நண்பர்களே...
'மாற்றான்' திரைப்படம் பார்க்க முதல் நாள் இரவுக்காட்சிக்கு போய் டிக்கெட்
கிடைக்கவில்லை.
எனவே வேறு வழியில்லாமல் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' பார்த்தேன்.
இப்படம் பார்க்கக்கூடாது என்ற உறுதியோடு இருந்தேன்.
ஏனென்றால் எனது கனவு தேவதை ஸ்ரீதேவியின் சிதிலமடைந்த பிம்பத்தை காண விரும்பாதுதான்.
பதின் வயதில் ஸ்ரீதேவியை கனவு தேவதையாக்கியவன்...
இன்று வரை அந்த அந்தஸ்தை வேறு யாருக்கும் தராமல் பாதுகாத்து வருகிறேன்.
அழகும்,திறமையும் ஒருங்கே வசித்தது ஸ்ரீதேவியிடம்தான்.
நான் சமீபத்தில் வண்டலூர் ஜூவில் பார்த்தவைகள்தான்...
இப்போது மாறு வேடமிட்டு... தமிழ்ப்பட கதாநாயகிகளாக உலா வருகின்றன.
எல்லாமே ‘கிளிவேஜ்’ கிளிகள்.
‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தை பார்க்கக்கூடாது என்ற
எனது முடிவு எவ்வளவு தவறானவை என்பதை படத்தின் ஒவ்வொரு பிரேமும் கூறின.
எனக்கு மிகவும் பிடித்த ‘மன மகிழ்’ வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
‘மொழி’, ‘அபியும் நானும்’ படத்திற்குப்பிறகு...
இவ்வகையில் என்னை மிகவும் கவர்ந்த படம் இதுவே.
ஆங்கிலம் தெரியாத அவஸ்தையை, அழகான திரைக்கதையாக்கி
வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்
அதோடு கணவன் - மனைவி - பிள்ளைகள் சிக்கலையும் உளவியல் ரீதியாக
அணுகி இருக்கிறார்.
ஸ்ரீதேவி - மகன்... உறவு உணர்வுரீதியாகவும்,
ஸ்ரீதேவி - கணவன் - மகள்... உறவு அறிவுரீதியாக அமைத்து
அதனால் ஏற்படும் சிக்கல்களையும்...அதற்கு விடைகளையும் முதல் படத்திலேயே சொல்லி மிரட்டி விட்டார் இயக்குனர்.
இயக்குனர்,வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே அமெரிக்காவிற்கு, ஆசனவாயிலில் ஆசிட் அடித்திருக்கிறார்.
‘ஆண்டிப்பட்டி அப்பத்தாவிடம்’ ஆங்கிலம் பேசும்
அராஜக ஆண், பெண்மணிகளை கம்பத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்.
ரசிகர்களும் தன் பங்குக்கு அடிப்பதை...
தியேட்டரில் எழும் ‘கரவொலி’ உணர்த்துகிறது.
பிரெஞ்சுக்காரனுக்கு ஸ்ரீதேவி மேல் இருப்பது காதல்...
ஸ்ரீதேவிக்கு பிரெஞ்சுக்காரன் மேல் இருப்பது ‘மரியாதை கலந்த அன்பு’...
இந்த உறவு...காவியத்தன்மையுடன் இருக்கிறது.
இந்த சிறு கதைக்கு, ஸ்ரீதேவி ‘முற்றும்’ எழுதுவதை...
மிகச்சிறப்பான ‘குறியீடுகளால்’ விளக்கியுள்ளார் இயக்குனர்.
இயக்குனர் ‘பெண்’ என்பதால்தான் இக்குறியீட்டை உருவாக்கி,
படத்தில் காட்சி படுத்த முடிந்தது.
சத்தியமாக இப்படி ஒரு குறியீட்டை ஆண் இயக்குனர் உருவாக்கியிருக்க முடியாது என அடித்து சொல்வேன்.
படம் பார்த்தவர்களுக்கு அக்குறியீடு மிக எளிமையாக புரிந்திருக்கும் என்பதால் அக்குறியீட்டை விளக்க தேவையில்லை என நினைக்கிறேன்.
இப்படத்தை பெற்றோர்கள்....
குழந்தைகளோடு போய் தியேட்டரில் பார்க்குமாறு வேண்டுகிறேன்.
நான் இப்படத்தை மீண்டும் குடும்பத்துடன் பார்க்க இருக்கிறேன்.
நான் என் மனைவியின் சமையலை இது வரை புகழ்ந்ததே இல்லை.
காரணம்... இறுமாப்பு + அலட்சியம் + திமிர் .
“ அற்புதமாக சமைப்பது அவள் வழக்கம்...
வழக்கத்தை எதற்கு பாராட்ட வேண்டும் ? ”
‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’
என்னைப்போன்ற
அலட்சிய கணவன்களுக்கு,
செலுலாய்ட் போதி மரம்.
சமீபத்திய பாராட்டுகளில்...என் மனைவியை பயப்படுத்தி வருகிறேன்.
“ என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு ! ”
நான் இப்படத்திற்கு ஒரு மாதம் கழித்து ‘ஒரு மினி தொடர்’ கட்டாயம் எழுதுவேன்.
அஜீத்திலிருந்து அமெரிக்கா வரை ஏகப்பட்ட விஷயம் எழுத வேண்டி உள்ளது.
அடுத்தப்பதிவில் ‘ஹேராமை’ தரிசிப்போம்.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி அழகாக இயக்கப்பட்ட படம். 2.30 மணிநேரமும் கொஞ்சமும் சலிக்கவைக்காமல் பார்க்கவைத்த,, தமிழ் சினிமா கட்டாயம் திரும்பிப் பார்க்கவேண்டிய படம்.
ReplyDeleteஎன்ன??? மாற்றானுக்கு ரசிகர்கள் லைனில் அடிபட்டு டிக்கெட் வாங்கும் நிலையில், இந்தப்படத்திற்கு தியேட்டரில் 30-35 பேர் மட்டுமே இருந்தது வருத்ததிற்கு உரியது. :(
மாற்றானும்... விகடனிலிருந்து வந்திருக்கும் டைம்பாஸும் ஒன்று.
Deleteஇரண்டையுமே மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இங்கிலிஷ் விங்கிலிஷ்...இலக்கியம்.
இலக்கியங்கள் எப்போதுமே தாமதமாகத்தான் கொண்டாடப்படும்.
ஆனால் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
2012 தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் மொக்கை படங்களுக்கு மத்தியில் நல்ல படத்துக்கு ஒரு உதாரணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஒட்டு மொத்த தமிழகமும் வாழ்த்தி வரவேற்க வேண்டிய நல்ல படம்.
Deletehttp://multistarwilu.blogspot.in/2012/10/blog-post.html
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே.. நானும் "தல" ரசிகர் என்ற முறையில் தான் திரையரங்கினுள் நுழைந்தேன். ஆனால் படத்தில் மெய்மறந்ததேன்னவோ உண்மை!!
ReplyDelete//எனது கனவு தேவதை ஸ்ரீதேவியின் சிதிலமடைந்த பிம்பத்தை காண விரும்பாதுதான்.//
இயற்கையாகவே கிடைத்த அழகை இன்னும் மெருகேற்றுவதாக நினைத்து சிதலப்படுத்தியது நிச்சயம் இயற்கையின் குற்றமல்ல!! அவர் நடிப்பு நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று!!
//சமீபத்திய பாராட்டுகளில்...என் மனைவியை பயப்படுத்தி வருகிறேன்.
“ என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு ! ”//
ஹாஹ்ஹா
//அஜீத்திலிருந்து அமெரிக்கா வரை ஏகப்பட்ட விஷயம் எழுத வேண்டி உள்ளது.//
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!
நன்றி நண்பரே!.
Deleteஉங்களது மலேசிய,சிங்கப்பூர் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.
அஜித்-ஐ ரசிக்கிறேன் அஜித் ரசிகனை எதிர்க்கிறேன்...
ReplyDeletehttp://multistarwilu.blogspot.in/2012/10/blog-post.html
//இயக்குனர்,வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
ReplyDeleteஆங்காங்கே அமெரிக்காவிற்கு, ஆசனவாயிலில் ஆசிட் அடித்திருக்கிறார்.//
:-)
பார்க்கனும்...நாம சந்தித்த போது உரையாடியவையே இங்கும் வாக்கியங்களாக...கேட்பதில் இருக்கும் சுகம்...படிப்பதிலும் இருக்கிறது
ReplyDelete
ReplyDeleteஅப்பா...ஒரு இடைவெளிக்கு பிறகு நல்ல சினிமா என்று சொல்லுங்க...
பெங்களூர்காரர்களுக்கு மாற்றானும் இல்லை ENGLISஷ் VINGLISஷ் உம் இல்லை :(
ReplyDeleteஏற்கெனவே நினைத்திருந்தாலும் உங்களின் விமர்சனம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது நிஜம். நன்றி
ReplyDeleteஎனக்கும் இங்கிலீஷ் விங்க்லிஷ் ரொம்பவே பிடித்து இருந்தது. எனக்கு பட்ட ஒரே ஒரு குறை, படத்தில் ஆங்கிலம் கற்கும் ஒருவனை தென்னிந்திய அம்மாஞ்சியாக காட்டியது தான். வட இந்திய இயக்குனர்கள் தென்னிந்திய, குறிப்பாக தமிழ் இளைஞன் என்றால் அவனுக்கு ராமகிருஷ்ணன் என்று பேர் வைப்பதும், கண்ணாடி போட்டு விடுவதும், அந்த கதாபாத்திரம் அபத்தமாக தமிழ் ஸ்லாங்கில் ஆங்கிலம் பேசுவதுமாக, சீரியல் முதல் சினிமா வரை ஒரு Cliche வை உண்டாக்கி விடுகிறார்கள். இந்தி சினிமாவில் ஒரு யதார்த தமிழ் இளைஞனை நம் முன் முதலும் கடைசியுமாய் நிறுத்தியது பாலச்சந்தரும், கமலும் தான், ஏக துஜே கே லி யே படத்தின் மூலம்.
ReplyDelete// ‘மொழி’, ‘அபியும் நானும்’ படத்திற்குப்பிறகு...// பார்க்கவேண்டிய படம்னு சர்டிபிகேட் கொடுத்தது எனக்கும் பார்க்கவேண்டிய ஆர்வத்தைக் கொடுத்திருக்கு.
ReplyDeleteநண்பர்களே...
ReplyDelete‘தங்கை மகன் திருமணத்தில்’...
தாய் மாமன் வேடமணிந்து பணியாற்றியதில்
பிசியாக இருந்து விட்டேன்.
எனவே பின்னூட்டங்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.
பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
பார்க்க ஆவலா இருக்கிற படம்..உங்க விமர்சனம் மேலும் பார்க்க துடிப்பை கொடுத்துருச்சி..இந்த வாரம் பார்த்துருவேன்.உங்களோட எழுத்துல ரொம்ப நாள் கழித்து படிக்கிற விமர்சனம்.அருமை...நன்றி.
ReplyDelete