வாலி புறப்பட்டு போய் விட்டார்.
மெட்டுக்கு எழுதிய கவிஞனே...
[மன்னவனே அழலாமா?]
துட்டுக்கு ‘புழுகிய’ புலவனே...
[மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! = மு.க.முத்து.]
விகடனுக்கு எழுதிய ‘காவிய நாயகனே’...
போய் வா.
கவிஞரின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா(2)
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தகினதத ததம்தோம்
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )
________________________________________________________________________
தன் குறைகளையும் மறைக்காமல் வெளியிட்டு நேர்மையாக வாழ்ந்த கவிஞன்! மெட்டுக்கும் துட்டுக்கும் எழுதினாலும்கூட ரசிக்க வைத்தன அவர் கையாண்ட வார்த்தைகள்! மகத்தான அந்தக் கவிஞனுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆன்ம சாந்திக்கான பிரார்த்தனைகள்!
ReplyDeleteகுறையோடு இருப்பதுதான் மனித இயல்பு.
Deleteகுறைகள் குறைவாகவும்...
நிறைகள் நிறைவாகவும்...
வாழ்பவர்களே வரலாற்றில் என்றும் இருப்பார்கள்.
வாலியும் வரலாற்றில் இருப்பார்.
பிடித்த பாடல் ஒன்றா...? இரண்டா...?
ReplyDeleteஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
ஆழ்ந்த இரங்கல்கள்...
எம்.ஜி.யாருக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
Deleteஅவரது பல பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள் என நினைவு கூறப்படுகின்றன.
இது ஒன்றே போதும்... அவரது கவித்திறமையை பறை சாற்ற.
ஏறக்குறைய பிலிம் நியூஸ் ஆனந்தன் போலத் தான் அள்ள அள்ள குறையாமல் உங்களிடமிருந்து வருகின்றது.
ReplyDeleteஇந்தப்பதிவில் நான் தகவல் எதுவும் சொல்லவில்லையே நண்பரே!
Deleteஏனென்றால் வாலியை பற்றி பெர்சனலாக எதுவும் எனக்கு தெரியாது.
அவரை பேட்டி எடுக்க நேரம் கேட்டேன்.
[கமலின் சிறப்பு, கமல்-வாலி நட்பு, பற்றிய அவரது அனுபவத்தை பேட்டி எடுத்தோம்.]
அவரும் ஒதுக்கி கொடுத்தார்.
அந்த நேரத்தில் நான் விபத்துக்குள்ளாகி கை முறிந்து ஓய்வில் இருந்தேன்.
எனது உதவியாளர்கள்தான் போய் பேட்டி எடுத்து வந்தார்கள்.
அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பறி கொடுத்த வருத்தம் நேற்று முதல் இருக்கிறது.
//கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை//
ReplyDeleteஇந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு கணம் நம்மை உலகை மறந்து ரசிக்கச் செய்யும் இசைக்கு உயிர் கொடுத்த ஏகலைவன். கடவுள் பற்று இல்லாதவரையும் மயங்க வைக்கும் வரிகள்...
எப்படி கேட்கிறார்களோ அப்படி எழுதிக்கொடுக்கிறேன் எனது சொந்த பற்றுக்காக இல்லை பணத்திற்காகத்தான் என்பதை வெளிப்படையாக சொன்னவர். கவித்துவம் மிக்க பல பாடல்கள் காலாத்தால் அழிக்கமுடியா மாணிக்கங்கள்.
//கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை//
Deleteயாக்கை நிலையாமையை...
கண்ணதாசனுக்கு இணையாக...
பாமரனுக்கு சுருங்கச்சொன்ன சூத்ரதாரியாக வாழ்ந்திருகிறார் இப்பாடலில் வாலி.
வாலி அவர்களை எப்படியாவது ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசையோடு இருந்தேன்.ஆனால் அது நிராசையாகிவிட்டது.அவர் 'நினைவு நாடாக்கள் ' என்ற கட்டுரை தொகுப்பை விகடனில் எழுதிவந்தார்.அத்தொகுப்பை முழுவதும் படித்துவிட்டேன்.கதையல்லா எழுத்து வடிவம் என்பதிலும் அவர் வல்லவர் தான்.ஒரு பிரபல நபர் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அவர் யாரைப்பற்றி எழுதுகிறாரோ அவர் பெயரை கடைசிவரை சஸ்பென்சாகவே வைத்து தீடிரென்று அப்பெயரை கச்சிதமான இடத்தில் குறிப்பிடுவார்.அவருடைய அந்த எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமானது.ஒரு கட்டுரையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை பெரிதும் சிலாகித்து எழுதியிருந்தார்,அவர் அக்கட்டுரையின் முடிவில் எஸ்.ஜே.சூர்யா அவர்களை 'கலா ரசிகன்' என்று பாராட்டி இருப்பார்.திறமையை புகழ்வதிலும் வஞ்சகம் வைக்காதவர் வாலிபக்கவி.அவர் கடைசியாக பாடல் எழுதியது ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில்,இயக்குனர் வசந்த பாலன் அவர்களுடைய 'காவியத் தலைவன்' படத்திற்காக.படத்தின் தலைப்பு அவருக்காகவே வைக்கப்பட்டது போல் உள்ளது.
ReplyDeleteவாலி பற்றிய உனது கண்ணோட்டத்தை அற்புதமாக பதிவு செய்ததற்கு நன்றி வினோத்.
Deleteஅஞ்சலி செலுத்துவோம்...
ReplyDeleteஸ்ரீரங்கம் ரங்கராஜன்,அரங்கநாதன் சேவடி அடையட்டும்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteகவிஞர் வாலி அவர்கள், தன் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்.
Deleteவாலியென்று பெயர் இருந்தாலும் யாருடைய புகழையும் இவர் பறிக்கவில்லை,மாறாக இவரின் பாடல்கள் இன்னும் கவிஞர் எழுதியிப்பார் என நினைக்கவைக்கும்.15000க்கும் மேற்பட்ட சிறந்த பாடல்களை ஈந்த கலைஞனுக்கு அஞ்சலிகள்.என் தாத்தா,அப்பா,என் ,என் மகள் காலம் வரை பாடல்கள் எழுதியிருக்கிறார்,இன்னும் பல்லாண்டு காலம் இவர் பாடல்கள் இவரின் புகழ் பாடும்.
ReplyDeleteநமது ’சிறு நடை’பருவத்திலிருந்து அவரை நாம் ரசித்து வந்திருக்கிறோம்.
Deleteஅந்த நன்றியுணர்வு நமது அஞ்சலியாக வெளிப்படுகிறது...நண்பரே.