Aug 21, 2013

இதுதாண்டா ‘கிளைமாக்ஸ்’.

நண்பர்களே...
சமீபத்தில் பார்த்த இரண்டு படங்களின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் ஆகர்ஷித்தது.
1 . ஆதலால் காதல் செய்வீர்.


இப்படம் இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
எனவே இப்படத்தின் கிளைமாக்சை பிறிதொரு சந்தர்ப்பத்தில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
[ மூளை புடைத்து வெளியே கீரிடம் போல் காட்சியளிக்கும்
அதி[ஷா] புத்திசாலிகளுக்கு...
இப்படத்தின் கிளைமாக்ஸ் வேறு அனுபவங்களை கொடுக்கலாம்.]


2 . ஷிப் ஆப் தீசியஸ்


இப்படத்தின் கிளைமாக்ஸ் முதல்முறை பார்க்கும் போது ஒன்றுமே புரியவில்லை.
மூன்று முறை இந்த படத்தை பார்த்தேன்.
அறிஞர் பெருமக்களிடம் விவாதித்தேன்.
 ‘பிளாட்டோஸ் கேவ்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

 ‘தத்துவங்களின் பேராசான்’ பிளாட்டோ பற்றி தெரிந்து கொள்ள எனது முந்தைய பதிவுக்கு செல்லவும்...

பிளாட்டோஸ் கேவ் பற்றிய விக்கிப்பீடியா தகவலை கொஞ்சம் வெட்டி இங்கே தருகிறேன்.

The Allegory of the Cave— also known as the 
Analogy of the Cave
Plato's Cave, (or) the 
Parable of the Cave—is presented by the
Greek Philosopher Plato in his work The Republic (514a-520a) to compare "..
the effect of education and
the lack of it on our nature." 

It is written as a dialogue between
Plato's brother Glaucon and his mentor Socrates,
narrated  by the latter. 
The Allegory of the Cave is presented after the 
metaphor of the sun (508b–509c) and  the analogy of the divided line (509d–513e).

 All three are characterized in relation to dialectic
at the end of Book VII and VIII (531d–534e).
Plato has Socrates describe
a group of people who have lived chained to the wall of a cave all of their lives,
facing a blank wall. 

The people watch shadows projected on the wall
by things passing in front of a fire behind them, and
begin to ascribe forms to these shadows. 
According to Plato's Socrates,
the shadows are as close
as the prisoners get to viewing reality. 

He then explains
how the philosopher is like a prisoner
who is freed from the cave and comes to understand that
the shadows on the wall do not make up reality at all,
as he can perceive the true form of reality
rather than the mere shadows seen by the prisoners.

The Allegory may be related to Plato's Theory of Forms
according to which
the "Forms" (or "Ideas"), and
not the material world of change known to us through sensation, 
possess the highest and most fundamental kind of reality. 

Only knowledge of the Forms constitutes real knowledge.
[1] In addition,
 the Allegory of the Cave is
an attempt to explain the philosopher's place in society:
to attempt to enlighten the "prisoners."

Plato's Phaedo contains similar imagery
to that of the Allegory of the Cave; 
a philosopher recognizes that  
before philosophy, 
his soul was "a veritable prisoner fast bound within his body... 
and that
instead of investigating reality by itself and in itself
it is compelled to peer through the bars of its prison."[2]


'பிளாட்டோஸ் கேவ்’ தத்துவத்தை...
 எனக்கு தெரிந்ததை...புரிந்ததை...எனது பாணியில் சொல்லி விடுகிறேன்.

ஒரு குகையில் நிறைய பேரை சங்கிலியால் பிணைத்து வைக்கப்படிருக்கிறது.
தலையை கூட திருப்பி பார்க்க முடியாதவாறு கட்டப்படுகிறது.
கட்டப்பட்டவர்கள், கண்ணுக்கு தெரியும் நிழல்களை வைத்து...
தங்கள் சிந்தனையால்... தங்கள் கருத்துக்களை...கட்டமைப்பார்கள்.
அவை உண்மையாகவோ...உண்மைக்கு நெருக்கமாகவோ...
அல்லது முற்றிலும் விலகி நேர்மாறாகவோ இருக்கக்கூடும்.

உதாரணமாக கோவைப்பதிவர்கள் ஒரு குகையில் கட்டி வைக்கப்படுகிறார்கள்.
சூட்டிங்கில் பயன்படுத்தப்படும் எச்.எம்.ஐ. லைட்டை பின்னால் வைத்து எரிய விடுகிறார்கள்.
லைட்டின் முன்னால், லேட்டஸ்ட் டாப் ஸ்டார்களை ஒருவர் பின் ஒருவராக நடக்க விடுகிறார்கள்.

முதலில் ஒரு நடிகை வருகிறார்.
அந்த நிழலை பார்த்து...கணித்து...‘பெரிய பண்ணிக்குட்டி வருதுடோய்’ என்கிறேன் நான்.
பதிவர் ‘இனியவை கூறல்’ கலா குமரன்... ‘நியாண்டர்தால் மனுஷி !’ என வியக்கிறார்.
பதிவர் ‘கோவை நேரம்’ ஜீவா ...‘ஹை...ஹன்சிகா’ என்கிறார்.


இரண்டாவது ஒரு நடிகை வருகிறார்.
நான், ‘என்னய்யா இது...கத்தரிக்கா ஒண்ணு... கை கால் முளைச்சு வருது’ என்கிறேன்.
பதிவர் கோவை ஆ.வி. ‘நல்லாப்பாருய்யா...அது நஸ்ரியா’ என நறநறக்கிறார்.
அவர் கண்களில் ‘அகோரி பாபா’ உக்கிரம்.
நல்ல வேளை அவரை கட்டி வைத்திருந்தார்கள்.
இல்லையேல் இந்தப்பதிவை நான் எழுதி இருக்க முடியாது.
இந்நேரம் ஜீரணமாகியிருப்பேன்.


மூன்றாவது ஒரு நடிகை வருகிறார்.
அனைவருமே அலறுகிறோம்.
ஆஹா...அனுஷ்கா.



நாங்கள் கண்டு உணர்ந்தது சரியா...தவறா...என்பது கட்டவிழ்க்கப்பட்டு வெளியேறும் போதுதான் தெரிய வரும்.
ஒரு வேளை முதலில் வந்தது நமீதாவாக இருந்தால்...
இறுதியில் வந்தது காஜலாக இருந்தால்...
இந்த குழப்பத்தை தீர்த்து வைப்பவரே...தத்துவ ஞானி.
குகைக்கு வெளியில் இருக்கும் தத்துவஞானியால்தான் உண்மையை  உரைக்க முடியும்.
உண்மையை உலகுக்கு சொல்வது ஒரு தத்துவ ஞானியின் கடமையும் கூட...
இதைத்தான் ‘பிளாட்டோ கேவ்’ தத்துவம் சொல்கிறது.

இப்போது ‘ஷிப் ஆப் தீசியஸ்’ இறுதிக்காட்சிக்கு போவோம்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மூவரும்...வேறு சிலரும்...
ஒரு ஆவணப்படத்தை பார்க்க வருகிறார்கள்.
இவர்கள் அனைவருமே...வெவ்வேறு வயது...மொழி..இனம்...நாடு என வேறுபட்டு இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவருமே  ‘ஒரு புள்ளியால்’ இணைக்கப்பட்டவர்கள்.
ஆவணப்படத்தை எடுத்தவர் கொடுத்த ‘உடல் உறுப்பு தானத்தால்’ உயிர் வாழ்பவர்கள்.

ஆவணப்படம் ஓடுகிறது.
ஒரு குகைக்குள் புகுந்து படமாக்கப்பட்ட காட்சி திரையில் விரிகிறது.

பெண் போட்டாகிராபர் கண்கள் கலங்க இக்காட்சியை பார்க்கிறாள்.
இந்தக்கண்கள்தான் இந்த குகையை தரிசித்து படமாக்கி இருக்கிறது.
படமாக்கிய கண்கள்...படமாக்கப்பட்டதை...பார்க்கிறது.
படைப்பாளியின் கண்கள்...இப்போது பார்வையாளரின் கண்களாக...
உருமாறி பார்க்கிறது.

குகையை படமெடுப்பவனின் நிழல்...குகையில் பரவுவதை ‘ஆவணப்படம்’ காட்டுகிறது.
அவன் நிழலை மட்டுமே...அவனால் பயன் பெற்றவர்கள் பார்க்கிறார்கள்.

இத்தனை பேரை வாழ வைத்த...
அவன் யார்?
எப்படி இருப்பான் ?
ஏன் இறந்தான்?
எப்படி இறந்தான்?
அவன் சிந்தனை என்ன ?
என எத்தனையோ கேள்விகள் எழும்.
அத்தனையும் அந்த  ‘நிழல் பிம்பத்தை’ வைத்துதான்  ‘கட்டுகிறோம்’.

லேடி போட்டா கிராபர் ஆவணப்படத்தை பார்க்கும் போது ஞானக்கண் பெறுகிறாள்.
தன் ஊனக்கண்ணால் பெற முடியாத தரிசனத்தை...
தன் ஞானக்கண் கொண்டு தரிசிக்கிறாள்.

இக்காட்சியில்  ‘இயக்குனர் ஆனந்த் காந்தி’ செய்த மேஜிக் என்ன?

படத்திலுள்ள கதாபாத்திரம்...படம் பார்க்கும் நாம்...
என எல்லோரையும் கட்டி ‘பிளாட்டோஸ் கேவிற்குள்’...
அடைத்து விட்டார் இயக்குனர்.

டேய் வெண்ணைகளா...
எல்லாம் தெரியும்னு ஆடாதீங்கடா.
எல்லோருமே  ‘பிளாட்டோஸ் கேவிற்குள்தான்’ இருக்கிறோம்... நொண்ணைகளா...என்கிறாரோ இயக்குனர்?.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

21 comments:

  1. இப்படி எல்லாம் "டாப்" ஸ்டார்களை நடக்க விட்டு ஒண்ணுமே தெரியாத மூன்று அப்பாவிகளை கட்டி வைப்பது நியாயமா...?

    வெண்ணைகளா... நொண்ணைகளா...என்கிறாரோ இயக்குனர், நம்ம இயக்குனர் சசிகுமாருக்கு சொந்தமா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. \\\இப்படி எல்லாம் "டாப்" ஸ்டார்களை நடக்க விட்டு ஒண்ணுமே தெரியாத மூன்று அப்பாவிகளை கட்டி வைப்பது நியாயமா...?\\\

      அட...ஆமால்ல...பொருத்தது போதும்...பொங்கி எழு மனோகரா.

      Delete
  2. உண்மையிலேயே நஸ்ரியாவை கத்திரிக்காய் என விளித்த உமக்கு "நறநற".. ஆனா கீழே அனுஷ்கா படத்த போட்டு கூல் பண்ணிட்டீங்க..

    ReplyDelete
    Replies
    1. அனுஷ்காவை பார்த்ததும் எல்லாமே மறந்துருமே!.

      ‘பிளாட்டாஸ் கேவ்’ என்றால் என்ன?...
      சென்னைக்கு டூர் போகும் போது கேள்வி கேப்பேன்.
      கரெக்டா பதில் சொல்லவில்லையென்றால் மெரினா பீச்சுல முட்டி போட வைப்பேன்.
      [தேங்காய் பாணியில்]ஜ்ஜாக்கிரதை...

      Delete
  3. ‘ஷிப் ஆப் தீசியஸ்’ பார்க்கவில்லை ஆனால் ‘பிளாட்டாஸ் கேவ்’ தத்துவத்தின்மூலம் புரியவைத்தவிதம் பிடித்திருந்தது.‘பிளாட்டாஸ் கேவ்’ தத்துவத்தின் பறுவடிவம்தான் அல்லது மறு கோணம்தான் "பாம்பும் கயிறும்" தத்துவம் போலும்.சரியா?

    ReplyDelete
    Replies
    1. பாம்பும் கயிறும் தத்துவம்...நம் அகம் சார்ந்து இயங்குவது.
      பிளாட்டோஸ் கேவ் தத்துவம்...நம் அகமும்..புறமும் சேர்ந்து இயங்குவது.

      [ இதுக்கு மேல இதுக்கு உள்ள போனா நாம காணம போயிடுவோம் சூனா...பானா...]

      Delete
  4. இப்பத்தான் ஒருத்தரு பொலம்பியிருந்ததை படிச்சேன். கூகுள் இமேஜ் ல் தமிழில் தட்டினால் நடிகைகள் பாடமாகவே வருதுன்னு. ஆனால் இங்கே வந்து பார்த்தா இந்த படங்கள் எப்படியெல்லாம் உதவுதுன்னு யோசிக்கத் தோனுது.

    ReplyDelete
    Replies
    1. ‘பிளாட்டோஸ் கேவை’ அனுஷ்கா படம் போட்டு நம்ம மக்கள்கிட்ட விதைச்சுட்டேன்.
      தப்பில்லைதானே நண்பரே.

      [நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா...எதுவுமே தப்பில்லை...]

      Delete
  5. இத்தனை உருவகேலி தேவையா? அதுல நகைச்சுவை கூட எடுபடல. என்ன வகையான எழுத்து முறையோ இது?

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்து தினத்தந்தி பாணி.
      இலக்கியவியாதி கோஷ்டிகள் உருவாக்கி வைத்திருக்கும் நடைமுறைக்கு நேர் எதிரானது.

      எழுதியவனுக்கும் விளங்காது....
      படிக்கிறவனுக்கும் புரியாது...
      எழுதும் ‘இலக்கிய நடை’ எனக்கு வராது.

      /// அடுத்து சரித்திரம் பற்றிய பொருள் முதல் வாதக் கண்ணோட்டம் (The Materialist Conception History) இதில் உறவுகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல், சரித்திரம் போன்றவைகள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
      மனித சமூகம் தன் தேவைகளை உற்பத்தி செய்து கொள்ளும் சமூதாய உற்பத்தியில் மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருவித உறவுமுறைகளுக்காக உள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வுற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் ஒரு கட்டம் வரை பொருத்தமானதாக இருக்கின்றது. உற்பத்தி உறவுகளின் மொத்தமும் சேர்ந்து சமூதாயத்தின் பொருளாதார அமைப்பாக இருக்கிறது. உற்பத்தி உவுகளின் சமூதாய அமைப்பின் மீதே சட்டம் அரசியல் என்ற ஆதிக்கங்கள் நிறுவப்படுகின்றன. யதார்த்த வாழ்க்கையின் உற்பத்தி முறைகள் சமூதாய அரசியல் கலாச்சார வாழ்க்கை நியதியை பொதுவில் அமைக்கின்றது.///

      இப்படி எழுத எனக்கு வராது.
      இதை படிச்சதுக்கே ‘எனக்கு அவசரமா வருது’.

      Delete
    2. உஷ்...யப்பா...முடியல...

      Delete
  6. ஆஹா...அனுஸ்கா....
    சொல்லும் போதே தித்திக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. வாங்க... ‘ஸேம் ப்ளட்’

      மேலே படிச்சீங்களே ‘சாம்பிள்’...முழுப்பதிவு லிங்க் அனுப்பவா?

      Delete
  7. என்னென்னவோ சொல்றீங்க ஒண்ணும் புரியலை...தத்துவத்தை சொன்னேன்...சென்னை செல்லும்போது விவாதிக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ///சென்னை செல்லும் போது விவாதிக்கலாம்///

      விதி வலியது.
      பெட்ரோமேக்ஸ் லைட்டே வேணுமா?

      Delete
  8. //இறுதியில் வந்தது காஜலாக இருந்தால்?
    அதெப்படி மூணு பேரும் ஒரே ஆளை சொன்ன பின்பு காஜல் அகர்வால் வருவார்?.
    அது நிச்சயமா "சுடிதார் போட்டு நடந்து வர்ற குதிரை" தாம்யா

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் குகையில் கட்டப்பட்டு கிடப்பவர்கள்.
      நீங்கள் வெளியில் இருந்து சொல்கிறீர்கள்.
      எனவே நீங்கள்தான் தத்துவஞானி.
      ‘பிளாட்டோஸ் கேவ்’ தத்துவம் இதைத்தான் சொல்கிறது.

      Delete
  9. One mundane doubt. :-)

    In the final scene of Ship Of Thesues. When the cave explorer is filming, how can his shadow fall ? Provided the light source is on the camera which he is holding ?

    I have seen the film once, but didn't notice any other light-source or natural light. I might had forgotten. :-(

    ---

    This is my Tamil review on Z, please check it..

    www.filmreviewsintamil.blogspot.com/2013/08/z-french-1969.html

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...நிழலையும்...குகையையும் காட்டித்தான் ‘பிளாட்டோஸ் கேவ்’ தத்துவத்தை தொடர்பு படுத்தி பார்வையாளருக்கு காட்டுகிறார் இயக்குனர்.
      லைட்டை கேமராவுக்கு பின்னால் ஒருவர் பிடித்திருந்தார்...
      அவரே குகையை படமாக்கியவரை மருத்துவமனைக்கு தூக்கி வந்திருக்கலாம் என்ற லாஜிக் சரியாக பொருந்தி வரும்.
      நிழல் உருவத்தை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் அனுமானிக்கலாம்.
      அதுதானே...பிளாட்டோஸ் கேவ்’ தத்துவம்.

      Delete
    2. So the "shadow in the cave" was deliberately done to denote the "Pluto Cave", otherwise in a normal video shoot the light-source will always be next to the cameraman ?

      Delete
  10. குருடர்கள் யானையைப் பார்த்த கதை கூட ஒருவகையில் plato's caveதானோ?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.