நண்பர்களே...
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என பெயரிலேயே வித்தியாசப்படுத்தியவர்கள் மொத்தப்படத்தையே வித்தியாசப்படுத்தி கவர்ந்து விட்டார்கள்.
படம் மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டது.
இனி எந்த கொமபனும் இந்த வெற்றியை தடுத்து விடமுடியாது.
எந்த நல்லப்படம் வந்தாலும் நொட்டை...நொள்ளை...சொல்லும்
‘பதிவுலக பர்வர்ட்டுகளுக்கு’ இப்படத்தில் குறை சொல்ல நிஜமாகவே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கு.
எல்லாக்குறைகளும் இருந்தாலும் படம் தரும் நிறைவு...
வார்த்தைகளால் சொல்ல முடியாது.
நேற்று இரவுக்காட்சி பார்த்தது முதல் படத்தை ஏகப்பட்ட தடவை மனதுக்குள் ஓட்டி பார்த்து ஆனந்தப்பட்டேன்.
ஒரு தலை ராகம், பாலைவனச்சோலை, 16 வயதினிலே, நாயகன்,போன்ற படங்கள் தந்த பரவசத்தை இப்படமும் தந்திருக்கிறது.
ஹிட்ச்ஹாக்கின் திரில்லர் பார்முலாவை நகைச்சுவை கலந்து விருந்தாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.
கதை, திரைக்கதையை மட்டும் நம்பிக்களமிறங்கிய
இயக்குனர் பாலாஜி தரணீதரனுக்கும்...
அவரது ஒட்டு மொத்த டீமிற்கும் பாராட்டு.
திரு.கமலஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சிப்பட்டறையில் செதுக்கப்பட்டவர் பாலாஜி தரணிதரன்.
குருவுக்கு நன்றி சொல்லி படத்தை துவங்கி,
திரைக்கதைதான் படத்தின் கதாநாயகன் என நிரூபித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தை,தமிழ் நாடே உச்சி முகர்ந்து கொண்டாட தயாராகி விட்டது.
இந்தப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவின் மீது தீராத காதலோடு இருக்கும் ரசிகர்களை கர்வப்படுத்தும்.
வெகு விரைவில் இப்படத்தை விரிவாக எழுதுகிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திக்கிறேன்.

ஸார், ஏன் ஸார் நீங்க வேற... இங்க படம் ரிலீஸ் ஆகலனு நாங்களே கடுப்புல இருக்கோம்...
ReplyDeleteசிறு படங்களை வெளி மாநில விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள்.
Deleteநட்சத்திரங்களை நம்பி வியாபாரம் செய்யும் சிறு கூட்டம் அது.
ஓசூர் வந்து பார்த்து விடுங்கள்.
வேறு வழி இல்லை.
இப்படியான நல்ல படங்கள் வெளிநாடுகளில் வெளியிடுவது இல்லை, மொக்கை படங்கள் மட்டும் திரையில் ஓட்டுகின்றார்கள். நல்ல படம் என்று தான் கேள்விபட்டேன், விஜய் சேதுபதியின் நடிப்பும் நல்லாருக்கு போல, சிடியில் தான் பார்க்க வேண்டும் போல.
ReplyDeleteவெளி நாட்டு உரிமை வாங்கும் வியாபாரிகள் மிகக்குறுகிய வட்டத்தில் மட்டுமே உழல்வார்கள்.
Deleteபெரிய தயாரிப்பாளர்கள்,நட்சத்திரங்கள்,இயக்குனர்கள் இவர்களை நம்பி மட்டுமே முதல் போட்டு...நஷ்டம் ஆகி புலம்புவார்கள்.
துப்பாக்கி மாதிரி எப்போதாவதுதான் ஜாக்பாட் இவர்களுக்கு அடிக்கும்.
நல்ல சிறு படங்களை வாங்கி உலகமெங்கும் விநியோகம் செய்ய புதியவர்கள் வர வேண்டும்.
அது வரை காத்திருப்பதை தவிற வேறு வழியில்லை.
உண்மையை சொல்லனும் அண்ணா..மலேசியாவில இந்த படத்தை பத்தின பேச்சு பரவலா காணும்.ஆனால், படம் ஒரு சில இடத்துல ரிலீஸ் ஆனதா சொல்றாங்க..படம் எப்படி எப்ப பார்க்கிறதுனு தெரில..நல்ல பதிவா சுருக்கமா கொடுத்து இருக்கீங்க.நன்றி.
ReplyDeleteமலேசியாவில் புதிய இயக்குனர்களின் படங்கள் தியேட்டரில் வெளியாகாது.
Deleteஆனால் டிவிடியில் வெளியாகி விடும்.
இப்படமும் அதைப்போல டிவிடி அல்லது அஸ்ட்ரோ வானவில்லில் வெளியாகும்.
அப்போது பார்த்து விடு.
வானவில்லில் இப்பெல்லாம் தமிழ் படங்கள் போடுறது இல்ல அண்ணா..வெள்ளித்திரை-தான் இங்க சினிமா சேனல்..சன் டிவி இல்லன்னா டவுன்லோடு போட்டு பார்ப்பேன்..
Deleteஇன்னும் பார்க்கலைண்ணா இனிமே தான் பார்க்கணும் உங்க விமர்சனத்தையும் எதிர்பார்ப்பேன்
ReplyDeleteபாடல்களே கொஞ்சம் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது ஏனெனில் வித்தியாசமாயிருந்தது. பரவலாக பார்க்கலாம் என்பதே பலரின் விமர்சனம் பார்ப்போம்
ReplyDeleteஎன்னாச்சு ?????? படம் பார்க்க போன்னேன்... டிக்கெட் வாங்கினேன்... தியேட்டர் குள்ள போன்னேன்..... ஆஆ படம் ஆரம்பிச்சு இருக்கும்... அப்புறம் முடிஞ்சு போயிரும்.....
ReplyDeleteசுப்பர் படம் சார்......