நண்பர்களே...
சிங்கம் 2ஐ பார்த்திருப்பீர்கள்.
அனுஷ்கா, அஞ்சலி, ஹன்சிகா போன்ற ஆர்.டி.எக்ஸ்கள் வெடிக்கும் போது நீங்கள் எதை கவனித்தீர்களோ...அதைத்தான் நானும் கவனித்தேன்.
இந்த விஷயத்தில் நாம் ‘சேம் பிளட்’.
இந்தப்பதிவுல நீங்கள் எதை எதிர் பார்த்து வந்தீர்களோ...
அது கிடையாது.
எங்க...தப்பிச்சு ஓடப்பாக்கிறீங்க ?
டேய்... ‘ரன்’ மாதவா...
எல்லாரையும் உள்ள வச்சு... ‘ஷட்டரை’ இறக்கி மூடு.
ஒரு ஆளு... தப்பிச்சு போகக்கூடாது.
சிங்கம்- 2 படத்தில், ‘சில நல்ல விஷயங்களை’ வெகு அழகாக இயக்குனர் ஹரி திணித்திருக்கிறார்.
தெற்கத்தி காலாச்சாரத்தை...வாழ்வியலை,
தனது படங்களில் எப்போதுமே இயக்குனர் ஹரி சொல்லி வருபவர்.
அதற்காக எனக்கு இயக்குனர் ஹரியை ரொம்ப பிடிக்கும்.
சிங்கம்- 2வில், அனுஷ்கா ‘கருப்பட்டி’ வாங்க அலைவார்.
இன்றைய தலைமுறைக்கு, அனுஷ்கா வழியாக...
‘கருப்பட்டியை’ கடத்திய விதத்தை நான் மிகவும் ரசித்தேன்.
‘கருப்பட்டி’... பனை மரத்தால் நமக்கு கிடைக்கும் ‘வைரம்’.
‘பனை வெல்லம்’ என பல இடங்களில் அழைக்கப்படுகிறது ‘கருப்பட்டி’.
'பனை மரம்’ நமக்கு ‘மூலிகை விருந்துகளாக...
’நுங்கு, பதநீர், கள், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, பனம்பழம்,பனங்குருத்து,
என பலவற்றை வாரி வழங்கினாலும்...
‘மாஸ்டர்பீஸ்’ கருப்பட்டிதான்.
நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்த தலையாய சீரழிவில் மிக முக்கியமானது ‘சர்க்கரை’.
சர்க்கரை, அஸ்கா, சீனி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கபட்டாலும், இதை ‘விஷம்’ என ஒரே பெயரிட்டும் அழைக்கலாம்.
இந்த ‘ஸ்லோ பாய்சனை’ சாப்பிட்டுத்தான் நாம் பல நோய்களை,
‘வெற்றிலை-பாக்கு’ வைத்து வரவேற்கிறோம்.
‘கருப்பட்டி காப்பியை’ குடிப்பது ஆரோக்கியம்.
பால் கலக்காமல் குடிப்பது பரம ஆரோக்கியம்.
எங்கள் கிராமத்தில் ‘சொம்பில்தான்’ காப்பி தருவார்கள்.
‘பச்சை பனை ஓலையில்’ செய்யப்பட்ட ‘பட்டையில்’...
காப்பியை ஊற்றிக்குடித்தால்...
ஆஹா...அது அமிர்தம்.
இந்த அமிர்தம் எவ்வளவு குடித்தாலும் ‘விஷம்’ ஆகாது!
கருப்பட்டியில் செய்யப்படும் ‘பொருள்விளங்காய்’ என்ற ‘தின்பண்டத்தை’ நெல்லைச்சீமையில்,
திருமண வீட்டார்... ஊருக்கே வழங்குவது பாரம்பரிய பழக்க வழக்கம்.
இந்தப்பழக்கத்தை ‘லட்டாக’ மாற்றி,
‘ஸ்வீட் ஸ்டாலை’ வாழ வைத்து...
நல்ல பழக்கத்தை சாகடித்து விட்டார்கள்.
‘கார்த்திகை திருநாள்’ பண்டிகைக்கு,
கருப்பட்டி + பச்சரிசி மாவு கலந்து...
‘பனை ஓலைக்குள்’ திணித்து...
பெரிய மண் பானையில் வைத்து ‘அவித்து’...
‘ஓலைக்கொழுக்கட்டை’ செய்வார்கள்.
'பனை ஓலை கொழுக்கட்டை’ செய்ய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் செல்லவும்...
தின்னத்தின்ன திகட்டாது.
தின்ன அத்தனை கொழுக்கட்டைகளும்,
நம் உடம்பில் சக்தியாக மாற...
அனுஷ்கா போன்ற ‘செம்ம்ம்மக்கட்டைகளை’ தேடுவோம்.
இப்போது ‘கருப்பட்டிக்கு’ பதிலாக,
‘சர்க்கரையில்’ செய்யப்பட்ட...
‘விஷக்கொழுக்கட்டைகள்’ செய்கிறார்கள் ‘நாகரீக அம்மணிகள்’.
அதுவும் ‘பிரஷர் குக்கரில்’.
வெளங்கிரும்.
குக்கர் என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது.
எழுத்தாளர் ‘சாரு’ தனக்கு ‘குக்கர் பரிசு’ கிடைக்கும் என ரொம்ப நாளாக கதைத்து வந்தாரே...கிட்டியதா?
‘சாரு’ன்னதும் ‘பெக்’ ஞாபகத்துக்கு வந்திருச்சு.
இருங்க...‘கருப்பட்டி காப்பி’,
ஒரு ‘லார்ஜ் பெக்’ போட்டுட்டு வர்றேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்பது வரை இந்த அனுஷ்காவை பார்த்துக்கொண்டிருங்கள்.
சொன்ன விதமும் அமிர்தம்...
ReplyDeleteஷட்டரை திறந்தால் ஓடியே போயிடுவேன்... ஹிஹி...
அனுஷ்கான்னு ஒரு கருப்பட்டியை காமிச்சுதான் உங்களையெல்லாம் இழிக்க வேண்டி இருக்கு.
Deleteஷட்டரை மூடித்தான் நல்ல விஷயங்களை சொல்ல முடியும்.
‘கருப்பட்டியின் அற்புதங்கள்’ ஒரு தலைப்பு வச்சா, எழுதுன நானே படிக்க மாட்டேன்.
பாராட்டுக்கு நன்றி நண்பரே.
//‘கருப்பட்டியின் அற்புதங்கள்’ ஒரு தலைப்பு வச்சா, எழுதுன நானே படிக்க மாட்டேன்.//
Deleteஹா ஹா செம
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteதிரைமணம்...தமிழ்மணம் இரண்டிலும் பதிவை ஒரு சேர இணக்க முடியுமா!
டெக்னிக்கலில் நான் ரொம்ப வீக் நண்பரே.
இந்த மாதிரி வித்தைகளை சொல்லிக்கொடுங்கள் குருவே.
முடியாது குறி சொற்களில்( lable)சினிமா பற்றி கொடுத்து இருந்தால் மட்டுமே அது திரைமணத்துக்கு செல்லும் .இல்லையெனில் தமிழ்மணம் தான்
Deleteதிரைமணம் / தமிழ்மணம் விளக்கங்களுக்கு :
Deletehttp://www.bloggernanban.com/2012/08/how-to-use-tamilmanam-thiratti.html
நல்ல விஷயங்களை சொல்லக் கூட ஷட்டர் மூட வேண்டியிருக்கு..
ReplyDeleteசரி சரி, இப்பவாச்சும் தொறங்க.. வெளிய போகணும்..
ஏன் இந்த அவசரம் நண்பரே ?
Deleteஅனுஷ்காவிடம் இருக்கும் ‘கருப்பட்டியை’ பார்ப்பதற்கா ?வாங்குவதற்கா?
தித்திக்கும் கருப்பட்டி காபி திருநெல்வேலியில் முன்பெல்லாம் மிக ஃபேமஸ்.இப்ப வீடுகளில் தயார் செய்றாங்களா தெரியலை. எனக்கு மிகவும் பிடிக்கும் அனுஷ்காவையும்..
ReplyDeleteகருப்பட்டி காப்பியையும்...அனுஷ்காவையும் பிடிக்காமல் யாராவது இருக்க முடியுமா !
Deleteவருகைக்கு நன்றி மேடம்.
சில நல்ல விஷயங்கள் சொல்லக்கூட எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு...
ReplyDeleteசில விஷயங்களை சொல்ல இப்படி ‘சித்து’ விளையாடலாம்.
Deleteதப்பிலை மேடம்.
கருப்பட்டி பற்றி நல்ல தகவல்கள்,ஊருக்கு போகையில் 2கிலோ வாங்கிவிடிகிறேன்.அல்லது இங்கேயே கிடைக்குமா என்று தேடுகிறேன்,நன்றி
ReplyDeleteஎனது நண்பன் தொழில் விஷயமாக அடிக்கடி அரபு நாடுகளுக்கு வருவான்.
Deleteஅவனிடம் கொடுத்து அனுப்பவா நண்பரே?
கருப்பட்டி பற்றி சுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நண்பரே...மிக்க நன்றி.
Deleteஎன்னை பெருமைப்படுத்திய வலைச்சரம் சிறப்பாசிரியர் குகன் அவர்களுக்கும்,
வலைச்சரம் நிரந்தர ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி.
தகவலை முதன் முதலாக தெரிவித்த ‘பின்னூட்டப்புயலுக்கு’ மீண்டும் ஒரு நன்றி.
தகவலுக்கு நன்றி தனபாலன் சார்.
DeleteThose who haven't tasted karupatti are unlucky. In front of this karupati- chocolate, sugar ellam thukada.
ReplyDeleteசரியாகச்சொன்னீர்கள் நண்பரே!
Deleteகருப்பட்டியை கூழ் போன்ற பதத்தில் பானையில் ஊற்றி வைத்திருப்பார்கள்.
தேவைப்படும் போது பானையிலிருந்து சுரண்டி எடுப்பார்கள்.
இதன் பெயர் ‘வாப்புக்கருப்பட்டி’.
சாதம் வடித்தக்கஞ்சியை சுடச்சுட குடிக்க, தொட்டுக்க்கொள்ள ‘வாப்புக்கருப்பட்டி’ இருந்தால் தேவாமிர்தம்.
கருப்பட்டி கூழ் - வடித்தக்கஞ்சி. I think semma combo, I haven't tasted it.
Deleteஅடாடா..
ReplyDeleteஅனுஷ்கா என்றதும் ஏதேதோ நினைத்துக்கொண்டு வந்தேன்.. இப்படி ஏமாற்றி விட்டீர்களே ?!! சரி ஒரு நல்ல தகவலை சொல்ல அனுஷ்காவை உபயோகப்படுத்தியதில்(!) தவறில்லை தான். (ஆனாலும் உமக்கு குசும்பு ஜாஸ்தி ஐயா..!!)
நண்பரே,
Deleteநெல்லைச்சீமைக்காரர்களுக்கு குசும்பு பிறப்பிலேயே இருக்கும்.
கோவைக்காரார்களுக்கும் சம அளவில் குசும்பு இருக்கும்.
நான் நெல்லையில் பிறந்து வளர்ந்து...இன்று கோவையில் இருப்பதால் சற்று ஓவராக குசும்பு வளர்ந்து விட்டது.
இன்னும் போகப்போக வளர்ந்து கொண்டேதான்யிருக்கும்.
G Awesome Great information for ‘கருப்பட்டி’
ReplyDelete