நண்பர்களே...
இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து,
ஏகப்பட்ட ‘பன்றிக்குட்டிகளை’ வாரி வழங்கி இருக்கிறது ‘ஹாலிவுட்’.
அவை அனைத்திலும்,
நம்மை உணர்ச்சி வயப்படுத்தி கொந்தளிக்க வைத்து காசு பார்க்கும் கலையே பிரதானமாக இருக்கும்.
உலகசினிமா இயக்குனர்கள் படங்களில் இத்தகைய செப்பிடு வித்தைகள் இருக்காது.
பிரச்சனையின் ஆணி வேர்களை அலசும் இவர்களது படங்கள்.
மறைந்திருக்கும் உண்மைகளை ‘சந்திக்கு’ இழுத்து வருவார்கள்.
இந்த அணியில் உள்ள முக்கியமான இயக்குனரான காஸ்டா கவ்ராஸ் ‘இரண்டாம் உலகப்போரை’...
‘மற்ற இயக்குனர்கள் பார்க்க மறுத்த கோணத்தில்’ பார்த்தார்.
அதன் விளைவே ‘ஆமென்’.
AMEN \ 2002 \ German, Romania, French \ Directed by : Costa - Gavras \ Part - 2
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
# 1. காஸ்டா கவ்ராஸ் தனது படங்களில்,
முக்கியமான அரசியல் கருத்தை...
‘தீமெட்டிக்காக’ வைத்து படம் முழுக்க ‘வெடிக்க’ வைத்து விடுவார்.
எவ்வளவு பெரிய அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும்
‘ஆண்மை மிக்க இயக்குனர்’ காஸ்டா கவ்ராஸ்.
இவரது துணிச்சலான முயற்சிக்கு ‘ஆமென்’ படமே முக்கிய சாட்சி.
படத்தின் தலைப்பே, படத்தின் மையக்கருத்தை பறை சாற்றுகிறது.
‘ஆமென்’ என்ற சொல்...
கிருத்துவ மத பிரார்த்தனையில் இறுதியாக சொல்லப்படுவது.
ஆமென் = அப்படியே ஆகுக.
[ Amen = So be it.]
1963ல் எழுதி நடத்தப்பட்ட,
‘த டெபுடி’ என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு...
‘ஆமென்’ திரைக்கதையை...
நடிகர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என
பன்முக ஆளுமையுடைய Jean-Claude_Grumberg என்பவருடன் இணைந்து அமைத்திருக்கிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
மேலும் இப்படம் பற்றிய முக்கியமான 'விக்கிப்பீடியாவின்’ தகவல்கள், அப்படியே உங்கள் பார்வைக்கு...
which was widely attacked in Catholic and Jewish circles for its unrealistic portrayal of Pope Pius XII.
The German-language version of the film was released under the play's original title
Der Stellvertreter.
In addition to the criticism that had already been raised about The Deputy for its portrayal of the role of the Catholic Church during the Holocaust,
the film created controversy in Catholic circles by its poster (created by controversial Italian photographer Oliviero Toscani) representing a mix of a Christian cross and a swastika.
the film created controversy in Catholic circles by its poster (created by controversial Italian photographer Oliviero Toscani) representing a mix of a Christian cross and a swastika.
ஹேராம் படத்தில் ஸ்வஸ்திக் சிம்பல்,
தாமரை போல மலர்ந்து...,
தாமரை இதழ்கள்... பளபளக்கும் ஆயுதங்கள் போல...
உருமாறுவதை கிராபிக்சில் காட்டியிருப்பார் கமல்.
இது பற்றி விரிவாக நாம் பின்னால் ஹேராம் பதிவில் காண்போம்.
முக்கியமான குறிப்பு...
ஹேராம் வெளியான ஆண்டு 2000.
ஆமென் வெளியான ஆண்டு 2002.
‘ஆமென்’ திரைப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவுக்குள் செல்க...

# 2. ஆமென் படத்தின் துவக்க காட்சியே ‘திரில்லர் இலக்கணம்’.
நமது பாராளுமன்றம் போன்ற,
பிரம்மாண்டமான கட்டிட வளாகத்தில்...
வேகமாக பரபரப்பாக வருகிறான் ஒரு இளைஞன்.
வந்தவன், ஒரு இடத்தில் நின்று...
தனது ‘கோட்டுக்குள்’ இருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து...
மீண்டும் அதை ‘கோட்டுக்குள்’ மறைத்து விட்டு வேகமாக நடக்கிறான்.
அவனை பின் தொடரும் ‘கேமரா’,
ஒரு ‘பெயர் பலகையை’ பிரதானமாக நமக்கு காட்டுகிறது.
“ துப்பாக்கி தம்பி...கொஞ்சம் நில்லுங்க...
இந்த பெயர் பலகை என்னன்னு விளக்கிச்சொல்லி விடுகிறேன்.
இந்தப்பெயர் பலகை முக்கியமானது.
லீக் ஆப் நேஷன்...ஜெனிவா [ League of Nations...Geneva ],
என்ற சொற்களோடு இருக்கிறது பெயர் பலகை.
லீக் ஆப் நேஷன் = உலக நாடுகள் சங்கம்.
ஜெனிவா = ஸ்விட்சர்லாந்திலுள்ள மிக முக்கியமான நகரம்.
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
முதலாம் உலகப்போர் முடிவில் தோற்றுவிக்கப்பட்டஓர் அமைப்புதான் ‘உலக நாடுகள் சங்கம்’ [ 1919 - 1946 ].
முக்கியமான நாடுகள் ஒன்று கூடி பல நன்மைகளை செய்திருந்தாலும்,
மிக முக்கியமான நேரங்களில் இந்த அமைப்பு செயலிழந்தே காணப்பட்டது.
குறிப்பாக வல்லரசுகளை ‘தட்டிக்கேட்கும்’ பணியில் செயலிழந்து ‘மன்மோகன் சிங்காக’ இருந்தது.
இரண்டாம் உலகப்போரில் இந்த அமைப்பு வெறுமனே கூடி,
டீ,காபி, வடை, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டிருந்தது.
எனவே இரண்டாம் உலகப்போர் முடிவில் இந்த அமைப்பை,
‘ஊத்தி மூடி விட்டார்கள்’.
[ மாறாக, ‘ஐ.நா.’ [ U. N. ] என நாம் அழைக்கும்
‘உலக நாடுகள் சங்கம்’ பற்றி, ‘தமிழ் விக்கிப்பீடியாவின்’ குறிப்பை...
இப்போது பார்ப்போம்.
உலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டு அமைப்பு
பாரிஸ் அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் உருவானது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே
பாரிஸ் அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் உருவானது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே
தனது முதற் குறிகோளாக அமைதிப்பேணலை கொண்ட
முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும்.
தனது உச்சநிலையில்,
28 செப்டம்பர் 1934 முதல் 23 பிப்ரவரி 1935 வரை,
58 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
அதனுடைய வரைமொழியின்படி முதன்மையான நோக்கங்களாக
கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு,
ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு,
ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
[1] மேலும் தொழிலாளர் நலன், பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு,
மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற
பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.[2]
மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற
பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.[2]
நூறாண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து ஓர் திருப்புமுனையாக பன்னாட்டளவில் பாதுகாப்பு தேடும் ஓர் அமைப்பாக உலகநாடுகள் சங்கம் அமைந்தது.
இதற்கென தனி படைத்துறை இல்லாததனால்,
தனது தீர்மானங்களை செயல்படுத்தவும்,
பொருளியல் தடைகளை நிலைநிறுத்தவும் அல்லது தேவையான நேரங்களில் படை ஒன்றை அனுப்பவும் பேராற்றல் நாடுகளை நாடவேண்டி வந்தது. ஆனால் அந்நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின.
பொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின.
பொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின.
இத்தாலிய படைவீரர்கள் செஞ்சிலுவை மருத்துவ கூடாரங்களைத் தாக்குவதாக சங்கம் குற்றஞ்சாட்டியபோது பெனிட்டோ முசோலினி
" குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது,
பருந்துகள் சண்டைக்கல்ல" என்று மொழிந்தார்.[3]
" குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது,
பருந்துகள் சண்டைக்கல்ல" என்று மொழிந்தார்.[3]
பல வெற்றிகளையும் சில தோல்விகளையும்
1920களில் சந்தித்த உலகநாடுகள் சங்கம்
1930களில் அச்சு நாடுகளின்ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயலற்றுப் போனது.
மே 1933இல் பிரான்சு பெர்ன்ஹெய்ம் என்ற யூதர் மேல் சிலேசியாவில் ஜெர்மனி அரசால் தமது சிறுபான்மை உரிமைகள் மீறப்படுவதாக முறையீடு செய்தார்.
இதன் விளைவால் இப்பகுதியில்,
1937ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவிற்கு வரும்வரை,
பல ஆண்டுகள் ஜெர்மானியர்களின் யூத எதிர்ப்பு சட்டங்கள் தள்ளிப்போடப்பட்டன.
1937க்குப் பிறகு சங்கத்தின் அதிகாரத்தை நீடிக்க மறுத்து யூத இனவழிப்பு செயல்களில் ஈடுபட்டனர்.
[4]இட்லர் இந்தக் கட்டுப்பாடுகள் ஜெர்மனியின் அரசாண்மையில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டினார்.
எனவே சங்கத்திலிருந்து ஜெர்மனி விலகியது.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட பிறநாடுகளும் விலகின.
இரண்டாம் உலகப் போர் துவக்கம்
உலகநாடுகள் சங்கம்
தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது.
உலகநாடுகள் சங்கம்
தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது.
இந்த உலகப் போரின் பின்னால்,
கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில்,
நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம்
சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.
நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம்
சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.
_________________________________________________________________________________
# 3 “ துப்பாக்கி தம்பி...நீங்க வந்த வேலையை பாருங்க...”
இளைஞன் நூற்றுக்கணக்கானோர் நிரம்பிய,
பிரம்மாண்ட ‘ஹவுஸ்புல்’ அரங்கினுள் நுழைந்தான்...சுட்டான்.
‘யாரைச்சுட்டான் ?’...
அடுத்தப்பதிவில் காண்போம்.
நல்லது... Amen... தகவல்களின் விளக்கத்திற்கு நன்றி...
ReplyDeleteஅடுத்து ஆவலுடன்...
நன்றி தனபாலன்.
ReplyDeleteஅடுத்து உங்களது ஆவலை...சீக்கிரம் தணிச்சிருவோம்.
//‘யாரைச்சுட்டான் ?’...
ReplyDeleteஅடுத்தப்பதிவில் காண்போம். //
அங்க வச்சாருய்யா ட்விஸ்ட்டை..
நாங்களும் ட்விஸ்ட் வைப்போமில்ல...ஹேஹ்...ஹே.
Delete