Dec 27, 2013

‘பன்றியை’ தாண்டுங்கள்...! பத்து லட்சம் வெல்லுங்கள்...! !.


நண்பர்களே...
‘கோவா திரைப்பட திருவிழாவில்’ மிக முக்கியமான அம்சம் ஒன்று இருக்கிறது.
‘உலக சினிமாவை’ இந்தியாவில் உருவாக்க இந்திய அரசின் நிறுவனங்களும், பல்வேறு வெளி நாட்டு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் பணத்தை வழங்க காத்திருக்கின்றன.

‘பிலிம் பஜார்’ என்ற பிரிவில்,
இத்தகைய வாய்ப்பை வழங்குகிறார்கள்.
ஒரு படைப்பாளியாக...நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
‘உலக சினிமா’ தரத்தில் ஒரு திரைக்கதையை தயார் செய்யுங்கள்.
திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களையும் தேர்வு செய்யுங்கள்.
முழு படத்தையும் உருவாக்க தேவையான பட்ஜெட்டை கணக்கிடுங்கள்.
கோவா திரைப்பட விழாவுக்கு வந்து  ‘பிலிம் பஜாரில்’ சமர்ப்பியுங்கள்.

சமர்ப்பிக்கப்படும் திரைக்கதைகளில்,
சிறந்ததை தேர்வு செய்து, அதற்கு  ‘கோவா திரைப்பட திருவிழா’ சார்பாக ரூபாய் ‘பத்து லட்சம்’ பரிசாக வழங்குகிறார்கள்.
முதல் பரிசு கிடைக்கும் திரைக்கதைக்கு,
படமாக்க தேவையான  ‘பணம்’ கிடைப்பது நிச்சயம்.

உங்கள் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும்?
‘பன்றியை’ தாண்ட வேண்டும்.
‘இந்திய திரைப்படங்களின் உச்சங்களில்’ ஒன்றாக இருக்கும் ‘பன்றியை’ தாண்டுவது எளிய பயிற்சி அல்ல...
அதற்கு ஏணியில் ஏறினால், முடியாது.
‘எவரெஸ்டில்’ ஏற வேண்டும்.

Fandry | Marathi | India | 2013 | 103 min | Directed by : Nagraj Manjulle.


‘தலைமுறைகள்’,  ‘தங்க மீன்கள்’ தரத்தில்  ‘திரைக்கதை’ இருந்தால்,
‘திருநீரு’ கூட கிடைக்காது.
‘சுடுகாட்டுச்சாம்பலில் சிற்பம் வடிக்க முடியாது’ என ‘நக்கீரன்கள்’ அறிவார்கள்..

தேர்வுக்கமிட்டி ‘நக்கீரன்கள்’,
வந்திருப்பது  ‘இறையென்று’ அறிந்தாலும்’...
‘நெற்றிக்கண்ணை’ திறந்து  ‘காட்டினாலும்’...
‘பழுதான திரைக்கதைக்கு’ பரிசு கொடுக்க மாட்டார்கள்.
அவர்கள் ‘சென்னை திரைப்பட விழாக்குழுவினர்’ அல்ல.
மிரட்டியவுடன் பயந்து, ‘தங்க மீன்களுக்கு’ பரிசை தாரை வார்க்க.

தமிழில் ‘உலக சினிமா’ படைக்க காத்திருக்கும்  'உத்தம படைப்பாளிகளே'...
2014 கோவா திரைப்பட விழாவுக்கு,
வாருங்கள்...வெல்லுங்கள்...
என வாழ்த்தி, ‘நானும்’ வருகிறேன் !.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

5 comments:

  1. அப்படிச் சொல்லுங்க...!

    ReplyDelete
  2. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. நல்ல விஷயம்.. நிறையப்பேரை சென்றடைய வாழ்த்துக்கள்... திரைக்கதையை எந்த மொழியில் சமர்ப்பிப்பது? ஆங்கிலம்? அல்லது ரீஜனல்?

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்தில் திரைக்கதையை தயார் செய்து அளிக்க வேண்டும்.
      இது தொடர்பாக முழு விபரம் அறிய சென்னை என்.எப்.டி.சி நிறுவனத்தை தொடர்பு கொள்க...

      Delete
  4. where is your dvd shop brother.

    www.writerkarthikeyan.blogspot.in

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.