கம் செப்டம்பர் படம் உலகசினிமா அல்ல.ஆனால் நம்மை குஷிப்படுத்துவதையே தலையாய கடமை கொண்டதில் முதன்மையான படம்.புயலாக நம்மை ஆக்ரமித்து நம் மனதின் வெற்றுவெளி பிரதேசத்தில் மகிழ்ச்சி என்ற நதியை வெள்ளமாக பாய்ச்சி மிதக்க வைத்து விடும்.நகைச்சுவை என்ற ஆயுதத்தை சரமாரியாகப்பிரயோகித்து நம்மை வீழ்த்தி விடுகிறார் இயக்குனர் ராபர்ட் முல்லிகன்.
இப்படத்தின் டைட்டில் மியூசிக், படத்தின் தீம் மியூசிக்காக வளர்ந்து இன்று வரை பல திரையரங்குகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.சென்னை தேவி,காசினோ,சபையர்,பைலட் போன்ற திரையரங்குகளில் கேட்டு...கேட்டு வளர்ந்தவன் நான்.தியேட்டரில் டிக்கெட் கிடைக்காவிட்டால் கூட என் காதுகள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து இந்த இனிய இசையை கேட்பதில் வெற்றி பெற்று விடும்.[இந்த வார ஆ.விகடனில் சுகா தனது கட்டுரையில் இப்படத்தின் இசையை குறிப்பிட்டு இருக்கிறார்]
இப்படத்தில் கதையை மட்டும் தேடாதீர்கள்.அந்த கத்தரிக்காயை கடைசி வரை உங்களால் கண்டு பிடிக்க முடியாது. ஏ.வி.எம் இப்படத்தை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து அன்பே வா எனப்பெயரிட்டு காசு பார்த்தார்கள்...பார்க்கிறார்கள்...பார்ப்பார்கள் .எம்ஜியார்,சரோஜாதேவி,நாகேஷ் கூட்டணி நம்மை வசியப்படுத்தியதில் மிக நியாயமான காரணங்கள் இருக்கிறது.ஒரிஜினலும்,காப்பியும் சம அந்தஸ்தில் நம்மை கவர்கிறது.நாகேஷ் மட்டும் ஒரிஜினலையும் தாண்டி எவரஸ்ட் சிகரமாக நிற்கிறார் தனது தனித்துவத்தால்.
கம் செப்டம்பர் கதாநாயகன் ராக் ஹட்சன்.ஆள் சும்மா தகத்தகன்னு மின்னுராரு எம்ஜியார் மாதிரி.பின்னால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த உலகின் மிகப்பிரபலம்.படத்தில் இவரது காமடி ராவடியை எழுத்தில் சொல்லமுடியாது.
கதாநாயகி ஜினா லோலாபிரிகிடா அறுபதுகளில் சகட்டுமேனிக்கு எல்லா இளைஞர்களையும் வெட்டி சாய்த்த கவர்ச்சி அருவா. “ஏய்” படத்து நமீதாவையும், “ரெண்டு”படத்து அனுஷ்காவையும் திரட்டி செய்த பால்கோவா. இவரது கிஸ் இன்றும் எனக்கு கிக்.இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.
மரியாதையா படத்தைப்பாருங்க.வாலிப வயோதிக அன்பர்களே!
கம் செப்டம்பர் பாருங்கள்.இது 100% காயகல்பம்.
பக்க விளைவுகள் கட்டாயம் உண்டு.
போலிகளிடம் ஏமாறாதீர்கள்!
அந்த காலத்துலேயே ஆரம்பிச்சிட்டாங்களா... வெளங்கிடும்...
ReplyDelete// வாலிப வயோதிக அன்பர்களே!
ReplyDeleteகம் செப்டம்பர் பாருங்கள்.இது 100% காயகல்பம். //
ஜலபுலஜங்க்ஸ் படமோ...?
//கதாநாயகி ஜினா லோலாபிரிகிடா அறுபதுகளில் சகட்டுமேனிக்கு எல்லா இளைஞர்களையும் வெட்டி சாய்த்த கவர்ச்சி அருவா. “ஏய்” படத்து நமீதாவையும், “ரெண்டு”படத்து அனுஷ்காவையும் திரட்டி செய்த பால்கோவா//
ReplyDeleteசார்.......இதுல வர நமீதா, அனுஷ்கா இவுங்கெல்லாம் யாரு......
அன்பே வாவில் நாகேஷ் ஒரு காட்சியில் உங்ககிட்ட காசு எக்கச்சக்கமா இருக்கு....என்ட கொஞ்சம்.....கூட இல்லைன்னு ஒரு pause உட்டு அடிப்பார் பாருங்க....சான்ஸ்சே இல்லை.....
ReplyDeleteமுடிந்தால் பார்த்துவிடுகிறேன்! நன்றி! :-)
ReplyDelete//அந்த காலத்துலேயே ஆரம்பிச்சிட்டாங்களா... வெளங்கிடும்//
ReplyDeleteநண்பரே..நாம் அந்த காலத்தில் ரசித்த பெரும்பான்மையான படங்கள் அனைத்துமே காப்பிதான்.அவற்றை எழுத தயக்கமாக இருக்கிறது.
//ஜலபுலஜங்க்ஸ் படமோ..?//
நிச்சயமாக இல்.என் நண்பர் தன் பதின் வயதுப்பெண்ணுடன் பார்த்து ரசித்தப்படம்.முத்தக்காட்சி மட்டும் இருக்கும்....வரம்பு மீறாமல்.
//இதுல வர நமீதா, அனுஷ்கா இவுங்கெல்லாம் யாரு......// குழந்தாய்...இவையெல்லாம் பஞ்சு மிட்டாயின் பெயர்கள்.அப்படியே சாப்பிடலாம்.
ReplyDelete//அன்பே வாவில் நாகேஷ் ஒரு காட்சியில் உங்ககிட்ட காசு எக்கச்சக்கமா இருக்கு....என்ட கொஞ்சம்.....கூட இல்லைன்னு ஒரு pause உட்டு அடிப்பார் பாருங்க....சான்ஸ்சே இல்லை..... // இரண்டு படங்களையும் பார்த்தவர்களுக்கு நாகேசின் உயரம் புலப்படும். தாங்கள் விரும்பியபடி... நாகேசை பற்றி தனிப்பதிவே எழுதுகிறேன்.தமிழ் சினிமாவின் பொக்கிஷம் நாகேஷ்.
அருமை நண்பர் ஜீ அவர்களே!கட்டாயம் பாருங்கள்.இளநீரில் ஸ்காட்ச் ஊற்றி குடித்த எபெக்ட் கிடைக்கும்.100%அக்மார்க் உத்ரவாதம்.
ReplyDeleteஹலோ... அன்பே வா படத்தை வைத்து அண்டவெளியில் பல படங்களை சுட்டிருக்கிறார்கள். இது குறித்து ஆவணங்கள் எல்லாமே ஏ.வி.எம் உலக உருண்டைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, தாய்மொழியாம் தமிழ்மொழியிலே எடுக்கப்பட்ட படங்களை இப்படியெல்லாம் விமர்சனம் செய்யாதீர்கள். தமிழன் பொங்கிவிடுவான் பொங்கி . . அப்புறம், நமது 'தமிழ்த்தாத்தா', இரண்டு புறமும் ஏ.சி. வைத்து, இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருக்கவேண்டி வரும்.. ஆமாம் . .
ReplyDeleteநண்பரே...தாத்தாவின் ஆட்டம்...
ReplyDeleteமே13ல் புல் ஸ்டாப்.ஒன்றைக்கவனித்தீர்களா? தாத்தா கதைவசனத்தில் ஒரு பேரன் கூட படம் எடுப்பதில்லை.
தலைவரே
ReplyDeleteஅட்டகாசமான அறிமுகம்
அக்கால கனவுக்கன்னிகள் செம கிக்காக இருக்கின்றனர்,போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் என்னும் 1981ஆம் ஆண்டின் ஜாக்நிக்கல்சன் மற்றும் ஜெசிக்கா லாஞ்சின் கள்ளசோடிப்பொருத்தம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.அதன் 1946 ஆம் வருட பதிப்பில் லாரா டனர் ,ஜான் கார்ஃபீல்ட் கள்ள சோடிபொருத்தமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்,உலகசினிமா மட்டுமல்லாது இது படங்களையும் பரவலாக எழுதுங்கள்.
தலைவரே நாட்டுக்கு முக்கியமான தேவை ஒன்று இருக்கிறது,பல்லாண்டு வாழ்க படத்தில் வரும் கவர்ச்சிக்கோட்டை அழகி லதாவும் மக்கள் திலகமும் ஒகேனக்கலில் நீராடியபடி பாடும் போய்வா நதியழகே பாடலின் வீடியோ கிடைக்குமா?அது கிடைத்துவிட்டால் நான் மோட்சமடைவேன். யூட்ய்யுபில் படமே இருக்கிறது ஆனால் மடையர்கள் அந்த பாடலை மட்டும் வெட்டி விட்டு ஏற்றியுள்ளனர்,அந்த பாடலை ஒருவர் பார்க்காவிட்டால் வாழ்ந்த வாழ்வே வீண்.
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே!
ReplyDelete//போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் என்னும் 1981ஆம் ஆண்டின் ஜாக்நிக்கல்சன் மற்றும் ஜெசிக்கா லாஞ்சின் கள்ளசோடிப்பொருத்தம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.அதன் 1946 ஆம் வருட பதிப்பில் லாரா டனர் ,ஜான் கார்ஃபீல்ட் கள்ள சோடிபொருத்தமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்,உலகசினிமா மட்டுமல்லாது இது படங்களையும் பரவலாக எழுதுங்கள்.//
இந்த இரண்டு படங்களுக்கும் மூலம் ‘அப்சஸன்’என்ற இத்தாலிப்படம்.விஸ்காண்டியின் இயக்கத்தில் வெளி வந்தது.மிக முக்கியமான பட்ம் இது.மூன்று படங்களையும் ஒருங்கிணைத்து எழுதுகிறேன்.எழுதத்தூண்டி ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.
//அந்த பாடலை ஒருவர் பார்க்காவிட்டால் வாழ்ந்த வாழ்வே வீண்//
ReplyDeleteஎன்னிடம் டிவிடி இல்லை.அந்தப்பாட்டில் தலைவரும் லதாவும் ஜலக்கீரிடையில் பின்னி
பிசை[ணை]ந்திருப்பார்கள்.
//பின்னி
ReplyDeleteபிசை[ணை]ந்திருப்பார்கள்.//
ஹாஹா... ;)
வணக்கம்...நண்பர் இலுமி அவர்களே...லதா எனது பள்ளிப்பருவக்கனவுக்கன்னி..அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...ஹி...ஹி
ReplyDeleteநான் சில விஷயத்துல ரொம்ப லேட்..அதில இந்த பதிவும் ஒன்னு.முதல்ல மன்னிசிடுங்க அண்ணா,
ReplyDeleteநான் அன்பே பா படத்த ஏற்க்குறைய ஐந்த தடவ பார்த்திருப்பேன்.எனக்கு ரொம்ப பிடிச்ச எம்ஜிஆர், ரொமாட்டிக் காமெடி படங்களுல ஒன்று.
அம்மாவோட ஃபேவரட்..
இந்த படத்தையும் கண்டிப்பாக பார்க்கிறேன்.
ஏனா பார்த்தே ஆக வேண்டும்..அந்த மாதிரி ஒரு அருமையான விமர்சனம்.
//இப்படத்தில் கதையை மட்டும் தேடாதீர்கள்.அந்த கத்தரிக்காயை கடைசி வரை உங்களால் கண்டு பிடிக்க முடியாது.//
அன்பே வா படத்தோட கதைதானே..கண்டிப்பா தேட மாட்டேன்..ஆனா பார்த்து ரசிக்க டிரை பண்றேன்.
நல்ல விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள்..
நிறைய படங்கள எழுதுங்க..படிக்கவும் பார்க்கவும் ஆவலா இருக்கோம்..