நண்பர்களே...
ஒட்டு மொத்த தமிழக மக்கள் காணும் மின்சாரக்கனவு நனவாகுமா ?

தமிழக மின்வாரியத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் திரு.காந்தியின் கட்டுரையை தயவு செய்து வரி விடாமல் படியுங்கள்.
இக்கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் குரலையும் சேர்த்து பதிவு செய்து வெளியிடுங்கள்.
பேஸ்புக்கில் வெளியிடுங்கள்.
இணையத்தில் இருக்கும் அத்தனை ஊடகங்களிலும் ஓங்கி ஓலிக்கட்டும்.
தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான 
உண்மைக் காரணமும்அதற்கான தீர்வும்
கோவைசா.காந்தி,
அக்டோபர் 2012
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

தமிழகத்தின்
 மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் 
சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது
2013 ஆம் ஆண்டில் இந்தப்பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும்
2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும்
2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் 
என்பது மின் நிபுணர்களின் கணிப்பு

இந்த சூழ்நிலையில்
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 
மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் 
கேட்பாரற்றுக்கிடக்கின்றன
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள 
மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ
இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் 
மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் 
தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது

1.தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான 
குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), 
வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்ஆகிய எரிவாயு 
மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும்
பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் 
வாடிக்கையாக.இருக்கிறது
குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும்
வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 
95 மற்றும் 92 மெகாவாட்திறனைக் கொண்டிருகின்றன
இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக 
செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியும்

இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன
அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி 
முடங்கிக்கிடக்கிறது
அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாக தமிழக அரசு 
முயற்சி எடுக்க மறுத்து வருகிறது
இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை 
நாம் இழந்து கொண்டிருக்கிறோம்
இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய 
இயற்கை எரிவாயுவிற்காக
மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் 
ஒவ்வொரு நாளும் 
71 லட்ச ரூபாயை தமிழ்நாடுமின் வாரியம் GAIL நிறுவனத்திற்கு 
கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 
2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள 
அனல் மின் உற்பத்திஅலகுகளை அமைக்க 
REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் 
துவங்கியது
அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் 
நிறைவு பெற வேண்டும்
அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 
2008 ஆகஸ்டில் தொடங்கியது
2011 நவம்பர் மாதம் அது முடிவடையவேண்டும்.

வடசென்னை திட்டத்தைப் போலவே
மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 
600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம்தொடங்கியது
2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்
இவை அனைத்தும் 
ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் 
மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) 
என்பதால் இவற்றை அமைத்து
இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் 
மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான 
NTPC-யின் துணையுடன் நிறுவ 
2002 ஆம் ஆண்டில் 
தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது

இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் 
மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை
ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் 
போடப்பட்டது
கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் 
தொடங்கின
2010 அக்டோபரில் முதல் அலகும்
2011 மார்ச்சில் இரண்டாவது அலகும்
2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியை 
தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில்
மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும்
வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும்
வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் 
முடிவடைந்துள்ளன
2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை 
செய்யப்பட்டு 
மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). 
எனினும் என்ன காரணத்தினாலோ 
தமிழக அரசு அவற்றில் இருந்து 
மின்சாரத்தை உற்பத்தி  செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது
இதன் காரணமாக
நாம்  1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக
தமிழக அரசு நினைத்தால் 
இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) 
உடனடியாக உற்பத்தி செய்ய முடியும்
இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் 
உற்பத்தி  செய்யப்படும் மின்சாரமாதலால்
தனியாரிடம் இருந்து வாங்கும் 
கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் 
குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும்
எனினும்
தமிழக அரசு  இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதை 
தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும்
தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 
தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் 
மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 
2008 மே மாதத்தில் துவக்கின

முதலாவது அலகு ஜூன்  2013 இலும்
இரண்டாவது அலகு மார்ச் 2012இலும், 
உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும்

இந்தத் திட்டத்திலிருந்து  தமிழகத்திற்கு, 
சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
ஆனால்
இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் 
காலம் கடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் உள்ள 
முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 
2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து 
தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் 
இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் 
என்ற கோரிக்கையை 
இன்று வரை 
தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 
1000 மெகாவாட் திறனுள்ள 
முதல் இரண்டு அலகுகளில் இருந்து  
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 
190 மெகாவாட் மின்சாரத்தை  (காட்கில் ஃபார்முலா)  
சட்டத்திற்குப் புறம்பாக 
மத்திய அரசானது, 
ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது
எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை 
தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற 
இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக
தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக
இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) 
மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே 
இன்றைய பற்றாக்குறையான 
4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும்.
என்றாலும்கூட , 
இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் 
பிரச்சினையை முற்றவிட்டு
தமிழக மக்களை கடும் துயரில் ஆழ்த்தி 
தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து 
குறைந்த விலையில் 
உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை 
உற்பத்தி செய்யாமல்,
கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை 
வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை 
தீர்க்கஇயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது

இதோடு சேர்த்து
கூடங்குளம் அணு மின் நிலையம் 
நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் 
தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க முடியாமல் 
இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது
தமிழகஅரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி..ஆர் 1000 வகை அணு  உலையின் 
அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும்
அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் 
மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும்
இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன்  
கடல்நீர் உப்பகற்றி ஆலைகளை’ இயக்குவதற்கே 
சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்
அணு உலையின் இயக்கத்திற்கும்
அது தொடர்பான 
மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption)
 மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும்

எனவே
அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 
600 மெகாவாட் மின்சாரம்தான்
இதில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு  46 25% என்பதால் 
இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277. 5 மெகாவாட்தான்
மின்சாரம் கடத்தப்படும் போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக
கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 
இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் 
அது இயங்கத் தொடங்கிய 
முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது
அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் 
என்பதுதான் 
உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 
அணு உலைகளின் அனுபவம்

எனவே, 
கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில்
அதாவது 2015 ஆம் ஆண்டுவரை,
அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும்
இதன்படி
தமிழகத்தின் பங்கான 46 25 % என்பதை வைத்துக் கணக்கிட்டால்,
ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் 
சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 
2015 ஆம் ஆண்டு வரையிலுமே 
தமிழகத்தால் பெறமுடியும்
இதில்
கம்பி இழப்பான 22 %  கழித்து விட்டால் 
கிடைக்கப்போவதென்னவோ 
108 இல் இருந்து 145 மெகாவாட்தான்
இரண்டு அணு  உலைகளும் இணைந்தே 
மின்சாரத்தை அளித்தாலும் கூட
தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் 
கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து 
கிடைக்கப் போகிறது

எனவே
உற்பத்தி தொடங்கப்படாமல் 
தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 
2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் 
மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கான நடவடிக்கையை 
தமிழ்நாடு அரசு 
போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

…………..கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான 
மற்றொரு காரணமாக இருப்பது
மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத்தரப்பினருக்கும் 
சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) 
 ‘மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்’ நடவடிக்கையாகும்.

மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினை 
பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” 
மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

 ‘மின் வெட்டு’  மற்றும்  ‘மின்  விடுமுறைக்கான காலம்’ தொடர்பான 
அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது
‘மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்’ ஒப்புதல் இருந்தாலன்றி 
அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 
 ‘மின் விடுமுறை’ மற்றும்  ‘40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை’ 
எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் 
மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன
அத்தனை வழக்குகளையும்  ‘ஒழுங்கு முறை ஆணையத்தின்’ 
விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே
2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை 
முதல்முறையாக அமல் படுத்தியபோது  
ஒழுங்கு முறை ஆணையம்’ 
அதற்கான அனுமதியை வழங்கவில்லை
இதன் காரணமாக ஐந்து வார காலத்திற்கு 
தமிழ்நாடு மின் வாரியம் 
தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை
இறுதியில்
அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து  
ஒழுங்கு முறை ஆணையம்’ 
மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

அரசின் தலையீடு இல்லாமலேயே 
மின்சாரத்தினைப் பங்கீடு செய்து 
கொடுப்பதற்கான அதிகாரத்தினை  
ஒழுங்கு முறை ஆணையம்’ பெற்றுள்ளது

தற்போது தமிழகத்தில் நிலவும் 
பாரபட்சமான மின்வழங்கு முறையில் 
‘ஒழுங்கு முறை ஆணையம்’ சுயமாகவே தலையிட்டு  
தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும்
ஆனால்
அது தன் கடமையை ஆற்றவில்லை

 ‘பாரபட்சமான மின் வழங்குதல்’ என்பதை 
கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

• சென்னை மாநகரம் மட்டுமே 
தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 
25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது

தமிழகத்தின் பிறபகுதிகள் 14 - 16 மணி நேரம் 
மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது 
சென்னை மாநகரத்தில் மட்டும் 
23 மணி நேரம் மின்சாரம்  வழங்கப்பட்டு வருகிறது.• 

 ‘மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களை’ 
பெற்றுள்ள  (110 மற்றும் 230 கே.வி.)
மின் இணைப்புகள் 
800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன
இவற்றிற்கு  24 மணி நேரமும் மின்சாரம் 
வழங்கப்பட்டு வருகிறது.

• 31 
பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் 
மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது
இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• 
பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும்
அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை 
எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்தி வருகின்றன
அது போன்றே குளிர் சாதன வசதியையும் 
அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• 
உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 
40% மின் வெட்டு உள்ளது
மேலும்,
 மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 
10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது 
என்பதற்கான தடையும் உள்ளது
இதன் மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில்
  ‘மின் பளு’ குறைந்திருக்க வேண்டும்
அப்படியானால்
மாலை  6 மணியில் இருந்து 10 மணி வரை 
தமிழகத்தில் மின்வெட்டு  (load shedding) இருக்கக் கூடாது.

• 
திரைப்பட அரங்குகள்
ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு 
மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்
ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 
மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான 
மின் இணைப்பைக் கேட்கின்றன.
இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள 
சிறு-குறு தொழில்கள் 
16 மணி நேர மின் வெட்டால் முடங்கிப் போய்விட்டன
வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம் போன போக்கில் 
அரை மணி நேரத்திற்கும்
ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் 
இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும்
விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலை
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது

இதன் பிரதிபலிப்புதான் 
இன்று  பல்வேறு இடங்களில் 
மக்கள் போராட்டங்களாக    வெடித்திருக்கின்றது.

அரசும்ஆணையமும்
 இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை 
முன் வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும்
உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள 
மூன்று அனல் மின்நிலையங்களையும் 
எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க 
தமிழக அரசையும்,
 மின் வாரியத்தையும் வலியுறுத்தவேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே 
நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது 
‘ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு 
தன் கடமையை நிறைவேற்ற 
வலியுறுத்த வேண்டும்.

‘தமிழ்நாடு மின் துறைப்பொறியாளர்கள் அமைப்பு’ 
இப்பிரச்சினையில் 
தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்
கோவைசா.காந்தி,
அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111