Dec 6, 2012

சிற்றின்பமும்...பேரின்பமும்... ஒன்றே!.

HEYRAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 032
நண்பர்களே...
ஹேராம் நம் கண்களுக்கும்,காதுகளுக்கும் புதிய அனுபவத்தையும்,
புதிய பயிற்சியையும் அளித்ததை நாம் பார்த்தோம்.
இன்னும் நிறைய பார்க்கவிருக்கிறோம்.
இப்போது பொண்ணு பார்க்கப்போகும் ராமோடு சேர்ந்து கொள்வோம்.


பெருமாள் உற்சவமூர்த்தியாக வீதி உலா போகிறார்.
கார் மெல்ல நகர்கிறது.
காரின் பின் சீட்டில்,மாமா பாஷ்யத்தின் அருகில் ராம் அமர்ந்திருக்கிறான்.
முடி,தாடி,மீசை ஏகமாய் வளர்ந்திருக்கிறது.

தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்ட பாஷ்யம் மாமா :
சாந்தாகாரம்,புஜனசேனம்,பத்மநாபம்,சுரேஷம், ஆஹாஹா...
நல்ல சகுனம்.
[ தூங்கிக்கொண்டிருக்கும் வசந்தா மாமியை தட்டி எழுப்பி ]
பாஷ்யம் மாமா : அக்கா...பெருமாள் எழறார்.
முழுச்சுக்கோ.

[ வசந்தா மாமி, அரைத்தூக்க மயக்கத்தில் தொழுவதற்கு பதில் ஆசிர்வதிக்கிறார். ]
வசந்தா மாமி : ம்...நன்னாயிருடாப்பா

பாஷ்யம் மாமா : அக்கா...பெருமாள்க்கா

[ தன் அசட்டுத்தனத்தை உணர்ந்த வசந்தா மாமி பெருமாளை தொழ,
பாஷ்யம் மாமா சிரிக்கிறார்.]
வசந்தா மாமி : ஏய், அப்பா, பகவானே...ராமா...எல்லாரையும் ரட்சி.

பாஷ்யம் மாமா : [ ராமிடம்] ம்...உம்முன்னு மூஞ்சிய தூக்கி வச்சிக்காம சமத்தா பொண்ணு பார்க்கணும்.என்ன?
ஷவரம் பண்ணிக்கறதையும்,உத்யோகத்தையும் விட்டுட்டா ஒண்ணும் வராது நோக்கு.
மனசை விட்டுட்டா மகா கஷ்டம்.
‘லைப் கோஸ் ஆன்’

ராம் அமைதியாக இருக்கிறான்.
கார் நகர்கிறது.
சங்கிலியால் பிணைக்கப்பட்ட கோவில் யானை ராமின் கவனத்தை ஈர்க்கிறது.
கல்கத்தா மிருகத்தை விட வித்தியாசப்பட்ட மிருகம் - ஆனால் அதே உருவம்.

மதவாதிகளால் கலவரம் இல்லாமல் தமிழகம் அமைதியாக இருந்ததை சங்கிலியால் கட்டப்பட்ட யானையை காட்டி உருவகப்படுத்தியுள்ளார் இயக்குனர் கமல்.

பாஷ்யம் மாமா : டேய் - உந்தோப்பனாரோட கடைசி ஆசைடா இது.
அவனே வந்து பொறப்பான்.
என்னடா நான் பாட்டுக்கு பேசிண்டிருக்கேன்.
 நீ யானையை பாத்துகிட்டிருக்க.

வசந்தா மாமி : பாஷ்யம்...எம் பிரார்த்தனை எல்லாம் நான் போறதுக்கு முந்தி  ஒன் அத்திம்பேர் போயிடணும்.
நான் இல்லாமப்போனா அந்த மனுஷன ஒருத்தரும் சீந்த மாட்டா.
அவர் போனதுக்கப்புறம் ராமன் கொழந்தைய ஒரு நாள் கொஞ்சிட்டா
போறும்.
அப்புறம் நிம்மதியா மண்டைய போட்டுடுவேன்.

பாஷ்யம் மாமா : அக்கா செத்துப்போனப்றம் - 
ராமா, கொஞ்சநாள்...உன் கொழந்தையை கொஞ்சிட்டு நானும் செத்துப்போயிடப்போறேன்.

வசந்தா மாமி : சீ...பாஷ்யம், என்ன எழவுடா இது?
பொண்ணு பாக்கப்போறச்ச பேசற பேச்சா இது?

பாஷ்யம் மாமா : நீதான ஆரம்பிச்சு வச்ச...
சரி, நல்லதா ஏதாவது பேசுவோமாடா, ராமா? 

ராம் : ம்...என் பொண்டாட்டியும், தோப்பனாரும் செத்து ஆறு மாசங்கூட ஆகல.
அதுக்குள்ள பொண்ணு பாக்கப்போய்ண்ருக்கேன்.

வசந்தா மாமி : என்ன எழவுடா இது?
எது சொன்னாலும் எதிர்வாதம்தான்....
[ டிரைவரை அதட்டி ]
ம்..பாத்து ஓட்றா.

இக்காட்சியில் மணம் - மரணம் இரண்டுமே விவாதிக்கப்படுகிறது.
இலக்கியத்தில் இரண்டு மனங்கள் ஒன்றிணைந்து ஈடுபடும் கலவியை மரணத்துக்கு ஒப்பிடுவார்கள்.
கலவி சிற்றின்பம்.
மரணம் பேரின்பம்.
இரண்டுமே  ‘துன்பத்திலிருந்து விடுதலை’ அடைவதால்
கலவியும் மரணமும் ஒன்றே என்கின்றனர் தத்துவ ஞானிகள்.
இனி கலவியில் ஈடுபடும் வாலிப வயோதிக அன்பர்கள் இதை மனதில் கொள்க.
இந்த உரையாடல்கள் மூலமாக  ஒரு படைப்பாளிக்குள் இருக்கும் இலக்கியவாதியையும்,தத்துவவாதியையும் இனம் காண முடிகிறது.

முதியவர்கள் இருவரும் வருங்காலத்தில் நிகழவிருக்கிற மரணத்தை வரவேற்று பேசுகிறார்கள்.
சாகேத்ராம் என்ற இளைஞன், கடந்த காலத்தில் நிகழ்ந்த மரணங்களை பேசுகிறான்.
ஒன்று இயற்கையாக நடந்த தந்தையின் மரணம்.
இரண்டு சமூகம் நிகழ்த்திய காதல் மனைவியின் துர் மரணம்.
சாகேத்ராமின் காதல் மனைவியின் துர் மரணத்தின் தொடர்ச்சிதான்  ‘ஹேராம்’.
********************************************************************************
ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமான ‘ ஆல் தட் ஜாஸ்’ என்ற படத்திலும் மரணத்தை பற்றி விளக்கப்படுவதை காண முடியும்.

“All That Jazz ” = 1979 / English / Directed by : Bob Fosse / USA

A reference to “Kübler - Ross model” = (in the dialogue of One of the Screen Characters as) =


Dr. Kübler-Ross ( Chicago, USA ) in her book “On Death and Dying” 
( without the benefit of dying )
has  broken the process of “death” [ in 'terminal' patients ] in to five stages ( of grief ) =
1.Anger, 
2.Denial,
3.Bargaining, 
4.Depression 
5.Acceptance.

விரிவாக தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயா காண்க...


சாகேத் ராமின் காதல் மனைவி அபர்னா துர் மரணம் அடைகிறாள்.
அதன் விளைவாக  சாகேத் ராம்,  இளமையிலேயே உடல் நலம் சீராக இருக்கையிலேயே ‘மரணத்துக்கு முந்தைய  ஐந்து துன்ப நிலைப்பாடுகளில்’ சிக்கி தன் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட்டு [ Freudian Transcendence ] 
இந்திய சமூகத்திற்கான தீர்வை கண்டடைவதை ஹேராமில் இனி காணலாம்.
*********************************************************************************
ஆங்கில இலக்கிய கோட்பாடுகள்  ‘காமெடியை’ [ Comedy ] பல விதமாக பிரிக்கிறது.
அதில்,
1 விட் [ Wit ]
2 ஹியூமர் [ Humor ]
3 காமிக் [ Comic ] முக்கியமான ஒரு வகையாகும். 

பாஷ்யம் மாமா : நீதான ஆரம்பிச்சு வச்ச...
சரி, நல்லதா ஏதாவது பேசுவோமாடா, ராமா? 

ராம் : ம்...என் பொண்டாட்டியும், தோப்பனாரும் செத்து ஆறு மாசங்கூட ஆகல.
அதுக்குள்ள பொண்ணு பாக்கப்போய்ண்ருக்கேன்.
மேற்படி உரையாடல், சோகமும், சுய எள்ளலும் கலந்த
‘பிளாக் ஹியூமர்’ [ Black Humor ] .
What a Splendid Character Continuity !
********************************************************************************

கவிஞர் வாலியின் நடிப்புத்திறமையை மிக அற்புதமாக கையாண்டிருகிறார் இயக்குனர் கமல்.
சமீபத்தில் நடந்த விழாவில்,
திரு.வாலி அவர்கள் ஹேராம் படத்தில் வழங்கிய நடிப்புத்திறமையை நினைவு கூர்ந்து தனது படத்திற்கும் கால்ஷீட் வழங்குமாறு கேட்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

வசந்தா மாமியாக நடித்தவரும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

இக்காட்சி முழுவதையும் நான் ஹேராம் படம் வெளியாவதற்கு முன்பே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
என்னுடைய விளம்பரப்பட வேலையாக ஹைதராபாத்தில் உள்ள  ‘ராமோஜிராவ் பிலிம் சிட்டி’ போயிருந்தேன்.
அப்போது அங்கேயுள்ள மந்த்ரா ஸ்டூடியோவில்  ‘சிலிக்கான் கிராபிக்ஸ்’ கம்ப்யூட்டரும்,
அதற்கான  ‘இன்பர்னோ’ [ Inferno ] என்ற சாப்ட்வேரும் புதிதாக வந்திருந்தது.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து நிர்மாணித்திருந்தார்கள்.
 ‘இன்பர்னோ’ சாப்ட்வேர் இன்றைய விலை 10 மில்லியன் டாலர்.
 ‘இன்பர்னோவை’ முதலில் பயன்படுத்தியது கமலே.
ஹேராம் பட ஸ்பெஷல் எபக்ட்ஸ் முழுக்க  ‘இன்பர்னோவில்’ செய்யப்பட்டதே.
இக்காட்சியில் காரை தனியாகவும்,
ராம், பாஷ்யம்,வசந்தா மாமி, டிரைவர் ஆகியோரை தனியாகவும்,
காருக்கு வெளியில் தெரிகின்ற காட்சியை தனியாகவும்
ஷூட் செய்து ‘இன்பர்னோவில்’ கம்போஸிட் செய்து இணைத்தார் கமல்.

புதிய தொழில் நுட்பங்களை தன் படங்களில் துணிந்து செயல்படுத்துவார் கமல்.
இன்று விஸ்வரூபத்திலும் தொழில் நுட்ப வேட்டையை தொடர்ந்திருக்கிறார்.
*********************************************************************************
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

7 comments:

  1. முகமூடி மனிதர்களின் சதுரங்க ஆட்டம்

    http://multistarwilu.blogspot.in/2012/11/blog-post_24.html

    ReplyDelete
  2. அணணே! அப்படியே ஆளவந்தான் மற்றும் பாபா படங்களை ஆராய்ந்து விளக்குங்கனே. ஒன்னும் விளங்கல!

    ReplyDelete
    Replies
    1. ஆளவந்தான் படம் முழுமையாகப்புரிய நீங்கள்
      ‘சிக்மண்ட் பிராய்ட் - உளப்பகுப்பாய்வு அறிவியல்’ படித்திருக்க வேண்டும்.
      தமிழில் இந்த நூல் ரவிச்சந்திரன் என்பவர் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது.

      பாபா ஸ்ட்ரெய்ட் லைன் படம்.
      புரியாமலிருக்க வாய்ப்பில்லை.
      ‘ஏ பார் ஆப்பிளை’ விட எளிதானது பாபா.

      Delete
  3. அண்ணே, பொண்ணு பாக்க போலாம்னு சொல்லிட்டு கடைசில பொண்ணையே கண்ணுல காமிக்கலயே, ஞாயமா??

    ReplyDelete
    Replies
    1. அடுத்தப்பதிவுல வசுந்தராதாஸை பாத்துடலாம்.
      அது வரைக்கும் பொறுமையா இருக்கணும்.
      அவசரப்படக்கூடாது.

      Delete
  4. Hi,

    could you type this ‘சிக்மண்ட் பிராய்ட்' in English.. I am trying to search in Google.

    ReplyDelete
  5. சிக்மண்ட் ஃப்ராய்ட் பற்றி பதிவே போட்டு விட்டேன்.
    பார்க்கவும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.