நண்பர்களே...தங்கமீன்களை பார்த்து ஒரு வாரம் ஆகி விட்டது.
ஒரு வாரத்திற்கு பதிவெழுதுவதையே தவிற்து விட்டேன்.
இருந்தும் இப்பதிவில் சூடு கிளம்பியது என்றால் அதற்கு முழுக்க காரணம் இயக்குனர் ராம்தான்.
இரண்டாவது படத்திற்கு...
இத்தனை ஆண்டுகள் ரூம் போட்டு யோசித்து...
‘கால் வேக்காடு’ படமாக ‘தங்க மீன்களை’ உருவாக்கி இருக்கிறார்
இயக்குனர் ராம்.
முதல் படமான ‘கற்றது தமிழ்’ கூட அரை வேக்காடாக இருந்தது.
முழு வேக்காடில் படமெடுக்க இயக்குனர் ராம் முயற்சிக்க போவதும் இல்லை.
அதற்கான தகுதியும் அவரிடம் இல்லை என்பதை இரண்டாவது படம் விளக்கி விட்டது.
மேடைப்பேச்சில்...
சோனியா, மன்மோகன்சிங், சிதம்பரம் ஆகியோரை ‘விட்டு விளாசும் போது’ ‘வட்டச்செயலாளர் வண்டு முருகனையும்’ போட்டு ‘தாளிக்கக்கூடாது’.
திரைப்படத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?.
‘காட்சிக்கு காட்சி’ பார்வையாளர்களை எமோஷனலாக்கி பிளாக்மெயில் செய்வதையே தொழிலாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்.
அவரது இரண்டு படங்களுமே இத்திருப்பணியை இடையறாது செய்திருக்கிறது.
கற்றது தமிழில் ஒரு அஞ்சலியை தந்தீர்கள்.
அதற்கு இணையாக இப்படத்திலும் ஒரு அற்புதமான நடிகையை தந்து உள்ளீர்கள்.
வாய்ப்பு அமைந்தால் அவர் ஒரு ‘ஷோபா...அர்ச்சனா...’ போல் உருவெடுப்பார்.
உருப்படியாக சில காட்சிகளையும்...
சில கதாபாத்திரங்களையும் படைத்து உள்ளாதால்...
கால்வாசி கவிதை...முக்கால்வாசி அபத்தம்.
இப்பதிவு...உலகெங்கிலும் உள்ள ‘மீனவர்களுக்கு’ சமர்ப்பணம்.
நீங்க மனசு நிறைஞ்சதான்னு கேட்ட ஆளு கிட்ட தியேட்டர் நிறைஞ்சுதுன்னு பதில் சொல்லும் போதே நினைச்சேன், உங்களை படம் பெருசா ஏமாத்திடுச்சுன்னு.
ReplyDeleteகற்றது தமிழ் இரண்டாம் பாகமாக...தங்கமீன்கள் இருக்கும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
Deleteபடத்தின் தலைப்பு...
இரண்டு படத்திற்கான கால இடைவெளி...
சக இயக்குனர்களின் பசப்பு பாசாங்குரைகள்...
என ஏமாந்து விட்டேன்.
// ‘மீனவர்களுக்கு’ சமர்ப்பணம்.//
ReplyDeleteஹஹஹா..
படம் பாத்தீட்டீங்களா!
Deleteஇன்னும் இல்ல சார்.. உங்க பதிவ பார்த்ததுக்கு அப்புறம் இந்திய தொலைக்கட்சிகளில் முதல் முறையா பார்த்துக்கலாமின்னு இருக்கேன்..
Deleteப்ளீஸ்... தியேட்டரில் போய் முதலில் படத்தை பாருங்க.
Deleteஒரே அடியாக ஒதுக்கி தள்ளும் அளவுக்கு மோசமான படமில்லை.
தியேட்டரில் படம் பாருங்கள்.
அப்போதுதான் நான் மீனவர்களுக்கு இப்பதிவை அர்ப்பணித்த
‘உள் குத்து’ விளங்கும்.
கடைசியாக இருக்கும் எலி குறியீடாக சொல்வது என்ன என்பதை தயை கூர்ந்து விளக்கவும்..
ReplyDeleteபதிவின் முதலில் போட்ட புலி படத்தோடு கனெக்ட் செய்து பாருங்கள்.
Deleteஓ.. அங்கனே..
Delete"ஷோபா...அர்ச்சனா..." பற்றி ஒரு பதிவு போடவும்...
ReplyDeleteஎழுதிருவோம் பின்னூட்ட புயலே.
ReplyDeleteஏன் சென்னை வரல?
ReplyDeleteஅதே நாளில் என் மனைவியின் மாமா மகளின் திருமணம்.
Deleteஉங்களிடமாவது மன்னிப்பு கேட்டு தப்பித்து விடலாம்.
என் வீட்டம்மாவுக்கு தமிழில் தெரியாத வார்த்தையே ‘மன்னிப்பு’.
அடுத்த வருஷமாவது மூகூர்த்த நாளாக இல்லாமல் நிறைந்த அஷ்டமியில் பதிவர் திருவிழா நடத்தும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !
ReplyDeleteதிரைக்கதையை ஒரே திக்கில் பயணப்பட வைத்து இருந்தால் இந்தப்படம் இன்னும் உயரத்திற்கு நீந்தி இருக்கும்.
Deleteஇடைவேளைக்கு பிறகு தங்கமீன்களை அரபிக்கடலில் மிதக்க விட்டதுல் எல்லாமே செத்து மிதந்து விட்டது.
இருந்தாலும் இப்படம் ஒரு தட்வை தியேட்டரில் பார்க்கலாம்.
எத்தனை குப்பைகளை பார்த்து தொலைக்கிறோம்.
இப்படத்தை ஒரே அடியாக குப்பை என தள்ளி விடவும் முடியாது.
கோமேதகமாக கொண்டாடவும் முடியாது.
ராம் அடிக்கடி அழுவதை தவிர நிறைய சீன்கள் எனக்கு பிடிச்சு இருந்தது.
ReplyDeleteபெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்.
Deleteபெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்...அண்ணேன் இதையும் விமர்சனத்தில் ஓட்டிக்க வேண்டியதுதான்......
ReplyDeleteஉங்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருக்கிறது என்பதை தங்கள் பதிவை படிக்கும் போதே தெரிந்து கொண்டேன்.
Deleteவருகைக்கு நன்றி.
கடந்த மூன்று மாதங்களாகத்தான் நீங்கள் எனக்கு பரிச்சயம்,உங்களுடைய உலக சினிமா அறிவு எனக்கு பிடித்தது,தங்கமீன்கள் படத்தை நீங்கள் விமர்சிப்பதற்கு முன்புவரை,இது என்னுடைய comment-July 13 at 10:31am (Tharmalingamurugu Prakash)"தங்க மீன்கள்" ட்ரைலர் பார்தவுடனே என் மனசில் தோன்றியது படம் கமர்சியல் ஹிட் தேசிய விருதும் கிடைக்கும். வாழ்துக்கள்.· 2 ·
ReplyDeleteபடம் பார்த்த பின்-
திரைக்கடலில்
சுரா,இறால்,ஏன் சில திமிங்கிலங்களைக்கூட
அடிக்கடி பார்க்கிறோம்.
மிக அரிதாக மட்டுமே
தங்க மீன்கள் வருகின்றது.
தங்க மீன்கள் இன்று காலை 10.15 காட்சி,
பொள்ளாச்சி நல்லப்பா-வில் பார்த்தேன்.
கண்டிப்பாக, முதலில் நான் சொன்னதுபோல
தேசிய விருது நிச்சயம்.
கற்றது தமிழ் பார்த்தபோது தோன்றாத ஒரு எண்ணம்
தங்க மீன்கள் பார்த்தவுடன் தோன்றியது.
அடுத்து வரும் உங்களுடைய எல்லா படத்திலும்
சம்பளமே வாங்காமல் நல்லவிதமான ஒரு
சிறு கதாபாத்திரத்திலாவது
நடிக்க வேண்டும் என்பதுதான் அது.
(உங்களுக்கு சம்மதமெனில் என்னை அழையுங்கள்)
வாழ்க வளமுடன்
என் கைபேசி எண் என்றும் அன்புடன் +91-9976590054 உன் தம்பி P.S.S.PRAKASH
தங்க மீன்கள் விருது வாங்கும் என அடித்து சொல்லி இருக்கிறீர்கள்.
Deleteஇந்த வருட விருதுப்போட்டியில் ‘ஷிப் ஆப் தீசியஸ்’ இடம் பெற்றால்
தங்க மீன்களுக்கு ‘தேசிய அளவில்’ விருது கிடைப்பது கடினம்.
நீங்கள் கோவை வரும் போது எனக்கு தெரியப்படுத்துங்கள்.
நாம் சந்திப்போம்.
நன்றி.
விகடன் சொன்ன குறைகளுக்கு ராமின் பேஸ்புக்-ஐ பாருங்கள்.
ReplyDeleteதங்க மீன்களில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு விட்டது.
Deleteபடத்திலுள்ள குறைகளை கொஞ்சமே கொஞ்சம்தான் கோடிட்டு காட்டி இருக்கிறது.
என்னை பொறுத்த வரை விகடன் விமர்சனத்தில் சலுகைதான் காட்டி இருக்கிறது.
ராமுக்கு இது போதாதா?
44-மார்க் என்பது இப்படத்தை இழிவு படுத்தியதற்கு சமம்.
Delete