Jul 10, 2013

சூப்பர் + ஸ்பைடர் + அயர்ன் மேன் + ஜேம்ஸ்பாண்ட்= துரைசிங்கம்.


நண்பர்களே...
சிங்கம் 2... பார்த்து பதிவெழுத இத்தனை நாளா !
என கோபிக்க வேண்டாம்.
அப்படத்திலுள்ள  ‘உள்ளொளியை’ உடனே தரிசிக்க நான் ஜெயமோகன் அல்ல.
ஹரியின் இயக்கம்,   ‘மரியோ கைர்ஸா புர்ஸா’ பாணியை ஓத்திருந்தது...
என எழுத நான் சாருவும் அல்ல.
ஏதோ ஒன்றிரண்டு உலகசினிமா பார்த்து விட்டு ஜல்லியடிக்கும் சாதாரணன்.

உலகில் உள்ள அத்தனை ‘சூப்பர் ஹீரோக்களையும்’ தூக்கி,
கிரைண்டரில் போட்டு...
அரைத்து... சாணியாக்கி....
‘துரை சிங்கத்தை’ உருவாக்கிய
இயக்குனர் ஹரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


சிங்கம் 2...வசூலில் ஒரு ‘சகலகலா வல்லவன்தான்’ சந்தேகமில்லை.
மூணுநாளில் 50 கோடி வசூலாம்.
எனக்கு சந்தேகமாக உள்ளது.
இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு பயந்து,
கணக்கை குறைச்சு காட்டி சொல்ராங்கன்னு நினைக்கிறேன்.
அனுஷ்கா மார்பை கிராபிக்ஸ்லே மறைச்சு காட்டிய,
செப்பிடு வித்தைக்காரர்களுக்கு,
வருமானத்தை குறைச்சுக்காட்டத்தெரியாதா!


விஸ்வரூபம், பரதேசி, சென்னையில் ஒரு நாள், சூது கவ்வும், நேரம்ன்னு தமிழ் சினிமா தவறான பாதையில் போய்க்கொண்டிருந்தது.
ஹரியும் , சூர்யாவும் சரியான பாதையில் தமிழ் சினிமாவை திருப்பி உள்ளார்கள்.
இனி தொடர்ந்து இத்திருப்பணியை பேரரசு, இராமநாராயணன் வகையறாக்கள் செவ்வனே செய்வார்கள் என்ற நம்பிகையில் இனி நாம் நிம்மதியாக தூங்கலாம்.


ஹன்சிகாவை  ‘பள்ளியறைச்சீருடையில்’ பாத்த உடனே,
நான் என் ஸ்கிரிப்டை எரிச்சிட்டேன்.
அது இனி வேலைக்கு ஆகாது.
பரவை முனியம்மாவை  வைச்சு ‘துள்ளுவதோ இளமை 2’ எடுக்கப்போறேன்.
 ‘தனுஷ் - பரவை’  ‘லிப்லாக்கை’ தரிசிக்க தயாராகட்டும் தமிழகம்.


மொத்தப்படத்தையும் ஹெலிகாப்டர்ல இருந்து ஷூட் பண்ணப்போறேன்.
 ‘பஞ்ச்’ டயலாக் சீனை பறந்து பறந்து எடுப்பேன்.
இதுக்காக கின்னஸ்ல இடம் பிடிக்கும் ‘தம்ளராக’ இனி நான் ஒருவனே இருப்பேன்.


‘சிங்கம் 3’ நிச்சயம் எடுப்பார் இயக்குனர் ஹரி.
‘இரும்புக்கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோவின் சக்தி கொண்ட கதாபாத்திரமாக  ‘துரை சிங்கத்தை’ படைக்க வேண்டும்.
 ‘இரும்புக்கை மாயாவி’ மின்சாரத்தில் கை வைத்த உடன் மாயமாக மறைந்து போய் விடும் சக்தி கொண்டவர்.
 'மின்வெட்டு தமிழகத்தில்' துரை சிங்கம் மின்சாரத்தினால் சக்தி பெறுவதாக  காட்சி அமைத்தால் ‘லாஜிக்’ இடிக்கும்; ஹீரோயிஸம் அடிபடும்.
எனவே துரைசிங்கத்துக்கு இரும்புக்கை கூட தேவையில்லை.
வெறுமனே ‘நட்ட நடு விரைலை’ சூரியனிடம் காண்பித்தாலே ‘மாயமாக’ மறையும் சக்தி வருவதாக ‘கதை’ பண்ணி விடுங்கள் ஹரி...ப்ளீஸ்.


அனுஷ்காவுடன் பாடல் காட்சி என்றால் சந்தானம் என்ன...
‘மிஸ்டர் பீனே’ கால்ஷீட் கொடுத்து விடுவார்.


சிங்கம் 2 வில்லனுக்கு, ஹாலிவுட் ஸ்டாரை போட்டு பெயர் வாங்கி விட்டீர்கள்.
காமெடிக்கு ‘மிஸ்டர் பீனை’ போட்டு  ‘முதன் முதலாக’ பெயரைத்தட்டுங்கள்.


கங்னம் டான்சை, மரணக்குழிக்கு தள்ளிய சிங்கம் டான்ஸ்தான்...
இனி உலகத்திற்கே ‘ரெகார்ட் டான்ஸ்’.

உலகின் முதல் ‘அகிலாண்ட சினிமா’...  சிங்கம் 2.
இப்படத்தை சிறப்பாக உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சிங்கம் 2 பதிவு பற்றி யாராவது எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என்றால் 1000 பதிவுகள் போட்டு இதிலுள்ள குறியீடுகளை விளக்குவேன் என எச்சரிக்கிறேன்.

இனி உலகசினிமா பதிவா ?
‘ஆமென்’.


  

28 comments:

  1. சிங்கம் 3 ஐடியா ஓகே.அதிலயாவது கிராபிக்ஸ் பண்ணாத அனுஷ்கா இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னமோ சென்சார் சொல்லி இவர்கள் இப்படத்தில் மறைத்திருப்பதாக தெரியவில்லை.
      கிராபிக்சில் அனுஷ்கா மார்பை மறைத்து ‘நம்மை’ அந்த ஏரியாவை கற்பனை பண்ண வைத்து விட்டார் ஹரி.

      இலையை வைத்து காயை மறைப்பதில் வல்லவர் ஹரி.

      Delete
  2. அந்த நடு விரல் மேட்டர் அதுக்கு தானா?

    ReplyDelete
  3. சும்மா ஜாலியா கலாய்ச்சேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. உண்மை தான் , இவ்வளவு மட்ட ரகமான படத்தை இவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் , இங்கு கமல் தேவையில்லை இராமநாராயணனே போதும். தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.அந்த நடுவிரல் காட்டினாலும் கை தட்ட ஒரு கூட்டம் உண்டு. வாழ்க ரசனை

    ReplyDelete
    Replies
    1. படம் பயங்கரமான ஹிட்.
      யாரும் இந்த வெற்றியை தடுக்க முடியாது.

      வித்தியாசமான திரைக்கதையை தேடிய அத்தனை தயாரிப்பாளர்களையும் முடக்கி விடக்கூடும் சிங்கம்2 பெற்றிருக்கும் அமானுஷ்ய வெற்றி.

      Delete
  5. அடேங்கப்பா.,. இதுவன்றோ விமர்சனம். அசத்தலப்பா...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுவதற்கு வஞ்சனையே வைக்க மாட்டீங்க...பாலா சார்.

      உங்க நெறஞ்ச மனசுக்கு நன்றி.

      Delete
  6. //கங்னம் டான்சை, மரணக்குழிக்கு தள்ளிய சிங்கம் டான்ஸ்தான்...
    இனி உலகத்திற்கே ‘ரெகார்ட் டான்ஸ்’.// இன்னும் பல உடான்ஸும் இருக்கும் போல...

    ReplyDelete
  7. டைட்டில் + முதல் 2 பாரா வாசிச்சுட்டு நான் பயந்தே போயிட்டேன். என்ன இப்டி இறங்கிட்டாரேனு.. அப்பறம் தான் தெரிஞ்சது புலவருக்கு (உங்கள தான்) வஞ்சப்புகழ்ச்சி அணி கை வந்த கலைனு.. ஹா ஹா.. வெகுவாக ரசித்தேன் உங்க விமர்சனத்த.. :) :)

    நம்ம விமர்சனம் இங்க இருக்கு..டைம் இருக்கும்போது படிச்சுப்பாருங்க.
    http://killadiranga.blogspot.in/2013/07/2-2013.html

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு... நன்றி நண்பரே.

      உங்கள் பதிவை படித்து விடுகிறேன்.

      Delete
  8. அண்ணணும் தம்பியும் ஸ்கார்பியோ-க்களை அரிவாளால் வெட்டியும், வெறும் கையால் உடைத்தும், தமிழ் சினிமாவை காப்பாற்றுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. சிறுத்தையும்,சிங்கமும் தமிழ் சினிமாவை உயிரோடு முழுங்கி விட்டது.

      Delete
  9. எது எப்பிடியோ மக்களுக்கு பிடிக்கிரமாதிரிதான் படம் எடுக்கணும்... அதைவிடுத்து சினிமா தரத்தை உயர்த்துறேன் என்று சொல்லிட்டு பரதேசி,மன்மதன் அம்பு போன்றதுபோல் எடுத்து தயாரிப்பாளரை சாவடிக்காமல் இருந்தா ஓகே...

    ReplyDelete
    Replies
    1. பரதேசி மாதிரி படமெடுக்கக்கூடாது என்றுதான் சிங்கம் 2ஐ பாராட்டி பதிவு போட்டுள்ளேன்.

      மன்மதன் அம்பு தயாரிப்பாளர் இப்போது நடிகராகி விட்டாரே.
      இனி அவரால்தான் நடிப்புக்கலை உயிர் வாழும்.
      ஓ.கே...ஓ.கே.

      Delete
  10. உங்க கவலை நியாயமானது தான் சார்..என்ன செய்ய..நம்ம மக்கள் அப்படி!

    ReplyDelete
    Replies
    1. சிங்கம் முதல் பாகத்தில் இருந்த நேர்த்தி கூட இதில் மிஸ்ஸிங்.
      ஆனால் முதல் பாகத்தை விட அதிரிபுதிரியாக ஓடுவதுதான் அநியாயமாக இருக்கிறது.

      Delete
  11. // அத்தனை ‘சூப்பர் ஹீரோக்களையும்’ தூக்கி,
    கிரைண்டரில் போட்டு...
    அரைத்து... சாணியாக்கி....//

    இவரு பாராட்டறாரா இல்ல திட்றாரான்னு புரியலையே?

    ReplyDelete
    Replies
    1. 24ம் புலிகேசி மன்னா...
      புரியலயேன்னு என்னை மாட்டி விட நினைக்கும் தந்திரம் புரிகிறது.
      சாணி = உரம்.
      சிங்கம் 2... தமிழ் சினிமாவுக்கு உரம் என்று சொல்லி இருக்கிறேன்.

      திருப்தியா மன்னா...
      பரிசு கிடைக்குமா மன்னா?

      Delete
  12. போட்டிருக்கும் படங்களைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. ஒரு முடிவோட தான் இருப்பீங்க போல என்று நினைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....
      பதிவில் இருக்கும் படமே இப்படி என்றால்...படம் எப்படி இருக்கும்?
      சூப்பர் ஹிட் ரகசியம் இப்போது புரிந்திருக்குமே!

      Delete
  13. பாஸ்கரன் சார்,

    நீங்க சொன்னதெல்லாம் சரிதான்.

    ஆனால் கிண்டல் செய்ய தமிழ் காமிக்ஸ் உலகின் அடையாளமாக விளங்கும் இரும்புக் கை மாயாவியை இழுக்க வேண்டுமா?

    பாவம் சார் தமிழ் காமிக்ஸ் உலகம். விட்டு விடுங்கள்.

    பை தி வே, இவர்களுக்காக எல்லாம் நீங்கள் உங்கள் ஸ்கிரிப்ட்'ஐ எரிக்க வேண்டாம். இந்த உலகில் பேலன்சிங் இருக்கிறது என்பதை நிரூபிக்க உங்கள் படம் அவசியம் வெளிவர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. விஸ்வா சார்...எனக்கு முதல் காமிக்ஸ் ஹீரோ...இரும்புக்கை மாயாவி.
      அவரை நான் கேவலப்படுத்துவேனா !
      சிங்கம் 2 பதிவின் மூலமாக இன்றைய தலைமுறைக்கு அவரை சொன்னதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்.
      இன்றும்...என்றும்...
      எனது ஆதர்ஷ ஹீரோ ‘இரும்புக்கை மாயாவிதான்’.
      எனது பதிவின் மூலமாக நான் அவரை காயப்படுத்தினேன் என நீங்கள் கருதினால், நிச்சயம் நான் மனதறியச்செய்த பிழை அல்ல.
      மன்னித்தருள்க.

      இரும்புக்கை மாயாவிக்கு அடுத்து என்னைக்கவர்ந்தவர்கள் லாரன்சும், லொதாரும்.
      எனது பள்ளிப்பருவ ஆதர்ஷ ஹீரோக்களை பற்றி ஒரு பதிவெழுதுவேன்.

      Delete
    2. பாஸ்கரன் சார்

      எனது கருத்து தவறாக வெளிப்பட்டு இருப்பின் மன்னிக்கவும்.

      Delete
    3. நான் உங்களிடம் மன்னிப்பு கேட்பது எனக்கு எளிதாக இருந்தது.
      நீங்கள் மன்னிப்பு என எழுதும் போது மிகவும் தர்ம சங்கடமாக உணர்கிறேன்.

      இரும்புக்கை மாயாவிக்கு நன்றி.
      நம்மை இன்னும் நெருக்கமாக்கி விட்டார்.

      Delete
  14. அன்றாட வாழ்க்கையில்(அதிகமாக எழுத்துலகில்) தம்முடைய அதிமேதாவித்தனத்தை "நா...ல்லாம் யாருங்க, சும்மா ஒரு பாமரன், என்னோட அறிவுக்கு எட்டினத்த ஏதோ சொல்லுறன், நான் ஒண்ணும் அவரு மாதிரியோ இவரு மாதிரியோ பெரிய ஆளு இல்லிங்கோ...!" என்ற வழமையான வசனத்தின் மூலம் நிரூபிக்க முற்பட்டு எப்போதும் Safety Game ஆடும் எழுத்துப்புலி... சும்மா...அன்றாட வாழ்க்கையில்(அதிகமாக எழுத்துலகில்) தம்முடைய அதிமேதாவித்தனத்தை "நா...ல்லாம் யாருங்க, சும்மா ஒரு பாமரன், என்னோட அறிவுக்கு எட்டினத்த ஏதோ சொல்லுறன், நான் ஒண்ணும் அவரு மாதிரியோ இவரு மாதிரியோ பெரிய ஆளு இல்லிங்கோ...!" என்ற வழமையான வசனத்தின் மூலம் நிரூபிக்க முற்பட்டு எப்போதும் சகஃபே கமே ஆடும் எழுத்துப்புலி... சும்மா... அது ஏதோ மசாலா படம் என்ற பெயரில் வசூலுடன் மல்லுக்கட்ட அதன்பாட்டில் விடலாமே, ஏதோ ஈரானிய சினிமா தரத்துக்கு அதற்கொரு விமர்சனம்... ஹீ ஹீ ஹீ... சோகம் என்ன தெரியுமா, நானும் உங்களில் ஒருவன்தான்!!! இந்த விமர்சனத்தை உங்கள் பக்கத்தில் எதிர்பார்க்கிறேன்:)
    அது ஏதோ மசாலா படம் என்ற பெயரில் வசூலுடன் மல்லுக்கட்ட அதன்பாட்டில் விடலாமே, ஏதோ ஈரானிய சினிமா தரத்துக்கு அதற்கொரு விமர்சனம்... ஹீ ஹீ ஹீ...

    ReplyDelete
    Replies
    1. இது ஜாலியாக எழுதப்பட்ட பதிவு.
      சீரியசா எடுக்க வேண்டாம்.
      நானே இன்னும் அனுஷ்கா மயக்கத்தில் இருக்கிறேன்.
      ஹி...ஹி...

      Delete

Note: Only a member of this blog may post a comment.