Sep 1, 2011

மரணதண்டனையை கண்டிக்கும் Dancer In The Dark&12 Angry Men

மரண தண்டனையை நீக்கு.... என தமிழ் நாடே கொந்தளித்தது.
போலி காங்கிரஸ்காரன் மட்டும் மரண தண்டனையை நிறைவேற்று என கூப்பாடு போட்டான்.
இடைக்கால நிவாரணம் நீதிமன்றம் வழங்கியது.
நீதிமான்களுக்கு நன்றி.
மூவரும் விடுதலை ஆகும் நன் நாளே....
 சகோதரி செங்கொடியின் ஆன்மா சாந்தியடையும்.

மரண தண்டனையை பற்றி மிக முக்கியமான இரண்டு படங்கள் வந்துள்ளன.
ஒன்று.... டான்சர் இன் த டார்க்.
மற்றொன்று.... 12 ஆங்கிரி மேன்.

டான்சர் இன் த டார்க்கை இயக்கியவர் லார்ஸ் வான் டிரயர்.

இவரது படங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் கருத்து கண்டிப்பாக இருக்கும்.

இந்தப்படத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஒரு தாய் தனது மகனின் கண் பார்வை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வருகிறாள்.
அந்தப்பணத்தை திருடுகிறான் ஹவுஸ் ஒணர்.
இவன் ஒரு போலிஸ்காரனும் கூட...
அந்தத்தாய் தடுத்து போராடும்போது விபத்தாக துப்பாக்கி வெடித்து மரணமகிறான்.
கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க நீதிமன்றம் அந்ததாய்க்கு மரணதண்டனையை பரிசாக வழங்குகிறது.

அகதியாக வந்தவரை கொலை வழக்கில் சிக்க வைத்து மரண தண்டனை வழங்குவதில் இந்தியாவும் அமெரிக்காவும் அண்ணன் தம்பிகள்.

12 ஆங்கிரி மேனை இயக்கியவர் சிட்னி லூமேட்.

இந்தப்படத்தின் மூலம் அமெரிக்க நீதி மன்றத்தை காயடித்திருக்கிறார்.
மிகச்சரியாகச்சொன்னால் *த்தடித்து சுண்ணாம்பு தடவியிருக்கிறார்.
12 ஜூரர்கள் ஒரு சிறுவன் வழக்கில் தீர்ப்பு சொல்ல கூடுகிறார்கள்.
வந்ததும் வராததுமாய் அந்தச்சிறுவனை குற்றவாளி என தீர்ப்பெழுத தயாராகிறார்கள்.
ஒரே ஒருவர் மட்டும் எதிர்க்கிறார்.

உண்மையை தனது வாதத்திறமையால் திறம்பட எடுத்துரைத்து மற்றவர் அனைவரையும் தனது பக்கம்...அல்ல..அல்ல...நியாயத்தின் பக்கம் இழுத்து வெற்றி காண்பதே படம்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தால்....
மரண தண்டனை வேண்டும் என அடம் பிடிக்கும் பன்னாடைகள் கூட திருந்திவிடும் .

செப்டம்பர் 2 முதல் 12ம் தேதி வரை மதுரை புத்தகக்கண்காட்சியில்....
 அரங்கு எண் 15 ல்....
 உலக சினிமா டிவிடி கலெக்‌ஷன் காண வாருங்கள்.
நேரில் சந்திப்போம்.  

10 comments:

  1. 12 ஆங்க்ரி மேன் கேள்விப்பட்டிருக்கின்றேன்..பார்க்க வேண்டும்..

    அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. 12 Angry Men பார்த்திருக்கிறேன்.. Dancer in the Dark பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. மாப்ள நிகழ்வுகளை படங்களுடன் பிசைந்து கொடுத்திருக்கீங்க நச் நன்றிய்யா....!

    ReplyDelete
  4. வணக்கம் தலைவரே..ஊர் ஊரா போய்ட்டு இருக்கீங்க போல இருக்கே ....அப்புறம் அந்த ஊருல ஜிகர்தண்டா சாப்பிட்டிட்டு வாங்க ...புத்தக கண்காட்சி மதுரையில எந்த இடம் தலைவரே ...?

    ReplyDelete
  5. Dancer In The Dark மட்டும் பார்த்திருக்கிறேன்! எனது தளத்தில் எழுதியும்!
    அதுபோல் இன்னொரு படம் பார்க்கும் தைரியம் இல்லை!

    //இந்த இரண்டு படங்களையும் பார்த்தால்....
    மரண தண்டனை வேண்டும் என அடம் பிடிக்கும் பன்னாடைகள் கூட திருந்திவிடும்//
    TRUE!

    ReplyDelete
  6. வணக்கம் அண்ணாச்சி,
    காலத்திற்கேற்ற வகையில் மரண தண்டனை என்ற ஒன்று நீக்கப்பட வேண்டும் என்பதற்கு வலுச் சேர்க்கும் வகையில் உலக சினிமாப் படத்தினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    ரொம்ப நன்றி பாஸ்.

    ReplyDelete
  7. டான்சர் இன் த டார்க்,
    அங்ரிமேன் இரண்டுமே பார்க்கவில்லை பாஸ்,
    டைம் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. எங்கள் போராட்டத்திற்குள் இணையுத் தங்களது மாறுபட்ட போராட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரம்...

    ReplyDelete
  9. வணக்கம் மாப்பிள நீங்கள் இப்படங்களின் விமர்சனத்தை நிகழ்காலத்தின் சம்பவங்கலையும் தொட்டு விமர்சனம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. இதைப்பற்றி இன்னும் கதைக்கலாம் ஆனா அது இந்த இடமில்ல மாப்பிள.. நீங்கள் அறிமுகபடுத்தும் அனைத்தையும் பார்கவேண்டுமெண்ட ஆவலை தூண்டுகிறதே உங்கள் விமர்சனத்தின் வெற்றி..  வாழ்த்துக்கள் மாப்பிள..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல விமர்சனம்.தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.நன்றி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.