Jun 8, 2013

RUN LOLA RUN \ ஓடினாள்...ஓடினாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். \ பாகம் - 3


RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by Tom Tykwer \ Part - 3 
நண்பர்களே...
‘ரன் லோலா ரன்’ திரைப்படம் உருவான காலகட்டத்தில்...
ஹாலிவுட் ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ என்ற படத்தை உருவாக்கி 1998லேயே வெளியிட்டது.
இரண்டுமே திரைக்கதை பாணி  ஒத்திருந்தாலும், கட்டமைப்பு, உருவாக்கம் ஆகிய  விதங்களில் ‘ரன் லோலா ரன்’ காவியத்தன்மை பெற்றது.

 ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ பாதிப்பில் தமிழில் ‘12 பி’ உருவாகியது.
தரத்தில், இரண்டுமே ‘ரன் லோலா ரன்’ படத்தை நெருங்க முடியவில்லை.
மூன்று படங்களையும், புலி, பூனை,பூச்சாண்டி என்று  வகைப்படுத்தலாம்.

SLIDING DOORS \ 1998 \ English \ Directed by : Peter Howitt

12 B \ 2001 \ Tamil \ Directed by : Jeeva.


லோலா, தனது தாய் இருக்கும் அறையை தாண்டி ஓடுகிறாள்.
தாயார், போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.
எதிர் தரப்பில் பேசுவது, ஆடியன்சுக்கு சொல்லப்படவில்லை.
அறையில் இருக்கும் டிவியில், லோலா படிக்கட்டில் ஓடுவது கார்டூன் சித்திரமாக காட்டப்படுகிறது
.

இக்காட்சி மூன்று ஓட்டங்களிலுமே மாற்றமில்லாமல் காட்டப்படுகிறது.

அடுத்த ஷாட் லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில் இறங்கி ஓடுவது ‘2டி கிராபிக்ஸ்’ காட்சிகளாக காட்டப்படுகிறது.


முதலாம் ஓட்டம் : லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில், 
மூன்று சுற்று ஓடுவதாக காட்டப்படுகிறது.
படிக்கட்டின் மூலையில் நாயுடன் ஒருவன் இருக்கிறான்.
நாய் வெறி கொண்டு குலைத்து கடிக்க வருகிறது.
கடிபடாமல் தப்பித்து ஓடுகிறாள்.
அந்த பில்டிங்கின் வெளிப்புறக்கதவை திறக்கிறாள்.
கிராபிக்ஸ் காட்சி இத்துடன் முடிவடைகிறது.



இரண்டாம் ஓட்டம் : லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில் 
இரண்டு சுற்று ஓடுவதாக காட்டப்படுகிறது.
படிக்கட்டின் மூலையில் நாயுடன் ஒருவன் இருக்கிறான்.
லோலாவை பார்த்து ‘இளிக்கிறான்’.
தங்கப்பல் மின்னுகிறது.
நாய் வெறி கொண்டு குலைக்கிறது.
அவன் குறுக்கே காலை நீட்டி லோலாவை விழ வைக்கிறான்.
லோலா படிக்கட்டில் தடுமாறி விழுந்து உருண்டு பிறண்டு வருகிறாள்.
இத்துடன் கிராபிக்ஸ் காட்சி முடிவடைகிறது.

தரையோடு தரையாக விழுந்து கிடக்கிறாள்.
மெல்ல எழுந்து நொண்டிக்கொண்டே வந்து,
அந்த பில்டிங்கின் வெளிப்புறக்கதவை திறக்கிறாள்.

மூன்றாம் ஓட்டம் : லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில் 
ஒரு சுற்று மட்டும் ஓடுவதாக காட்டப்படுகிறது.
படிக்கட்டின் மூலையில் நாயுடன் ஒருவன் இருக்கிறான்.
நாய் வெறி கொண்டு குலைக்கிறது.
லோலா நாயை ‘ஜம்ப்’ பண்ணித்தாண்டி ஓடுகிறாள்.
அந்தப்பில்டிங்கின் வெளிப்புறக்கதவை திறக்கிறாள்.
கிராபிக்ஸ் காட்சி இத்துடன் முடிகிறது.

நண்பர்களே...
இப்படம் யதார்தத்தை கூறுகிறதா...மறுக்கிறதா ?
என்ற கேள்வியோடு தேடாதீர்கள்.
விடை கிடைக்காது.
ஏனென்றால் வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

2 comments:

  1. Replies
    1. ஓடுங்க...ஓடுங்க...உங்க ஓட்டம் ஓய்வறியாதது.
      யாருமே உங்களை நெருங்க முடியாது.

      Delete

Note: Only a member of this blog may post a comment.