விடுதலைப்பொழுது
எழுந்திரு பிள்ளாய்
இது விடுதலைப்பொழுது
இருளின் துயில் கலைகிறது
நீயோ
இழுத்துப்போர்த்தபடி
இன்னம் உறங்குதியோ?
எழுந்திரு
இதோ
விடியலில் கீழ் வானம்
ஒளி முடி தரிக்கும் உன்னதம்
உனக்குத்தரிசனமாகவில்லை
அதோ
உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை
தொற்றித்தவழ்கிறது
ஒற்றிக்கொள் கண்களில்
கதவிடுக்கின் ஊடாக
உட் செல்லத்துடிக்கிறது
திறந்து விடு முற்றாய்
உனதகம் ஓளி பெறட்டும்
கவிதை உபயம்:சு.வில்வரத்தினம்
நூல்:உயிர்த்தெழும் காலத்திற்காக
வெளியீடு:விடியல் பதிப்பகம்
தேர்தல் நாள் அறிவித்த பின் கீழ்க்கண்ட இந்தக்கவிதையை
நெல்லை ஹோசிமின் என்றப்பெயரில் பதிவிட்டேன்.
இரத்தத்தில் எழுதியது
இனியும் எங்களால் தாங்க முடியாது.
இனியும் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
எங்களுடைய குதிரைகளை தின்றுவிட்டோம்.
எங்களுடைய பறவைகளையும் தின்று விட்டோம்;
எலிகளையும் பெண்களையும் தின்றுவிட்டோம்...
இன்னும் எங்கள் வயிறு காய்ந்து கொண்டுதானிருக்கிறது.
எங்கள் அரண்களை மொய்த்திருக்கிறார்கள் எதிரிகள்.
அவர்கள் நாலாயிரம் பேர்களுக்கும் மேல்;நாங்கள் நானூறு பேர்.
இனியும் வில்லிழுத்து,வசைகளல் அவர்களைத்தாக்க
வலு இல்லை எங்களிடம்;அவர்களைக் குதறத்
துடிக்கும் பற்களைக்கடித்துக்கொள்ள மட்டுமே வலு உள்ளது
எங்களிடம்.
பற்றி எரியும் இக்கவிதையை விதைத்தவர் சு.வில்வரத்தினம்.
விடியல் வெளியீடான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதை நூலில் இது போன்ற வெடிமருந்துகள் கொட்டிக்கிடகிறது

செல்வரத்தினம், வில்வரத்தினம்.. பெயர்களே ஒத்திசைக்கின்றதே...?
ReplyDeleteபயனுள்ளதொரு அறிமுகம்.. நன்றி நண்பா!
பட்டாசைப் போல இருக்கிறது கவிதை. இருப்பினும், ஆற்றாமையை எங்ஙனம் போக்கிக்கொள்வது. . . . :-(
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteவெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆன த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.
கிங் விஸ்வா
தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்
நண்பரேJZ...தவறு நேர்ந்து விட்டது.மன்னிக்கவும்.இரண்டு கவிதையுமே வில்வரத்தினம்தான்.
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே...இந்தக்கவிதைகள் என்றாவது ஒரு நாள் உயிர்த்தெழும்.
ReplyDeleteதமிழ் சினிமா உலகை நிச்சயம் வந்து பார்க்கிறேன் விஸ்வா.
ReplyDeletehow to add particular label feed only in google reader
ReplyDeletehttps://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US
please forward this to others...d..