Apr 22, 2012

கமலின் நிழல் நிஜமாகிறது!

எனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்....
சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்...
 பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்குள் பார்த்து விட்டேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலாக எம்ஜியார் படம்.... குலேபகாவலி பார்த்தேன்.

கிட்டத்தட்ட அதேகால கட்டத்தில்தான் கமலை திரையில் பார்த்தேன்.....
'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற படத்தில் வில்லனாக....
பயங்கரமாக சிரித்து...கோரமான முகத்தை கொண்ட தமிழ் சினிமா வில்லன்களில் மத்தியில்....
அழகான வாலிபனாக....
மயக்கும் விழிகளும்....
குரலிலேயே செக்ஸ் கலந்த வசீகரமும் கொண்ட முற்றிலும் புதிய வில்லனாக காட்சியளித்தார்.

தொடர்ந்து கமலுக்கு அதே மாதிரி படங்களை கொடுத்து கோடம்பாக்கம் அவரை மாறி மாறி கற்பழித்தது.
பாலச்சந்தர் படங்களில் மட்டும் கமலின் கலைத்தன்மை வெளிப்படும்.
அப்படி வந்த கருப்பு வெள்ளை படங்களில் மாஸ்டர்பீஸ்...
 நிழல் நிஜமாகிறது.

இப்படத்தில் கமல் வழங்கிய யதார்த்த நடிப்பை... பின் வந்த எந்த படங்களிலும் கமல் தாண்டவில்லை.
தாண்ட முயற்ச்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்.

இப்படத்தில் கமல் ஒரு துணை பாத்திரம்தான்.
ஷோபா அறிமுக நாயகியாக தோன்றி
படத்தில் அனைத்து நட்சத்திரங்களையும் அடித்து காலி செய்திருப்பார் நடிப்பில்....

கமல் சிவப்பு சிந்தனை கொண்ட வாலிபனாக அப்படத்தில் காட்சியளிப்பார்.
செயின் ஸ்மோக்கர்.
சாப்பிடும்போது கூட சிகரெட்தான் ஊறுகாய்.
செயின் ஸ்மோக்கர்களுக்குறிய மெல்லிய இருமலை தனது பேச்சில் இழைத்து காட்சிகளை கவிதையாக்கியிருப்பார்.

படம் வெளியான நேரத்தில்... பல முறை இப்படத்தை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
அதன் பிறகு இப்படத்தை பார்க்கவேயில்லை.
அந்தப்படத்தின் மீது நான் வைத்திருக்கும் அந்தஸ்திற்க்கு பங்கம் வந்து விடும் என்ற அச்சத்தினால் பார்க்க முயற்ச்சிக்கவில்லை.
படத்தின் பாடல்களை மட்டும் பலமுறை பார்த்து ரசித்து வருகிறேன்.....தனியார் தொலைக்காட்சிகளில்....

கண்னதாசனும்,மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும்,கே.பியும் இணைந்து சரித்திரம் படைத்த பாடல்கள்....

கம்பன் ஏமாந்தான்....
இளம் கன்னியரை... ஒரு மலரென்றானே....
கற்பனை செய்தானே...
கம்பன் ஏமாந்தான்.....

இலக்கணம் மாறுதோ...
இலக்கியம் ஆனதோ....
இது வரை நடித்தது.... அது என்ன வேடம்?
இது என்ன பாடம்.!

சிச்சுவேஷனில்.... இலக்கியம் படைத்திருப்பார் கண்ணதாசன்.

என் மன அடுக்குகளில் அழியா கல்வெட்டுகளாய்...கலந்திருக்கும் காட்சிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.

கமலும் சுமித்ராவும் திருடா...திருடி போல் படம் முழுக்க மோதிக்கொண்டே காதலிப்பார்கள்.
கமல் தனது நண்பன் சரத்பாபு வீட்டில் பேயிங் கெஸ்டாக சாப்பிட வருவார்.
அவரது தங்கை சுமித்ரா... கமல் லைட்டரை எடுத்து ஒளித்து வைத்திருப்பார்.
தனது கவச குண்டலத்தை தேடி கமல் அலைகையில் சுமித்ரா வீட்டு வேலைக்காரி ஷோபா போட்டு கொடுத்து விடுவார்.
“அம்மா...உங்ககிட்ட அதை கொடுக்கலயா.!”

கமல் சுமித்ராவின் பெட்ரூமிற்க்கே சென்று கட்டியணைத்து முத்தமிட முயற்ச்சிப்பார்...
சுமித்ரா திமிறி தடுத்து தள்ளி விடுகையில்...
 “எனக்கு சொந்தமான சிகரெட் லைட்டரை நீங்கள் சொந்தமாக்கி கொள்ள நினைக்கும்போது ...உங்களை சொந்தமாக்க நான் நினைத்ததில் என்ன தப்பு?”
என லாஜிக் பேசுவார்...
 தலையணை அடியில் ஒளித்து வைத்திருந்த சிகரெட் லைட்டரை வீசி எறிவார்.
அதை காட்ச் பிடித்து...
  “ஏண்டா...படவா...உனக்கு ஒளியறுதுக்கு இந்துமதியம்மா...தலைகாணி கேக்குதா”
என சுமித்ராவை அவுட் ஆக்குவார்.

சுமித்ரா வீட்டு வேலைக்காரனாக அனுமந்து என்ற மகத்தான நடிகன் அறிமுகமாகிஅசத்தியிருப்பார்.
அவரை.... படத்தில் எல்லோரும் செவிடன் என்றழைப்பார்கள்.

கமல்:  பெயர் என்ன?
அனுமந்து:  செவிடன்.
கமல்:  உங்க அம்மா உன்னை எப்படி கூப்பிடுவாங்க?
அனுமந்து:  செவிட்டு பொணமேன்னு கூப்பிடுவாங்க...
கமல் அதிர்ச்சியாகி....உனக்கு உங்க அம்மா ஒரு பெயர் வச்சிருப்பாங்க ...
அது என்னன்னு கேட்டுட்டு வா...

அடுத்த காட்சியில்...

அனுமந்து:  என் பெயர் காசி...
கமல்:   காசி...நல்ல பெயர்...நான் உன்னை காசின்னுதான் கூப்பிடுவேன்...போய்ட்டு நாளைக்கு வா

அனுமந்து நெகிழ்ச்சியோடு திரும்பி போகையில்...
கமல், காசி... என அழைப்பார்.
அனுமந்து திரும்பி பார்க்கையில்...
 “ உன் பெயரைச்சொல்லி கூப்பிடணும் போல இருந்துச்சு...கூப்பிடக்கூடாதா!” என உரிமையோடு கொஞ்சுவார்.
அனுமந்து ஒடி வந்து கமல் காலில் விழுவார்.
கமல் அவனை தூக்கி நிறுத்தி
அடச்செவிடா.... என்பார்.

கலை நயமும், மனித நேயமும் இக்காட்சியில் இருந்ததால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இக்காட்சியை அடி பிறழாமல் எழுத முடிகிறது.

படத்தின் மற்றொரு சுவாரஸ்யம்.... மன்மத நாயுடுவாக வந்து அசத்தும் மவுலி...
வார்த்தைக்கு வார்த்தை... வாத்சாயனா.... என்பார்.
 “எல்லோருக்கும் பேவரைட் காட்... பிள்ளையார்,முருகன்னு... இருக்கும்..
எனக்கு வாத்சாயனர்...”
ஒரு சின்ன இடைவெளி விட்டு.... “ வாத்சாயனர்....காம சூத்திரம் எழுதியவர்” என்பார்.
                           
ஷோபா இப்படத்தில்.... முதல் படத்திலேயே... நூறு படத்தில் நடித்த
அனுபவசாலி போல் ஸ்கோர் செய்திருப்பார்.

படத்தின் ஹீரோ...ஹீரோயின் இரண்டுமே ஷோபாதான்.
 “முதல் படத்திலேயே....
 இவ்வளவு கனத்தை புது முகத்தில் ஏற்றுகிறோமே என்ற அச்சத்தில்...ரசிகர்களிடம் ஷோபாவை நெருக்கமாக்க...
 படத்தின் டைட்டில் முழுக்க.... ஷோபாவின் குளோசப் முகங்களை....  விதவிதமாக காட்டினேன்”
 என பின்னாளில் பாலச்சந்தர் பேட்டியில் படித்தேன்.

ந்ல்ல படத்தை ரசிக்க கற்றுக்கொடுத்த எனது முதல் குரு...கே.பிதான்.

33 comments:

  1. எனக்கும் மிகவும் பிடித்த படம் இது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்தது ...உங்களுக்கும் பிடித்ததால்...
      நீங்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்.

      Delete
  2. நீண்ட வருடங்களாக பார்க்காத ஒரு படத்தை, நீங்கள் ரசித்து எழுதும் போதே, படம் பார்க்கும் போதிருக்கும் அனுபவம் எத்தகையது எனப் புரிகிறது..
    கமல் ஹீரோவாக முன்பு நடித்த படங்கள் பெரிதாக கேள்விப்பட்டதில்லை.. உங்கள் அறிமுகத்தில் தெரிந்து கொள்கிறேன்.. நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. இப்படத்தை எழுதும் போதுதான் உணர்ந்தேன்.
      அப்படியே முழுப்படமும் என்னுள் ஒட்டி பார்க்க முடிந்தது.
      நேற்று பார்த்த படமே இன்று மறக்கும் நிலையில் உள்ள நான்...இப்படம் என்னுள் தங்கி இருக்கும் அனுபவத்தை பதிவெழுதும் போது உணர்ந்தேன்.

      வருகைக்கு நன்றி நண்பா...

      Delete
  3. good movie, try to watch Kokila (1977)Director:
    Balu Mahendra

    ReplyDelete
    Replies
    1. கோகிலாவை எப்படியும் பார்க்க வேண்டும்.

      நான் பார்க்காத கமல்
      படம் இரண்டே இரண்டுதான்.
      ஒன்று கோகிலா...
      மற்றொன்று மரோசரித்ரா...

      Delete
    2. Kokila (1977)LINK

      http://songsmoviez.com/Kokila_1977-watch-kannada-movie.html

      Delete
    3. Machine Gun Preacher (2011)-Director:
      Marc Forster-cast-Gerard Butler
      must watch this film and write ur reivew i'm wating sudan civil war true story heart breaking film.

      Delete
  4. ரொம்ப அழகான ரசிகன் நீங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கமல் ரசிகர் என நினைக்கிறேன்.சரியா!

      Delete
  5. இப்போது தான் கமலின் படங்களை செலக்ட் பண்ணி பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாயகன் வரை பார்த்தாச்சு. இப்போ லிஸ்டில் இதுவும் சேர்த்தாச்சு.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் பார்த்து விடுங்கள்.
      படம் இன்றைய படங்களுக்கு சவால் விடும் தரத்தில் இருக்கும்.

      Delete
  6. நல்ல அழகான திரைப்பார்வை.சமீபத்தில் இவ்வளவு ரசித்து ஒரு விமர்சனத்தை உண்மையில் நான் படிக்கவில்லை.படம் பார்க்காததை எண்ணி வருந்துகிறேன்..பார்த்தாலும் உங்க அளவுக்கு ரசிக்க எனக்கு ரசனை உள்ளதா என்பதே சந்தேகம்தான்..தங்களது பரிந்துரையில் ஒரு படம் என்னும் போது காணாமல் போயில், பெரிய இழப்புதான்..கண்டிப்பாக சில நாட்களில் டவுன்லோடு போடுகிறேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் கிடைக்காவிட்டால் டிவிடியில் பார்த்து விடு.
      மலேசியாவில் கிடைக்கும்.

      விதவிதமாக என்னை பாராட்டுகிறாய்...ந்ன்றி தம்பி.

      Delete
  7. hii.. Nice Post

    Thanks for sharing

    Best Regarding.

    More Entertainment

    For latest stills videos visit ..

    www.chicha.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  8. edison sukumaran4/22/2012 11:23 PM

    my top 10 movies are
    400 blow series (better series i ever seen}
    cindrella man best russell movies
    baheria, best reals story
    maannon of the spring it has two series both are good
    beautuful mind its my alltime favourite
    rendezvous its best romance movie i ever seen
    cinema paradiso its simple but simple is always best
    godfather series both are look real gangster
    and city of god life
    bicycle theives the real life ever potrait in cinema
    turkish delight best adult movie
    god must be crazy best comedy series
    bonne and clyde it is very old gangster movie but
    hith**** movies its not easy to rank which is his best
    i recently watched raja parvai it is the best kamal movie dialogues are to good, i never seen dialogue like rajaparvai even in world movies even it is far better than guna and mahanadhi and so on

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!...
      ராஜ பார்வை பற்றி தனிக்கச்சேரி வைத்திருக்கிறேன்.

      கருத்துக்கு நன்றி.

      Delete
  9. கம்பன் ஏமாந்தான் பாடல் எனக்கு ரொம்பப் புடிச்ச ஒன்று. இன்றும். உங்க கால் காலைல மிஸ் பண்ணிட்டேன். ஏன்னா எந்திரிச்சதே காலைல பதினொண்ணரை :-) ... நாளை காலைல கூப்புடுறேன் :)

    ReplyDelete
    Replies
    1. சொல்லி அடிச்ச கில்லி...
      நேற்று நண்பரிடம் குறிப்பிட்டேன்...
      கம்பன் ஏமாந்தான் பாடலை குறிப்பிட்டு கருந்தேளின் பின்னூட்டம் வரும் என்று...
      எதிர்பார்ப்பை நிறைவேற்றியதற்க்கு நன்றி.

      அம்பு விழி என
      ஏன் சொன்னான்?
      அது பாய்வதில்தானோ!

      இதழ் அருஞ்சுவைப்பால் என...
      ஏன் சொன்னான்?
      கொதிப்பதினால்தானோ!

      கொதிப்பதினால்தானோ...என்ற வரிக்கு,
      சுமித்ராவின் விம்மித்தணியும் மார்புக்கு
      மிட் குளோசப் ஷாட் வைத்திருப்பார் கே.பி.
      சரியான விசுவல் குசும்பு.

      Delete
  10. ஷோபா அவர்களின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். மூடு பனி படத்துல ‘என் இனிய பொன்நிலாவே’ பாட்டுல அவ்ளோ கேஷுவலா இருப்பாங்க. ‘முள்ளும் மலரும்’-ல அப்படியே வேற மாதிரி. ரெண்டுமே அட்டகாசமா பொருந்தும்.

    இந்த படத்தை நான் இதுவரைக்கும் பார்த்தில்லை. சீக்கிரம் பாத்துட்டு சொல்றேன் அண்ணா.. :)

    ReplyDelete
    Replies
    1. மூடுபனி...ஒரு தீபாவளியில் வெளியாகியது.
      ஷோபா இறந்த பிறகு ரீலீஸான படம்.
      அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவது போல் படத்தின் டைட்டில் கருப்பு வெள்ளையில்...இசையில்லாமல் மவுனமாக பயணிக்கும்...
      இயக்குனர் பாலுமகேந்திரா பெயர் திரையில் தோன்றி மறைந்ததும்...
      இளையராஜாவின் குரலில்

      தக தக தக தக... தாங்க தக தக தக....

      என தடதடத்து...

      பருவகாலங்களின் கனவுகள்
      நெஞ்சில் பளிங்கு போல வரும் நினைவுகள்
      என பெண்குரல் பின்னணியில் ஒலிக்க
      ஷோபா,பானுச்சந்தர் மேண்டேஜ் ஷாட்கள்
      அனைத்தும் பாலு மகேந்திராவின் கல்வெட்டுக்கள்.

      எல்லாப்படங்களிலுமே சேலை,பாவாடை தாவணியில் கலக்கிய ஷோபா...
      படம் முழுக்க மாடர்ன் டிரஸ்ஸில் பவனி வந்த ஒரே படம் மூடுபனி.

      நன்றி நண்பா...
      எண்பதுகளில் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர்... மூடுபனி காலத்துக்கு கொண்டு சென்றதற்க்கு.

      Delete
  11. எனக்கு ரொம்ப பிடித்த கமல் படம்.டி வி டி வைத்திருக்கிறேன்.
    சிகரட் லைட்டர் இல்லாமல் ஷோபாவிடம் தீப்பெட்டி கொண்டுவா
    இல்லைன்னா கொள்ளிக்கட்டையாவது கொண்டுவா என்று கமல்
    கேட்பது நல்லா இருக்கும்.உங்களுக்கு தூத்துகுடியா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...இந்தப்படம் நெறைய பேர் மனதில் தங்கி இருக்கும் போல...
      உங்க பின்னூட்டமெல்லாம் பார்க்கும் போது படத்தை உடனே பார்க்கணும் போல இருக்கு...

      எனக்கு தூத்துக்குடி பக்கத்துல...
      திருச்செந்தூர் அருகில் ஒரு வறண்ட கிராமம்.
      பெயர் மட்டும் சீர்காட்சி என்று இருக்கும்.

      Delete
  12. மிக அருமையான ஒரு கமலில் படம்.செம கிண்டல்,நிறைய மனிதாபிமானம்,எக்க்காலத்திற்கும் ஏற்ற ஒரு அருமையான இளைஞனாக கமல் கலக்கிய படம்.ஷோபா ஏன் எப்பவும் சோகமாய் இருந்தார்? அந்த பெண்ணை நினைத்தாலே பாவமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பிளாக்&ஒயிட் கமல் படங்கள் மிகவும் பிடிக்கும்.
      உணர்ச்சிகள்,அவர்கள்,மூன்று முடிச்சு,உயர்ந்தவர்கள்,அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான் ஆகிய படங்கள் முக்கியமானவை.
      நி.நி. ஸ்பெசல் பிடித்தம்.

      Delete
    2. ஷோபா...அழகே இல்லாத கவர்ச்சியான பெண்.
      கண்களில் எப்போதும் ஒரு மென் சோகம் இருக்கும்.
      அவரது இறப்புக்கு காரணம் பாலுமகேந்திரா கிடையாது.
      யார் காரணம் என்று எனக்கு ஆணித்தரமாக தெரியும்.
      ஒன்று ஷோபாவின் தாயார்.
      மற்றொன்று....ஸாரி... சொல்ல பயமாக இருக்கிறது.

      Delete
  13. ahaa...arumayaana post!!!..this film is one of my fav too.. escpecially all the scenes from sumithra and kamal..indha series la innum neria intresteting matters expect panren romba gap vittadheenga:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாலு...
      கமல்+சுமித்ரா வரும் அத்தனை காட்சியுமே...
      10,000 வாலாதான்.

      Delete
  14. பிரமாதம் சாரே . இப்போவே படம் பாக்கணும் போல இருக்கு.. டவுன்லோட போட்ருவோம்..

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் பாருங்க...
      இன்னும் பல தலைமுறைகள் தாண்டி இப்படம் ரசிக்கப்படும்.

      Delete
  15. படத்தை பற்றி, உங்கள் பார்வையில் மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நான் இந்த படத்தின் விமர்சனத்தை கடந்த ஆண்டு எழுதியிருக்கிறேன். அதற்க்கான லிங்க் இதோ: http://oorkavalan.blogspot.com/2011/03/blog-post_14.html . பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த செவிடா காட்சியில், இறுதியில் கமல் அவரை செவிடா என அழைக்கையில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் தன தாயை நேரில் கண்டதைப் போல் இருக்கும்.........யாரை பாராட்ட? இயக்குனறையா இல்லை நடிகரையா?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.