனக்கு படம் செய்து கொடு என வலை விரிப்பார்கள்.
அந்த மாய வலையில் வீழ்ந்து விடாதே!

ஆட்டோ கிராப் படம் பார்த்த ரசிகர்கள்...
அனைவரும் பார்த்தாலே போதும்...
இப்படம் வசூலில் சாதனை படைக்கும்.
 ஆனால் காலன்,எமன்,தூதன் மூன்றும் சேர்ந்த... 3 என்ற கொலை வெறிப்படம் வெங்காயத்திற்க்கு சமாதி கட்ட வெளியாகி உள்ளது.
என்ன நடக்குதுன்னு பார்ப்போம்?????????.

இந்த வார ஆனந்த விகடன் பாருங்கள்.
மிக முக்கியமான இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன



8 comments:

  1. முதல் கொஞ்ச வரிகளையும், அந்தப் போட்டோவையும் பார்த்துட்டு, ஏதோ 'அங்கதமாக' எழுதுகிறீர்களோ என நினைத்தேன்! சாரி சார்..
    3 படத்தை லேட்டாக பார்த்தால்போதும் என்ற எண்ணத்துடன் இருப்பதால் இந்தப் படத்தை ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்..

    * என் சார்பாகவும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @JZ

    //முதல் கொஞ்ச வரிகளையும், அந்தப் போட்டோவையும் பார்த்துட்டு, ஏதோ 'அங்கதமாக' எழுதுகிறீர்களோ என நினைத்தேன்! சாரி சார்..//

    நண்பரே!
    இப்படத்திற்க்கு வேறு நல்ல கவித்துவமான பெயர் வைத்திருக்க வேண்டும்.
    பெயரும்....
    முதலில் வெளியிட்ட போது...
    வெளியான போஸ்டரும்....
    படத்தை யாரும் பார்க்க விடாமல் தடுத்தது.
    சேரன் வெளியிட்டதால்தான் படத்தில் ஏதோ விஷயம் இருக்கும் என எண்ணி சென்றேன்.
    படம் ஏற்ப்படுத்திய ஆனந்த கொண்டாட்டம் இன்னும் என்னுள்
    அடங்கவில்லை.

    ReplyDelete
  3. Replies
    1. @சங்ககிரி ராஜ்குமார்
      நன்றி தெரிவிக்க வருகை தந்த இயக்குனருக்கு...
      எனது நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

      Delete
  4. இன்னும் படம் பார்க்கல...அதுனால அதுகுறித்து சொல்ல முடியல..

    உங்களது உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் - படத்தின் இயக்குனர் இத படிச்சிருகார்ன்னு தெரியுது - நிச்சயம் அவரக்கு மேலும் இதுபோன்ற படங்களை நோக்கிச் செல்ல மிக உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
    Replies
    1. @கொழந்த
      இயக்குனர் பெரியாரிஸ்ட்.
      ஆனால் பிரச்சார நெடி இன்றி ...வாழைப்பழத்தில் கத்தி சொருகி விட்டான்.
      தெரிந்தோ தெரியாமலோ திரைக்கதை ஹிட்ச்காக் ரூலில் பயணிக்கிறது.
      படத்தின் பாடல்கள்,பின்னணி இசையை தலையை சுற்றி தூர எறிந்து விட்டு...
      சர்வ தேச பட விழாக்களுக்கு அனுப்பினால் விருதை அள்ளிக்கொண்டு வந்து விடலாம்.

      முடிந்தால் சென்னை போயாவது படத்தை பார்த்து விடுவது நலம்.

      Delete
  5. போன வாரம் போலாம்னு இருந்தேன்.. எங்க ஊர்ல தூக்கிபுடானுங்க.. சென்னைல தான் பாக்கணும்.. படத்த எல்லாரும் பாரடறாங்க.. பகிர்தலுக்கு நன்றி..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.