Apr 18, 2012

குருவுக்கு வாழ்வளித்த சிஷ்யன் ரஜினி


சிவாஜிராவ் என்ற கண்டக்டரை ரஜினிகாந்த் ஆக்கிய பிரம்மா கே.பாலச்சந்தர்.
அறிமுகப்படுத்திய இயக்குனர்களை... தயாரிப்பாளர்களை...
 திரும்பியே பார்க்காத தமிழ் திரை உலகில்....நன்றிக்கடன் செலுத்துவதில் கர்ணனாக இன்றும் ஜொலிப்பவர் ரஜினிகாந்தே.

கவிதாலயா என்ற நிறுவனம் மூலம்.... பல படங்களை தாயாரித்து இயக்கினார்  பாலச்சந்தர்.
ரஜினியை வைத்து இயக்குவதை தில்லு முல்லுவோடு நிறுத்தி கொண்டார்.
எஸ்.பி.முத்துராமன் போன்ற மசாலா பட இயக்குனர்கள் மூலம்...
 ரஜினி படங்களை தயாரிக்க மட்டுமே செய்தார்.

நூறு படங்களை தயாரித்த கவிதாலாயா நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.
அத்தனை படங்களின் வரவு செலவை பார்த்தது கவிதாலாயா நடராஜன்.
அந்த ஊழல் பெருச்சாளி.... சமயம் பார்த்து பல கோடிகளை சுருட்டிக்கொண்டு பிரமிட் என்ற நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க துவங்கியது.
[ஆனால் பாலச்சந்தர் வயிற்றில் அடித்து துவங்கிய... பிரமிட் நிறுவனம்... தயாரித்த ஒரு படம் கூட ஒடவில்லை]

.கடனுக்காக...கடல் மாதிரி இருந்த பங்களாவை விற்று...
 ஒரு பிளாட்டில் வாடகைக்கு சரஸ்வதி குடியேறினாள்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட அன்று நான் தூங்கவில்லை.
ஒரு வாரம் நான் விட்ட சாபங்கள் நடராஜனை எழு ஜென்மங்களுக்கும் துரத்தும்.
பாலச்சந்தர் ரசிகனான நானே கொதித்து போனேன்.
ரஜினிக்கு இருக்காதா!

அண்ணாமலையாக அவதாரம் எடுத்தார்.

குசேலன் மூலமாக மீண்டும் குருவை குபேரனாக்கிய கண்ணன் ரஜினி.

போன பதிவில் லகுட பாண்டி என்ற கொசு விடாமல் துரத்தியது.
விஷயத்தை.... முந்தைய பதிவின்.... பின்னூட்டத்தில் காண்க...
அலோ...மிஸ்டர் லகுட பாண்டி...
எம்.ஜி.யார் முதல்வராக இருந்த நேரம்...
மயிலை குருபாதம் என்றொரு தயாரிப்பாளர்....அதிமுக ரவுடி.
அவரை ரஜினி காரில்....ஒட...ஒட...  விரட்டி....
 கொல்ல முயற்ச்சித்தார்.
காம்பவுண்ட் சுவரில் மோதிநிறுத்தினார்.
ஜஸ்ட்... மிஸ்... குருபாதம்.
இந்த கொலை முயற்ச்சி கேஸ் பற்றி தெரியுமா?....லக்க்க்க்குட பாண்டி.

தனது கல்யாணம் பற்றிய செய்தியை பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தார்.
திருப்பதியில் நடக்கும் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது என்றார்.
 “வந்தால்”....எனக்கேட்ட பத்திரிக்கையாளரிடம் “செருப்பால் அடிப்பேன்” என்ற உண்மையான மனிதன் ரஜினி.
நிஜத்தில் நடிக்க தெரியாது.
அந்த திறமை அவருக்கு கிடையாது.
கமலுக்கும் கிடையாது.
அதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்.

தமிழ்நாடே கொதித்துப்போய் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்து போராடினால் தமிழ்நாடே அவரது பின்னால் திரண்டு நிற்க்கும்.
ஆனால் அவர் எப்போதும் போல...
 கோச்சடையானில் ஒளிந்து கொண்டார்..
இந்த ரஜினியை... எனக்கு என்றுமே பிடிக்காது.

14 comments:

  1. நிஜத்தில் நடிக்க தெரியாது.
    அந்த திறமை அவருக்கு கிடையாது.
    கமலுக்கும் கிடையாது.
    அதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்./////

    ஓ அதுக்கு தான் அவர் அரசியலுக்கு வரமாட்டேங்கிறாரோ

    ReplyDelete
    Replies
    1. ரஜினி அரசியலுக்கு வராததற்க்கு பல காரணங்கள் உண்டு...அதில் இது ஒன்று.

      Delete
  2. அண்ணா, இந்த தகவலையெல்லாம் எங்கிருந்து எடுக்கிறீங்க..சூப்பர்..
    சரி, உங்களுக்கு ரஜினி சார் பிடிக்காதா ? அது ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. ரஜினியை எனக்குப்பிடிக்கும்.
      ஆனால் அரசியல்,சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் குரல் கொடுக்காமல் அமைதியாக போய்விடுவது பிடிக்காது.

      Delete
  3. மீண்டும் ஒரு சிறப்பான பதிவு..
    கொலை முயற்சி கேஸும் எனக்கு புதுசு.. அறிய வைத்தமைக்கு நன்றி!
    கடைசியில கமல் ரசிகர்-ங்கறத நிரூபிக்கிறீங்களோ?

    ReplyDelete
  4. பாஸ்கரன், நீங்க ரொம்ப கோவபடறிங்க.

    பிடிவாதம் நிச்சயமா எனக்கு இல்லை.

    ஒரு கட்டுரையில் சாரம்சத்தில் தனக்கு தெரிந்த சில விஷயங்களை வாசகன் அதை எழுதியவருடன் பகிர / விவாதிக்க உரிமை இருப்பதாகவே கருதுகிறேன்.

    கருத்துக்கள் தவறாய் இருப்பின் அதை சுட்டிக்காட்டும் பொறுப்பு இருவருக்குமே இருக்கிறது. தனக்கு எல்லாம் தெரியும் என்பதில் தப்பே இல்லை ஆனால் அடுத்தவனுக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்பது தவறு.

    உங்களுக்கு பிடிக்காத அந்த ரஜினி மற்றவர்களுக்கும் பிடிக்காமல் போகலாம்.

    ஒரு சில நாட்கள் அவரோடு மிக அருகில் இருந்த நபர்களோடு இருந்தமையால், 1996இல் அவரின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன...அரசியலுக்கு வருவதற்கு அவரிடம் இருந்த தயக்கங்கள் எதை சார்ந்து இருந்தன போன்ற விஷயங்கள் அவர்களின் விவாதத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.

    மற்றபடி மயிலை குருபாதம் ஏன் ரஜினியை துரத்தினார், ரஜினி ஏன் அவரை காரில் துரத்தினார் என்பது எனக்கு "ஆயிரம் ஜென்மங்கள்" எடுத்தாலும் தெரியபோவதில்லை.

    உங்களை தொந்திரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் போது அதற்க்கு ஒரு நாகரீகம் உள்ளது.
      உங்களுக்கு தெரிந்த கருத்தை அழகாக...
      பின்னூட்டமிட்டு எல்லோரையும் கவர்ந்திருக்கலாம்.

      ரஜினி பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை ஒரு பதிவு போடுங்கள்.
      எனது வருத்தம் அதை படிக்கும் போது பறந்து போகும்.

      Delete
  5. பல தகவல்கள் பாஸ் சூப்பர்.

    /////தமிழ்நாடே கொதித்துப்போய் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்து போராடினால் தமிழ்நாடே அவரது பின்னால் திரண்டு நிற்க்கும்.//////
    பாஸ் ரஜினியிக்கும், மின்வெட்டுக்கும் என்ன சம்மந்தம் பாஸ்...........????

    /////ஆனால் அவர் எப்போதும் போல...
    கோச்சடையானில் ஒளிந்து கொண்டார்..//////
    அவருடைய வேலை திரைப்படங்களில் நடிப்பது........அதை இன்றும் சரியாக செய்துகொண்டு இருக்கிறார்.
    இதுல ஒளிந்துக்கொள்வதற்கு என்ன இருக்கிறது........!!!!!!

    இதன் தொடர்சிகளை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை தடவை ரஜினி அறிக்கை வெளியிட்டு நமது அபிமானத்தை பெற்றிருக்கிறார்.
      இப்போதும் மின்வெட்டு பிரச்சனையில் ரஜினி போராடி இருந்தால் மத்திய அரசு பணிந்திருக்கும்.

      Delete
  6. தன் கல்யாணம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'செருப்பால் அடிப்பேன்' என்று தலைவர் சொல்லவில்லை. துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று தான் சொன்னார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ரஜினி அதற்க்கு மன்னிப்பு கேட்டு விட்டார். அது தான் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்'. ஆமா, நான் தெரியாம தன் கேக்கறேன். ரஜினிக்கும் மின்வெட்டு பிரச்சனைக்கும் என்னங்க சம்பந்தம்? அவரு அவர் வேலையை பாக்குறார். அவர் அரசியலுக்கு வந்து பிறகு கேளுங்க இந்த கேள்வியை.

    ReplyDelete
    Replies
    1. ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டாரே!
      அப்போதும் அரசியலுக்கு வரவில்லையே!

      முக்கிய தருணங்களில் வாய்ஸ் கொடுத்துள்ளாரே!
      தமிழ் மக்களுக்காக மீண்டும் ஒரு வாய்ஸ் கொடுப்பதில் என்ன தயக்கம்!

      Delete
  7. குசேலன் படத்தை பிரமிட் நிறுவனம் தான் distribute செய்தது.. ஏதோ முரணாகத் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. பிரமிட் நிறுவனம் வேறு நபர்களால் இப்போது நடத்தப்படலாம்.
      பிரமிட் நிறுவனத்தை விட்டு நடராஜன் வெளியேறி இருக்கலாம்...அல்லது வெளியேற்றப்பட்டிருக்கலாம் நண்பரே!

      Delete
  8. //இப்போதும் மின்வெட்டு பிரச்சனையில் ரஜினி போராடி இருந்தால் மத்திய அரசு பணிந்திருக்கும்//
    இன்னுமா இந்த ஊரு நம்புது?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.