Jul 1, 2013

காஸ்டா கவ்ராஸ் - உண்மையான ‘இயக்குனர் இமயம்’.


" All Cinema is Political " - Costa Gavras. 

நண்பர்களே...
காஸ்டா கவ்ராஸ்...  ‘ஹாலிவுட்’ கொண்டாடும் இயக்குனர் அல்ல.
ஆனால் உலகமெங்கும் உள்ள உலகசினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான இயக்குனர்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் போல இவரை உலகம் தெரிந்திருக்கவில்லை.
காரணம் இவர் அவர்களைப்போல் ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்’ கொடுத்தவரில்லை.
ஆனால் இவரை தெரிந்தவர்கள்,
இவரைத்தான் உயர்வான இடத்தில் வைத்து கொண்டாடுவார்கள்.
‘அப்படிக்கொண்டாடுபவர்களில் ஒருவன்’ என்ற பெருமிதம்,
எனக்கும் உண்டு.


இவரது மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான ‘இஸட்’ [ Z ] பற்றி,
ஆனந்த விகடனில், செழியன் வரைந்த எழுத்தோவியத்தின் மூலமாக
நாம் அறிந்தோம்.
‘சுஜாதாவும் கமலும்’ என்ற எனது பதிவிலும் பார்த்தோம்.

இவரது எல்லா படங்களிலும் அரசியலும் மார்க்சிய சித்தாந்தமும் மையக்கருத்தாக இருக்கும்.
காரணம் இவரது வாழ்க்கை வரலாற்றிலேயே இருக்கிறது.

இவர் க்ரீஸ் நாட்டில் பிறந்து,
இரண்டாம் உலகப்போரின் பேரழிவை நேரடியாக தரிசித்தவர்.
இவரது தந்தை கம்யூனிஸ்ட் சித்தாந்த இயக்கத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதால்,
வறுமையின் உச்சங்களை தரிசித்தவர்.
பிரான்சில் ‘திரைப்படக்கலை’ பயின்று இன்று அங்கேயே மையம் கொண்டு தனது படைப்புகளை வழங்கி வருகிறார்.
இவரைப்பற்றி மேலதிகத்தகவல்களுக்கு ‘கார்டியன்’ [ The Guardian ] பத்திரிக்கையில் வந்த காஸ்டா கவ்ராஸின் பேட்டியை படிக்கவும்.

காஸ்டா கவ்ராஸ் - ‘த கார்டியன்’ பத்திரிக்கை பேட்டியை படிக்க இங்கே செல்லவும்...


நான் இவரது எல்லாப்படங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
இவரது மிக முக்கியமான படமான ‘ஆமென்’ பற்றி எழுதுவதாக,
ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்.
இப்பதிவு... ‘ஆமென்’ பதிவுக்கு ஒரு முன்னோட்டம்.

AMEN \ 2002 \ German, Romania, French \ Directed by : Costa - Gavras \ Part - 1

காஸ்டா கவ்ராஸ் படைப்புகளின் பட்டியல் இதோ...
[ உபயம் : விக்கிப்பீடியா ]

Filmography[edit]



வெற்று ஆரவாரத்தின் மூலமாக தனது இருப்பை நிலை நிறுத்தி, 
கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை ‘கொடி’ யை இறக்கி காட்டி ...  
‘முதல் மரியாதையை’ இழந்து கொண்டிருக்கிறார்கள்  நமது படைப்பாளிகள்.

எண்பது வயதிலும் சளைக்காமல், 
படைப்புத்திறன் குறையாமல்... 
தனது படைப்புகளை வழங்கி வரும்... 
‘காஸ்டா கவ்ராஸ்தான்’ உண்மையான இயக்குனர் இமயம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
 ‘ஆமென்’. 

19 comments:

  1. உள்குத்து எதுவும் இல்லையே..
    உங்க கிட்ட இருந்து அன்னக்கொடி விமர்சனம் வரலயே

    ReplyDelete
    Replies
    1. இதிலேயே இருக்கே ஜீவா...
      'அதை'தனியா வேறே‘கிழிச்சு’ பறக்க விடணுமா?

      Delete
  2. இந்த பெயர் இயக்குனரின் பெயர் நம்ம உலக சினிமா வித்தகர் சாரு க்கு தெரிந்திருக்காது. இதை பார்க்கும் அவரின் அல்லக்கைகள் அவருக்கு அறிவித்தல் வெகுவிரைவில் இந்த இயக்குனர் தொடர்பாக கூகுள் இல் தேடி ஒரு பதிவு போடுவார். அத்துடன் இந்த இயக்குனர் தொடர்பாக 30வருடத்துக்கு முன்பே தான் எழுதியிருப்பதாக கதை வேறு சொல்லுவார்

    ReplyDelete
    Replies
    1. ‘சாரு’ காஸ்டா கவ்ராஸ் பற்றி,
      இது வரை எழுதவில்லையென்றால் ...
      அது நாம் செய்த புண்ணியம்.

      Delete
  3. Thanks for the post so for I watched amen and box car murders,soon Ian going to watch others,amen is bold film on pope s silence on Jews extermination,it is the movie speaks detail of zyklon b , and corbon monoxide vans

    ReplyDelete
    Replies
    1. நண்பரே... ‘ஏமென்’ படத்துவக்கத்தில் வரும் காட்சி பற்றி தகவல் சேகரித்து வருகிறேன்.
      தாங்கள் இது குறித்து உதவ முடியும் என்றால் இ.மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

      இந்தப்படத்திற்கு சரியான...முழுமையான சப்-டைட்டிலுடன் படத்தின் காப்பி எதுவும் கிடைக்கவில்லை.

      Delete
    2. sure,i will write the film,you give the link for reference,or i send post in mail,you include.

      Delete
    3. நன்றி நண்பரே...
      துவக்க காட்சி பற்றி தகவல்கள் கிடைத்து விட்டன.
      இன்று அது பற்றித்தான் பதிவிடுகிறேன்.

      பட சம்பந்தமாக வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் இ.மெயிலில் அனுப்பி உதவவும்.

      Delete
  4. இந்த list-ல Mad City, Eden In West ரெண்டும் பார்த்திருக்கேன்.. Director பற்றிய குறிப்புகள் சுவாரசியம்..
    அப்படியே உண்மையான "இயக்குனர் சிகரம்" மற்றும் உண்மையான "பிரம்மாண்ட இயக்குனர்" பற்றியும் ஒரு பதிவு போடுங்க..!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      ‘இயக்குனர் சிகரமும்’...
      ‘பிரம்மாண்ட இயக்குனரும்’... ‘இவரைப்போல’ ஆனந்த விகடனில் ஆடுவதில்லை...
      வாய் விடுவதில்லை.
      அடக்கி வாசிப்பவர்கள்.

      Delete
  5. Thanks UCR,

    I haven't watched any of his films, which film would u recommend to start..

    ReplyDelete
    Replies
    1. Z, Missing, Amen இந்த மூன்றில் எது இருந்தாலும் முதலில் பாருங்கள்.

      Delete
    2. Hi UCR,

      I say Z today, very good film. Different and class film making.

      Here is my take on the movie, www.filmbulb.blogspot.in/2013/07/z-1969-french.html

      Other films are in pipeline..

      Delete
  6. ‘காஸ்டா கவ்ராஸ்தான்’ உண்மையான இயக்குனர் இமயம்' - சுவாரசியமான பல தகவல்களை அள்ளிக் கொடுத்திருக்கீங்க...நன்றி

    ReplyDelete
  7. ஒரு நல்ல இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார். இவரது படங்களைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பார்ப்பது...என் பதிவின் நோக்கத்தை பூர்த்தி செய்யும்.
      நன்றி செங்கோவியாரே.

      Delete
  8. சமிபத்தில் இந்தியில் வெளிவந்த 'Shanghai' படம் 'Z' படத்தின் தழுவல்(Official என்று தான் நினைக்கிறேன். டைட்டிலில் கிரெடிட் குடுத்தாய் ஞாபகம்).

    ReplyDelete
  9. Mad City படத்தில் மீடியாக்கள் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக, அவர்களின் வணிக வெறிக்காக ஒன்றுமில்லாத செய்திகளையும் முக்கியமான செய்திகளாக எப்படி மாற்றுகின்றன என்பதை அழுத்தமாக அற்புதமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர். உங்கள் பதிவில் உள்ள பட்டியலில் Mad City மற்றும் Z படங்களை பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களுக்கும் ஒரே இயக்குனர் என்பதும் (Mad City படம் Dustin Hoffmanக்காக பார்த்தது), இயக்குனர் பற்றியும் உங்கள் பதிவின் மூலமே அறிகிறேன். நன்றி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.