நண்பர்களே...
நேற்று மாலை மெல்லிய மழையில் 'கோவை' நனைந்து கொண்டிருந்தது.
ஆனால் அர்ச்சனா தியேட்டர் ‘வெள்ளத்தில்’ முழுகி விட்டது.
மொத்த ரசிகர்களும் ஆனந்தமாக நீச்சலடித்துக்கொண்டிருந்தார்கள்.
படம் முடிந்தும் வெளியேற மனசில்லாமல்,
கரையேறியது கண்கொள்ளா காட்சி.
வெள்ளத்தை உருவாக்க தீயாக வேலை செய்திருக்கிறார்கள் சுந்தர்.சி. குழுவினர்.
நகைச்சுவை படத்தை உருவாக்குவதுதான் மிக மிக கஷ்டமான காரியம்.
இந்த கஷ்டமான காரியத்தை இஷ்டப்பட்டு செய்து வெற்றி காண்பவர் சுந்தர்.சி.
இப்படத்தில் அவரும் அவரது குழுவினரும் நிச்சயம் உழைத்திருக்கின்றனர்.
‘கொரியன்’ படத்திலிருந்து காப்பியடித்து விட்டார் என்று காறி உமிழ்வதற்கு ஒரு கோஷ்டி இந்நேரம் தீயாக வேலை செய்து கொண்டிருக்கும்.
‘போங்கடா நொண்ணைகளா’ என அதை துடைத்தெறிந்து விட்டு இப்படம் வெற்றி நடை போடும்.
சந்தேகமே வேண்டாம்.
சுந்தர் .சி ‘டாண்டிலைஸ்’ [ Tantalize ] செய்து படமெடுப்பதில் கில்லாடி.
டாண்டிலைஸ் = நம்பிக்கையூட்டி...அதை அடைய விடாது ஏங்க வைப்பது.
‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில்,
தொடையழகி ரம்பாவை.... மர்லின் மன்றோவின் பேவரைட் ஷாட்டில் காட்டியிருந்தார்.
ஃபேனை அடியில் வைத்து, பாவாடையை பறக்க விட்ட போது...
மொத்த ரசிகர்களும் தரையில் விழுந்து,
ரம்பாவை ‘அண்ணாந்து’ பார்த்தது வரலாறு.
இந்தப்படத்தில் ஹன்சிகாவுக்கு ‘சிக்கனமாக’ ஒரு கால் சட்டை தைத்து உலவ விட்டிருக்கிறார்.
மொத்த தியேட்டரே சரிந்து விட்டது.
ஜப்பான் லொக்கேஷனில் பாடல் காட்சிகள்... ‘பிரஷ்’ கிளுகிளுப்பு.
வெள்ளிப்பனிமலை பின்னணியில்,
‘கருப்பு’ காஸ்ட்யூமில் ஹன்சிகா வரும் போது...
சத்தியமாக ‘அகிராகுரோசுவா,ஓசு’ எல்லாம் மறந்து போய் விட்டது.
சந்தானம் படம் முழுக்க வந்து கலாய்த்து இருக்கிறார்.
அவரது சம்பளம் இன்னும் எகிறும்.
விலைவாசி, கிரிக்கெட் சூதாட்டம், எம்.பி சீட்...குதிரை பேரங்கள்,
இவற்றை மறக்கடிக்க ஒரு படத்திற்கு அசாத்திய திறமை இருக்க வேண்டும்.
இப்படத்தில் இருக்கிறது.
அதற்கான உழைப்பு ‘சுந்தர்.சியிடம் தீயாக இருக்கிறது.
அவரது குரு ‘இயக்குனர் மணிவண்ணன்’ ஆசிர்வாதமும் இருக்கும்.
படம் வெற்றியடையும்.
வாழ்த்துக்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
ஒன்னும் தேறாதுன்னு கேள்விப்பட்டேன்...!
ReplyDeleteநகைச்சுவை ரசனை இருப்பவர்களை இப்படம் நிச்சயம் ஈர்க்கும்.
Deleteநல்லா இருக்குங்கறீங்க.. பாத்துருவோம்..
ReplyDeleteசுந்தர்.சி படங்களில் பொழுது போக்கு உத்திரவாதமாக
Deleteநிச்சயம் இருக்கும்.
சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.
என்னது சரிஞ்சிட்டாங்களா.? அப்போ நீங்க..?
ReplyDeleteகொரியன் படம்னு கண்டுபிடிச்சிடுவாங்களோ..
சரிஞ்சதுல மொத ஆளு நாந்தானே.
Deleteபதிவுலக ஜேம்ஸ்பாண்டிகள்தான்...எந்த படம் ஓடினாலும்
‘இது காப்பியடிக்கப்பட்டதுன்னு’ ஜல்லியடிக்கும்.
இரண்டாம் பகுதி..நல்ல விறுவிறுப்பு! இருந்தாலும் கதைக்களம் ஐடி ஃபீல்ட் என்பதால்..சராசரி ரசிகனுக்கு அந்நியப்பட்டு விடுகிறது! மசாலா கஃபே அளவுக்கு ரீச் ஆகறது கஷ்டம்!
ReplyDeleteமசாலா கபே நான் பார்க்கவில்லை.
Deleteவசூலில் இதுவும் அது போன்று சாதனை படைக்கும் எனச்சொல்கிறார்கள்.
மொக்கனு கேள்விப்பட்டு இன்னும் பாக்காம இருக்கேன் தல, இந்த வாரம் நண்பர்களோட போயிட வேண்டியது தான்.. காமெடிக்காக இல்லாங்காட்டியும் நம்ம 'உயிருக்கு மண் உடலுக்கு ஹன்ஷிகா(ஹிஹி)' தலைவிக்காச்சும் போயிறனும்.
ReplyDeleteஹன்சிகா...ஹன்சிகா...ஹன்சிகாய நமஹ.
Deleteஎப்பூடி !
நாங்கல்லாம் பக்தர்கள்.
எங்ககிட்டேவா !!
படம் நல்லாத்தான் இருக்கு..நேத்து தான் பார்த்தேன்..முக்கியமா நலன் குமாரசாமியோட வசனங்கள்....
ReplyDeleteமுத நாள் நைட்ல நாகூர்ல வாங்குன பிரியாணி , உளுந்தூர் பேட்டைல இருக்குற தெருநாய் சாப்புடணும்னு இருந்தா யாராலையும் தடுக்க முடியாது ...........
அப்புறம் ஹன்சிகா ....