டேக்கன் என்ற ஹாலிவுட் திரைப்படம் திரைக்கதை உத்தியாலும் லீயாம் நீசன் நடிப்பாலும் என்னை மிகவும் கவர்ந்த படம்[இப்படத்தை அப்படியே காப்பியடித்து விருதகிரியாக்கினார் நம்ம விஜய காந்த்]
சமீபத்தில் வெளியான அன்நோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தை
லியாம் நீசனுக்காகவே பார்த்தேன்.
படம் பார்த்து அதிர்ந்து விட்டேன்.
கதை அப்படியே என் ஆசான் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே நாவலின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி .
விக்கிப்பீடியாவில் இது பற்றிய தகவல்களை தேடினேன்.
அன் நோன் [2011]திரைப்படத்தின் கதை 2003ல் வெளியான பிரஞ்ச் நாவல்
Hors De Moi.....என்று கூறியது.
எழுதியவன் Dider Van Cauwelaert.என்பதும் தெரிய வந்தது.கதையை திருடிய பிரெஞ்ச் களவாணியின் படத்தை பாருங்கள்.
இந்தக்கதை 1981அல்லது 1982ல் சுஜாதா சாவி என்கிற பத்திரிக்கையில் தொடராக எழுதியது.
நான் அப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்[வருசத்துக்கு 100 ரூபாய்தான் பீஸ்]
நானும் எனது நண்பர்களும் போட்டிபோட்டு படித்த தொடர்.
சாவி வந்த அடுத்த நாள் காலேஜில் நில்லுங்கள் ராஜாதான் பிரதான டாபிக்.
வாராவாரம் அவ்வளவு விருவிருப்பு.
ஒருவன் தனது வீட்டுக்குப்போனால் அவனது மனைவி நீங்கள் யார்? எனக்கேட்பாள்.
எனது கணவர் என வேறு ஒரு ஆளைக்காண்பிபாள்.
இவனை அவனது பிள்ளைகள்,கூர்க்கா... ஏன் நாய் கூட நம்பாது.
போலிசில் புகார் செய்வான்.
அவர்களும் விசாரித்து விட்டு இவனைத்தான் மெண்டல் என்பார்கள்.
அப்புறம் கணேஷ்-வசந்தை பார்த்து உதவி கேட்பான்.
அதுக்கப்புறம் கேக்கணுமா...இன்னும் ஜெட் ஸ்பீடுல கதை பறக்கும்.
இந்தக்கதையை அப்படியே வரிக்கு வரி...எழுத்துக்கு எழுத்து அப்பட்டமா காப்பியடிச்சு அன் நோன் எடுத்திருக்கானுங்க.
சுஜாதாவின் தீவிரமான வாசகன்...ரசிகன்....ஏன் பக்தன் அப்படிக்கூட என்னை சொல்லலாம்.
நான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கினேன்.
நான் மிகவும் நேசித்த கமல்,கலைஞர் இவர்களை பர்சனலாக சந்திக்கும் போது கூட ஆட்டோகிராப் வாங்கவில்லை.
சுஜாதாவிடம்தான் முதன்முதலாக வாங்க வேண்டும் எனப்பிடிவாதமாக இருந்தேன்.
அவரை நான் சந்தித்த நாள்...
அந்தப்பரவசம்...
ஆஹா...
என் உயிர் போகும் வரை மறக்காது.
அந்த அனுபவத்தை தனியாக பதிவிடுகிறேன்.
சுஜாதா கதையை திருடியவன் மேல் கோபப்படாமல் ஆக்கபூர்வமாக சிந்திப்போம்.
அவனால்தான் நில்லுங்கள் ராஜாவே பிரான்சுக்கு சென்று ஹாலிவுட்டில் படமாகி உலகம் பூரா பரவி விட்டது.
இப்போது நமது கடமை உண்மையை உலகறியச்செய்வது.
எப்படிச்செய்யலாம்? சொல்லுங்கள் நண்பர்களே!
பிற்சேர்க்கை: ஒரே நாளில் சுஜாதா வாசகர்கள் என்னுடைய பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டு சந்தோசப்படுத்தி விட்டார்கள்.
கை வலிக்க வலிக்க பதில் பின்னூட்டமிட்டேன்.
வலி இத்தனை சுகமளிக்கும் என்பதை இன்றுதான் கண்டு கொண்டேன்.
என்னுடைய முயற்ச்சியாக இந்த விசயத்தை ஹிந்து பத்திரிக்கையில் வெளியிட முயற்ச்சி எடுத்து வருகிறேன்.
நண்பர்கள் நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஊடக நண்பர்கள் மூலம் தெரியப்படுத்தி உலகறியச்செய்யுங்கள்.
குறிப்பாக பிரான்ஸ்&அமெரிக்காவில் இந்த விசயம் தீ போல் பரவவேண்டும்.
பேஸ் புக்,ட்வீட்டர் போன்ற இணைய ஊடகங்களை பயன்படுத்தி புயல் போல பரப்புங்கள்.
பிரான்ஸ்,அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை,தொலைக்காட்சிக்கு தெரிய படுத்துங்கள்.
புதிதாக நீங்கள் ஒரு பதிவு எழுதும் போது இந்தக்கொடுமையை....
உங்கள் கொதிப்பை... உங்கள் வாசகருக்கு தெரியப்படுத்துங்கள்
எழுத்தில் நம்மை சந்தோசப்படுத்திய அந்த காவேரிக்கரை மைந்தனுக்கு நாம் திருப்பி செய்யும் நன்றிக்கடன்.
சமீபத்தில் வெளியான அன்நோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தை
லியாம் நீசனுக்காகவே பார்த்தேன்.
படம் பார்த்து அதிர்ந்து விட்டேன்.
கதை அப்படியே என் ஆசான் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே நாவலின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி .
விக்கிப்பீடியாவில் இது பற்றிய தகவல்களை தேடினேன்.
அன் நோன் [2011]திரைப்படத்தின் கதை 2003ல் வெளியான பிரஞ்ச் நாவல்
Hors De Moi.....என்று கூறியது.
எழுதியவன் Dider Van Cauwelaert.என்பதும் தெரிய வந்தது.கதையை திருடிய பிரெஞ்ச் களவாணியின் படத்தை பாருங்கள்.
இந்தக்கதை 1981அல்லது 1982ல் சுஜாதா சாவி என்கிற பத்திரிக்கையில் தொடராக எழுதியது.
நான் அப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்[வருசத்துக்கு 100 ரூபாய்தான் பீஸ்]
நானும் எனது நண்பர்களும் போட்டிபோட்டு படித்த தொடர்.
சாவி வந்த அடுத்த நாள் காலேஜில் நில்லுங்கள் ராஜாதான் பிரதான டாபிக்.
வாராவாரம் அவ்வளவு விருவிருப்பு.
ஒருவன் தனது வீட்டுக்குப்போனால் அவனது மனைவி நீங்கள் யார்? எனக்கேட்பாள்.
எனது கணவர் என வேறு ஒரு ஆளைக்காண்பிபாள்.
இவனை அவனது பிள்ளைகள்,கூர்க்கா... ஏன் நாய் கூட நம்பாது.
போலிசில் புகார் செய்வான்.
அவர்களும் விசாரித்து விட்டு இவனைத்தான் மெண்டல் என்பார்கள்.
அப்புறம் கணேஷ்-வசந்தை பார்த்து உதவி கேட்பான்.
அதுக்கப்புறம் கேக்கணுமா...இன்னும் ஜெட் ஸ்பீடுல கதை பறக்கும்.
இந்தக்கதையை அப்படியே வரிக்கு வரி...எழுத்துக்கு எழுத்து அப்பட்டமா காப்பியடிச்சு அன் நோன் எடுத்திருக்கானுங்க.
சுஜாதாவின் தீவிரமான வாசகன்...ரசிகன்....ஏன் பக்தன் அப்படிக்கூட என்னை சொல்லலாம்.
நான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கினேன்.
நான் மிகவும் நேசித்த கமல்,கலைஞர் இவர்களை பர்சனலாக சந்திக்கும் போது கூட ஆட்டோகிராப் வாங்கவில்லை.
சுஜாதாவிடம்தான் முதன்முதலாக வாங்க வேண்டும் எனப்பிடிவாதமாக இருந்தேன்.
அவரை நான் சந்தித்த நாள்...
அந்தப்பரவசம்...
ஆஹா...
என் உயிர் போகும் வரை மறக்காது.
அந்த அனுபவத்தை தனியாக பதிவிடுகிறேன்.
சுஜாதா கதையை திருடியவன் மேல் கோபப்படாமல் ஆக்கபூர்வமாக சிந்திப்போம்.
அவனால்தான் நில்லுங்கள் ராஜாவே பிரான்சுக்கு சென்று ஹாலிவுட்டில் படமாகி உலகம் பூரா பரவி விட்டது.
இப்போது நமது கடமை உண்மையை உலகறியச்செய்வது.
எப்படிச்செய்யலாம்? சொல்லுங்கள் நண்பர்களே!
பிற்சேர்க்கை: ஒரே நாளில் சுஜாதா வாசகர்கள் என்னுடைய பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டு சந்தோசப்படுத்தி விட்டார்கள்.
கை வலிக்க வலிக்க பதில் பின்னூட்டமிட்டேன்.
வலி இத்தனை சுகமளிக்கும் என்பதை இன்றுதான் கண்டு கொண்டேன்.
என்னுடைய முயற்ச்சியாக இந்த விசயத்தை ஹிந்து பத்திரிக்கையில் வெளியிட முயற்ச்சி எடுத்து வருகிறேன்.
நண்பர்கள் நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஊடக நண்பர்கள் மூலம் தெரியப்படுத்தி உலகறியச்செய்யுங்கள்.
குறிப்பாக பிரான்ஸ்&அமெரிக்காவில் இந்த விசயம் தீ போல் பரவவேண்டும்.
பேஸ் புக்,ட்வீட்டர் போன்ற இணைய ஊடகங்களை பயன்படுத்தி புயல் போல பரப்புங்கள்.
பிரான்ஸ்,அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை,தொலைக்காட்சிக்கு தெரிய படுத்துங்கள்.
புதிதாக நீங்கள் ஒரு பதிவு எழுதும் போது இந்தக்கொடுமையை....
உங்கள் கொதிப்பை... உங்கள் வாசகருக்கு தெரியப்படுத்துங்கள்
எழுத்தில் நம்மை சந்தோசப்படுத்திய அந்த காவேரிக்கரை மைந்தனுக்கு நாம் திருப்பி செய்யும் நன்றிக்கடன்.
ஹிஹி என்னத்த சொல்ல...தட்டி கேக்க முடியுமா??
ReplyDeleteதலைவரே,
ReplyDelete1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்வதி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தன்னுடைய மாத நாவலாகிய சத்யா'வில் இதே நில்லுங்கள் ராஜாவே'வை மறுபதிப்பு செய்தது. அப்போதுதான் நான் படித்தேன். நில்லுங்கள் ராஜாவே கதை ஒரு நடனக்குழுவின் மூலம் போதை மருந்தை வெளிநாட்டிற்கு கடத்தும் கதை அல்லவா? கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் சென்னையில் இருந்து ஒரு சிறிய துப்பின் மூலம் (ஒன்றை ஒன்று வெட்டும் வளையங்களை கொண்ட ஒரு கிறுக்கலான ஓவியம்) வெளிநாடு செல்லும் ஒரு நடனக்குழுவின் நாட்டியக்காரர்களில் கால்களில் உள்ள சலங்கையில் போதை மருந்தை கடத்துவதை கண்டு பிடிப்பார்கள். சுவாரஸ்யமான கதை.
நீங்கள் சொல்லும் கதை எனக்கு ஞாபகம் வர மறுக்கிறதே?
The story which viswa talks about is merkke oru kutram. Nizhungal raajavee is the story about a man who gets confused about his identity...
Deleteநில்லுங்கள் ராஜாவே எனக்கு நினைவில்லை - ஆனால் உங்கள் ஆதங்கம் புரிகிறது. தவறாக எண்ண வேண்டாம். இந்தக் கரு புதிதல்ல. சுஜாதாவுக்கு முன்னால் ludlum, அவருக்கும் ரொம்ப முன்னால் lovecraft காலத்திலிருந்து எடுத்தாளப்பட்ட கரு. unknown இன்னும் பார்க்கவில்லை. இதே பாணியில் nicholas cage படம் ஒன்றும் (family man?) தொண்ணூறுகளில் வந்தது.
ReplyDeleteஅப்படியே இல்லாவிட்டாலும் நீங்கள் சொன்னபடி தமிழ்க் கதை ஒன்று வெளியே போனதும் நிறைவு தான்.
taken தமிழில் வந்து விட்டதா!
ReplyDeleteமெய்யாலுமா. நம்பமுடியலயே பாஸு. நம்மாளுங்கதானே இப்படி பண்ணுவாங்க.இந்த விசயத்தை நம்ம வெளியில சொன்னா நம்மள யும் பைத்தியம்னு சொன்னாலும் சொல்லுவாங்களே.
ReplyDelete//ஹிஹி என்னத்த சொல்ல...தட்டி கேக்க முடியுமா?//
ReplyDeleteநிச்சயம் முடியும்.அமெரிக்காவில் காப்பிரைட் சட்டம் மிகக்கடுமையானது.நிரூபித்து விட்டால் திருமதி.சுஜாதாவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் அளவுக்கு நஷ்ட ஈடு டாலராக கிடைக்கும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....சிவா...
வணக்கம் கிங் விஸ்வா...தங்கள் கருத்தில் சற்று குழம்பி விட்டேன்.
ReplyDeleteமறதியில் தலைப்பை மாற்றி சொல்லியிருப்பேன்.
ஆனால் இந்தக்கதை சுஜாதா...சுஜாதா...சுஜாதா.
இல்லை சார். கிங் விஸ்வா சொல்வது தவறு... அது மேற்கே ஒரு குற்றம்... நில்லுங்கள் ராஜாவே தான் சரி... இந்த 'நில்லுங்கள் ராஜாவே' என்பதே கதையில் ஒரு பெண் அந்த நபரைப் பார்த்துச் சொல்லும் வசனம்...
Delete//நீங்கள் சொன்னபடி தமிழ்க் கதை ஒன்று வெளியே போனதும் நிறைவு தான்//
ReplyDeleteவணக்கம் சார்.சுஜாதா தமிழ் மக்களிடம் பெற்ற செல்வாக்கு இன்னும் எந்த எழுத்தாளரும் அடைய முடியவில்லை.இந்தக்கதையை அவருடையதுதான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டால் உலகம் முழுக்க அவரது புகழ் பரவி விடும்.
@ஐத்ரூஸ்
ReplyDelete//மெய்யாலுமா. நம்பமுடியலயே பாஸு. நம்மாளுங்கதானே இப்படி பண்ணுவாங்க.இந்த விசயத்தை நம்ம வெளியில சொன்னா நம்மள யும் பைத்தியம்னு சொன்னாலும் சொல்லுவாங்களே//
காப்பி அடிப்பதில் நாம எல்லாம் பச்சா...ஹாலிவுட்காரனுங்க உலக மகா அயோக்கியனுங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
யாராவது கேஸ் போட ட்ரை பண்ணுங்கப்பா.
ReplyDeleteகேபிள் சங்கர்
அப்பாஜி சொல்வதைப் போன்று உலக சினிமாக்கள் அவ்வளவாக நான் பார்த்ததில்லை. இருந்தாலும் எனக்கும் பெருமையே! ;-))
ReplyDeleteநில்லுங்கள் ராஜாவே அற்புதமான நாவல்... ஒரு ஆளை அவர் அறியாமலேயே ஹிப்னாடிசம் மூலம்.. ஆளையே மாற்றுவது... என்று கனவேகத்தில் செல்லும் கதை...
இதுதான் என் முதல் வருகை.
ReplyDeleteஅருமையான முயற்சி.!
ஆழ்ந்த சினிமா,இசை மற்றும் நூல் ஞானம் வேண்டும் இது போல் ஓர் வலைப்பதிவு தொடங்க. வாழ்த்துக்கள்.
வேண்டுகோள்:
நீங்கள் உங்கள் favourite books உங்க profileல் சுஜாதாவின் பெயர் spellingயை சரி செய்யவும்.
அன்புடன், கி.பாலு.
@உலக சினிமா ரசிகன்:நீங்கள் கூறிய நில்லுங்கள் ராஜாவே என்ற தலைப்பு சரியானது.
ReplyDelete@King Viswa:நீங்கள் சொல்வது மேற்கே ஒரு குற்றம் கதை பற்றி.
நானும் சுஜாதா ரசிகன் தான்
ReplyDeleteநில்லுங்கள் ராஜாவே ரசித்து படித்த நாவல் . அந்த வில்லனின் மேல் கருணை வராமல் இருக்காது .. இப்பொழுதெல்லாம் காப்பி ஒரு விஷயமே இல்லை .. வாத்தியாரே சொல்லி இருக்கிறார் ...கொலை கொள்ளை சூது வாது உறவு கற்பு இனம் இப்படி சுற்றி சுற்றி எழு கருக்கள் தான் மாற்றி மாற்றி இருக்கும் .. இதை எவ்வளவு தூரம் கெடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் .... தமிழில் அவரது கதைகள் சினிமா எடுத்து சொதப்பி விட்டார்கள் .. ( எனக்கு ஆனந்த தாண்டவம் பிடித்தது )
ReplyDeleteyou are right....adhan peyar nillungal rajavedhaan....
ReplyDeleteநம்ப முடியல சுஜாதா கதையும் எனக்கு தெரியாது.கதை படம் இரண்டையும் பார்த்து விட்டு நானும் இதை பரப்பரேன் சகோ
ReplyDeleteHello,
ReplyDeleteThese are common with our "Genius Directors"
example What about Bob is remade as Thenali (http://en.wikipedia.org/wiki/What_About_Bob%3F)
Mrs Doubtfire as Avvai Shanmugi , Our directors think we are all fools ... :)
உலக சினிமா ரசிகன் அவர்களே,
ReplyDeleteநானும் பயங்கர சுஜாதா ரசிகன்தான்!
பல வருடங்களுக்கு முன்னால் ரவிச்சந்திரன் நடித்த ' அன்று கண்ட முகம்' படத்தின்
கதை அமரர் கல்கியுடையது. ஒரு சின்ன கிரெடிட் கூடப் போடவில்லை அந்தப் படத்தை
எடுத்தவர்கள்! சுஜாதாவின் 'ஜேகே' கதை அவ்ருக்கெதிரிலேயே சத்யராஜ் நடிப்பில் 'ஏர்போர்ட்'
என்று படமாக வந்தது. அவருக்கு ராயல்டி ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை!
ஆனால் சுஜாதா அவர்களே கிட்டத்தட்ட ஒரே கருவை வைத்து மூன்று கதைகள் எழுதி உள்ளார் (1971-1982 க்கு இடையில்)
ஜேகே, நில்லுங்கள் ராஜாவே!, மூன்று நிமிஷம் கணேஷ் ஆகிய இந்தக் கதைகள் ஒரு VVIP ஐத் தீவிரவாதிகள் குறி வைப்பது
மற்றும் கணேஷ் வசந்தோ (அல்லது போலீசோ) அதை கிளைமேக்சில் தடுப்பது என்று போகும். எனவே இந்தக் கரு வேறு
சிலரிடமும் இருந்திருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை!
நன்றி!
சினிமா விரும்பி
மிகவும் நல்ல நாவல்... ஆனால் இந்த படத்தை நான் பார்க்க வில்லை... கண்டிப்பாக ஜெட் ஸ்பீடு..................................
ReplyDelete@கேபிள் சங்கர்
ReplyDelete//யாராவது கேஸ் போட ட்ரை பண்ணுங்கப்பா//
அமெரிக்காவில் இருக்கும் சுஜாதா ரசிகர்கள் முன்னெடுத்து சென்றால் நன்றாக இருக்கும்.
பக்கபலமாக உலகிலுள்ள சுஜாதா ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இது அந்த மாமேதைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
@ஆர்.வி.எஸ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@மடல்காரன் பாலு
ReplyDelete//நீங்கள் உங்கள் favourite books உங்க profileல் சுஜாதாவின் பெயர் spellingயை சரி செய்யவும்.//
தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்றி.திருத்தி விடுகிறேன்.
நன்றி ரான்கோ...குழப்பத்தை தீர்த்தமைக்கு...
ReplyDelete@ 'என் ராஜ பாட்டை' ராஜா
ReplyDelete//நானும் சுஜாதா ரசிகன் தான்//
இந்த நூற்றாண்டின் மாமேதைக்கு ரசிகனாக இருப்பதற்க்கு நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.
@பத்மநாபன்
ReplyDelete//இப்பொழுதெல்லாம் காப்பி ஒரு விஷயமே இல்லை//
நம்ம நாட்டில்தான் காப்பியடித்து தப்பிக்க முடியும்.அமெரிக்காவில் கதைத்திருட்டு கொலைக்குற்றத்தை விடக்கடுமையாக பார்ப்பார்கள்.
நன்றி மாயன்...குழப்பத்தை தீர்த்தமைக்கு...
ReplyDelete@கிருபா
ReplyDelete//கதை படம் இரண்டையும் பார்த்து விட்டு நானும் இதை பரப்பரேன் சகோ//
உடனே செய்யுங்கள் நண்பரே...
@சீனிவாசன்
ReplyDeleteமுதன்முதலாக நம்ம கதையை திருடி இருக்கானுங்க...
இதை விடக்கூடாது.
@சினிமாவிரும்பி
ReplyDelete// இந்தக் கரு வேறு
சிலரிடமும் இருந்திருக்கலாம்//
சான்சே இல்லை.அப்பட்டமான காப்பி.படத்தில் கனேஷ்&வசந்த்துக்கு பதில் கணேஷ் மட்டும்.மற்றபடி காட்சிக்கு காட்சி நில்லுங்கள் ராஜாவேதான்.
@ரதியழகன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரதியழகன்...உங்கள் பெயரில் ஒரு கிக் இருக்கிறது.
unknown பார்த்தவுடன் எனக்கு தோன்றியதும் இதே தான்! கண்டிப்பாக இது சுஜாதாவின் கதை தான்!
ReplyDeleteவெளிநாட்டு கதையைதான் நம்மாளுங்க எடுப்பாங்கன்னு பார்த்தா நம்ம கதையை அவங்க திருடியிருக்காங்களா? நம்மளால பெருசா எதுவும் செய்ய முடியுமான்னு தெரியலை. ஆனா கொஞ்சம் முயற்சி செஞ்சா ஓரளவு கவனத்தை கொண்டு வரலாம்.
ReplyDeleteவேணும்னா ட்விட்டர்ல ட்ரை பண்ணலாமா?
@bandhu
ReplyDelete//unknown பார்த்தவுடன் எனக்கு தோன்றியதும் இதே தான்! கண்டிப்பாக இது சுஜாதாவின் கதை தான்!//
நண்பரே !ஆதரவு தெரிவித்து எனது கருத்துக்கு வலுவூட்டியதற்க்கு நன்றி.
supper.......
ReplyDeletecongratulation!!!!!!!!!!!!!
அடடே,
ReplyDeleteஎப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள்,வெள்ளையாருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்ற கொள்கையில் வெள்ளைக்காரன் கதையை திருட மாட்டான் என்று நம்ப மாட்டார்கள்,யாரோ ஒரு சுஜாதா ரசிகர் தான் இதை அப்படியே சுருக்கமாய் மொழிபெயர்த்து அந்த கம்பெனிக்கு விற்றிருக்கவேண்டும்.இதை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள்.படத்தை பார்த்துவிட்டு அந்த கதையையும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
Ulaga Cinema Rasigan - Pl translate your post to English as well; will help in spreading the news faster!!
ReplyDeleteஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது ....
ReplyDeleteஇது மட்டும் உண்மை என்றால், எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். இருங்க.. திட்டிப்புடாதீங்க. இதுநாள் வரை, நாம் தான் அவங்களைக் காப்பி அடிச்சிக்கினு இருந்தோம். இப்ப அவனுங்களே நம்மைக் காப்பி அடிக்குரானுவளேன்னு ஒரு குஷி.
ReplyDeleteஅதே சமயத்துல, சுஜாதா, ஆர்தர் கானன் டாயலோட 'எ ஸ்டடி இன் ஸ்கார்லட்' கதையை சுட்டு, ஒரு கணேஷ் வசந்த் குறுநாவல் எழுதினாரு. அந்த நாவல் பேரு மறந்துட்டேன். ரத்தத்துளிகளை வெச்சி அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி வரும். தலைவரும் கொஞ்சம் கொஞ்சம் சுட்டும் இருக்காருன்றதை சொல்லா விரும்பினேன்.
மத்தபடி, உங்களுக்கு இது உண்மைன்னு தெரியுது. ஸோ, தாராளமா வெளியுலகுக்குத் தெரியப்படுத்தலாம்.
//சுஜாதாவின் தீவிரமான வாசகன்...ரசிகன்....ஏன் பக்தன் அப்படிக்கூட என்னை சொல்லலாம்.//very nice
ReplyDeleteமுதன்முதலாக நம்ம கதையை திருடி இருக்கானுங்க...
ReplyDeleteஇதை விடக்கூடாது.
@எஸ்.கே
ReplyDelete//வேணும்னா ட்விட்டர்ல ட்ரை பண்ணலாமா?//
நண்பரே...தயவு செய்து ட்வீட்டர்,பேஸ்புக் மூலமாக உடனே பரப்பவும்.எனக்கு அதில் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.
@விடிவெள்ளி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@கீதப்பிரியன்
ReplyDeleteநண்பரே...பாண்டிச்சேரியில் தமிழும் பிரஞ்சும் அறிந்த பண்டிதன் மூலமாக பிரான்சில் இக்கதையை திருடி இருக்கலாம்.கனவுகளின் காதலன் மூலமாக பிரஞ்ச் திருட்டு எழுத்தாளனின் புராணத்தை அறிய வேண்டும்.அவரிடம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியுமா?
@arun kk
ReplyDeleteஎனக்கு தமிழ் மட்டும்தான் கொஞ்சம் வரும்.
இங்கிலீஷ் கொஞ்சம் கூட வராது.இந்தப்பதிவை யார் வேண்டுமானாலும் காப்பி பேஸ்ட் பண்ணலாம்.மொழி பெயர்க்கலாம்.
@கந்தசாமி
ReplyDelete//ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது ....//
வாங்க தோழரே...ஊர் கூடி அடிப்போம்.அம்மி தானா நகரும்.இன்று விகடன் அலுவலகத்துக்கு தகவல் சொல்லி விட்டேன்.ஹிந்து பத்திரிக்கைக்கும் சொல்லி விட்டேன்.விரைவில் தீப்பிடிக்கும்.
//சுஜாதா, ஆர்தர் கானன் டாயலோட 'எ ஸ்டடி இன் ஸ்கார்லட்' கதையை சுட்டு, ஒரு கணேஷ் வசந்த் குறுநாவல் எழுதினாரு. அந்த நாவல் பேரு மறந்துட்டேன். ரத்தத்துளிகளை வெச்சி அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி வரும். தலைவரும் கொஞ்சம் கொஞ்சம் சுட்டும் இருக்காருன்றதை சொல்லா விரும்பினேன். //
ReplyDeleteவாங்க நண்பரே...வெளி நாட்டு நாவல்களை அப்படியே காப்பியடிக்க மாட்டார்.நல்ல நாவல்களை இன்ஸ்பிரேசனாகக்கொண்டு நமக்கு திரில்லர் தந்தார்.
உங்க புண்ணியத்துல இதை பேஸ் புக்ல பரப்புங்க.சாருகிட்டயும் சொல்லுங்க.
நான் தமிழில் படித்த முதல் நாவல் நில்லுங்கள் ராஜாவே தான். அப்படியே அசந்து போய் விட்டேன். சொல்லப்போனால் புத்தகங்கள் மேல் இவ்வளவு ஆசை வருவதற்கு அந்த கதையும் ஒரு காரணம். கொஞ்சம் கூட என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாத படி.. அப்புறம் பாதியில் எண்டர் ஆகும் கணேஷ் வசந்த். செம செம :)
ReplyDeleteஅப்புறம், வாத்தியார் நாவல் முடிந்த பின் ஒரு வரி சொல்லி இருப்பார்,.இந்த கதையை நம்பாதவர்கள் ஒரு ஆங்கில விஞ்ஞானியின் புத்தகத்தை படிக்குமாறு.. அந்த ஐடியா சாத்தியம் தான் என்று சொல்வதற்காக.. எது எப்படியோ, வாத்தியாரை போல ஒருவர் அவ்வளவு சீக்கிரம் இறந்தது எனக்கு வருத்தமே.
என் இனிய இயந்திரா வா ?? தூர்தர்சன் சீரியல்
ReplyDeletehttp://www.google.co.in/url?sa=t&source=web&cd=4&ved=0CDgQFjAD&url=http%3A%2F%2Fdownloadtamilebooks.tamiljukebox.net%2Findex.php%3Fdir%3DBooks_General_Tamil%2F%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F%26file%3DEn%2520iniya%2520Endhira.pdf&ei=FJn3TdXsN8jqrAeShbScCA&usg=AFQjCNHzUA9W3WYyaVJn2BnlokWTz7eiQw
@போளூர் தயாநிதி
ReplyDeleteஎன்னை விட வெறி பிடித்த வாசகர்கள் இருக்கிறார்கள்.எனது நண்பர் ராஜா கம்ப்யூட்டர் வித்தகர்.அவர் தனது மகளுக்கு மதுமிதா என்றும் மகனுக்கு விக்ரம் என்றும் பெயரிட்டுள்ளார்.இரண்டுமே சுஜாதா உருவாக்கிய காரெக்டர்கள்.
@மாலதி
ReplyDeleteவணக்கம் தோழி...
// முதன்முதலாக நம்ம கதையை திருடி இருக்கானுங்க...இதை விடக்கூடாது.//
உங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த திருட்டின் கொடுமையை எடுத்து சொல்லுங்கள்.பிரஞ்ச் திருடனும்,ஹாலிவுட் திருடனும் மன்னிப்பு கேட்டு சுஜாதா குடும்பத்தாருக்கு உரிய நஷ்ட ஈடு தரும் வரை விடக்கூடாது.
'கரையெல்லாம் செண்பகப்பூ' 'கற்றதும் பெற்றதும்' இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. மற்றபடி சுஜாதாவும் மூலத்தை அவ்வப்போது பாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்வார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
ReplyDeleteநண்பா சொல்லிட்டீங்கல்ல செய்திடுவோம் விடுங்க!
ReplyDelete@பிரசன்னா
ReplyDelete//வாத்தியாரை போல ஒருவர் அவ்வளவு சீக்கிரம் இறந்தது எனக்கு வருத்தமே.//
அவரைப்போல எழுத மீண்டும் அவரேதான் பிறந்து வர வேண்டும்.
நம்மையெல்லாம் தவிக்க விட்டு அவர் ஜாலியாக நரகத்துக்கு போய் விட்டார்.
“மரணத்துக்குப்பிறகு நரகத்துக்கு போகவே விருப்பம்.
ஏனென்றால் அங்கேதான் சுவாரஸ்யமான மனிதர்களை சந்திக்கலாம்.
சொர்க்கத்தில் நடக்கும் அகண்ட பஜனை இரண்டு நாளைக்கு மேல் எனக்கு தாங்காது”
இது அவரே எழுதியது.
நீங்கள் உண்மையிலேயே சுஜாதாவின் தீவிர ரசிகன்தான். நிச்சயம் நாம் எடுத்து செல்கிறோம் பலருக்கு. நன்றி நண்பரே உங்கள் நேர்மைக்கு.
ReplyDelete//சுஜாதாவும் மூலத்தை அவ்வப்போது பாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்வார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.//
ReplyDeleteஇதைப்பற்றி நானே நேரடியாக அவரிடம் கேட்டுள்ளேன்.
அவருடனான எனது முதலிரவு அனுபவத்தை
தனியாக பதிவிடுகிறேன்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது “நில்லுங்கள் ராஜாவே” கதை திருட்டை உங்கள் வட்டாரங்களில் பரவச்செய்யுங்கள்.
@விக்கியுலகம்
ReplyDeleteநண்பரே...நீங்களும் இது பற்றி பதிவெழுதுங்கள்.
உங்கள் நட்பு வட்டாரம் மிகப்பெரியது.
அவர்களிடம் நீங்கள் எடுத்து சொல்லி இது பற்றி பதிவெழுதச்சொல்லுங்கள்.
ப்ளீஸ்..
@அஸ்வின் வின்
ReplyDelete//நிச்சயம் நாம் எடுத்து செல்கிறோம் பலருக்கு//
உங்கள் பெயரிலேயே வெற்றி இருக்கிறது.நிச்சயம் நாம்
வெற்றியடைவோம்.
வருகைக்கும்... வாழ்த்துக்கும் நன்றி.
thanks for information,i will inform to kumutham magazine,
ReplyDelete@சி.பி.செந்தில் குமார்
ReplyDelete//thanks for information,i will inform to kumutham magazine//
மிக்க நன்றி நண்பரே...குமுதம் இதழில் இது வெளியிடப்படுமானால் 2ஜி ஊழல் போல் பரபரப்பாகி விடும்.2ஜி குற்றவாளிகள் திகாரில் அடைக்கப்பட்டது போல் சுஜாதாவை ஏமாற்றிய கயவாளிகள் கூண்டில் ஏற்றப்படவேண்டும்.
என்ன சொல்ல... என்னால் முடிந்த வரை உலகளவில் இத்தகவலை கொண்டு சேர்க்கின்றேன்...
ReplyDeleteஎன்ன செய்ய..?? உங்களின் ஆதங்கம் புரிகின்றது.தமிழனின் படைப்பு திருடப்பட்டுள்ள இத்தகவலை என்னால் முடிந்த வரை உலகறிய செய்கின்றேன்..
ReplyDeleteமேட்குறிப்பிட்ட சுஜாதாவின் நூலுக்கு. ஆன்லைன் லிங்க் மின்னூல் உள்ளதா? தெரிந்த நண்பர்கள் பகிரவும். கணேஷ்&வசந்த் எப்போதும்
ReplyDeleteஅய்யோ என்ன கொடுமை இது! இப்ப பெரிய ஆக்களெல்லாம் கொப்பி அடிக்க வெளிக்கிட்டுடாங்களா? இவர்களை தடுக்கவே முடியாதா? நாதாரி பயல்கள்! கொப்பி அடித்தாலும் உண்மையா எடுக்க வேண்டி இடத்தில் எடுத்து அடிக்கலாம்தானே?
ReplyDeleteஉலக சினிமா ரசிகரே,
ReplyDeleteஉங்களது குரு பக்தியால் மகிழ்ந்தோம்..
மிக்க மகிழ்ச்சி..
அன்பன் சிவ.சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com
சுஜாதா எழுதிய ஆர்யபட்டா கதையை படித்திருக்கிறீர்களா. ரமேஷ் அரவிந்த் கன்னட படம் எடுக்க அதன் உரிமையை பெற்றதாக அதன் முன்னுரையில் சிலாகித்திருப்பார்.
ReplyDeleteஅது ஜாவர் சீதாராமனின் அந்தநாள் படத்தின் அல்ட்ரா மாடர்ன் தழுவல்.அந்தநாள் சிவாஜி-பண்டரிபாய் நடித்தபடம்.
@நிலவின் ஜனகன்
ReplyDelete//தமிழனின் படைப்பு திருடப்பட்டுள்ள இத்தகவலை என்னால் முடிந்த வரை உலகறிய செய்கின்றேன்//
மிக்க நன்றி.நாம்தான் இதை உலகறியச்செய்ய வேண்டும்.
ஆனந்த விகடன் இச்செய்தியை போட மறுத்து விட்டது.
@எம்.சண்முகன்
ReplyDelete//சுஜாதாவின் நூலுக்கு. ஆன்லைன் லிங்க் மின்னூல் உள்ளதா? //
நேயர்கள் நண்பர் சண்முகனுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
www.writersujatha.com
Deleteஇந்த சுட்டியை முயற்சியுங்கள்..
@கார்த்தி
ReplyDelete//அய்யோ என்ன கொடுமை இது! இப்ப பெரிய ஆக்களெல்லாம் கொப்பி அடிக்க வெளிக்கிட்டுடாங்களா? இவர்களை தடுக்கவே முடியாதா? நாதாரி பயல்கள்! கொப்பி அடித்தாலும் உண்மையா எடுக்க வேண்டி இடத்தில் எடுத்து அடிக்கலாம்தானே?//
நண்பரே... உங்கள் நியாயமான கோபத்தின் காரணத்தை நாலு பேரிடம் பரப்பு செய்யுங்கள்.
@சிவ.சி.மா.ஜானகிராமன்
ReplyDelete//உலக சினிமா ரசிகரே,
உங்களது குரு பக்தியால் மகிழ்ந்தோம்..//
நண்பரே...யாமும் தங்கள் வரவால் நெகிழ்ந்தோம்.
கதை திருடர்களை சுட்டெரிக்க சிவனின் நெற்றிக்கண் திறக்க முக்கண்ணன் அருள் வேண்டுங்கள்.
@வில்லனின் வினோதங்கள்
ReplyDelete//சுஜாதா எழுதிய ஆர்யபட்டா கதையை படித்திருக்கிறீர்களா. ரமேஷ் அரவிந்த் கன்னட படம் எடுக்க அதன் உரிமையை பெற்றதாக அதன் முன்னுரையில் சிலாகித்திருப்பார்//
நண்பரே ஆர்யபட்டா படித்திருப்பேன்.
ஆனால் சுத்தமாக நினைவில்லை.
உங்கள் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லத்தெரியாத சாதாரணன் நான்.
குற்றச்சாட்டுக்காக சொல்லவில்லை, என்ன இருந்தாலும் அவரது சுவாரஸ்யமான எழுத்துகளுக்கு நான் ரசிகன்.
ReplyDeleteஅவரது ஆ நாவல் ஒரு ஆங்கில நாவலின் பாதிப்பில் உருவானதுதான். ஒருவேளை இந்த கதையும் எதோ ஆங்கில கதையின் பாதிப்பில் எழுதியிருக்கலாம்.
அந்த ஆங்கில கதையின் மூலத்தை இந்த ஆங்கிலபட கதை குழு வாங்கியிருக்கலாம்.
@வில்லனனின் விநோதங்கள்
ReplyDelete//குற்றச்சாட்டுக்காக சொல்லவில்லை, என்ன இருந்தாலும் அவரது சுவாரஸ்யமான எழுத்துகளுக்கு நான் ரசிகன்.
அவரது ஆ நாவல் ஒரு ஆங்கில நாவலின் பாதிப்பில் உருவானதுதான். ஒருவேளை இந்த கதையும் எதோ ஆங்கில கதையின் பாதிப்பில் எழுதியிருக்கலாம்.
அந்த ஆங்கில கதையின் மூலத்தை இந்த ஆங்கிலபட கதை குழு வாங்கியிருக்கலாம்.//
நண்பரே...அன்நோன் படத் தயாரித்தவர்கள் கதைக்கு உரிமையாக குறிப்பிடுவது இந்த பிரெஞ்சுக்காரனைத்தான்.
பிரெஞ்சுக்காரன் இப்படத்தை ஆங்கில நாவல்களை திருடியிருக்கிறானா என்பதை சி.ஐ.ஏ அளவுக்கு திறமையான டீம் விசாரித்து முடிவை சொல்லும்.
அதன் பின்னர்தான் அந்தக்கதையை காப்பி ரைட் வாங்கி படமெடுப்பார்கள்.
நாம் வழக்கு தொடுத்தால் கூட பிரெஞ்சுக்காரனை கை காட்டி தப்பிக்கப்பார்க்கும் ஹாலிவுட்.
நாற்பது ஆண்டு காலம் அவரது எழுத்தால் என்னை குதூகலப்படுத்தினார்.
எனது அறிவை மேம் படுத்தினார்.
உலகின் சகல கலைச்செல்வங்களையும் கொண்டு வந்து சேர்த்தார் அன்னைத்தமிழுக்கு.
அந்த ஞானத்தகப்பனுக்கு செஞ்சோற்றுக்கடன் தீர்க்கிறேன்.
உங்கள் பின்னூட்டங்கள் என் போராட்டத்தை முனை மழுங்கச்செய்கிறது.
அவரது லாண்டரி குறிப்பைப்போடக்காத்துக்கிடந்த பத்திரிக்கைகள் அவரது இறப்புக்கு பின் புறக்கணிக்கின்றன.
ஆனந்தவிகடன் புறக்கணிப்பால் நொந்து நூலாகிவிட்டேன்.
உயிர்மை,குமுதம் என்ன செய்கிறது பார்ப்போம்.
தமிழ்க்குறிஞ்சி என்ற இணைய பத்திரிக்கை சுஜாதா கதை திருட்டு சம்பவத்தை வெகு அழகாக வெளியிட்டுள்ளார்கள்.
ReplyDeleteதமிழ்க்குறிஞ்சி ஆசிரியர் குழுவினருக்கு கோடானுகோடி சுஜாதா ரசிகர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றி.
அந்தப்பத்திரிக்கைக்கான இணைப்பை எனது வலைப்பக்கத்திலேயே கொடுத்துள்ளேன்.
[இலங்கையின் கொலைக்களம் பற்றிய வீடியோ தொகுப்பு,ரஜினி டிஸ்சார்ஜ்...அந்தப்பகுதியில் க்ளிக் செய்யவும்.]
கை வலிக்க வலிக்க பதில் பின்னூட்டமிட்டேன்.
ReplyDeleteவலி இத்தனை சுகமளிக்கும் என்பதை இன்றுதான் கண்டு கொண்டேன்.//
Nice description.
சிறந்த எழுத்தாளர்கள் கொண்டு சுஜாதா படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்யலாம்
ReplyDeleteஇந்த வெள்ளைகரங்க இன்னுமா நம்மள சொரண்டுறாங்க
ReplyDelete"ஆ" நாவல் The Hitchhiker's Guide to the Galaxy யின் அப்பட்டமான காப்பி என்பது என் போன்ற சுஜாதா ரசிகர்களுக்கு வருத்தமே :( .... இதற்கும் இதுபோல் ஒரு மூல நூல் இருக்கக்கூடும் ... வெள்ளக்காரன் எப்பவும் தப்ப கரெக்டா செய்வான்
ReplyDeleteThis guy hadnt read hitchiker or aah... hitch is a comedy abt end of world scenarios. Aah is abt rebirth and audit.hallucinations..
Deleteபுடிங்க சார்! ஜெயில்ல போடுங்க சார்!!
ReplyDeleteநானும் மிகத் தீவிரமான சுஜாதாவின் ரசிகன் என்ற முறையில் உங்களுடையது மிக சுவாரசியமான பதிவு. ஆனால், நில்லுங்கள் ராஜாவின் முடிவில் சுஜாதா ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அந்த புத்தகத்தில் உள்ள தகவல்களின் பின்னணியில்தான் நில்லுங்கள் ராஜாவை உருவாக்கியதாகக் குறிப்பிட்டு "அந்த புத்தகம் நிஜம்" என்று குறிப்பிட்டிருப்பார். என்னிடம் நில்லுங்கள் ராஜாவே புத்தகம் இல்லை. அது இருந்தால் அதைப் பார்த்து சொல்ல முடியும். நீங்கள் குறிப்பிட்ட அந்த பிரெஞ்சு நாவலாசிரியர் அந்த புத்தகத்தைப் படித்து பார்த்துவிட்டு அன்னோன் (Unknown ) கதையை உருவாக்கியிருக்கலாமே.
ReplyDelete