Aug 24, 2013

கோவை ‘பன் மால்’...அக்கிரமம்...அநியாயம்...அராஜகம்.


நண்பர்களே...
கோவை பன்மாலில் உள்ள  ‘உணவு வளாகத்தில்’ நண்பரோடு சாப்பிடச்சென்றேன்.
500 ரூபாய் கொடுத்து ‘அட்டை’ வாங்கினேன்.
அட்டைக்கு ‘20 ரூபாய்’ ஸ்வாகா செய்யப்படும்.
‘480 ரூபாய்க்கு’ மட்டுமே உணவு வாங்கிக்கொள்ளலாம் என்றாள்
ஒரு ‘தமிழ் மகள்’.

 “குடிக்க தண்ணீர் எங்கு இருக்கிறது?”

 “தண்ணீர்  ‘பாட்டில்தான்’ வாங்க வேண்டும்”.

உடலெங்கும் கோப மின்சாரம் பரவியது.
என் மகளை போலிருந்தாள்  அந்தப்பெண்.
வார்த்தைகளில் உஷ்ணத்தை... பில்டர் செய்து...
“ தண்ணீர் வேண்டும் என கேட்பது என் உரிமை...
தரவேண்டியது உங்கள் கடமை... 
புகார் புத்தகம் இருக்கிறதா? ” என்றேன்.

ஒரு புத்தகத்தை நீட்டினாள்.
நண்பன் புகாரை எழுதி கையெழுத்து போட்டான்.
நானும் போட்டேன்.

இந்த புத்தகம் படிக்கப்படாது... எடைக்குப்போகும் சாத்தியமே  அதிகம்.
எனவே இவ்விவகாரத்தை தொடர்ந்து மேலெடுத்து செல்ல தீர்மனித்தேன்.
முதலில்  ‘பேஸ்புக்கில்’ ஸ்டேட்டஸ் போட்டேன்.

*********************************************************************************
கோவையில் உள்ள ‘பன் மாலில்’ உள்ள ‘புட் கோர்ட்டில்’
குடி தண்ணீர் வைக்கப்படவில்லை.
கேட்டால் ‘பாட்டில்’ தண்ணீர் வாங்கி குடிக்கணுமாம்.
புகார் புத்தகத்தில் இக்குறையை நீக்கச்சொல்லி, ஒரு வாரக்கெடுவும் கொடுத்து வந்துள்ளேன்.
ஒரு வாரத்திற்குள் அவர்கள் திருந்தவிலையென்றால் என்ன செய்வது?
எப்படி அவர்களை திருத்துவது?
ஐடியா கொடுங்க...மக்களே.



*********************************************************************************
நண்பர்கள் கீதப்பிரியன், ‘மெட்ராஸ் பவன்’ சிவா’...  ‘பதிவர் கேபிள் சங்கரை’
தொடர்பு கொள்ளச்சொல்லி பின்னூட்டம் போட்டு இருந்தார்கள்.
சிவாவிடம், கேபிள் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டேன்.
கேபிள் இந்த மாதிரி விவகாரங்களில் தொடர்ந்து போராடி வெற்றி கண்டு வருபவர்.
அவர் வகுத்து தந்த திட்டப்படி இந்தப்பிரச்சனையை மேலெடுத்து செல்லப்போகிறேன்.
இந்த ஆப்பரேஷனில் முதல் படியே இந்தப்பதிவு.

என்னோடு இணைந்து போராட உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.


வாருங்கள் தோழர்களே...
'கேட்டால் கிடைக்கும்’.

‘கேட்டால் கிடைக்கும்’ முகநூல் குழுமத்தில் இணைய இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவில் சந்திப்பொம்.

14 comments:

  1. Replies
    1. என்னால் இந்த விஷயத்தை விட முடியவில்லை.
      தண்ணீர் வைக்கும் வரை...விட மாட்டேன்.

      இணைந்து போராட அநேகமாக என் நிழல் மட்டும்தான் வரும் என நினைக்கிறேன்.

      Delete
  2. ஃபன் மாலுடன் கடந்த சில மாதங்களாக நான் சண்டையிட்டு வருகிறேன்.

    (1) இத்தனை நாட்களாக அரசாங்க வரி சீல் வைத்த டிக்கெட் கொடுத்ததேயில்லை. இது குறித்து புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. CM செல்லிற்கு புகார் எடுத்துச் சென்றவுடன் சில தினங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    https://twitter.com/mayavarathaan/status/365566064370794498

    (2) ப்ரூக் ஃபீல்டைப் போலவே இங்கும் புட் கோர்ட்டில் ரவுண்ட்-ஆஃப் கொள்ளை நடக்கிறது. அதுகுறித்தும் புகார் அளித்துள்ளேன். http://www.katturai.com/?p=4120

    https://twitter.com/mayavarathaan/status/274901062484369408

    (3) ஃபன் மால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்து பல நூறு தடவை கோவை மாநகர காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை இல்லை

    https://twitter.com/mayavarathaan/status/316621825830424576

    (4)

    ReplyDelete
  3. உங்கள் வருகை தெம்பூட்டுகிறது.
    ஒருவர் கத்தினால் பலனிருக்காது.
    கூட்டமாக அலறினால்தான்... ‘அதிகார வர்க்கத்திற்கு காது கேட்கும்’.

    ReplyDelete
  4. எனக்கு ஒண்ணு புரியல. அங்க எதுக்குப் போனீங்க?

    ReplyDelete
    Replies
    1. நண்பனை பார்க்கச்சென்றேன்.இருவரும் அங்கே சந்தித்து சாப்பிட்டு கொண்டே உரையாட திட்டமிட்டோம்.அவ்வளவுதான்.

      அதே புட் கோர்ட்டில் உள்ள அன்னபூர்னா ஹோட்டலில் தண்ணீர் தருகிறார்கள்.ஆனால் இந்த புட் கோர்ட்டில் வாங்கும் கார்டு அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.

      முன்னேற்றம் என்பதெல்லாம்...கேள்விகள் கேட்பதனாலே...
      உரிமைகளை பெறுவதெல்லாம்...உணர்ச்சிகள் உள்ளதனாலே...
      இந்தப்பாடலுக்கு செயல் வடிவம் கொடுக்கிறேன்.

      Delete
  5. விமானத்திலும் இதேபோல் தான் தண்ணீா் தர மறுத்தனா் உயா்நீதிமன்ற உத்தரவு அதற்கு கடிவாளம் இட்டது.

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் என் பாட்டன் பட்டுக்கோட்டை பாட்டாக பாடி வைத்தான்.
      ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா!
      இதில் கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் முரட்டு உலகமடா!!
      தம்பி...தெரிந்து நடந்து கொள்ளடா.

      Delete
  6. Dear Sir,

    Please read 'thanneer, thanneer' - a series of articles published at Junior Vikatan. The articles detail about how MNCs exploit third world countries to commercialize water resources.
    One particular article also discussed about the same issue - that is, how shopping malls deny access to drinking water and forcing the public to go for bottled water. This is a planned conspiracy, and not just an one-off incident.
    Requires consistent fight across all platforms.
    Thanks,
    Arul

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...தங்கள் வருகைக்கும்...ஜூ.வி.கட்டுரை பற்றிய தகவலுக்கும் நன்றி.

      Delete
  7. fun cinemas - ல் பத்து ருபாய் டிக்கெட் முறையாக கொடுக்க வைக்க ஏதேனும் வழி உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ப்ரூக்பீல்டு மாலில் 10ரூபாய் டிக்கெட்டில் மக்கள் அமர்ந்திருப்பதை கவனித்து உள்ளேன்.
      பன் மாலில் நான் இதை கவனித்தது இல்லை.
      அடுத்த முறை போகும் போது நிச்சயம் கவனிப்பேன்.
      பத்து ரூபாய் டிக்கெட் கொடுக்கப்படவில்லையென்றால் அதற்கும் போராடத்தான் வேண்டும்.

      Delete
  8. /இணைந்து போராட அநேகமாக என் நிழல் மட்டும்தான் வரும் என நினைக்கிறேன்./

    நான் வருகிறேன். mail: kraj9350@gmail.com

    மேலும், fun cinemas - ல் பத்து ருபாய் டிக்கெட்டை முறையாக கொடுக்க வைக்க ஏதேனும் வழி உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் இணைந்து போராட வந்தமைக்கு நன்றி.
      நிச்சயம் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.