நண்பர்களே...
கோலிவுட்டில் படமெடுக்க ‘கோடிகள்’ தேவை.
நீங்கள் ‘கேடியாக’ இருந்தாலும் கோடம்பாக்கத்தில் படம் எடுத்து விடலாம்.
வெளி நாட்டு ‘த்ரில்லர்’ படங்களை தேடித்தேடி பாருங்க.
நல்ல படத்தை செலக்ட் பண்ணி, அந்த படத்துக்கான ‘திரைக்கதையை’ இணையத்துல டவுண் லோடு பண்ணுங்க.
தலைப்பில் ஒரிஜினல் பெயரை அழித்து விட்டு ‘விடிந்த பின்’... ‘விடியாத முன்’... என ஏதோ ஒரு பெயரை டைப் பண்ணி ‘தலைப்பாக்குங்க’.
‘இங்கிலிஷ்ல’ இருக்கும் அந்த திரைக்கதையை நல்ல திறைமை வாய்ந்த ‘வசன கர்த்தாவிடம்’ கொடுங்க.
அவரு நீங்க ‘எழுதின ஆங்கில திரைக்கதையை’ படிச்சு மிரண்டு,
தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செஞ்சு வாய்ப்பை வாங்கி கொடுத்துருவாரு.
எல்லா டெக்னீஷியனையும் ‘பிக்ஸ் பண்ணி’ ஷூட்டிங்கை முடிச்சுருங்க.
படத்தை ரீலிஸ் பண்ணூங்க...
ஆஹா...ஓஹோன்னு...பாராட்ட ‘உண்மைத்தமிழன்ல’ இருந்து...
ஒரு கூட்டமே உங்களை புகழ்ந்து தள்ளும்.
‘கருந்தேள்’ மாதிரி சிலர் மட்டுமே ‘கத்துவார்கள்’.
கவலையே படாதீங்க...
இவங்க ‘கத்துனா’, ‘கல்லா கட்டும்’.
எளிய உதாரணம் : மசாலா கபே.
ஒரு சின்ன வேண்டுகோள்...
த்யவு செய்து நீங்க எடுத்த படத்தை ‘ஹிந்தி உரிமை’ விற்பதற்காக போட்டு காட்டாதீங்க.
அவங்க உங்க ‘குட்டை’ வெளிப்படுத்திருவாங்க!
இது வரைக்கும் கண்டு பிடிக்க முடியாத உங்க ‘கிரியேட்டிவிட்டி’ ,
தயாரிப்பாளர்ல இருந்து மொத்த டெக்னீஷியனுக்கும் ‘இந்த இடத்துல’ தெரிஞ்சு போயிரும் !.
இது தேவையா?
இந்த விஷயத்துல,‘முன் அனுபவம்’ உள்ள ‘விடியும் முன்’ இயக்குனரை எதுக்கும் ‘கன்சல்ட்’ பண்ணூங்க.
‘ஆல் த பெஸ்ட்’.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
உங்க பாணியில இருந்தது "குட்டு"
ReplyDeleteஅந்த இயக்குனரின் அசகாய திறமையை சமீபத்தில்தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.
Deleteயான் பெற்ற ‘இன்பத்தை’ வையத்துள் வைத்து விட்டேன்.
இது ரொம்ப லேட்டான பதிவு மாதிரி தெரிகிறதே...?
Deleteஇந்த தகவல் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கேள்விப்பட்டேன்.
Deleteஇதை மெயிலாக அப்படியே அந்த ஆங்கிலப்பட தயாரிப்பாளர்களுக்கு அனுப்பலாமே
ReplyDeleteநான் எதற்கு இந்த ‘வேண்டாத வேலையை’ செய்ய வேண்டும்?
Deleteஇணையத்தில் இருந்து திரைக்கதையை அப்படியே டவுண் லோடு செய்து அதை வைத்து ஒரு பட வாய்ப்பை பெற்ற செய்தி எனக்கு ஆச்சரியமளித்தது.
அதை எல்லோரிடமும் பகிர்ந்தேன்.
ஹிந்தி பட உரிமை விற்க முயலும் போதுதான் இந்தப்பட காப்பியடிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது.
‘நல்ல படங்களை பார்த்திராத...பார்க்க துணியாத...
‘தமிழ் தொழில் நுட்பக்கலைஞர்களை’ இப்பதிவில் பகடி செய்ய நினைத்தேன்....அவ்வளவே.
படம் வெளியான அன்றே ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இது ஒரு காப்பி என்று சொன்னார். அதன்பிறகு இயக்குநரின் நலம்விரும்பிகள் அவரிடம் கேட்டபோது 'ஆமாம்..ஆனால் உரிமை வாங்கித்தான் எடுத்திருக்கிறேன்' என்று பதில் சொன்னார்.ஆனால்..
ReplyDeleteபடம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே 'ஒலக சினிமா' என பார்த்தவர்கள் கூப்பாடு போட்டபோது மனுசன் வாயைத்திறந்து ஒன்னும் சொல்லலை. படத்திலும் நன்றி கார்டு கிடையாது..சொந்தமா யோச்சிக்கிறவனை கிணத்தடியிலே உருவிட்டு விரட்டுறாங்க. என்னத்தச் சொல்ல..
இணையத்திலிருந்து ‘உருவிய’ ஆக்கில திரைக்கதையை...தமிழாக்கி வசனம் எழுதியவர் பெயரை படத்தின் இறுதி காட்சியில் வரும் ‘டைட்டில் கார்டில்’ ஓட விட்டிருக்கிறார்கள்.அவர்தான் இந்த இயக்குனருக்கு தயரிப்பாளரையும் தயார் செய்து இருக்கிறார்.
Deleteஇயக்குனர் மட்டும் இப்படத்தில் எக்கச்சக்க பணத்தை சம்பாதித்து இருக்கிறார்.
‘அந்த எழுத்தாளருக்கு’ எலும்புத்துண்டை மட்டும் வீசி இருக்கிறார்.
ஆனால் ‘அந்த எழுத்தாளருக்கு’ இறைவன் அள்ளிக்கொடுப்பான்.
‘அந்த எழுத்தாளருக்கு’ 20 கோடிக்கு மேற்பட்ட படஜெட்டில் படம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருப்பதாக தகவல்.
அட ராமா..இப்பவே கண்ணைக் கட்டுதே!
Deleteஹா ஹா ஹா..... நல்லா சொன்னீங்க போங்க, அது அங்க மட்டும் இல்லை இங்க எங்க ஆபீசில் கூட உண்டு !
ReplyDeleteவி.மு. இயக்குனர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள்.
Deleteநானும் இத்தகையவர்களிடம் சிக்கி அனுபவித்து இருக்கிறேன்.
I accepted but see the movie "London to Brighton" before writing like this.
ReplyDelete