4-4-2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் ஓளிப்பதிவாளர் செழியன்.. சைக்கிளிஸ்ட் படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப்பை பேட்டி கண்டு அந்த அனுபவத்தை அற்ப்புதமாக ஒரு கட்டுரையில் படம் பிடித்திருந்தார்.
அப்பெரு வெள்ளத்தில் சிலதுளிகள்....
21 வயது வரை சினிமாவே பார்க்காதவர்.
இன்று உலகம் போற்றும் திரைப்பட இயக்குனர்.
இவரது மனைவி மெர்ஷியா,மகள்கள் சமீரா,ஹானா மூவருமே இயக்குனர்கள்.
மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர்.
உலகத்திரைப்பட விழாக்களில் இந்த குடும்பம் பெற்ற சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89.
ஈரானுக்கு எதிராக படமெடுத்ததால்...குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.
திரைப்பட கல்லூரி பற்றி...
“இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்க்காக சினிமாவை ஒரு தொழிலாக கற்றுக்கொடுக்கின்றன.
அரசுப்பணியாளர் போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன”
செழியன்: உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில் முறை அல்லாத சாதாரண மனிதர்களையே நடிக்க வைக்கிறீர்கள்.
அவர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
“நான் நடிகர்களாக தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன்.
யார் அதிகமாக பிச்சை எடுத்து வருகிறார்களோ அவர்தான் நடிகர்.
எந்த கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன் ஒரு பிச்சைக்காரராக நம்ப வைக்க முடிகிறது என்றால்,அவர்தானே சிறந்த நடிகர்!”
நமது நடிகர்கள்,இயக்குனர்கள் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகள் கோடிக்கணக்கில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் குறைந்தது 100 பேர் இருப்பதை கேட்டு தலை சுற்றி இருக்கிறது மக்மல்பஃப்புக்கு...
“100 பேரை வைத்துக்கொண்டு எப்படி படமெடுக்க முடியும்?
உதாரணத்துக்கு வறுமை பற்றிய படமெடுக்கிறீர்கள் என்றால்,ஷாட் முடிந்ததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பீர்களா?
எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம்.
எனது படப்பிடிப்பில் நான்,டிரைவர்,சமையற்காரர்,நடிகர் எல்லாம் சேர்த்து
8 பேர்தான் இருப்போம்.”
“சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது.
ஒரு தொழிலாக இருந்தாலும்,சினிமாவாக இருந்தாலும், நிறையப்பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால்,அதை வைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள்.
நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்?
செலவை குறைக்க வேண்டும்.
எனது மகள் ‘புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆப் ஷேம்’ என்றொரு படம் எடுத்தாள்.
இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிடல் கேமாராவினால் எடுக்கப்பட்டது.
செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய்.
திரைப்பட விழாக்களில் அது ஈட்டிய பணம் 15 லட்சம்.
அதுதான் அடுத்தப்படத்துக்கான மூலதனம்.
இந்தியாவில் கதைக்கா பஞ்சம்?
சாலையில்தான் எத்தனை கதைகள்!
நானும், எனது மனைவி மெர்ஷியாவும் நேற்று பிரசாத் லேப்பிலிருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம்.
அந்தக்கடையில் பழச்சாறு வாங்கி குடிக்க முயன்றபோது ,என் கால்களை யாரோ சுரண்டினார்கள்.
திரும்பி பார்த்தேன்.
அழுக்கான ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான்.
அவன் என் கையில் இருந்த பழச்சாறை கேட்டான்.
நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்து விட்டு,அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன்.
அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை.
அதற்க்கு மேல் அவன் செய்ததுதான் தீராத ஆச்சரியமாக இருந்தது.
என்னிடம் இருந்த பழச்சாறு குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை.
அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான்.
அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன.
என்றாலும்,சாலையை கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தி தாளை விரித்து உட்கார்ந்தான்.
அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு,
போகும்... வரும்.... வாகனங்களையும், மனிதர்களையும்
ஏளனமாகப்பார்த்துக் கொண்டே அந்த பழச்சாறை பருகினான்.
நான் அசந்து விட்டேன்.
அந்தச்சிறுவனை பின் தொடருங்கள்.
அங்கு ஒரு கதை நிச்சயமாக இருக்கிறது.
அதுதான் சினிமா.
இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால்,அதன் காரணம் என்ன?
அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கின்றார்கள்.
அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா”
“இங்கு எனது படங்கள் ,மெர்ஷியாவின் படங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது.
என்னைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை.
ஆனால் உங்கள் ஊரில் கிடைக்கிறது.
இரண்டு பிரதி வாங்கினேன்”
இந்த வரிகளை படித்தபோது... உலகசினிமாவை ஊர் ஊராக விற்ற நான் பெருமிதத்தால் பூரித்துப்போனேன்
நிறை குடம்... மக்மல்பஃப்...
பாராட்டுகிறார்.
மிஷ்கின் போன்ற குறைகுடங்கள்தான் திட்டும்.
மக்பல்பஃப் படைப்புகள்[தகவல் உபயம் விக்கிப்பீடியா] :
- Boycott (1985)
- The Street Vendor (1986)
- The Bicyclist (1987)
- Dastforoush (a/k/a "The Peddler," US) (1987)
- The Marriage of the Blessed (1988)
- Time of Love (1990)
- The Nights of Zayande-rood (1990)
- Once Upon a Time, Cinema (1991)
- Actor (1993)
- Hello Cinema (1994)
- Gabbeh* (1995)
- Bread and Flower-pot (retitled A Moment of Innocence for anglophone audiences) (1995)
- The Silence (1997)
- Tales of Kish (1999)
- Test of Democracy (1999), with Farrokh-yar
- Kandahar (2001), brought him the Federico Fellini Prize From Unesco in Paris in 2001
- Alefbay-e afghan (2002) (The Afghan Alphabet, documentary)
- Monday Market (2004)
- Colder Than Fire (2005)
- Sex & Philosophy (2005)
- Chair (2005)
- Poet of wastes (2005)
- Scream of the ants (2006)
- The Man Who Came With the Snow (2009), co-directed with Marzieh Meshkini
Films banned in Iran
- Time of Love (1990), banned since 1990
- The Nights of Zayande-rood (1990), banned since 1990
- Bread and Flower-pot (1995), banned from 1995 until 1997
- The Silence (1997), banned from 1997 until 2000
- Naser-ed-din Shah (1991), banned from 1992 until 1993
Film appearances
- The Marriage of the Blessed (1988), directed by himself
- Close-up (1988), directed by Abbas Kiarostami
- Hello Cinema (1994), directed by himself
- Bread and Flower-pot (1995), directed by himself
- The Test of Democracy (1999), directed by himself and Farrokh-yar
[edit]Books on Makhmalbaf
- Hamid Dabashi, Close Up: Iranian Cinema, Past, Present and Future. (Chapter on Makhmalbaf). Verso, 2001.[12]
- Hamid Dabashi, Like Light from the Heart of Darkness. Sakuhinsha, Japan, 2004.[13]
- Hamid Dabashi, Masters & Masterpieces of Iranian Cinema: (Chapter XI: Mohsen Makhmalbaf: A Moment of Innocence. pp. 325–368). Mage Publishers, 2007. ISBN 093421185X.[14]
- Hamid Dabashi, Makhmalbaf at Large: The Making of a Rebel Filmmaker. I. B. Tauris, 2007. [http://www.ibtauris.com/display.asp?K=9781845115326&aub=Hamid%20Dabashi&m=1&dc=2
[edit]Films about Makhmalbaf
- The Closed Eyes of Mohsen
- Close up, by Abbas Kiarostami, 1990
- Friendly Persuasion: Iranian Cinema After the Revolution
- Cinema Is Nation's Language
- The Dumb Man's Dream
- Who's Who?
- Salam Cinema (German)"
- Cinema Is Nation's Language (Tadjik)"
வணக்கம் அண்ணா,
ReplyDeleteஅருமையான ஓர் கட்டுரைத் தொகுப்பு.
ஒரு நடிகர் உருவாகுவதற்குத் தேவையான அனைத்து தகவல்களுடன்,
இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் எனும் உண்மையினையும் இப் பதிவு சொல்லி நிற்கிறது.
@நிரூபன்
Deleteவாங்க நிரூபன்...
ஆனந்த விகடனில் கட்டுரை மொத்தமும் படியுங்கள் நிரூ...
நல்ல சினிமா தமிழில் வருவதற்க்கு இலக்கணம் சொல்லியிருக்கிறார்.
படைப்பாளிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு வகுப்பெடுத்து உள்ளார்.
அண்ணா மிக்க வணக்கம், சில நாட்கள் தங்கள் எழுத்துக்கள் படிக்காததை எண்ணி வருந்துகிறேன்.சில பிரச்சினைகள் அதான் காரணம்.
ReplyDeleteதங்கள் இந்த பதிவின் வழியே ஒரு சிறந்த அயல்நாட்டு சினிமா இயக்குனரை தெரிந்துக்கொண்டேன்.இந்திய சினிமாவை தரமிக்க ஒன்றாக மாற்றுவதற்கு அவன் சொன்னவை அனைத்தும் சத்தியம்..எனக்கு அந்த விகடன் புத்தகம் படிக்க வேண்டும் போல உள்ளது.இணையத்தில் கிடைக்குமா.தேடிப்பார்க்கிறேன்.மிக்க நன்றி.
@குமரன்
Deleteதம்பி..
விகடன் இணையத்தில் கிடைக்கிறது.
முழு கட்டுரையும் படி.
தரமான சினிமா எடுப்பது எப்படி என்ற சூத்திரம் விளங்கும்.
உபயோகமான பதிவுக்கு நன்றி ... நேரமிருந்தால் என் குறும்படத்தை பார்க்கவும் ... நல்லதோர் வீணை ... ( நேசம் + யுடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் ) http://pesalamblogalam.blogspot.in/2012/04/blog-post.html
ReplyDelete@அனந்து
Deleteவருகைக்கு நன்றி.
கட்டாயம் தங்கள் படத்தை பார்த்து விடுகிறேன்.
நீங்கள் கூறியுள்ள மக்மல்பஃப்பின் வார்த்தைகள் ஒன்றையும் தமிழ் சினிமா இன்டஸ்ரியில் இருக்கும் அனைவரும் வாசிக்கவேண்டும். முக்கியமாக கமர்ஷியல் மசாலா (குப்பை) இயக்குனர்கள். அப்படி நடந்தால் இன்னும் ஓரளவு நல்ல யதார்த்தமான படங்களை எதிர்ப்பார்க்கலாம்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
@ஹாலிவுட் ரசிகன்
Deleteநண்பரே...
இப்பதிவில் 95 சதவீதம்...மக்மல்பப் உரையாடலை செழியன் மொழிபெயர்த்த வார்த்தைகள்.
நான் ஜெராக்ஸ்தான்.
விகடனில் வந்த அந்த கட்டுரையை பத்திரமாக வெட்டி சேகரித்து வைத்துள்ளேன்.. அத்தனை அற்புதமான வரிகள் அவர் கூறியது.. உங்கள் அலைபேசி எண் வேணும் தல.. cau you send me your number to castrokarthi@gmail.com..
ReplyDelete@காஸ்ட்ரோ கார்த்தி
Deleteமக்மல்பஃபின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொக்கிஷம்.
என்னுடைய மொபைல் எண் 90039 17667.
வருகைக்கு நன்றி நண்பரே!
த்லைவரே,
ReplyDeleteமிகநல்ல ஒரு கட்டுரை,செழியன் போன்றவர்கள் இதுபோன்ற பேட்டிகளை நிறைய பெற்றுத் தரவேண்டும் ,மிஷ்கின் ஒரு வெளியுலகில் நடிக்கும் நடிகன்,குறைகுடம் என்னும் சொல்லே அதிகம்,உங்களின் உலகசினிமா ஞானம் மிஷ்கினுக்கு இருக்குமா?என்றால் இருக்காது,நீங்கள் இரானிய படங்களை தமிழகத்துக்கு தருவித்து விற்பதில் மிகவும் பெருமை கொள்ளலாம்.
@கீதப்பிரியன்
ReplyDeleteஎன்றும் என் நலம் விரும்பும் நண்பரே!
தங்கள் வருகையும் ...பாராட்டும்...
என்னை உயரே தூக்கி பிடிக்கிறது.
Worth to share.. Keep posting good things :)
ReplyDeleteநன்றி தோழரே
ReplyDelete