நண்பர்களே...
‘கற்றது தமிழ்’ ராமின் தங்க மீன்கள்,
ஜூலை 26 திட்டமிட்டபடி வெளியாகாதாம்.
காரணம்...தியேட்டர்காரர்கள் ஒத்துழைக்கவில்லை.
சிங்கம் -2 படத்தின் ‘உடனடி பக்க விளைவு’ இதுதான்.
‘கற்றது தமிழில்’,
‘திரை மொழியை’ சரியாக கையாளவில்லை இயக்குனர் ராம்.
இருந்தாலும், ஒரு படைப்பாளியாக ‘ராமை’ ஏற்றுக்கொண்டோம்.
அடுத்தப்படைப்பில் ‘நிச்சயம் எழுவார்’ என எதிர்பார்க்கிறோம் நாம்.
‘தங்க மீன்கள்’ என்ற தலைப்பே எனக்கு,
‘ஜாபர் பனாஹி’ - ‘ஒய்ட் பலூன்’...
The White Balloon \ 1995 \ Iran \ Screenplay by : Abbas Kiarostami \ drected by : Jafar Panahi.
‘மஜித் மஜிதி’ - ‘ஸாங் ஆப் ஸாரோ’ ஆகிய படங்களை ஞாபகப்படுத்தியது.
The Song of Sorrow \ 2008 \ Iran \ Directed by : Majid Majidi.
[ ’சாங் ஆப் ஸாரோ’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தி
நான் எழுதிய பதிவை காண ...இந்த இணைப்பில் செல்க...]
எதிர்பார்ப்பை ‘எகிற’ வைத்தது.
‘எகிறல்’ அத்தனையும் இன்று வடிந்து மண்ணாகி விட்டது.
‘தங்க மீன்களின்’ நிலையை,
இன்றைய தினத்தந்தியில் விளம்பரம் போட்டு...
‘காட்டியிருக்கிறார்’ இயக்குனர் ராம்.
‘திரையரங்குகளில் போதுமான காட்சிகள் கிடைக்காத காரணத்தால் வரும் 26ம் தேதி தங்க மீன்களை வெளியிட இயலவில்லை’ -ராம்.
சிங்கம் 2 வை, ‘கோவை பன் மாலில்’
ஒரு நாளைக்கு 20 காட்சிகள் திரையிட்டார்கள்.
அத்தனையும் ஹவுஸ்புல்லாக்கி ‘அழகு’ பார்த்தார்கள்
‘அனுஷ்கா + சூர்யா+ ஹரி ’ ரசிகர்கள்.
தங்கமீன்களை, சிங்கம்-2 மாதிரி...
ஒரே நாளில் 20 காட்சிகள் திரையிட வேண்டாம்.
அட்லீஸ்ட்,
ஒரு நாளைக்கு நான்கு காட்சியாவது திரையிடலாமே !
அந்த நான்கு காட்சிகளை நிச்சயம் முதல் நாள் ஹவுஸ்புல்லாக்கி இருப்போம்.
[ இயக்குனர் ராமின் ‘கற்றது தமிழ்’,
கோவை செந்தில் தியேட்டரில்... முதல்நாள் - முதல் ஷோ ‘ஹவுஸ்புல்’]
படத்தில் விஷயம் இருந்தால் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்ப்போம்.
விஷயம் இல்லையென்றால் ‘ராமை’ விமர்சித்து ‘தோலுரித்து தொங்க விட்டு’ ‘தெளிய தெளிய’ அடிப்போம்.
‘சிந்தியுங்கள் மல்டிபிளக்ஸ் நியாயமாரே’.
ராம்...! ராம்...!
ReplyDeleteசார்...நீங்க ‘ராம்...ராம்...’னு சொன்னது எனக்கு ஹேராம் ஞாபகத்துக்கு வந்து விட்டது.
Deleteராமின் படம், ஹேராம் தரத்தில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
ஹேராம் வசூலில் இருந்தால் வருத்தமடைவேன்.
ஹேராம் நஷ்டத்தை தாங்க பரத்ஷா என்ற வைர வியாபாரி இருந்தார்.
இந்தப்படம் தோல்வியடைந்தால்,தயாரிப்பாளரான
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தாங்க மாட்டார்.
ஏற்கெனவே மிகப்பெரிய பொருளாதாரப்பள்ளத்தில் சிக்கி தவிக்கிறார் அவர்.
இந்தப்படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும்.
இயக்குனர் சங்கருக்கு காதல்,வெயில்,இம்சை அரசன் அள்ளிக்கொடுத்தது போல் கவுதமுக்கு தங்க மீன்கள் கொடுக்க வேண்டும்.
அய்யகோ ?!! நான் இந்தப்படத்துக்காக ரொம்ப நாளா ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தேன். இந்த வாரமே ரிலீஸ் ஆகுதுனு இல்ல நினச்சுகிட்டுருக்கேன். திங்கட்கிழமை மார்னிங் ஷோ போலாம்னு பிளான்லாம் வேற போட்டு வச்சுருந்தேன். பொளப்புல மண்ணள்ளிப் போட்டாய்ங்களா ?
ReplyDeleteஒரு நல்ல படைப்பாளிக்கு இதை விட அசிங்கம் வேற எதுவும் இருந்து விடாது. தியேட்டர்காரர்கள் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம் இது. Shame on you multiplexes..!!
மலேசியாவில் ‘மிட்வேலி’ என்ற மாலில் உள்ள மல்டிப்ளக்சில் உலகசினிமாவுக்கு என்றே ஒரு தியேட்டரில் ஒரு ஷோவை ஒதுக்கி உள்ளார்கள்.
Deleteஆளேயில்லாமல் இரண்டு பேருக்கு கூட படம் காட்டுவார்கள்.
அந்த இரண்டு பேர் நானும் எனது நண்பரும்தான்.
அந்த தியேட்டர் அதிபரை நினைத்து நான் பெருமையோடு வியப்பேன்.
நம்ம ஊர்ல...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
என்னது.? தங்க மீன்கள் நீந்த தொட்டி கிடைக்கலையா.?
ReplyDeleteசிங்கம் உலவுகிற நேரத்தில் வந்தா கொன்னு போட்ருமே..
சிங்கம் சீறி அடங்கி கூண்டுக்கு போயாச்சு.
Deleteமரியான்தான் இந்த வாரம் வருகிறான்.
மரியான் ஜீவிக்கிரானா? மரிக்கிரானா? நாளைக்கு தெரிஞ்சுரும்.
இந்த தியேட்டர்காரர்களுக்கு ‘சொன்னா புரியாது’.
‘பட்டத்து யானையைத்தான்’ பவனி வரச்செய்வார்கள்.
‘நம்ம கோவை ஆ.வி.’, சரளா, எழில்,அகிலா போன்ற பதிவர்கள்துணையோடு
மறியல் போராட்டம் செய்வதாக சொன்னார்.
நாம் தலைமையேற்று துவங்கி வைக்கிறோம்.
ரெடியா?
என்ன போராட்டமா? நாளைக்கு மரியான் பார்த்துட்டு சனிக்கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோ வச்சுக்கலாம்..
Deleteசார் எனக்கும் தங்கமீன்களை பிடித்து வர ஆசைதான்...ஆனா நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கறப்ப நாம இதுக்கெல்லாம் குரலெழுப்ப முடியாதுங்க...ஸாரி ஆனந்த்
Deleteஎன்ன எழில் மேடம், மறியல் போராட்டம் என்றதும் ‘டூ ஸ்டெப் பேக்’ வைக்கிறீங்க...உஷார்தான்.
Deleteவேணும்னா ‘மெழுகு வத்தி’ ஏத்தி போராடுவோமா...
அன்னா ஹசாரே ஸ்டைலில்.
பாடல்கள் இனிமையா நினைவுகளை தூண்டிலிடுகிறது.. ஒரு பாடல் திரும்ப திரும்ப டி.வியில் போடுறாங்க...காட்சி அமைப்பு அருமை
ReplyDeleteஒரே ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக நானும்,
Deleteஅந்தப்படத்தை மிக எதிர்பார்க்கிறேன்...நண்பரே.
பாடல் சிறுவாணி-மலைப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டதாமே...பெண் குழந்தை இல்லாத,ஆனால் பிடிக்கும் நாங்களும் எதிர்பார்க்கிறோம்...
Deleteகற்றது தமிழ் எனக்கு ரெம்பப்புடிச்சது ...ஆனா தியேட்டர்ல பார்க்க முடியல . தங்க மீன்கள நிச்சயமா தியேட்டர் ல பாக்கனும்னு ஆவலோட இருந்தா இப்டி ஆயிடுச்சே ...சே ...சே ...!
ReplyDeleteதங்கமீன்கள் பாட்டெல்லாம் அவ்ளோ அழகா இருக்கு ...!
ஜூலை 26 அன்று, சொன்னா புரியாது,பட்டத்து யானை என்ற இரு உலகசினிமாக்கள் வெளி வருகிறது.
Deleteஎனவே ‘தங்க மீன்கள்’ என்ற மசாலா படத்திற்கு தியேட்டர் தரவில்லையாம் ‘மல்டிப்ளக்ஸ்’ மண்டைகள்.
It's shame to all tamil cinema world!
ReplyDeleteதமிழ் சினிமா உலகம் ‘மசாலா’ படங்களுக்கு ஆபத்து என்றால் அலறும்...துடிக்கும்...வெடிக்கும்.
Deleteஇந்த மாதிரி நல்ல படத்துக்கு ’பொச்சை’ மூடிட்டு கிடக்கும்.
இந்த வாரம் தங்கமீன்கள் பார்க்க ஆர்வமாக இருந்தேன்.. என்ன சார் இப்படி ஆயிடுச்சு??
ReplyDeleteஆனாலும் உங்க ஆர்வத்துக்கு அளவேயில்லையா!
Delete26 ம் தேதிதான் படம் ரீலிஸ் என அறிவிப்பு வந்தது.
இப்போ அந்த அறிவிப்பைத்தான்,
முள்ளை வெட்டிப்போட்டு வேலியாக்கி அடைச்சு வச்சுட்டானுங்க தியேட்டர்காரனுங்க.
இந்த வாரம் சிங்கத்தை Fun Mall-காரர்கள் தியேட்டருக்கே கூட்டி வந்து காட்டி கல்லா கட்டினார்கள். இதை போல ராமை கூட்டி வந்தால் யார் வருவார்கள்? அதுவும் ஒரு மசாலா படத்திற்கு? தோற்றால் கண்டிப்பாக ஒரு நல்ல தயாரிப்பாளரை இழப்போம்
ReplyDeleteபடம் நல்லாயிருந்தா சிங்கமும் தேவையில்ல...ராமும் தேவையில்ல.
Deleteராம் கற்றது தமிழுக்கு அப்புறம் படமேயில்லாமல் இருந்தார்.
அந்த நிலையில்தான், கவுதம் வாசுதேவ மேனந்தான் தயாரிக்க முன் வந்திருக்கிறார்.
ராம் தனது கிரியேட்டிவ் சக்தியை முழுமையாகப்பயன்படுத்தி படம் செய்திருக்க வேண்டியது அவரது கடமை.
விஸ்வரூபத்திற்கும் முதலில் தியேட்டர்காரன்கள் முட்டுக்கட்டை போட்டான்கள்.
படம் வெளியானதும், ரசிகர்கள் வெற்றி தீர்ப்பை எழுதினார்கள்.