Jun 18, 2013

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரம்.


நண்பர்களே...
இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை ரித்விக் கட்டக்.
திரைப்படம், நாடகம், சிறுகதைகள் என பன்முகம் கொண்டவர்.
உலகம் முழுக்க,
திரைப்படக்கலையை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில்,
அவரது திரைப்படங்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ரித்விக் கட்டக் படைப்பில் மாஸ்டர் பீஸ் ‘மேக தக்க தாரா’.
இப்படத்தின் பாதிப்பில்தான்‘அவள் ஒரு தொடர் கதையை’
கே.பாலச்சந்தர் உருவாக்கினார்.


தெலுங்கிலும் இக்கதையை படமாக்கி வெற்றி கண்டார்.
அவள் ஒரு தொடர் கதை \ 1974 \ தமிழ் \ இயக்கம் : கே.பாலச்சந்தர்.
அந்துலேனி கதா \ 1974 \ தெலுங்கு \ இயக்கம் : கே.பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர் கதையை பின்னர் வங்காளம், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் பிற இயக்குனர்கள் படைத்து வெற்றி கண்டார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமான மேக தக்க தாராவையும்,
ரித்விக் கட்டக்கையும் யாருமே கண்டு கொள்ளவில்லை.
Kabita \ 1977 \ Bengali \ Directed by : Bharat Shamsher.


கமல், தமிழில்  அவள் ஒரு தொடர் கதையில் ஏற்ற கதாபாத்திரத்தை... தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஏற்று சிறப்பித்தார்.
[இந்தியில் மட்டும் செய்யவில்லை.]

ரித்விக் கட்டக்கின் படங்கள்,
அவரது வங்காள நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்டது.
சத்யஜித்ரே கொண்டாடப்பட்டார்.
ரித்விக் கட்டக் புறக்கணிக்கப்பட்டார்.


ரித்விக் கட்டக்கின் மூன்று படங்களை
ஒரே நாளில் திரையிட்டது...‘கோணங்கள் பிலிம் சொசைட்டி’.
அந்நாள்  ‘கோவை சினிமா ரசிகர்களுக்கு’ பொன்னாள்.

[ 1 ] மேக தக்க தாரா \ 1960 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 2 ] கோமல் கந்தார் \ 1961 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 3 ] சுபர்ண ரேகா \ 1962 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


மூன்று படங்களும் அவரது ‘டிரையாலஜி’.
வங்காளப்பிரிவினையை மையமாக கொண்டது.
கிழக்கு வங்காளத்தில் பிறந்து, பிரிவினையின் போது...
மேற்கு வங்காளத்தில் நடப்பட்டவர் ரித்விக் கட்டக்.
எனவே அவரது படங்களில் பிரிவினையின் சோகம் அடிநாதமாக இருக்கும்.

இந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ திரைப்படத்தில் அதை உருவாக்கிய நிமோய் கோஷுக்கு உதவியாளராக பணி புரிந்தார்.
அவரிடம் திரைப்படக்கலையை கற்றார்.
குருவைப்போலவே ‘ரஷ்ய படைப்பாளிகளின்’ படைப்புகளை ஆராதித்தார்.
ரித்விக் கட்டக் இயக்கி எட்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ரித்விக் கட்டக் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் துணை முதல்வராக பணியாற்றினார்.
அவர் உருவாக்கிய சிஷ்யர்கள்தான் இந்திய சினிமாவின் புகழை உலகறியச்செய்து வருகிறார்கள்.
அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,
அடூர் கோபாலகிருஷ்ணன், மீரா நாயர், மணி கவுல், ஜான் ஆப்ரஹாம்,
குமார் சஹானி, சயீத் அக்தார் மிர்ஸா.

அவரது முக்கிய சீடரான திரு.ஹரிகரன் அவர்கள் தனது குருவை பற்றி
கூறியதை பார்ப்போம்.
[ திரு.ஹரிகரன் அவர்கள் ‘ஏழாவது மனிதன்’ என்ற சிறந்த படத்தை உருவாக்கியவர்.
தற்போது பிரசாத் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தலைவராக இருக்கிறார்.

“ இந்திய சினிமாவின் மிகவும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால்,
அது ‘ரித்விக் கட்டக்’ காகத்தான் இருக்க முடியும்.
அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்தியக்கலைஞர்களிலேயே மிகவும் புதிராக, புரிந்து கொள்ள முடியாதவருமாக விளங்கியவரும்
ரித்விக் கட்டக்தான்.

சிலரின் பார்வையில், ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை.
ஆனால் அவர்கள் பார்க்கத்தவறுவது,
கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும், அக்கறையும்,
ஆழமான நேசமுமாகும்.

இன்னும் சிலரின் பார்வையில், அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுனன்.
ஆனால், இவர்கள் தெரிந்து கொள்ளாதது...
அவரது ஒவ்வொரு ‘ஷாட்டின்’ பின்னால் உள்ள அன்னியோன்யமும், ஆழமான ஒழுங்கு முறையும் ஆகும்.

மற்றும் சிலருக்கோ, அவர் ஒரு கலைப்பட இயக்குனர்.
ஆனால் அவர்கள் அறியாதது,
தன்னுடைய படங்கள் பற்றிய சாதாரண மனிதனின் கருத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை.

அவர் எப்போதுமே, தன் படங்களைப்பற்றி பேசுவது...
தன் படங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவரின் ‘மேக தக்க தாரா’ அல்லது ‘சுபர்ண ரேகா’ படத்தை இன்றும் ஒருவர் பத்தாவது முறை பார்க்கும் போதும் கண்கள் குளமாகும்.
அப்போது  ‘படங்களை பற்றி படங்கள்தான் பேச வேண்டும்’ 
என்ற அவரின் கருத்து நமக்கு புரிகிறது.

அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்கு பின்பாவது இப்போது அவரது படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரது சொந்த வாழ்நாளின் போது இழந்து விட்டோம் என்பதை உணர்கின்றனர்.
அவர் இருந்திருந்தால் இந்திய சினிமாவுக்கு இன்னும் செழுமை ஊட்டி இருப்பாரோ ?
நிச்சயம் செய்திருப்பார்”. - கே.ஹரிகரன் 
30 - 1 - 1990
சென்னை.

நூல் : ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை \
முதல் பதிப்பு \ 1990.
வெளியீடு : சென்னை பிலிம் சொசைட்டி.

ரிதவிக் கட்டக் இயக்கிய படங்கள்,மற்றும் மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை அணுகவும்.

ரித்விக் கட்டக் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயா செல்க...

ரித்விக் கட்டக்கின் படைப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்...

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரமாக இருந்து விட்டார்.
அஸ்திவாரங்கள் தெரிவதில்லை.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

14 comments:

  1. DIGITIZATION,NECESSARY RESTORATION AND RE-RELEASE NEEDED FOR HIS FILMS SAME LIKE SATYAJIT RAY'S WORKS RESTORED BY THE CRITERION

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...அவரது வெளிவராத ஒரு படத்தின் நெகட்டிவை பழுது டி பார்த்து ...
      வெளிநாட்டில் டிஜிடலில் ரீ மாஸ்டர் பண்ணி 35 எம்.எம் நெகட்டிவாக திரும்ப கன்வெர்ட் செய்து...
      ஒரு புண்ணியவான் இலவசமாக பண்ணி அனுப்பினார்.
      கலையின் மகத்துவம் அறியாத இந்திய அரசு டூட்டி கட்ட வேண்டும் என அந்த நெகட்டிவை பறிமுதல் செய்து ஆறு மாதம் பராமரிப்பில்லாமல் மும்பை ஏர்போர்ட்டில் பாழடைந்த குடோனில் கடாசியது.

      இந்திய அரசுக்கு,
      கலையையும்...கலைஞர்களையும் மதிக்க தெரியாது.

      கிரைட்டிரியன் பார்வை ரித்விக்கட்டக்கின் படைப்புகளின் மீது விழுந்தால்தான் நாளைய தலைமுறைக்கு அவரது படங்கள் தெளிவாகப்போய் சேரும்.

      இப்போதுள்ள டிவிடி பிரிண்ட் சுமாராகத்தான் இருக்கும்.

      Delete
  2. நண்பரே திரு ரித்விக் கட்டக் அவர்களின் வாழக்கையைத் தழுவி ஒரு வங்காளப் படம் வெளிவரயிருக்கிறது "meghe dhaka tara" என்ற பெயரிலேயே...

    http://en.wikipedia.org/wiki/Meghe_Dhaka_Tara_(2013_film)

    அந்தப் படத்தின் காணொளி - http://www.youtube.com/watch?v=ZT5UEzQeDGg

    ReplyDelete
    Replies
    1. மறக்கடிக்கப்பட்ட கலைஞனுக்கு, இந்தப்படம் நன்றிக்கடனாக இருக்கட்டும்.
      தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
  3. உலக சினிமா ரசிகரே,
    ரித்விக் கட்டக் ஒரு மறக்கடிக்கப்பட்ட மாபெரும் திரைக் கலைஞன்.சத்யஜித் ரே பதேர் பாஞ்சாலி (1954)எடுக்கும் முன்பே 52 இல் இவர் எடுத்த முதல் கலைப்படம் வெளிவரவில்லை.அது கட்டக்கின் மரணத்திற்குப் பிறகே திரைக்கு வந்தது. இந்தியாவின் முதல் நியு வேவ் இயக்குனர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். பொது நினைவுகளிலிருந்து காணாமல் போய் விட்ட ஒரு உன்னதமான கலைஞனைப் பற்றிய உங்களின் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்...தகவலுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  4. Hi UCR, Is there any world cinema screening to be happening recently in Kovai or Chennai.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் சென்னை பிலிம் சொசைட்டி திரையிடுகிறார்கள்.
      மேலதிகத்தகவல்களுக்கு அதன் முக்கிய பொறுப்பாளர் திரு.தங்கராஜை தொடர்பு கொள்ளவும்.அவரது அலைபேசி எண் : 98401 51956.

      கோவையில் கோணங்கள் பிலிம் சிசைட்டி உலகசினிமாக்களை திரையிட்டு வருகிறார்கள்.
      மேலதிகத்தகவல்களுக்கு அதன் செயலாளர் திரு.ஆனந்த் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
      அலைபேசி எண் : 97904 57568.

      Delete
  5. ரித்விக் பறறி தெரியும் ஆனால் இந்த பதிவும மூலமாக புதிய தகவல் கிடைத்தது.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  6. மிக அருமையான படங்கள் இவருடயவை . மிக அருமையான பதிவு . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ரித்விக் பற்றிய தகவல்களுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      அனாமிகா ரெடியாகி விட்டாளா ?

      Delete

Note: Only a member of this blog may post a comment.