கமினோவை பார்ப்பதற்கு முன்... மேல் நாட்டு கவிதை ஒன்றை பார்ப்போம்...
மேலுலகில் கடவுள்கள் வரிசையாக நின்று கொண்டு...
பூவுலகில் நாம் படும் துன்பங்களை பார்த்து...
ரசித்து, சிரித்துக்கொண்டிருப்பார்களாம்.
ஆனால், அவர்கள் பிடித்துக்கொண்டு நின்றிருந்த...
கோல்டன் பார் லேசாக சூடானது...
என முடித்திருப்பார் கவிஞர்.
‘சூடானது’... ஹ்யூமன் சென்சுயஸ்னஸ்.
Human Sensuousness = Aesthetics
கமினோவில் வருகின்ற பாதிரியார்கள் சேடிஸ்ட்களாக மட்டும் இயங்குவதை படம் முழுக்க காணலாம்.
கமீனோவின் தந்தை... நூரி ஹாஸ்டலுக்கு வருகிறார்.
கையில் நூரியின் காதலன் புகைப்படம்,அவன் எழுதிய காதல் கடிதங்கள் அடங்கிய கவரும்...கிடாரும்.
நூரியை உள்ளே வைத்துக்கொண்டே...அவள் இல்லை என பொய்யுரைக்கிறார்கள்.
கவரை மட்டும் பெற்றுக்கொண்டு... கிடாரை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இந்த கிட்டார்தான் கமீனோவின் கனவுலகில் குறியீடாக வந்தது.
கமீனோ... தனது அக்காவை, சென்சுயஸ்னஸ் நிலையில் இருப்பதாக தனது கனவுலகை வடிவமைத்திருப்பது... அந்த காரெக்டரின் உயர்தன்மையை மேலும் லிப்ட் செய்கிறது.
கமினோவை, பாதிரியார் ' Canonization ' மெத்தடில் ‘ செய்ன்ட் ’ [Saint] ஆக்க முயற்சிக்கிறார்.
கனேனைசேஷன் என்பதற்கு விக்கிப்பீடீயாவின் விளக்கம்...
Canonization (or canonisation) is the act by which a Christian church declares a deceased person to be a saint, upon which declaration the person is included in the canon, or list, of recognized saints. Originally, individuals were recognized as saints without any formal process (as it is still done in the Orthodox Church). The process is most commonly used in, although not limited to, theCatholic Church.
கன்னியாஸ்திரி ஒருவர்... நூரியின் காதலன் புகைப்படம் மற்றும்
காதல் கடிதங்கள் அனைத்தையும் ரகசியமாக மறைத்து விட்டு...
நூரியை மூளைச்சலவை செய்கிறார்.
அவர் பரப்புரையில் இந்த வசனத்தை மட்டும் நினைவில் கொள்வோம்.
“ நான் பஸ்ஸில் போகும் போது, இருக்கைகள் காலியாக இருந்தால் கூட நின்று கொண்டேதான் போவேன் ”
மீண்டும் ஆப்ரேஷன்...மீண்டும் நிலமை மோசம்...
மீண்டும் பாதிரியார்... மீண்டும் கனேனைசேஷன் பிராசஸ்...
முத்தாய்ப்பாக பாதிரியார் சொல்வது,
“ Love Jesus ”
“ That's What I Do ” என்கிறாள் கமினோ.
‘ஜீசஸ்’ என்ற வார்த்தை, கடவுள் என்ற பதத்திலும்...
கமீனோவின் பாய் பிரண்டின் பெயர் என்ற பதத்திலும்...
இயங்கிய, இயக்குனரின் வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்.
மேலும், கமினோ பாய்ண்ட் ஆப் வியுவில்...
ஜீசஸ் என்ற வார்த்தை... பாய்பிரண்டை மட்டும் குறிக்கிறது என்பதை பார்வையாளராகிய நாம் புரிந்து கொள்கிறோம்.
படத்தில் உள்ள கேரக்டர்கள் யாருக்கும் அது புரியவில்லை.
யார் புரிந்து கொள்ளப்போகிறார்கள்? என்ற 'Isotope'
சஸ்பென்ஸ் உத்திதான்...இப்படத்தின் ஹிட்ச்ஹாக் பேவரைட் பார்முலா.
தந்தை வீட்டுக்கு போக...நூரி கமினோவுக்கு துணையாக இருக்கிறாள்.
ஷெல்பில் கிடாரை பார்த்ததும்...மீட்டி பாடுகிறாள்.
அப்போது,
‘காலியாக இருக்கும் மருத்துவமனையின் நீளமான வராண்டா ஷாட்’ போடுவார் இயக்குனர்.
பாதி இருட்டு...
பாதி வெளிச்சம்...
இருட்டு முன்னணியிலும்,வெளிச்சம் பின்னணியிலும் இருக்கிறது.
நூரிக்குள் இருக்கும் மதநம்பிக்கையை, இருட்டாகவும்...
சென்சுயஸ்னஸ்ஸை, வெளிச்சமாகவும்...
இக்குறியீட்டை கொள்ளலாமா?
மறுநாள் காலையில் திரும்பி போகும் போது,விதவிதமான மாடர்ன் டிரஸ் போட்ட ஜவுளிக்கடை பொம்மைகளை சென்சுயஸ்னஸ்ஸாக பார்க்கிறாள்.
ஒரு கணம்தான்...
மண்டைக்குள் ‘ மத நம்பிக்கை ’ அபாயமணி அடிக்க...
பார்வையை உடனே புறக்கணித்து,தலையை திருப்பி நடக்கிறாள்.
‘மத நம்பிக்கை’ என்ற வட்டத்திலிருந்து நூரி மீண்டு வருவாளா? என இக்காட்சி மூலம் கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குனர்.
நோயின் இறுதி வட்டத்துக்குள் வந்து விட்டாள் கமீனோ.
வலியின் தாக்குதலை தாள முடியாமல் அவள் கேட்கும் கேள்விகள்...
கர்த்தரை மீண்டும் சிலுவையில் அறையும் ஆணிகள்.
தான் விரும்பிய சிகப்பு ஆடையை வாங்கித்தரவும்...
வியன்னா... கூட்டிப்போகவும் வற்புறுத்துகிறாள்.
வியன்னாவா?
தந்தை குழம்புகிறார்.
நானும் குழம்பினேன்.
அடுத்த பதிவு வரும் வரை... நீங்களும் குழம்புங்கள்.
ஒரே குழப்பம்...
ReplyDeleteஅடுத்த பதிவில் தெளிவாகி விடும்.
ReplyDelete//கமினோவை பார்ப்பதற்கு முன்... மேல் நாட்டு கவிதை ஒன்றை பார்ப்போம்//
ReplyDeleteகமினோ படமே ஒரு மேல்நாட்டுக் கவிதை போலத்தான் படுகிறது!!
ஆம்...கமினோ, துன்பியல் கவிதை.
Delete