Jun 9, 2013

RUN LOLA RUN \ திரைக்கதை எழுதுவது இப்படியுமல்ல...அப்படியுமல்ல. \ பாகம் - 4


நண்பர்களே...
திரைக்கதை எழுதுவது இப்படி...அப்படி... என உலக சினிமாக்களுக்கு
இலக்கணம் கற்பிக்க முடியாது.
விதிகளை மீறி பயணிப்பதையே இலட்சியமாக கொண்டவர்கள் அப்படைப்பாளிகள்.
‘ரன் லோலா ரன்’ படைப்பாளி  ‘டாம் டிக்கர்’ வெற்றிகரமாக விதிகளை மீறி சமீபத்தில் சாதனை படைத்தவர்.

RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by Tom Tykwer 

லோலாவின் மூன்று ஓட்டங்களிலும் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை இப்போது பார்ப்போம்.
லோலா, பில்டிங்கிலிருந்து காம்பவுண்ட் கேட்  வரைக்கும் ஓடி வருவதை காமிரா கிரேனிலிருந்து மேலிருந்து கீழாக இறங்கி பதிவு செய்துள்ளது.
இந்த  ‘ஷாட் கம்போசிஷேன்’, 
மூன்று ஓட்டங்களிலும் பொதுவாக இருந்தாலும்,
இரண்டாவது ஓட்டத்தில் லோலா நொண்டிக்கொண்டு ஓடுகிறாள்.

அடுத்து லோலா, 
சாலைகளில் ஓடும் பல் வேறு ஷாட்கள் 
மூன்று ஓட்டங்களிலும் மாறுபட்ட காமிரா கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு திருப்பத்தில் ஓடி வரும் லோலா, 
குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்
ஒரு தாயை எதிர் கொள்கிறாள்.
இக்காட்சி மூன்று ஓட்டங்களிலும் மாறுபடுகிறது.
அந்தத்தாயின் எதிர் காலத்தை ‘பிளாஷ் பார்வேர்டு’ உத்தியில்,
‘ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக’ அடுக்கி படுவேகமாக காட்டுகிறார் இயக்குனர்.
இந்த யுக்தி மிகவும் புதுமையானது.
இந்த யுக்தியை பயன்படுத்தி படத்தில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களின் எதிர்காலத்தை ‘நொடிகளில்’ சொல்லி சாதனை படைத்துள்ளார் இயக்குனர்.  

முதல் ஓட்டம் : லோலா ஓடி வரும் போது லேசாக அந்தத்தாயை இடித்து விடுகிறாள்.
“ ஹே...பாத்துப்போ...
நாயி...” என திட்டுகிறாள்.
ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
குழந்தையின் தாய் போதையில் கணவனுடன் சண்டையிடுகிறாள்.
’சமுதாயக்காவலர்கள்’ குழந்தையை வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து எடுத்துச்செல்கிறார்கள்.
குழந்தையை பிரிந்த துக்கத்தில் தாய் தரையில் விழுந்து புரண்டு அழுகிறாள்.
கணவன் அவளை கட்டியணைத்து சமாதானப்படுத்துகிறான்.
அவள் பித்து பிடித்த நிலையில் இன்னொருவர் குழந்தையை திருடிக்கொண்டு ஓடுகிறாள்.
அக்குழந்தையின் தகப்பன் வெறி கொண்டு துரத்துகிறான்.

இரண்டாவது ஓட்டம் : ஓடி வரும் லோலா, அந்தத்தாயின் மீது வேகமாக மோதி விடுகிறாள்.
“ பாத்துப்போ...அறிவு கெட்ட மாடே...
பொட்டக்கழுதை என திட்டுகிறாள்.
ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
லாட்டரி சீட்டு வாங்குகிறாள் தாய்.
பரிசு விழுகிறது.
டிவியில் ரிசல்ட் பார்த்து குதுகலிக்கின்றாள் கனவனுடன்.
புதிய பங்களா, பென்ஸ் காருடன் காட்சியளிக்கின்றனர் தம்பதியர்.
அழகிய ஸ்விம்மிங் பூல்...
பச்சைபசேல் புல்வெளி பின்னணியில்... 
கணவனுடன் ‘பியர்’ அருந்தி ‘சியர்ஸ்’ சொல்கிறாள்.
‘பரிசு பெற்ற தம்பதி’ என பத்திரிக்கையில் போட்டாவுடன் செய்தி வருகிறது.

மூன்றாவது ஓட்டம் : ஓடி வரும் லோலா அந்ததாயை மோதாமல் தவிர்த்து விலகி ஓடுகிறாள்.
இருந்தும் அந்ததாய் லோலாவை பார்த்து ‘அழகு’ காட்டுகிறாள்.

ரேபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
தனது குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறாள் தாய்.
நடை பாதை ஓரத்தில்,
குழந்தை படம் போட்ட புத்தகத்தை காட்டிக்கொண்டு நிற்கும் ஒரு பெண்மணியை பார்க்கிறாள்.
தாய் சர்ச்சில் உட்கார்ந்து ஜெபம் செய்கிறாள்.
கிருத்துவ மதத்தில் தீவிரமாக ஈடுபடுகிறாள்.
ஒரு பாதிரியார் அந்ததாய்க்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார்.
பிளாட்பாரத்தில் நின்று கொண்டு மத பிரச்சார நூல்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.  
‘ஆல்டர்நேட்டிவ் ஸ்கிரிப்ட் ரைட்டிங்’ என்ற ஆங்கில புத்தகத்தில்
‘ரன் லோலா ரன்’ விதிகளை உடைத்து கட்டப்பட்டிருப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள் .

Alternative Scriptwriting : Successfully Breaking the Rules \ 2007 [ Fourth Edition] \ English \ 
Ken Dancyger & Jeff Rush

திரைப்படக்கலை ஆசிரியர் Ken Dancyger பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க...


 On = Run Lola Run = Pages = 143,152,153

Identification and empathy characterize our relationship with the main character in the classic genres.

In voice-oriented genres, ( in films like: RUN LOLA RUN .1998) identification and empathy must be replaced with emotional distance…

The main character in these genres is the vehicle for the story but not the emotional core.

Structure in (such) experimental narrative tends to the non-linear.

‘LOLA’ tries to save  her boyfriend, Mani, three times, each with a different outcome, 
in “Run Lola Run”. 
Because time is advanced or retarded, the outcome varies each time.

The ‘tone’ of (such a) experimental film (RUN LOLA RUN .1998) is important and tends to add to our involvement in the film…And “Run Lola Run” has energy to burn.

Playful about filmic conventions, Tom Tykwer uses a ‘plot device’ as an excuse for energizing the film.


 ‘ரன் லோலா ரன்’ படத்தின் முக்கியமான கருத்தாக்கமாக கீழ்க்கண்டவற்றை நாம் கருதலாம்...
Tom Tykwer  improvises in his own way and uses the character, 
structure and tone in the film to reach out to the audience..
and they are thrilled to make more direct contact with the writer and his ideas: 
( In “Run Lola Run” = ‘LOVE’ CAN DISTORT ‘REALITY’ in terms of ‘SPACE AND TIME’ TO IT’S (PSYCHO) ‘LOGICAL’ COMFORTS, OVER FATE AND  DESTINY.)

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

9 comments:

  1. கண்ணைக்கட்டி காட்டுல வுட்ட கதையா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. படம் பாருங்க ஜீ...
      அப்புறம் ஈசியா விளங்கும்.

      இப்படத்தை கோணங்கள் பிலிம் சொசைட்டியில் தமிழ் சப் டைட்டில் தயாரித்து திரையிட்டார்கள்.
      அந்தக்காப்பி என்னிடம் உள்ளது.
      வேண்டுமென்றால் தருகிறேன்.

      Delete
  2. பல புதிய தகவல் .... நன்றி

    ReplyDelete
  3. இதே ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் "அறை எண் 305ல் கடவுள்" படத்தில் ரிவேர்சில் அதாவது அவர்களின் கடந்த காலம் பற்றி தெரியபடுத்த உபயோகித்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இயக்குனர் சிம்பு தேவன் இந்த உத்தியை பயன்படுத்தி இருப்பது எனக்கு
      புதிய செய்தி.
      அவர் நிச்சயமாக பொருத்தமாக பயன்படுத்தி இருப்பார்.
      தகவலுக்கு நன்றி.

      Delete
  4. ‘ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக’ நேரம் படத்தில் இப்படி சித்தரிக்கப்பட்டுள்ளதா? இனி வரும் தமிழ் படங்களில் இதே யுக்தி பயன் படுத்த சாத்தியம் இருக்கிறதா ? இந்த வகை ஷாட்டுகள் ஜனரஞ்சகமாக்கப்படுமா?

    ReplyDelete
    Replies
    1. /// ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக’ நேரம் படத்தில் இப்படி சித்தரிக்கப்பட்டுள்ளதா? ///

      இல்லை நண்பரே.

      /// இனி வரும் தமிழ் படங்களில் இதே யுக்தி பயன் படுத்த சாத்தியம் இருக்கிறதா ? இந்த வகை ஷாட்டுகள் ஜனரஞ்சகமாக்கப்படுமா?///

      இலக்கணத்தை மீறி திரைக்கதை அமைப்பவர்களால் மட்டுமே இது போன்று சிந்திக்க முடியும்.

      Delete
  5. U should see Darren arnofsky's fast cut, in requiem for a dream...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.