May 25, 2013

மீண்டும் ஹேராம் !


HEYRAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 033
நண்பர்களே...
ஹேராம் தொடரை தொடர்ந்து எழுதாமல்,
‘டிமிக்கி’ கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஹேராம் தொடர், நிற்காமல் தொடரும் என உறுதியளிக்கிறேன்.
ஹேராம் தொடர் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான பாடம் இதுதான்...
“ புதிய கருத்துக்கள் வளர வேண்டும் என்பதற்காக, 
எத்தனை கருத்துக்கள் வெட்டி வீசப்பட வேண்டும் !
இலக்கை சரியாக அடைவதற்கு, 
எத்தனை முறை குறி வைத்து அடிக்க வேண்டும் !! ”

‘ நடிகனின் பிரதான நோக்கம் ஒரு மனித ஆன்மாவின் வாழ்வை,
மறு உருவாக்கம் செய்வது மட்டுமல்ல ; 
மாறாக, அதை ஒரு அழகான கலை நுட்பமான வடிவமைப்பில் வெளிப்படுத்துவதும் ஆகும்’ - கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.

 ‘ஸ்தனிஸ்லாவ்ஸ்கி’ வகுத்த நடிப்பு இலக்கணத்தை,
ஹேராமில் அனைத்து நடிகர்களும் பின்பற்றியிருப்பதை நாம் காணலாம்.
மிகச்சிறந்த உதாரணம்...சாகேத்ராம் மைதிலியை பெண் பார்க்கும் படலம்.

வேதா என்ற ஒல்லியான இளைஞன், அழைப்பில்லாமல் தெருவிலிருந்து உப்பிலி ஐயங்கார் வீட்டுக்குள் நுழைந்து ராமை தேடுகிறான்.

வேதா : ராமா...ராமா...டேய் ராமா...
வேதாடா...
என்னடா இது, தாடியும் மீசையுமா ?
அசல் பாஷ்யம் மாமா மாதிரியே மாறிட்ட.
அவர் மாதிரியே பிரம்மச்சாரியா போகாம, 
ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துண்டயே, 
அது வரைக்கும் சந்தோஷம்.

பாஷ்யமும், வசந்தா மாமியும் வெறுப்போடு அவனை முறைக்கிறார்கள்.
வேதா வசந்தா மாமியும் வந்திருப்பதை உணர்ந்தவனாய்...

வேதா : அடடே...வசந்தா மாமி !
சவுக்கியமா இருக்கேளா ?
மாமா வரலயா ? 

வசந்தா மாமி : வரல...

வேதா : ஏன் ?

வசந்தா மாமி : வரல...

வேதா : அதான் ஏன் வரலன்னு கேக்றன்.

வசந்தா மாமி : உடம்பு சரியில்ல.

வேதா : அய்யய்யோ...உடம்பு சரியில்லயா ? நன்னாத்தானே இருந்தார்.

வசந்தா மாமி : போடா பிரம்மஹத்தி.
ஏழு வருசமா கைகால் வெளங்காம படுத்துண்றுக்கார்.

வேதா : ஓ... இருக்கட்டும்...இருக்கட்டும்.

வசந்தா மாமி : இப்ப வந்துட்டான் பெரிசா கேக்கறதுக்கு...
போடா அந்தண்ட...

பாஷ்யம் : அக்கா...

வசந்தா மாமி : இர்ரா...
[ உப்பிலி அய்யங்காரிடம் ]
இவன் என்ன உங்களுக்கு ஒறவா ?

உப்பிலி அய்யங்கார் : அய்யய்யோ; அக்ரஹாரத்துல இருக்கான்.
அவ்வளவுதான். 

இந்தக்காட்சியில் தோன்றும்,
வேதா என்ற காரெக்டரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள்.
இவர்களால் உபகாரம் இருக்காது; உபத்திரவம் இருக்கும்.

வசந்தா மாமி, ‘இவன் உங்களுக்கு ஒறவா ?’ என கேட்ட தொனியில் திருமணத்தையே நிறுத்தி விடும் தொனி இருக்கும்.
அதைப்புரிந்து, உப்பிலி ஐயங்கார்...
திருமண ஏற்பாடு நின்று விடப்போகிறதே என்ற பதட்டத்தோடு...
‘அய்யய்யோ ; அக்ரஹாரத்துல இருக்கான். அவ்வளவுதான்’ என்று மறுதலிப்பார்.
உப்பிலி அய்யங்காரின் பேச்சின் தொனியில் ‘வேதா ஒரு டம்மி பீசு’ என்பது பொதிந்திருக்கும்.

வேதா காரெக்டரில்...வையாபுரியும்,
வசந்தா மாமி காரெக்டரில்...நாகமணி மகாதேவனும்,
உப்பிலி அய்யங்காராக...கிரிஷ் கர்னாடும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக நாகமணி மகாதேவன்...சான்சே இல்லை.

மைதிலி பாஷ்யம், வசந்தா மாமியை சேவித்து விட்டு,
ராமையும் சேவிப்பாள்.
ராம் அவளை ஆசிர்வதிக்க எத்தனிக்கும்போது,
கையில் அபர்னா அணிவித்த மெட்டியை பார்ப்பான்.
குற்ற உணர்வில் ராம் தவிப்பதை எடுத்துக்காட்ட, 
அற்புதமாக ‘ஷாட் கம்போஸ்’ செய்திருப்பார் இயக்குனர் கமல்.



அந்த  ‘அரை செகண்ட்’ ஷாட்டிற்கு, 
இளையராஜா ‘நீ பார்த்த பார்வை’ பாடலில் உள்ள பியானோ இசையை, பின்னணி இசையாக்கி... இசையால்,  
‘ராம்-அபர்னா’ காதல் காட்சிக்கு ‘கனோட்டேஷன்’ செய்திருப்பார்.

ஹேராம் = அபர்னா - ராம் காதல் காட்சி பற்றிய பதிவிற்கு இங்கே செல்லவும்.




இதெல்லாம்... 
‘தலை கீழாய் தொங்கும் ஜந்துவுக்கு’ புரியுமா ?  

ஹேராமின் முந்தைய பதிவுகளுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் செல்லவும்...

ஹேராம் = 032

ஹேராம் = 031

ஹேராம் = 030
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.  

15 comments:

  1. கூடுதல் தகவல் : 85% படம் படமாக்கப்பட்டது - முன்பு சென்னையில் வேலை பார்த்த ஆலைக்கு சொந்தமான... எங்கள் Executive Club-ல்...

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. True....cannot forget vaiyapuris performance,and that total scene...in each family one talkative collector,will be there...and he mention him as collector,after that he reveal him as bill collector..keep going

      Delete
    2. தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
    3. நன்றி கீதப்பிரியன்.

      Delete
  2. மலேசியாவில் பார்த்த படம்.

    அதென்ன வவ்வால் மேல் கொலவெறி?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      வவ்வாலை சுட்டு வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
      அந்த ஆதங்கம்தான்.

      Delete
  3. Please write more about pimp govardhan (gollapudi maruti rao)and bhairav(Delhi ganesh)when you write about that scene..

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் எழுதுகிறேன் நண்பரே.

      Delete
  4. Welcome back. Eagerly waiting for more.

    ReplyDelete
  5. Welcome back. Eagerly waiting for more on heyram.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தி வரவேற்றமைக்கு நன்றி கிருபாகரன்.

      Delete
  6. இன்று எனது தளத்தில்

    http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. உங்களது மலேசிய அனுபவப்பதிவை படித்து விட்டேன்.

      Delete
  7. I WAS EAGERLY WAITING FOR HEY RAM ARTICLE FROM YOU.THANK YOU VERY MUCH FOR YOUR DETAILED ANALYSIS AND INTERESTING WRITINGS. ( NORMALLY I NEVER WROTE TO ANY BLOG EXCEPT YOU ESPECIALLY FOR HEY RAM ONLY

    ReplyDelete
  8. தங்களது பின்னூட்டம் என்னை கவுரவப்படுத்தி இருக்கிறது.
    உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இனியும் தொடர்ந்து எழுதுவேன்.
    நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.