நண்பர்களே...
அ னைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
திருவை மட்டும் வாழ்த்த முடியாது.
வசவுதான்.
வேறு வழியில்லை.
படமா எடுத்திருக்கிறார்!
படு திராபை.
திரு = திரைக்கதையின் அரிச்சுவடி தெரியாத இயக்குனர்.
தமிழ் சினிமா இயக்குனர்களில் 90 சதவீதம் பேர்...
சஸ்பென்சுக்கும்... சர்ப்ரைசுக்கும்... வித்தியாசம் தெரியாத ‘மண்டூகங்கள்’.
திரில்லர் படம் எடுக்க ஆசைப்பட்டதில் தப்பில்லை.
திரில்லர் படங்களின் அடிப்படை விதி தெரியாமல் படமெடுத்தது
வடி கட்டிய முட்டாள்தனம்.
திரில்லர் படங்களுக்கு இலக்கணம்...ஹிட்ச்ஹாக்தான்.
அவரது படங்களை திருப்பி திருப்பி பார்த்தாலே போதும்.
ஏகலைவனாகி விடலாம்.
அற்புதமான திரில்லர் படமாக வந்திருக்கக்கூடிய கதையை,
‘திரைக்கதையை சொதப்புவது இப்படி’ என பாடமாக்கியிருக்கிறார்கள்.
நான் இந்தப்படத்தை மிகவும் நம்பி பார்க்கச்சென்றேன்.
காரணம் இயக்குனர் பெயர் திரு.
ஹேராம் ஒளிப்பதிவாளர் திருதான் இப்படத்தை இயக்கியுள்ளார் என நம்பி
ஏமாந்தேன்.
மிஸ்டர் இயக்குனர்... உங்கள் பெயரை ‘திரு திரு’ என வைத்துக்கொள்ளவும்.
இந்தப்பெயர்தான் உங்களுக்கு சாலப்பொருத்தம்.
படம் பூரா நீங்க...திருதிருன்னு பேய் முழி முளிச்சிருக்கீங்க.
படத்திற்கு ‘சமர்’ என்ற பெயரின் மற்றொரு அர்த்தம் தியேட்ட்டரில்தான் விளங்கியது.
இப்படிப்பட்ட படங்களுக்கு தியேட்டர் கொடுங்கள்.
விஸ்வரூபத்திற்கு கொடுக்காதீர்கள்.
அப்போதுதான் தியேட்டர்கள் ‘கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோராக’ மாற வசதியாயிருக்கும்.
நண்பர்களே...‘13 ஜமட்டி’ என்ற உலகசினிமாவை பாருங்கள்.
ட்ரூமேன் ஷோ என்ற படத்தையும் பாருங்கள்.
இரண்டையும் மிக்ஸியில் அரைத்த ‘சமர்’ படத்தையும் பாருங்கள்.
மயிலையும் வான்கோழியையும் கண்டுணருங்கள்.
The Truman Show \ 1998 \ English \ Directed by Peter Weir
13 TZAMETI \ 2005 \ French & Georgian \ Directed by Gela Babluani.
13 \ 2010 \ English \ Directed by Gela Babluni
13 ஜமட்டியை...13 என்ற பெயரில் அதே இயக்குனர் ஹாலிவுட்டில் படமாக்கினார்.
ஒரிஜினலில் இருந்த ஜீவன், ஹாலிவுட் படத்திலேயே மிஸ்ஸாகி...
குதிரை கழுதையாகி விட்டது.
கோலிவுட்டில் ‘கழுதை கட்டெறும்பாகி விட்ட’ அவலம் நேர்ந்ததில் ஆச்சரியமில்லை.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
ஸார், கொஞ்சம் நல்ல முயற்சின்னு சொன்னாங்க, அதுவும் இல்லை போலயே... நீங்க அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா பாத்தாச்சா? இது ரெண்டையும் கம்பேர் பண்ணி "சமர்" சூப்பர்னு சொல்லிட்டாங்களோ?
ReplyDeleteஅலெக்சையும்,கண்ணாவையும் இன்று பார்க்கப்போகிறேன்.
Deleteஇந்தப்படம் திரைக்கதையின் ஒரு ரூல் கூட கடைப்பிடிக்காத பம்மாத்துப்படம்.
வெளிநாட்டு படத்தை காப்பி கூட அடிக்கத்தெரியாத கபோதிதான்... இயக்குனர் திரு.
கருந்தேளின் திரைக்கதை எழுதுவது இப்படி தொடரை படித்திருந்தால் கூட கொஞ்சம் உருப்படியாக திரைக்கதை அமைத்திருக்கலாம்.
எதுவுமே படிக்காம...உழைக்காம காப்பி அடிச்சா படம் பப்படமா ஆயிரும்.
‘13 சமட்டி’ சூப்பர் சப்ஜக்ட்.
அந்த படத்தை ‘ட்ரூமன் லைவ் ஷோ’ படத்தோட மிக்ஸ் பண்ணி கெடுத்திட்டானுங்க...
இந்த சப்ஜக்டை இனி யாரும் பண்ண முடியாது.
அந்தக்கடுப்புதான் இந்தப்பதிவு.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....
ReplyDeleteநன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
Deleteஅண்ணே இந்த வாறு வாருரிங்க திரு படிச்சா என்ன நெனைபாரு
ReplyDeleteஒண்ணும் நினைக்க மாட்டாரு.
Deleteஇந்தப்படத்துல சம்பாதிச்சது மட்டுமே நினைப்பில் இருக்கும்.
பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteநானும் இந்த படத்தை எதிர்பார்த்தேன். நெட்ல பார்த்துக்க வேண்டியது தான்..
13 TZAMETI படம் என்கிட்ட இருக்கு. சிம்பு தேவனின் "இரும்பு கோட்டை" படத்துல கூட TZAMETI படத்தோட ஒரு சீன் வரும்னு நினைக்கிறன்..
நன்றி ராஜ்.
Deleteதங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
இந்தப்படத்தை மிஷ்கின் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நம் விதி திரு ரூபத்தில் விளையாடி விட்டது.
வணக்கம் பொங்கல் வாழ்த்து
DeleteOh this film got released ?
ReplyDeleteAlex Pandian reviews are bad too. I think Kanna Laddu.. will be the winner for this pongal.
Do you use Google Online tool to write in Tamil. I am finding very difficult to write in it? Any suggestion.?
நண்பரே...
Deleteசமர் தியேட்டர்களில் வெளியாகி விட்டது.
அலெக்ஸ் பாண்டியன் நன்றாக வந்திருந்தால்தான் ஏமாற்றமாயிருக்கும்.
அதன் தரம் எதிர்பார்த்ததை விட மோசம்.
கண்ணா இன்னும் பார்க்கவில்லை.
நான் உபயோகிப்பது 'NH writer' என்ற தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது.
உபயோகித்தல் எளிதாக இருக்கும்.
படம் பார்த்தேன் அண்ணா..நீங்க குறிப்பிட்ட ரெண்டு படமும் என்ட்ட இல்ல..சமர் சுமாரான படம்தான்
ReplyDelete