நண்பர்களே...
‘ஜோர்பா த கீரிக்’ என் வாழ்வையே புரட்டிப்போட்ட படம்.
நான் மட்டுமல்ல...ஆன்மீகக்குரு ‘ஓஷோ’ ரஜ்னீஷ் தனது பெயரை ‘ஜோர்பா’ என்றே மாற்ற நினைத்தாராம்.
அத்தனை ஆளுமை உடையவன் ‘ஜோர்பா’.
ஜோர்பா த கீரீக் என்ற காவியத்தை படைத்த எழுத்தாளர் NIKOS KAZANTZAKIS.
இலக்கிய உலகில் இன்றும் இணையற்ற சிகரமாய் காலத்தை வென்று நிற்கிறது.
உலகப்பிரசித்தி பெற்ற இந்நூலை திரைக்கதையாக்கி இயக்கி தயாரித்திருக்கிறார் MIHALIS KAKOGINNIS.
ஜோர்பா என்பவன், போஸ்ட் மாடர்ன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் வாழ்பவன்.
கடந்த காலத்தை எண்ணி கலங்கி கொண்டிருக்காமல்...
வருங்காலத்தை எண்ணி பயந்து நடுங்காமல்...
இன்றே...இப்போதே....என அனுபவித்து ருசித்து நிகழ் காலத்தில் களித்திருப்பவன்.
சுற்றியிருப்பவர்களை எளிதில் வசீகரிப்பான்...இனிமையான பேச்சால்...
நடத்தையால்.
பஸில் என்ற எழுத்தாளன் கப்பலுக்காக...துறைமுகத்தில் காத்திருக்கும் போது
பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறான் ஜோர்பா.
ஒட்டிக்கொண்ட ஜோர்பா,
வேலைக்காரனாக...
நண்பனாக...
காவலனாக...
தூதனாக...
ஆலோசகனாக...
இறுதியில் வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் குருவாக மாறும் கணங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி காவியமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
வசீகரம் இழந்த விலை மாதை,
தனது இயல்பால் உயிர்ப்போடு இயங்க வைக்கிறான் ஜோர்பா.
இந்த உலகம் ஜோர்பாக்களால் நிரப்பப்பட வேண்டும் என்ற ஏக்கத்தை பார்வையாளர்களிடம் விதைக்கிறது படம் .
விலை மாது இறந்தவுடன் கிராமத்தினர் அவளது வீட்டை கொள்ளையடிக்கும் காட்சி,
இவ்வுலகில் நாம் எதிர் கொள்ள வேண்டிய சாத்தான்களை அடையாளம் காட்டுகிறது.
இறுதிக்காட்சியில்,
தோல்வி என்பதே தள்ளிப்போடப்பட்ட வெற்றி எனக்கொண்டாடுகிறான் ஜோர்பா.
எழுத்தாளன் பசிலும் அதை உணர்ந்து ஜோர்பாவுடன் இணைந்து இசையில்லாமல் நடனமாடும் இறுதிக்காட்சியே இப்படத்தை இன்றும் கொண்டாட வைக்கிறது.
ஜோர்பா போல் இருந்தால் தினமும் வாழலாம்...
அல்லது தினமும் சாகலாம்.
ஜோர்பா என்ற காவிய நாயகனை செலுலாய்டில் வாழ்ந்து காட்டியது என் ஆதர்ஷ ஹீரோ அண்டனி க்வீன்.
நான் ஜோர்போவாக முயற்சிக்கிறேன்.
நீங்கள் ?
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
முயற்சிக்கிறேன். பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteமுயற்சிப்பதே வெற்றிதான்.
ReplyDeleteஎனது பொங்கல் வாழ்த்தை நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்.
ஜோர்பாவை என் சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் கண்டுக்கொண்ட படம்..இன்றுவரை அவரை தரிசிக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.உங்க விமர்சனத்தின் தரமாவது பார்க்க தூண்டும் என்ற நம்பிக்கையில் நான்....அருமை..நன்றி அண்ணா.
ReplyDelete