நண்பர்களே...
பேட்டரி, ஊமத்தை, அரளி விதையை போட்டுக்காய்ச்சிய கள்ளச்சாராயத்தை வாசகனிடம் விற்று விட்டு ‘ரெமி மார்ட்டினுக்கு’ வழியில்லையே எனப்புலம்பும் ‘லகுட பாண்டி’ இருக்கும் நாட்டில்தான்...
தாய்ப்பாலை பருக வைக்கும் எழுத்தாளனாக,
வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த ‘கள்ளச்சாராயம்’... ‘தாய்ப்பாலை’ தொடர்ந்து தாக்கி வரும் மர்மத்தையும் நாடறியும்.
எஸ்.ரா அவர்கள் ஹேராமுக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததை,
வாசிக்கும் ‘ஒரு சில பதிவுலக பண்ணையார்கள்’ பற்றி எரிவதை பற்றி கவலையில்லை.
என் கடன் ‘உலக சினிமாவுக்கு’ பணி செய்து கிடப்பதே.
Heyram \ 2000 \ India \ Directed by Kamal Hassan \ Part = 035
“ ஹாலிவுட்டின் 3 அங்கங்கள் கொண்ட திரைக்கதை அமைப்பு
தமிழுக்கு பொருந்தாது.
அதற்குக்காரணம், தமிழில் கதை சொல்லும் முறைகள் ஏராளம்.
இங்குள்ள ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், நாட்டார் கதைகள் போன்றவை நூற்றுக்கணக்கான கதை சொல்லும் முறைகளை கொண்டிருக்கின்றன.
ஆகவே,தமிழ் திரைக்கதை...
‘சிட்ஃபீல்டு’ சொல்லும் 3 அங்கங்கங்களை கொண்ட திரைக்கதை அமைப்பிற்கு
ஒத்து வராது.
இதற்கு உதாரணமாக கமலின் திரைக்கதைகளையே சொல்லலாம்.
அவரது கதைகள் சம்பிரதாயமான ஹாலிவுட் திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தாதவை.
ஹேராம் இந்திய சுதந்திரத்தின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய முதல் படம்.
காந்தி எப்போதுமே ஒரு புனித பிம்பமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அதை விலக்கி காந்தியை முன் வைத்து நடந்த அரசியல் சம்பவங்களையும்,
அதன் விளைவுகள் இன்றுவரை இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை விவரிக்கிறது ஹேராம்.
இதை ஒரு கமர்சியல் சினிமாவிற்கான கதையாக தேர்வு செய்வது என்பதிலே...
கமலின் துணிச்சலும் ஆர்வமும் வெளிப்பட்டுள்ளது.
ஹேராமின் திரைக்கதை விரிந்த தளத்தில் இயங்கக்கூடியது.
பொதுவில் திரைக்கதையின் முக்கியப்பிரச்சனையாக கதை நடைபெறும் கால மற்றும் வெளியைச்சொல்வார்கள்.
ஹேராம் ஒரு நாவல் போல சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் முன்பின்னாக நகர்ந்து செல்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்,
அதன் எதிர்விளைவுகளாக உருவான வன்முறையும்,
இந்திய சமூகத்தில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் பாதிப்புகளின் மீதான ஒரு கலைஞனின் பார்வையே ஹேராம்.
சினிமாவில் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்யும்போது சந்திக்கும் முதல் சவால் உரையாடல்.
எது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்;
எப்படியான மொழியில் வெளிப்படுத்தினார்கள் என்பது.
ஹேராமில் ஐம்பது வருடங்களுக்கு முன்புள்ள பிரயோகங்கள்,சொற்கள்,
உரையாடல்களில் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அது போல பல்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் மொழியில் பேசிக்கொள்கிறார்கள்.
இத்தனை வேறுபட்ட மொழிப்பிரயோகங்கள் கொண்டிருந்த போதிலும்,
ஆதாரக்கதை சொல்லல்...காவியத்தன்மை மிக்கதாகவே தொடர்ந்திருக்கிறது.
தமிழ் சினிமாவை தொடர்ந்து அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு முன்னோடி கலைஞன் என்ற அளவில் கமலின் படைப்புகள் ஒவ்வொன்றும் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை.
கமல் தமிழுக்கு கிடைத்த
ஒரு ‘ழான் கிளாட் கேரியர்’.
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
நூல் : கமல் நம் காலத்து நாயகன்.
தொகுத்தவர் : மணா.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
[ எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள் எழுதிய காலமும், வெளியிட்ட ஊடகம் பற்றிய தகவல் நூலில் இல்லை.]
ழான் கிளாட் கேரியர் பற்றி தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவுக்கு செல்க...
நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கல் வெட்டை’ கண்டு களித்திருப்பீர்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
பாஸ்கர் சார்... சீட் பில்டு சொல்லும் விஷயம் என்ன என்பதை தெரிந்து கொள்ளாலாமே ஒழியே.. அதை வைத்துக்கொண்டு தமிழ் திரையுலகை மாற்றுவது என்பது ஏட்டுச்சுரைக்காய் கதைதான்...எஸ்ரா சொல்வது போல தமிழ் திரைக்கதைக்கு பொருந்தாது என்பதும் உண்மையே... சமையல் புக் வாங்கி உப்மா செய்யும் ரகம்தான்....
ReplyDeleteவிஸ்வரூபம்,பரதேசி,நேரம்,சூது கவ்வும் என தமிழ் சினிமாவினர் ‘பட்டப்படிப்பை’ தாண்டி மாஸ்டர் டிகிரிக்கு தாவிக்கொண்டு இருக்கிறார்கள்.
Deleteஇந்நிலையில்,சிட்பீல்டை சொல்லிக்கொடுப்பதும்...
பாபா பிளாக் ஷிப் சொல்லிக்கொடுப்பதும் ஒன்றே.
பாபா ப்ளாக் ஷிப்பை மொழி பெயர்ப்பவருக்கு ‘முனைவர்’ பட்டம் சூடுகிறார்கள்.