Oct 29, 2011

The Page Turner-பிரெஞ்ச்[2006]பழி வாங்கும் பருவ மங்கை


பூ ஒன்று புயலாகி... ஒரு பியானோ மேதை வாழ்க்கையில்....
 சூறாவளியாக சுழல்வதுதான் இப்படம்.
சைக்கோ திரில்லர் வகையில் வந்த கிளாசிக் படம்.
இப்படத்தை எழுதி இயக்கியவர் Denis Dercourt.

மெலினா என்ற உலகசினிமாவை பார்க்காத உலகசினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.
அந்தப்படம் பார்த்தவர்கள் மெலினா என்ற அழகு தேவதையாக வந்த மோனிகா பெலுச்சியையும் மறக்க முடியாது.
மயக்கும் மோனிகாவின் கட்டழகுக்கு சற்றும் குறையாத கவர்ச்சியுடன் நம்மை கிறங்க வைக்கிறாள் மெலனி என்ற கதாபாத்திரத்தில் வரும் பருவப்புயல் Deborah Francois..
பிரான்சில் மட்டும் இது போன்ற தேவதைகள் அதிகமாக உற்பத்தியாவதின் ரகசியம் என்ன?

மெலனி தனது கல்வியின் ஒரு பகுதியாக ஒரு சட்ட நிறுவனத்தில் பணியாற்ற வருகிறாள்.
தனது முதலாளியின் வீட்டிற்க்கு உதவிக்கு ஆள் தேவை என்பதறிந்து விண்ணப்பித்து தேர்வாகி விடுகிறாள்.
முதலாளியின் மனைவி ஒரு பியோனா இசை மேதை.
மெலனியின் அழகும்....அர்ப்பணிப்பான சேவையும் எல்லோரையும் வசியப்படுத்துகிறது.
இசை நிகழ்ச்சியில், பியானோ இசைக்குறிப்பு அடங்கிய புத்தகத்தின் பக்கங்களை சரியாக புரட்டி....
வாசிப்பவருக்கு உதவும் பேஜ் டேர்னர் பதவிக்கு உயர்கிறாள்.

இதன் பிறகு மெலனியின் புதிரான நடவடிக்கள் பியானோ மேதையின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.

பியானோ மேதையின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சடக்கி பயிற்ச்சி பெறும் போது அச்சிறுவனது தலையை தண்ணீருக்குள்ளேயே வைத்து அழுத்துகிறாள்.
அவன் உயிர் பிரியப்போகும் தருணத்தில் விட்டு விடுகிறாள்.
ஏன் இந்த கொலை வெறி?

பியானோ மேதையின் இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக செலோ வாசிக்கும் கலைஞன் மெலனியிடம் வாலாட்டுகிறான்.
கைகளால் மார்பில் விளையாடியவன் கால்களை பஞ்சராக்கி விடுகிறாள் மெலனி.
செலோ என்ற வாத்தியக்கருவியின் அடியில் மிகக்கூர்மையான 8 m.m கம்பி சைசுக்கு ஆணி இருக்கிறது.
அதை வைத்து அவன் காலில் ஒரே.... ஏத்த்த்த்த்த்து.
இனி அவன் பொண்டாட்டி மார்பைக்கூட பிடிக்க மாட்டான்.

மிக முக்கியமான இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மாயமாகி விடுகிறாள் மெலனி.
மெலனி இல்லாமல் நிகழ்ச்சி சொதப்பலாகிறது.
இசை மேதையின் இசை வாழ்க்கையை மட்டுமல்ல...
 குடும்ப வாழ்க்கையையே சீரழித்து விடுகிறாள்.
மெலனியின் வஞ்சத்திற்க்கு காரணம் என்ன?
விடை படத்தில் பாருங்கள்.


இப்படம் என்னை மிகவும் கவர்ந்ததற்க்கு காரணம் பியானோ.
இதில் பிறக்கும் இனிய இசையில் மிக எளிதாக கரைந்து விடுவேன்.
பியானோவை மிகச்சரியாக தமிழ்ப்படங்களில் பயன்படுத்தியவர் நம்ம ராஜாதான்.
அதிலும் ஹேராம் படத்தில் வரும் பியானோ பாடல் மாஸ்டர் பீஸ்.
கமலும், ராணி முகர்ஜியும் கலந்து செய்யும் அந்தக்கலவிக்கவிதை....
தமிழ் சினிமாவின் கஜூரகோ.

பியானோ இசையை பிரதானப்படுத்தி வந்ததில் என்னைக்கவர்ந்த
பிற உலகசினிமாக்கள்
The Pianist
The Piano
 The Shine[இப்படத்திற்க்கு ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்]

8 comments:

  1. செம்மையான விமர்சனம்..அசத்தலான பதிவு..அண்ணா, எங்கிருந்து இது போன்ற படங்களை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்..அந்த மாயமே புரில..
    The Pianist - படத்தை தவிர நீங்கள் குறிப்பிட்ட மீத 3 படங்களையும் நான் பார்த்ததில்லை..இதுக்கு மேல என்ன வேலை..பார்த்திட வேண்டியதுதான்..நன்றி

    ReplyDelete
  2. @குமரன்
    தம்பி...பாராட்டுக்கு நன்றி.

    //எங்கிருந்து இது போன்ற படங்களை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்..அந்த மாயமே புரில..//

    நிறைய படங்கள் பார்ப்பேன்.அதில் மிகவும் பாதித்த படத்திற்க்கு மட்டும் பதிவெழுதுவேன்.

    ReplyDelete
  3. sema sema, கண்டி;ப்பா பார்த்துடறேன் அண்ணே,

    ReplyDelete
  4. @சி.பி.செந்தில் குமார்

    //sema sema, கண்டிப்பா பார்த்துடறேன் அண்ணே//
    பார்ரா...சிபிக்கு அவசரத்தை...
    நண்பரே!
    ஸ்டில்லை பார்த்து ...
    படத்துல கில்மா எதிர்பார்க்காதீங்க...
    வெரி ஸாரி.
    படத்துல ஒரு சீன் கிடையாது.
    அக்மார்க் சைவம்.

    ReplyDelete
  5. << படத்துல ஒரு சீன் கிடையாது.
    அக்மார்க் சைவம் >>
    அண்ணன்..அப்ப குடும்பத்தோட பார்க்கலாமா..அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷபடுவேன்..

    << அதிலும் ஹேராம் படத்தில் வரும் பியானோ பாடல் மாஸ்டர் பீஸ்.>>
    எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்..கேட்கும் போதெல்லாம் "வாட் எ கம்போசிஷன்" (சாரி..என்னோட டிரான்ஸ்லேட் இந்த மாதிரிதான்) என்று சொல்ல வைக்கும் இசை..வாழ்க இளையராஜா..உங்களுக்கும் நன்றி அண்ணே..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. @குமரன்
    << படத்துல ஒரு சீன் கிடையாது.
    அக்மார்க் சைவம் >>
    //அண்ணன்..அப்ப குடும்பத்தோட பார்க்கலாமா..அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷபடுவேன்.. //

    தம்பி...தாராளமா குடும்பத்தோட பார்க்கலாம்.
    ராஜா பற்றி தனியே ஒரு பதிவு போடுகிறேன்.
    அப்போ நிறைய பேசலாம்.நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ்,
    நலமா?
    உடல் நலக் குறைவால் உடனுக்குடன் வர முடியலை..

    திரிலிங் கலந்த பட விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.
    டைம் இருக்கும் போது பார்க்கிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.