நண்பர்களே...
நான் கமலின் திரை வாழ்க்கை வரலாறை,
தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன்.
ஆரம்பத்தில் லாபத்தோடு போய்க்கொண்டிருந்த தொடர்,
தேய்பிறையாகி நஷ்டமாகிக்கொண்டு வந்தது.
லாபம் வந்த காலத்தில்,
கமல் என்னை வெகுவாக ஆதரித்து கை தூக்கி விட்டார்.
தொடர் நஷ்டமாக போய்க்கொண்டிருந்த காலத்தில்,
ஏதோ சில காரணங்களால் என்னை புறக்கணித்தார்.
அந்த கோபத்தில் அந்தத்தொடரை நான் நிறுத்தி விட்டேன்.
1995ல் அவரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறியவன்,
இன்று வரை அவரை நான் சந்திக்கவேயில்லை.
இளையராஜா, கே.பாலச்சந்தர், சுஜாதா, நாகேஷ் என நான் நேசித்த அத்தனை பேராலும் நான் நேரடியாக காயப்பட்டு இருக்கிறேன்.
ஆனால் அவர்கள் மேல் நான் கொண்ட காதல் என்றுமே அழியாது.
எனது பதிவுகளே இதற்கு சாட்சி.
சரி...விஷயத்துக்கு வருகிறேன்.
தொடரை நிறுத்தி விட்டு கணக்கு பார்த்ததில் கொஞ்சம் லாபம் மிஞ்சியது.
அந்தப்பணத்தில் கோவையில் ஒரு மூலையில் 16 செண்ட் இடம் வாங்கிப்போட்டேன்.
நான் வாங்கும்போது கிராமப்பஞ்சாயத்தாக இருந்த இடம்,
இப்போது கோவை மாநகராட்சியாகி விட்டது.
இப்போது அந்த இடத்தில் மூணே முக்கால் செண்ட் மட்டும் விற்றேன்.
அந்த மதிப்பின்படி, எனது இடம் கோடி ரூபாய் மதிப்பாகி உள்ளதை உணர்ந்தேன்.
எனவே கமலால் நான் இப்போது கோடிஸ்வரனாகி விட்டேன்.
[ கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள ‘நிஜ கோடிஸ்வரர்கள்’,
என்னை மன்னிக்கவும்.
நீண்ட நாள் ஆசையின் காரனமாக,
என்னை நானே கோடிஸ்வரன் என அழைத்துக்கொண்டேன்.]
மேற்படி இடம் கோவை சரவணம்பட்டி அருகில் உள்ளது.
‘பி.பி.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி’க்கு எதிரில் அமைந்துள்ள மருதம் நகரில்
இருக்கிறது.
தொட்டடுத்து இருப்பது ‘அல்கெமி பப்ளிக் ஸ்கூல்’...
என் இடத்தை சுற்றி வாங்கியவர்கள் வீடு கட்டி விட்டார்கள்.
இன்னும் ஐந்து வருடத்தில் இந்த இடம் மதிப்பில் இன்னும் பல மடங்காகும்.
காரணம் தற்போது கோவை மாநகராட்சி,
மிகப்பெரிய ‘மேல்நிலை குடிநீர் தொட்டி’ கட்டி வருகிறது.
அடுத்த வருடம் முதல்வரே அதை திறப்பதாக திட்டமிட்டுள்ளார்கள்.
அதற்காக சாலை கட்டமைப்பு வசதிகள் செய்யவும் ஏற்பாடாகி வருகிறது.
மருதம் நகரையொட்டி உள்ள,
‘கோவை சக்தி ரோடு -அவினாசி ரோடு இணைப்புச்சாலை’...
நூறு அடி சாலையாக வெகு விரைவில் மாறும்.
என் இடத்தில் இன்னும் ஒரு சைட் மட்டும் விற்க எண்ணி உள்ளேன்.
இருபத்தைந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள், என்னை 90039 17667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
எனக்கு தகுந்த தயாரிப்பாளர் அமையா விட்டால்,
எனது இடத்தை விற்று,
எளிதாக ஒரு உலகசினிமா எடுக்க முடியும்.
இந்த நம்பிக்கைதான் இப்போது எனக்கு யானை பலத்தை தந்திருக்கிறது.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
வணக்கம் திடீர் கோடிஸ்வரன் அவர்களே,,,,,
ReplyDeleteபதிவுக்கு பதிவும் ஆச்சு....விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு....
உஷ்...கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்லக்கூடாது.
Deleteநீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள ஐந்து மேதைகளில்,ஒருவர் மேல் எனக்கு அளவுகடந்த மரியாதை இருந்தது.ஆனால் அவர் மேல் எனக்கிருந்த மரியாதையை சுத்தமாக போகும்படி ஆகிவிட்டது.அவ்வாறு நடப்பதற்கு போதுமான செயல்களை அவர் செய்திருந்தார் என்பது உண்மை.நீங்கள் எடுக்கப்போகும் உலக சினிமாவை பார்க்க எதிர்பார்ப்போடு காத்திருப்போர் பட்டியலில் நிச்சயம் எனது பெயரும் உண்டு.
ReplyDeleteவினோத், நீ என்னை ஆச்சரியப்படுத்தும் இளைஞன்.
Deleteஉன் அறிவுக்கு...தேடலுக்கு...நான் ரசிகன்.
சினிமாவின் மீது அளப்பரிய ஆர்வமும் ,அதே சமயம் சினிமாவின் மீது அது எங்கே தவறான வழியில் சென்றுவிடுமோ என்று ஒரு குழந்தை மீது அக்கறை கொள்ளும் தகப்பனுக்கே உரிய அக்கறையையும் செலுத்துபவர்களில் நீங்களும் ஒருவர்.அப்படிப்பட்ட உங்களிடமிருந்து வரும் இவ்வாறான வார்த்தைகள் நான் செரியான பாதையில் தான் பயணிக்கிறேன் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.மிக்க நன்றி சார்.
Deleteஉங்கள் எண்ணம் யாவும் ஈடேற மனம் நிறைய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே.
Deleteபடம் இயக்குறது ஓகே ஆனா தயாரிக்கிறது யோசனை பண்ணிக்கங்க தல
ReplyDeleteஉங்கள் கனிவான ஆலோசனைக்கும்...கரிசனத்துக்கும் நன்றி நண்பரே.
DeleteEVERYTHING WILL BE FINE,I HOPE YOU WILL GET EVERYTHING FOR YOUR PROJECT ON TIME WITH THE GRACE OF ALMIGHTY.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே.
Deletedo not trust any film personalities because 99% of those cheat their own wife & children
ReplyDeleteநண்பரே...இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது.
Deleteஎல்லா தொழிலிலும் இப்படி ஆசாமிகள் உண்டு.
சினிமாவில் நாணயத்திற்கும், நேர்மைக்கும் நூற்றுக்கணக்கில் உதாரண புருஷர்களை அடையாளம் காட்ட முடியும்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது குறித்து ஒரு பதிவு போடுகிறேன்.
UCR.. Actual-aa neenga yaru ?
ReplyDeleteநான் ஒரு சாதாரண சினிமா ரசிகன்தான்.
Deleteகாலம், கொஞ்ச நேரம் என்னை தொலைக்காட்சி தயாரிப்பாளாராக்கியது.
விளம்பரப்படத்தை தயாரித்து இயக்க வைத்தது.
உலக சினிமா டிவிடியை விற்க வைத்தது.
இப்போது பதிவெழுத வைத்திருக்கிறது.
படம் இயக்க வேண்டும் என்ற் கனவு பதினாறு வயதிலே படம் ரீலிசான போது பிறந்தது.
அந்தக்கனவை நாயகன் படம் பயமுறுத்தியது.
உலகசினிமா எனக்கு வழியை காட்டி உள்ளது.
வெகு விரைவில் லட்சியம் நிறைவேறும்.
கமல், நடிகர் ராஜேசுக்கு சொன்னது...எனக்கும் இது வேத வாக்கு.
“இது கடல்...இங்கு எத்தனை திமிங்கலங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்”
‘இந்த இயக்குனர் எனது ரசிகர்...ஏகலைவர்’ என கமல் வாயால் சொல்ல வைக்க கடினமாக உழைத்து வருகிறேன்.
UCR
DeleteThnx for letting me know about you.
All the best for your endeavour.
Anything I can do for ur endeavour drop me a mail on filnbulb@gmail.com.
வாழ்த்துக்கள்.. சார்...
ReplyDeleteமுயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லோர்கள் வாழ்த்து பலிக்கும்.நன்றி.
Deleteநண்பரே நான் தங்களிடம் உதவி இயக்குனராக சேர விரும்புகிறேன். எனக்கு சினிமா இயக்கம் பற்றி எதுவும் தெரியாது ஆனால் அதன் மேல் காதல் அதிகம் உண்டு. எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteநான் இயக்குனராகும் போது நிச்சயம் எனக்கு உதவியாளர்கள் தேவை.
Deleteநான் இயக்குனராகும் சேதியை முதலில் தெரிவிக்கும் இடம் வலையுலம்தான்.
சேதி வரும் வரை படித்து கொண்டிருங்கள்.
[ இணையத்தில் திரைப்படக்கலை சம்பந்தமாக நிறைய நூல்கள் கிடைக்கின்றன.]
உலக சினிமாக்களை பார்த்துக்கொண்டிருங்கள்.
என் மேல் நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி.
பாதி இடத்தை விற்று, அந்தப் பணத்தில் மீத இடத்தில் வீடுகள் (அபார்ட்மென்ட் போல) வீடு கட்டி வாடகைக்கு விடவும். சினிமா எடுப்பது உங்கள் விருப்பம்.
ReplyDeleteநண்பரே...உங்கள் ஆலோசனை மிகச்சரியானது.
Deleteஆனால் தப்பான ஆளிடம் சொல்லி விட்டீர்கள்.
வீடு கட்டி வாடகைக்கு விடுவது என்பது எனது கனவில் கூட வராதது.
பணம் வந்தால் சின்னதாக ஒரு திரையரங்கம் கட்டி உலக சினிமாவை திரையிட வேண்டும்.
வாழ்நாள் இறுதி வரை அந்த தியேட்டரிலேயே இருக்க வேண்டும்.
இதுதான் எனது கனவு...லட்சியம்.
இவையெல்லாம் ஒரு வேளை நிறைவேறாவிட்டால் பசுமையான கிராமத்தில் சின்னதாக ஒரு தோட்டம் வாங்கி அங்கே செட்டிலாக வேண்டும்.
என் கனவுகள் வேறு நண்பரே.
என் மேல் அக்கறை கொண்டு நல் ஆலோசனையை வழங்கிய உங்கள் அன்பிற்கு நன்றி.
நன்றி நண்பா.
Deleteஉங்கள் கனவும் இலட்சியமும் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete