Dec 3, 2012

1000 வாரத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடும் படம் !

நண்பர்களே...
ஒரு ஜாலியான படத்தை எழுத ஆசைப்பட்டேன்.
1995ல் வெளியான  ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’  என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது.
ஷோலேக்கு அடுத்து ,
இந்தப்படத்தை அதிக முறை பார்த்த இந்திய மக்களில் நானும் ஒருவன்.


இந்தப்படம் பற்றி விக்கிப்பீடியாவை அலசிய போது கிடைத்த தகவல் ஆச்சரியப்பட வைத்தது.
இப்படம் மும்பையில் உள்ள  'மராத்தா மந்திர்' என்ற தியேட்டரில்
800 வாரங்களை கடந்து,
1000 மாவது வாரத்தை எட்டி பிடிக்க இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



இந்தியப்படங்களில் இது இமாலய சரித்திர சாதனை.
பதினாறு நாள் ஓடுவதே சாதனையாக இருக்கும் கால கட்டத்தில்,
பதினாறு வருடங்களை கடந்து மேலும் ஒடிக்கொண்டிருப்பது  அசாதாரணம்.


மறைந்த யாஷ் சோப்ரா தயாரித்து,அவரது மகன் ஆதித்ய சோப்ரா கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்.
வசனத்தை ஜாவித் சித்திக் - ஆதித்ய சோப்ரா இணைந்து எழுதி உள்ளனர்.
ஆனந்த் பக்‌ஷி கவிதைகளுக்கு இசை அமைத்தவர்கள் ஜாட்டின் - லலித்.
ஓளிப்பதிவு - மன்மோகன் சிங்.
நாட்டின் பிரதமருக்கும், இப்படத்தின் ஓளிப்பதிவாளருக்கும்  பெயரில் மட்டுமே ஒற்றுமை !.
ஒளிப்பதிவாளர் மன் மோகன் சிங்  ‘தான் ஒரு திறைமைசாலி’ என்பதை ஒவ்வொரு பிரேமிலும் நிரூபித்திருக்கிறார்.

ஷாருக்கான், கஜோல், அம்ரிஷ் புரி,அனுபம் கர் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளங்கள்  இயக்குனருடன் கூட்டணி அமைத்து உழைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் இப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றிக்கு அழைத்துச்சென்றாலும் உலகமெங்கும் இப்படம் வெற்றிக்கொடி நாட்டியதற்கு மூலக்காரணம் ஒன்று உள்ளது.
இப்படம் ஒரு கனவு உலகத்தை சிருஷ்டித்து காண்பித்துள்ளது.
கதாநாயகன், அவனது அப்பா, கதாநாயகி, அவளது பெற்றோர் என எல்லோருமே கனவுலகில் மட்டுமே காண முடியும் பிரஜைகள்.
நிஜத்தில் இவர்களை காண முடியாது.
படத்தில் வரும் எல்லா காரெக்டர்களுமே நல்லவர்களாக படைக்கப்பட்டிருக்கிறது.
வில்லனே கிடையாது.
வில்லன் போலத்தோற்றமளிக்கும் கஜோலின் நிச்சயிக்கப்பட்ட மணமகன் கூட நல்லவனே.

நவீன நாகரீக மரபிற்கும், பாரம்பரிய நாகரீக மரபிற்கும் உள்ள முரண்பாடுகளே கதையின் திருப்பத்திற்கு உதவுகின்றன.

பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்பட்ட கஜோலை,
ஐரோப்பிய டூரில் வித விதமாக நாகரீக உடைகளில் வலம் வரச்செய்து ரசிகர்களின் அபிலாஷைகளை தீர்த்து விடுகிறார் இயக்குனர்.
ஆடை வடிவமைப்பாளர்,
கஜோல் சுழன்றாடும் போது  உள்ளாடை  தெரியும் வகையில் வடிவமைத்து...
ரசிகர்களை ஈவிரக்கமில்லாமல் அராஜகமாக தாக்கியுள்ளார்.



 ‘தாராள மயமாக்கல்’ கொள்கையை தனது ஹீரோயின்களின்  ‘கிளிவேஜ்ஜை’ காட்ட சோப்ரா தாராளாமாக பயன் படுத்துவார்.
ஆனால் எப்போது காட்ட வேண்டும்...எப்போது மூட வேண்டும் என்ற வித்தை தெரிந்த மன்னன்.

ஷாருக்கான்  ‘இளமையின் ஐக்கானாக’ பயன்படுத்தப்பட்டுள்ளார்.
படத்தில் இவர் செய்யும் குறும்புகள் ஒட்டு மொத்த இந்தியர்களை வசீகரித்ததில் ஆச்சரியமில்லை.


ஜாட்டின் - லலித் இசையும்,
ஆனந்த் பக்‌ஷியின் பாடல்களில் தெறிக்கும் கவிதை நயமும்...
ரசிகனை தியேட்டருக்கு மீண்டும் மீண்டும் வரவழைத்த மந்திரங்கள்.
உதாரணத்திற்கு முதல் பாடலின் சில வரிகள்...

 ‘ மனம் அழைக்கிறது,
வீடு திரும்பு...ஊர் சுற்றும் வாலிபனே...

ஊமையான இந்த மண்ணிற்கு
உன் கடிதத்தை படிக்க இயலாது...

வந்து உன் மண்ணை முத்தமிடு...’

ஜாவித் சித்திக் -  ஆதித்ய சோப்ரா வசனங்களும் கவிதையாக ஒலிக்கிறது.

படத்தின் ஆரம்பக்காட்சியில் லண்டன் மாநகர வீதியில் புறாக்களுக்கு தீனி
போடுவார் அம்ரிஷ் புரி.
அக்காட்சியில்,
அம்ரிஷ் புரியின் பின்னணிக்குரலில் கீழ்க்கண்ட வசனம் ஒலிக்கும்.
“ 22 ஆண்டுகளாக நான் இங்கு வாழ்கிறேன்.
தினமும் காலையில் இந்த வீதி என் பெயரை என்னிடம் கேட்கிறது.
நீ எங்கிருந்து வருகிறாய் ?
நீ ஏன் இங்கு வந்தாய் ?
என்னிடம் பதில் உள்ளதா ?

என் வாழ்க்கையில் பாதியை இங்கு கழித்த பின்னும் இந்த இடம் எனக்கு அன்னியமாகத்தான் தோன்றுகிறது.
இந்த இடமும் என்னை அன்னியனாகத்தான் பார்க்கிறது ”. 

பதிவெழுத, இப்படத்தை சமீபத்தில்  ‘ப்ளூ ரேயில்’ தமிழ் சப்-டைட்டில் துணையுடன் பார்த்தேன்.
இன்றும், இப்படத்திலிருக்கும் இளமையும், வசீகரத்தன்மையும் குறையாமலிருப்பதை உணர முடிந்தது.

படம் பெற்ற விருதுகள் விபரம் விக்கிப்பீடீயா துணையோடு...

Filmfare Awards

Dilwale Dulhania Le Jayenge is tied for second place with Devdas (2002) for the most number of Filmfare awards going to a single film with ten. Only Black (2005) has more, with eleven. This was also the second film to win the four major awards (Best Movie, Best Director, Best Actor and Best Actress), after Guide in 1966.[36][58]
Wins
Nominations

[edit]National Film Awards

[edit]Star Screen Awards

[edit]


பாடல்களை காணொளியில் காண்க...










அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

16 comments:

  1. மிகவும் வியப்பாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இச்சாதனை வியப்புக்குறியது.

      Delete
  2. நல்ல படமென்று கேள்விப்படிருக்கிறேன்.இன்னும் பார்த்ததாக இல்லை.உங்க சினிமா பார்வை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா..

    ReplyDelete
  3. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி குமரா.

    ReplyDelete
  4. நல்ல படம்.
    முன்பு பார்த்த நினைவுகளை கிளறிவிட்டது உங்கள் பதிவு.

    Srilankan Tamil News

    ReplyDelete
    Replies
    1. இப்படம் வெளியான போது,
      என்னுள் ஏற்பட்ட கிளர்ச்சி விவரிக்க முடியாதது.

      இப்போது பார்க்கும் போது கமர்சியல் சினிமாவுக்கான இலக்கணமாக
      காட்சியளித்தது.
      பார்வையாளனை வசீகரிக்க சோப்ரா பயன்படுத்திய யுக்திகள் வியப்பிலாழ்த்தியது.

      Delete
  5. தியேட்டரில் இந்தப் படத்தை 3 முறை பார்த்தேன்... டிவியில் பார்த்தது எத்தனை முறை என கணக்கு வைத்துக் கொள்ளவில்லை...
    1000வது வாரத்தை நோக்கி என்பது உண்மையிலயே புதிய செய்தி..
    படத்தில் ஷாருக் செய்யும் சில குறும்புகள் ஜாக்கி சானின் சேட்டையை ஒத்திருக்கும்...
    கிளைமேக்ஸில் அம்ரிஷ்புரி கையை விட்ட பின்னும் கஜோல் உதறிக் கொண்டிருக்கும் காட்சி கவிதை...!!
    படத்தின் சில உணர்வுப் பூர்வமான வரிகளை மொழிபெயர்த்ததிற்கு நன்றி...

    ReplyDelete
  6. தியேட்டரில் இந்தப் படத்தை 3 முறை பார்த்தேன்... டிவியில் பார்த்தது எத்தனை முறை என கணக்கு வைத்துக் கொள்ளவில்லை...
    1000வது வாரத்தை நோக்கி என்பது உண்மையிலயே புதிய செய்தி..
    படத்தில் ஷாருக் செய்யும் சில குறும்புகள் ஜாக்கி சானின் சேட்டையை ஒத்திருக்கும்,
    கிளைமேக்ஸில் அம்ரிஷ்புரி கையை விட்ட பின்னும் கஜோல் உதறிக் கொண்டிருக்கும் காட்சி கவிதை...!!
    படத்தின் சில உணர்வுப் பூர்வமான வரிகளை மொழிபெயர்த்ததிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. 800 வாரங்கள் கடந்ததும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சோப்ரா.
      அப்போதே தியேட்டர் அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
      “1000 வாரம் ஓட்டி விடுங்கள்.
      அதற்கும் பிரம்மாண்ட விழா எடுக்கிறேன்”

      பி.ஆர்.சோப்ரா மறைந்து விட்டாலும் மகன் அவரது ஆசையை நிறைவேற்றுவார்.

      Delete
  7. உண்மையாவா? நம்ப முடியலயே தல..

    ReplyDelete
    Replies
    1. விக்கிப்பீடீயா தகவல் இதோ...உங்கள் பார்வைக்கு.

      In 2001, Dilwale Dulhania Le Jayenge overtook Sholay (1975) as the longest-running film in Indian cinema.[37] In February 2009, the film set a record by completing 700 weeks of continuous play in a Mumbai theatre.[38] On 20 October 2012 the movie completed 17 years of non-stop running.[39] As of 2012, it is still playing at the Maratha Mandir theatre in Mumbai.[40] Producer Yash Chopra decided to organise a celebration in February 2011, when the film completed 800 weeks of running, and theatre owner Manoj Desai said he has no plans to discontinue the screening of the film.[20] There are often people in the audience that have seen the film 50 times or more, but still clap, cheer, mouth the dialogs, and sing along with the songs,[10] raising comparisons with Hollywood's longest running film The Rocky Horror Picture Show (1975). People keep coming back not just to see the film, but also to be a part of an experience.[41] In early 2011, a theatre strike threatened the film's uninterrupted showing streak. Producer Yash Chopra contacted theatre owners to try and ensure that the film would continue. He wants the film to go for at least 1000 weeks.[42]

      Delete
  8. இந்தப் படத்தை இருபது தடவைக்கு மேல் பார்த்திருப்பேன். நல்ல லவ் ஸ்டோரி. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி.. பயாலஜி..னு நல்லாவே இருக்கும்.
    400 வாரங்களா?? அடேங்கப்ப்ப்ப்பா..

    ReplyDelete
    Replies
    1. 400 வாரமில்லை...மேடம்.
      800 வாரங்களை கடந்து ஓடுகிறது.

      20 தடவை பாத்தீங்களா !
      காலேஜ் பக்கமே போகலியா ?

      Delete
  9. "துஜே தேக்கா தோ யே ஜானா சனம்" - அர்த்தம் புரியாவிட்டாலும் அதில் இருந்த காதல் புரிந்தது.. இந்த படத்தில் ஷாருக்கின் குறும்பு, கஜோலின் இளமைத் துள்ளல் இவற்றிற்கு மேலாக என்னை ஈர்த்தது அம்ரீஷ் புரியின் அசத்தலான நடிப்பு..

    ReplyDelete
    Replies
    1. படத்தில் அனைவருமே நம்மை மெஸ்மரைஸ் செய்து விடுவார்கள்.

      ஷாருக் தலையில் அன்று ஏறிய மகுடம் இன்று வரை இறங்கவேயில்லை.

      Delete
  10. சார் அந்த படத்தின் தமிழ் subtitle link கிடைக்குமா please...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.