AFTERMATH [ Lad De Sma Born ] \ Denmark \ 2004 \ Directed by : Paprika Steen.
நண்பர்களே....
சோகத்திலே மிகவும் கொடியது புத்திர சோகம் என்கிறது மகாபாரதம்.
கர்ணன் படத்தில் மரணத்தின் தன்மையை கண்ணதாசன் அற்புதமாக விளக்கியிருப்பார்.
“ மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்”
பதின்வயது மகளை விபத்தில் பறிகொடுத்த பெற்றோரின்
சோகக்கதையா...‘அப்டர்மேத்’ ?
கார் பார்க் ஏரியா....
'EXIT' பாதை...
கார்கள் எதுவும் வராததால், மரண அமைதி காக்கிறது பாதை.
இதுதான் படத்தில் முதல் ஷாட்.
மிகப்பெரிய சாலை.
தூரத்திலிருக்கும் சிக்னலை நோக்கி சில கார்கள் பயணிக்கின்றன.
விபத்தில் மகளை பறி கொடுத்த பெற்றோரின் காரும் அந்தப்பயணத்தில் இணைகிறது.
இதுதான் படத்தின் கடைசி ஷாட்.
இரு ஷாட்களுக்கிடையில் ஒரு சோகக்கவிதையை புனைந்திருக்கிறார்
இந்த பேரழகுப்பெண் இயக்குனர் Paprika Steen.
ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது.
அந்த சோகம் என்ன ?...என்பதை படத்துவக்கத்திலேயே கேள்வியாக்கி,
அக்கேள்விக்கான விடையை பின் தொடரும் காட்சிகளில்,
வசனங்களின் மூலமாகவும்,
விஷுவலாகவும்,
கொஞ்சம் கொஞ்சமாக திரையை விலக்கி நம்மை உணர வைக்கிறார் இயக்குனர்.
விபத்தில் மகளை பறி கொடுத்த கிளே - பிரிட் தம்பதியர்,
வழியாகத்தான் இப்படத்தின் திரைக்கதை பயணிக்கிறது.
படத்தில் மூன்று கிளைக்கதைகள் வருகிறது.
[ 1 ] கிளே -பிரிட் தம்பதியினரின் நண்பர்களாக வரும் நடுத்தர வயது தம்பதியர். இவர்கள் குழந்தைப்பேறு இல்லாமல் தவிப்பவர்கள்.
[ 2 ] ‘மெலினா’ என்ற இளம் தாயும்,
அவளால் சரி வர பராமரிக்கப்படாத ‘கேமிலி’ என்ற 6 மாத பெண் சேயும், ‘சோசியல் ஒர்க்கர்’ என்ற அரசுப்பணியை செய்யும் ’பிரிட்டின்’ கண்காணிப்பின் கீழ் வருகிறார்கள்.
கேமிலிக்கு தாயாகவும்...
‘உல்ரிக்’ என்ற புதிய காதலனுக்கு காதலியாகவும்...
ரெட்டை வாழ்க்கை வாழும் மெலினாவின் கதை இன்றைய டேனிஷ் சமுதாயத்தை பிரதிபலிக்கிறது.
[ 3 ] குடி போதையில் காரை ஓட்டி,
கிளே - பிரிட் தம்பதியினரின் 12 வய்து மகளின் உயிரைப்பறித்த...
நடுத்தர வயது பெண்மணி Anette Christoffersen.
டைவர்ஸாகி, தனிமையை போக்க மதுவையும்,
கண்ணில் படுகின்ற ஆண்களோடு உறவும் வைத்துக்கொள்ள அலையும்
இவளது கதையும்...பரிதாபமான கிளைக்கதைதான்.
மூன்று கிளைக்கதைகளும்,
‘மெயின்’ திரைக்கதையை சீராக முன்னெடுத்து செல்கின்றன.
கிளே- பிரிட் தம்பதியினர் எவ்வாறு புத்திர சோகத்தை கடந்து,
தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றனர் என்பது மட்டும் அல்ல... கிளைமேக்ஸ்.
நவீன டேனிஷ் சமுதாயத்தின் மீது இயக்குனர் வைத்துள்ள விமர்சனமும்
அடங்கி இருப்பதுதான் இப்படத்தின் தனிச்சிறப்பே.
இப்படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சிகளை விவரிக்கிறேன்.
‘கிளே’ புத்திர சோகத்தால் வெறி பிடித்து,
நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரனைப்போல பிளாட்பாரத்தில் ஓடுவான்.
சாலையில் வாகனப்போக்குவரத்து மிகுந்து இருக்கும்.
இத்தொடர் ஓட்டத்தை பல கட் ஷாட் மூலம்,
ஓட்டத்தின் வேகத்தை உணர்த்தியிருப்பார் இயக்குனர்.
ஓட்ட முடிவில், களைப்பாகி ஓடுவதை ஸ்லோ மோஷனில் படமாக்கி இருப்பார்.
மொத்த ஓட்டத்துக்கும் பின்னணியாக மெலிதான சோக இசை இழையோடி வரும்.
காட்சி முடிவில், தீடிரென்று ‘போக்குவரத்தின் பேரிரைச்சல்’ ,
வெடித்து பின்னணி இசையை விழுங்கி விடும்.
பிள்ளையை பறி கொடுத்த தம்பதிகள் உடலுறவில் ஈடுபட மாட்டார்கள்.
மாறாக பிள்ளை இல்லாத தம்பதிகள் காட்சிக்கு காட்சி உடலுறவில் ஈடுபட்டு திளைப்பார்கள்.
இந்த முரணை,
இயக்குனர் பெண் என்பதால் உடலுறவு காட்சிகளை கச்சிதமாக கையாண்டிருப்பார்.
கிளே, புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டு விபத்தை ஏற்படுத்திய பெண்ணை தேடிக்கண்டு பிடித்து,
அவளை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறான்.
அந்த களேபரத்தில் மல்லாக்க விழுபவளை,
‘செக்சுவல் இம்பல்சில்’ [ Sexual Impulse ] உந்தப்பட்டு கற்பழிக்கிறான்.
ஆனால் அவளோ, அந்த உடலுறவை ரசித்து ஏற்றுக்கொள்கிறாள்.
இந்தக்காட்சியில் இருக்கும் முரண்கள் மிகவும் ரசிக்கத்தகுந்தவை.
கிளேவைப்பொருத்த வரை அவளை கற்பழித்ததையே மரண தண்டனை வழங்கியதாக கருதுகிறான்.
இலக்கியத்தில், செக்ஸ்...மரணம்... இரண்டுமே ஒன்றாக கருதப்படுகிறது.
பிரிட், மெலினாவின் குழந்தையை தனது குழந்தை போல் பராமரித்து
அன்பு செலுத்துகிறாள்.
கிளே...வன்முறையின் மூலமாக தனது சோகத்துக்கு விடை தேடி விட்டான்.
பிரிட்...தாய்மையின் மூலமாக தனது சோகத்துக்கு விடை கொடுக்க முயலுகிறாள்.
பிரிட் கதாபாத்திரத்தை மிக உயர்வாக்கி இருக்கிறார் ‘அழகுத்தேவதை’ இயக்குனர்.
பிரிட் கதாபாத்திரத்துக்கு நேர் முரணாக மெலினாவை படைத்திருக்கிறார்
இயக்குனர்.
இளம் வயதிலேயே தாயாகி தாய்மையின் மகத்துவம் அறியாமல் இருக்கிறாள்.
குழந்தையை, தனது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக...
Bitter & Sweet அவஸ்தையுடன் பார்க்கிறாள்.
ஒரு காட்சியில் மெலினா ‘யு.எஸ்.ஏ’ என்ற எழுத்தை,
பெரிதாக பிரிண்ட் செய்யப்படிருக்கும் டி.ஷர்டை போட்டிருப்பாள்.
தாய்மைப்பண்பை புறக்கணித்த அமெரிக்க ‘சூது’ கலாச்சாரம்,
டென்மார்க்கில் நுழைந்து ‘கவ்வி’ விட்டதை குறியீடாக்கி உள்ளார் இயக்குனர்.
படத்தில் இடம் பெறும் இன்னொரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை,
இங்கே அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
‘பிரிட்’ வேலை பார்க்கும் சோசியல் செண்டரின் தலைமை அதிகாரிதான் அவர்.
எல்லோரையும் கனிவுடனும், கருணையுடனும் வழி நடத்தும்
உயர் பண்புடைய அரசு அதிகாரியாக அவர் இருப்பது எனக்கு சற்று பொறாமையாக இருந்தது.
நம்மூரில் இவரைப்போன்ற அதிகாரிகளை லென்ஸ் வைத்து தேட வேண்டும்.
படம் முடிந்து கடைசி டைட்டில் கார்டு வரை பார்க்க வைத்து விடுகிறது,
பின்னணியில் வரும் ஒரு பாடல்.
அந்தப்பாட்லை கீழ்க்காணும் காணொளியில் கேட்டு உருகுங்கள்.
ஆக, ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது.
அதை கடக்க வேண்டி இருக்கிறது.
அந்த சோகம் என்ன ?
விபத்தில் இறந்த கிளே - பிரிட் தம்பதியின் மகளா ?
டேனிஷ் சமூக-சரித்திர விபத்தில் நிகழ்ந்த கலாச்சார சீரழிவா ?
வெளிப்படையான கருத்தாக, விபத்தையும்...
உள்ளார்ந்த கருத்தாக்கமாக, டேனிஷ் கலாச்சார சீரழிவையும்... சொல்லி இயக்குனர் இப்படத்திற்கு காவியத்தன்மையை கொடுத்திருக்கிறார்.
படத்தில் இடம் பெற்ற நடிக, நடிகையர்களும்,
அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரும் அடங்கிய பட்டியல் இதோ...
·
Laura Christensen- Malene
·
Melina Nordmark Nielsen-
Camille
அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களும் மிகச்சிறப்பாக தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அனைவரையும் பாராட்டி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
இப்படம் பெற்ற விருதுகள் விபரம்...
தகவல் உபயம் : IMDB
Bodil Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
---|---|---|---|
2005 | Nominated | Bodil | Best Actress (Bedste kvindelige hovedrolle) Sofie Gråbøl |
Best Supporting Actress (Bedste kvindelige birolle) Karen-Lise Mynster | |||
Film by the Sea International Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2004 | Won | Audience Award | Paprika Steen |
Karlovy Vary International Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2004 | Won | Best Actress | Karen-Lise Mynster Tied with Marta Larralde for León y Olvido(2004). |
Don Quijote Award - Special Mention | Paprika Steen | ||
Nominated | Crystal Globe | Paprika Steen | |
Lübeck Nordic Film Days | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2004 | Won | Baltic Film Prize for a Nordic Feature Film | Paprika Steen |
Molodist International Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2004 | Won | Scythian Deer | Paprika Steen |
Robert Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2005 | Won | Robert | Best Actress (Årets kvindelige hovedrolle) Sofie Gråbøl |
Nominated | Robert | Best Actor (Årets mandlige hovedrolle) Mikael Birkkjær | |
Best Cinematography (Årets fotograf) Erik Zappon | |||
Best Costume Design (Årets kostumier) Stine Gudmundsen-Holmgreen | |||
Best Director (Årets instruktør) Paprika Steen | |||
Best Film (Årets danske spillefilm) Thomas Heinesen (producer) Paprika Steen (director) | |||
Best Production Design (Årets scenograf) Peter Grant | |||
Best Screenplay, Original (Årets originalmanuskript) Kim Fupz Aakeson | |||
Best Song (Årets sang) Nina Persson For the song "Losing My Religion". | |||
Best Supporting Actress (Årets kvindelige birolle) Laura Christensen | |||
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
டிரைலரின் காணொளி இணைப்பு...
இத்தனை விருதுகளா...? நன்றி...
ReplyDeleteஒரு விருது கூட வாங்காத பல நல்ல படங்கள் உள்ளன நண்பரே.
Deleteநான் பொதுவாக விருதுகளை வைத்து ஒரு படத்தை மதிப்பிட மாட்டேன்.
This blog and you.... both are interesting .....I had added you in favorites in my mobile...
ReplyDelete